Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
Samsung Galaxy S9, S9+ கைபேசிகளின் புதிய செயல்திறன்.!!

Sooriyan Gossip - Samsung Galaxy S9, S9+ கைபேசிகளின் புதிய செயல்திறன்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

877 Views
Samsung நிறுவனத்திடம் இருந்து வெளியாகும் ஒவ்வொரு புதிய தலைமை ஸ்மார்ட்போனுமே ஒரு புதுமை மிக்க கண்டுபிடிப்பு ஆகும். அதற்கு சமீபத்தில் வெளியான Samsung கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின் புரட்சிமிக்க மேம்பாடுகள் என்ன என்று கேட்டால்.? துளி கூட யோசிக்காமல் அதன் கேமராக்கள் என்று கூறலாம்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமரா பற்றி அதிகம் பேசப்பட்டது. வெளியான பின்னர், ஏன் அவைகள் அதிகம் பேசப்பட்டது என்கிற காரணங்கள் தெரியவந்தன. எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்களின் கேமராக்களின், Law Light Shots, Super Slow Mo Video, A R Emoji என பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். ஒரு முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் புகைப்படமானது சிறந்த முறையிலான ஒளியை பெற்றுள்ளது என்பதை எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்களின்Dual Appraisal உறுதி செய்கிறது.

இதன் இரண்டு F Stop முறைகள் ஆனது மனித கண்களை போன்றே, தானாகவே வெவ்வேறு ஒளி நிலைமைகளை ஏற்றுக்கொள்ளும். இதன் பின்புற F1.5 துளை ஆனது குறைந்த வெளிச்சத்திலும் கூட, பிரகாசமான மற்றும் தெளிவான புகைப்பட பதிவை உறுதிப்படுத்துகிறது. மறுபுறம், அதாவது பகல் நேரத்தில் புகைப்படங்கள் மிக கூர்மையாக வெளியே வர உதவுவதற்கு இதன் F2.4 துளை உதவும். ஆக மொத்தம் குறைந்த ஒளியோ, இருளான நேரமோ, Samsung கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் எதற்கும் தயார். கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராக்கள், Suer Slow Mo அம்சத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

விநாடிக்கு 960 பிரேம்கள் என்கிற விகிதமானது, கேலக்ஸி எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன் கேமராவின் Super Slow Mo அம்சத்தினை உண்மையிலேயே ஒவ்வொரு கணமும் கட்சிதமாக பதிவாக்குகிறது. பதிவாகும் வீடியோக்களுடன் இசையை சேர்ப்பதன் மூலம் உங்கள் கலைப்படைப்பை நீங்கள் வெளிப்படுத்தலாம். உடன் மூன்று லூப்பிங் ஸ்டைல்களின் - தலைகீழ்ரிவர்ஸ், Forward, Swing - ஆதரவும் உண்டு.

மேலும் ஒரு நேர்த்தியான ஸ்லோ-மோ வீடியோவை உருவாக்க எஸ்9 தொடர் ஸ்மார்ட்போனின் மோஷன் டிடெக்ஷன் திறனும் கைகொடுக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக, உங்களுக்கு பிடித்த சோ-மோ வீடியோவை மீண்டும் மீண்டும் காணும் வண்ணம், அதை உங்களின் Lock ஸ்க்ரீனாக கூட Set செய்யும் திறனை எஸ்9 தொடர் வழங்குகிறது. கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவின் கவனிக்கத்தக்க அம்சங்களில், optical image stabilizationஉம் ஒன்றாகும். இந்த அம்சமானது, நகரும் சமயத்தில் பதிவாக்கப்பட்ட புகைப்படங்களானது சரியான முறையில் மற்றும் பிரகாசமான ஒளியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

Live Focus என்பது கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவின் விளையாட்டையே மாற்றி அமைகிறது. இந்த அம்சம், ஒரு சரியான போர்ட்ரெயிட் படத்தை கைப்பற்ற அனுமதிக்கிறது மற்றும் அது மிக ஆழமான தகவல்களை கொண்டுள்ளதையும் உறுதி செய்கிறது. இதன் கூடுதல் சுவாரசியம் என்னவெனில், ஒரு படத்தை எடுக்கும் முன்னர் மட்டுமின்றி, பின்னரும் கூட உங்களின் விருப்பப்படி Depth of Field ஐ மாற்றலாம் இத்தகைய அற்புதமான அம்சங்களை, கேலக்ஸி எஸ்9 | எஸ்9+ கேமராவில் மட்டுமே அணுக கிடைக்கிறது. ஒருவேளை ன் நீங்களொரு ஸ்மார்ட்போன் போட்டோகிராபி பிரியர் என்றால் எஸ்9 தொடர் ஆனது, உங்களுக்கான ஒரு முழுமையான மகிழ்ச்சியினை அளிக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top