Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
12
தடைச் செய்யப்பட்டுள்ள சமூகவலைத்தளங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர கலந்துரையாடல்

facebook - தடைச் செய்யப்பட்டுள்ள சமூகவலைத்தளங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர கலந்துரையாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

831 Views
கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இயல்பற்ற நிலைமையால் தற்காலிகமாக தடைச் செய்யப்பட்டுள்ள சமூகவலைத்தளங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.
ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கண்டி மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் வேறுசில முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலையின் பின்னரான காலப்பகுதியில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் காவல்துறை மா அதிபருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

நீதி மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி சம்பவத்தை முன்னிருத்தி சில அரசியல் வாதிகள் இலாபம் பெற முயற்சிப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

கண்டியில் இடம்பெற்ற குழப்பநிலையை எனும் போர்வையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் மறக்கடிக்க செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எல்பிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற, நிகழ்வில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய கொள்ளை சம்பவம் இதன் மூலம் மறைக்கப்படுகிறது.

அத்துடன், தற்போது உயர்வடையும் பொருட்களின் விலைகள் குறித்த அரசாங்கத்தின் கவனயீனம், மக்கள் மத்தியில் மறக்கடிக்க செய்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top