கார்த்தி நடித்து அண்மையில் வெளிவந்த திரைப்படம் கொம்பன் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த படம் வெளிவந்து சாதனை படைத்துள்ளது. கார்த்தி நடித்த எந்த படமும் இது வரை எட்டாத வசூலை இந்த படம் கார்த்திக்கு கொடுத்துள்ளது.
கொம்பன் படத்துக்கு கிருஷ்ண சாமி கிளப்பிய சர்ச்சை இறுதியில் அந்த படத்துக்கு மிகப்பெரிய வசூலை அள்ளி கொடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். சகுனி ,அழகுராஜா,பிரியாணி படங்களை பொறுத்த வரை கார்த்தியின் சினி வாழ்கையை பாதித்த படங்களுக்கு மத்தியில் இந்த கொம்பன் மூலமாக தன்னுடைய பெயரை மீண்டும் நிலை நிறுத்தி
இருக்கிறார் கார்த்தி ,பருத்தி வீரன் படத்தை போன்று இந்தப்படமும் அமையும் என்ற எண்ணத்தில் தான் இதில் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் வசூலை பொறுத்த வரை இதுவரைக்கும் தமிழகத்தில் மாத்திரம் இந்திய பெறுமதியில் 20 ஆயிரம் கோடியை கடந்து உள்ளதாம்,அத்தோடு பிற மாநிலங்களில் 10 கோடியும் வசூல் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த படத்துக்கு தன்னுடைய சம்பளத்தை உயர்த்த போவதாக கூறுகிறார் கார்த்தி.