Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
மரணம் மனிதத்தின் இறுதியல்ல - மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு!!

Sooriyan Gossip - மரணம் மனிதத்தின் இறுதியல்ல - மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,834 Views
மரணத்திற்கு பின்னர் இன்னுமொரு பிறவி இருக்கிறது என்கிறது ஒருமதம், மரணமே இறுதி அதற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்கிறது இன்னுமொரு மதம். எது எப்படி இருப்பினும் எல்லோரிடமும் இருக்கும் மிகப்பெரிய கேள்வி மறுபிறவி என்பது உண்மையா இல்லையா என்பதுதான்
காலங்காலமாக நாகரிகமடைந்த ஒவ்வொரு சமுதாயத்திலுமுள்ள மேதைகள் இந்தக் கேள்வியைக் குறித்து நிறையவே யோசித்திருக்கிறார்கள். மரணம் தான் இறுதியானது. மறு பிறவி என்பதோ சொர்க்கம் , நரகம் என்பதோ கிடையாது. மூளை உயிருடன் இருக்கும் வரை தான் எல்லாமே. மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை. மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை என்பது கற்பனையான கட்டுக்கதைகள்.

மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள் என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்க்கிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு, மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். 

மரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். 2012 – 2016க்கு இடையில் 4 ஆண்டுகளாக இறக்கும் தறுவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்துக் கலவைகைளக் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில் டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ (reanimation) முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிகமாக நினைவிழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் இரத்தத்தில் இருந்து மருந்துக் கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆய்வுக் குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கத் தொடங்குகின்றனர். அதன்போது பெறப்பட்ட வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர்.

இந்த பரிசோதனையின் நீண்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓடோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன. பல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விடயங்கள் எவையும் இல்லை.

எதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சியடையச் செய்யும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

மனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். மரணத்திற்குப் பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம் என இந்த ஆய்வுக்குழுவில் ஒருவரான மருத்துவர் பெர்தோல்ட் ஆக்கர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top