Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா- பரந்த பரப்புக்குள் ஊடகங்களின் பார்வைபடாத பகுதிகள் நோக்கி!!

Ungal ooril Sooriyan - உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா- பரந்த பரப்புக்குள் ஊடகங்களின் பார்வைபடாத பகுதிகள் நோக்கி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

883 Views
தங்கள் இடம் தவிர்த்து தங்கள் சந்தோஷத்துக்காக ஊதியம் தவிர்த்து வேறிடம் செல்வது சுற்றுலா. இது சூரியகுழுவினர் மற்றவர் சந்தோசத்துக்காய் உங்களை தேடிவரும் சுற்றுலாவின் புதியதோர் பரிணாமம் உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா. ஊடக தர்மத்துக்குட்பட்டு எல்லைகள் கடந்து சிறகுவிரித்து பறக்கும் சூரியன் இம்முறை தடம்பதித்தது அம்பாறையில்,
அம்பாறை கொள்ளையழகு இலங்கையின் அழகின் கனிசமான பகுதியை தன்னகத்தேகொண்ட அழகு பூமி. இதன் பரந்த பரப்புக்குள் ஊடகங்களின் பார்வைபடாத பகுதிகள் நோக்கி நகர்கிறது சூரியனின் சுற்றுலா. கடந்த பதினைந்தாம் திகதி ஆரம்பித்த எங்கள் பயணம் விநாயகபுரத்தில் ஆரம்பித்து பாலக்குடா, மந்தானை, உல்ல, மல்வத்தை ,மாணிக்கமடு என்று இன்று ஆறாவது நாளாய் தொடர்கிறது.

உழைப்பை உயிராய் நேசிக்கும் உறவுகள் உழைத்து களைத்த நேரத்தில் அவர்கள் களைப்புக்கு மருந்தாக மகிழ்ச்சியோடு சேர்த்து பரிசில்களையும் பகிர்ந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த பயணம் எதிர்வரும் மாதம் முதலாம் திகதிவரை தொடரும். ஒவ்வொரு நாளும் உங்கள் ஊர் தேடிவரும் சூரியகுழுவினர் உங்களை வெறுங்கைகளால் வரவேற்பதில்லை.

ஏராளமான விளையாட்டுக்கள், பரிசில்களோடு வரும் ஒவ்வொருவருக்கும், மகிழ்ச்சியையும் வழங்க காத்திருக்கும் இந்த கலைப்பயணத்தில் கடந்த தினங்களில் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சூரிய உறவுகள் ஏராளமானோர் கலந்துகொண்டு மகிழ்ந்திருந்தனர்.

தங்கள் திறமைக்கு களம் தேடி காத்திருந்த திறமையாளர்கள் திறமைகளை மேடையேற்றி பாராட்டுதல்களையும் பெற்றனர். நீங்களும் திறமையாளரா, உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த காத்திருக்கும் சூரிய மேடைக்கு உங்களையும் அன்போடு அழைக்கிறான் சூரியன். உங்கள் ஊரில் சூரியன் சுற்றுலா- பரந்த பரப்புக்குள் ஊடகங்களின் பார்வைபடாத பகுதிகள் நோக்கி
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top