Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
காஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் !!

Sooriyan Gossip - காஷ்மீர் சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு, தண்டனையை அறிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,503 Views
காஷ்மீரில் கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் இந்திய ருபாய் அபராதம்  விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 

காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10-ம் திகதி  காணாமல் போன நிலையில், சுமார்  ஒரு  வாரத்தின் பின்னர்  அப்பகுதியில் உள்ள காட்டில் குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். 
 
குறித்த  சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டமை  விசாணைகளில் தெரிய வந்தது. குறித்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சிறுமியின் கொலையுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்ற சந்தேகத்தில் 3 காவற்துறையினர்  உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 
 
8வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட செய்தி  இந்தியாவின்  சில ஹிந்தி, ஆங்கில செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள்  மற்றும்  பத்திரிகைகள் போன்றன சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன.
 
இந்த விவகாரத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து, விசாரணை மேற்கொண்டது. 
 
இதன் போது  ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதிகள், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவர்களின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்கள் உள்ளிட்டவற்றை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது, அந்தரங்க மற்றும் தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
 
இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட 12 ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது . 
 
இந்த வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வில்  விசாரிக்கப்பட்டது. 
 
அப்போது, நோட்டீஸ் அனுப்பப்பட்ட 12 ஊடகங்களில் 9 ஊடகங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினார்கள். அவர்கள் வாதிடுகையில், சட்டத்தில் இதுபோன்ற விதிமுறைகள் இருப்பது தங்களுக்கு தெரியாது என்றும்  பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம்,பெயர் வெளியிடுவது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
 
அத்துடன் குறித்த  சிறுமி இறந்ததால், அவரது பெயரை வெளியிடலாம் என்று சட்டம் குறித்துத் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளோம். இதில் தவறு நடந்துவிட்டது. எனவும்  தெரிவித்தனர்.
 
ஆனால், குறித்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை. 
 
சிறுமியின் புகைப்படம், பெயர், அடையாளத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் இந்திய ருபாய் அபராதம் விதித்து உத்தரவுவிட்டது . 
 
மேலும், காஷ்மீர் சிறுமியின் அடையாளங்கள், பெயர், புகைப்படம் ஆகியவற்றைப் பொதுவெளியில் வெளியிடுபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top