Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
22
தமிழகத்தின் தலைவிதியை மாற்றி எழுதுமா... கமலின் புது விதி....??? - "மக்கள் நீதி மய்யம்"

kamals new party - தமிழகத்தின் தலைவிதியை மாற்றி எழுதுமா... கமலின் புது விதி....??? - "மக்கள் நீதி மய்யம்"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,706 Views
அரசியலுக்கு வருவேன்.. வருகிறேன்.. இதோ, வந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னவர் இன்னும் வருவது பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க, சொன்னதும் செயலாற்றி தான் செயல் வீரன் என்பதை நிரூபிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தனது தனிக்கட்சியை ஆரம்பித்து, தனது கொள்கைகளை சாமானிய மக்களுக்கும் விளங்கும்படியாக விபரித்து "மக்கள் நீதி மய்யம்" என்று பொருத்தமான பெயரும்  சூட்டி, தொண்டர்களை ஒன்றாக்கி பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் உலகநாயகன்.
 
 

பல சர்ச்சைகளுக்கு மத்தியில், ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் வீட்டில் ஆரம்பப்புள்ளி வைத்த கமல், தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கின்ற ராமேஸ்வரம் மீனவ சமூகத்தை சந்தித்தமையிலிருந்து மதுரை மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான பரமக்குடி வரைக்குமான நீண்டதொரு அரசியல் பாதையை நேற்றையதினம் நீட்டித்திருந்தார். 
 
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நேற்று மாலை தனது கட்சி தொடக்க விழாவில் தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து, தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், ''37 ஆண்டுகளாக அமைதியான முறையில் மக்களுக்கு நற்பணி செய்து கொண்டிருந்த தனது அன்பான  கூட்டத்தை தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருந்தீர்கள்'' என்று, ஆரம்ப உரையில் தனது ரசிகர்கள் குறித்து கமல் பெருமை பொங்க மக்களுக்கு அறிமுகம் செய்தார். 
அத்துடன், 'இன்று கட்சியின் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு  சென்றுவிட நான் எண்ணியிருந்தேன். ஆனால், நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்றே நம் கட்சியின் பிரசாரத்தையும் தொடக்கி வைத்துவிட்டார். அதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்றும் கமல் தனது உரையில் கூறினார். 
 
தொடர்ந்து பேசிய கமல் 'எத்தனை நாட்கள் ஊமையாக இருப்பது...? இன்று பேசும் நாள்' என்று அழுத்திக் குறிப்பிட்டதோடு நிறுத்தாமல், "மக்கள் நீதி மய்யம்" எனும் தனது கட்சியின் கொள்கைகள் குறித்தும் தெளிவுபடுத்துகையில்....
 
நல்ல மற்றும் தரமான கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
 
அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
 
சாதி, மதம் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
 
வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் இருக்காது. 
 
தாம் தத்தெடுக்கும் 8 கிராமங்களில் அனைத்து பணிகளையும் நாங்கள் நிச்சயமாக செய்து முடிப்போம். என்று கமல் மேடையில் சூளுரைத்தார். அத்துடன் 'நல்ல கட்சிக்கு வாக்களித்து இருந்தால் 6000 ரூபா அல்ல, ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் ரூபாவை மக்கள் சம்பாதிக்க முடியும்'' என்றும் சுட்டிக்காட்டினார் கமல்ஹாசன். 
 
அதேவேளை, "மக்கள் நீதி மய்யம்" என்ற தனது கட்சியின் பெயர் ஏன்? என்பதை தெரிவித்த கமல், "மய்யம்" என்பதன் பொருள் என்ன என்பதையும் தெளிவுபடுத்தலை மேற்கொண்டார். 'மக்களின் நீதியை மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி இது. நீங்கள் வலதா, இடதா என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள்; எந்த பக்கமும் ஒரேடியாக சாய்ந்து விடமாட்டோம். அதற்குதான் "மய்யம்" என்று கட்சிக்கு பெயர் வைத்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.
 
கட்சியின் சின்னம் குறித்து விபரிக்கையில், 'அதில் உள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களைக் குறிக்கும். இதை நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதேபோல், இதில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும்'' என்றும் கூறியதோடு, தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி பதிவாகி விட்டது. குறைந்தது மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் நீடிக்கும் எண்ணத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டுள்ளது. 'எனது வயது 63. அடுத்த 40 ஆண்டுகள் ஆளும் கனவோடு நான் இங்கு வரவில்லை. எதிர்காலத்தின் விதையை தேடி இங்கு நான் வந்துளேன். என் வயதை கிண்டலடிக்கிறார்கள், ஆயுள் குறைவாக உள்ள சிலர்' என்றும்  கமல் ஹாசன் தனது உரையில் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, இந்த கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ''இந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் மாற்றத்தை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். ஒரு திரையுலக பிரபலமாக நான் எப்போதுமே அவரது ரசிகனாக இருந்துள்ளேன். ஆனால், இப்போது அவர் களத்தில் நின்று போராடும் நிஜ கதாநாயகனாக திகழ்கிறார்'' என்று தெரிவித்தார்.
 
கடந்த சில மாதங்களாக, ஏன் வருடங்களாக கமலின் மிக தைரியமான செயற்பாடு பாராட்டுகளை பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால்,திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு ஊழல் கட்சிகளிடையே சிக்கி தவித்துவரும் தமிழக மக்களுக்கு இனிவரும் தேர்தல்களில் வாக்களிக்க ஒரு நேர்மையான கட்சி கிடைத்துள்ளது. அந்த நேர்மையான கட்சி கமலின் "மக்கள் நீதி மய்யம்" கட்சிதான் '' என்றும் அர்விந்த்  கெஜ்ரிவால் தெரிவித்தார்.
 
''நாங்கள் கட்சி தொடங்கிய சில மாதங்களில் நடந்த தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவற்றை புறக்கணித்து எங்கள் கட்சிக்கு டெல்லி மக்கள் வாக்களித்தனர் என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்துகிறேன்'' என்று கூறிய கெஜ்ரிவால், திமுக மற்றும் அதிமுகவை தூக்கி எறிய தயராகிவிட்ட தமிழக மக்கள் கமலுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
இது இப்படியிருக்க, கட்சியின் ஒரு சில முக்கிய பொறுப்புக்குரியவர்களின் நியமனமும் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில், "மக்கள் நீதி மய்யம்" கட்சியின் அகில இந்திய பொறுப்பாளராக தங்கவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சென்னை, காஞ்சிபுரம் மதுரை, தஞ்சாவூர், கோவை போன்ற பல மாவட்ட செயலாளர்களின் பெயர்களும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top