பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, வித்தியாசமான கதைகளை ஏற்று நடித்து புகழ் பெற்றவர் நடிகை நித்யா மேனன். தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
இவர் தமிழில் 180 திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி படங்களில் நடித்துள்ளார். அத்துடன் மெர்சலில் விஜய் ஜோடியாக அசத்தியிருப்பார்.
இந்த நிலையில் நித்யா மேனனின் உடல் எடை அதிகரித்துள்ளது. இது குறித்து பல ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.
இது குறித்து நடிகை நித்யா மேனன் அண்மையில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
உடல் எடை அதிகரித்ததை எண்ணி தமக்கு கவலை இல்லை எனவும்,வெகு விரைவில் தான் பழைய உடல் தோற்றத்தை பெறுவதாகவும் நித்யா மேனன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.