Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
18
ஊழியர்களின் நாய்களுக்கு இடமளிக்கும் அமேசான் நிறுவனம்!!

Sooriyan Gossip - ஊழியர்களின் நாய்களுக்கு இடமளிக்கும் அமேசான் நிறுவனம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

775 Views
வளர்ப்பு பிராணியை தன்னுடனேயே வைத்திருக்க விரும்பும் ஊழியர்கள் அதிகம் அதிலும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் அப்படி இருக்க அமேசான் நிறுவனம் தன் ஊழியர்களது நாய்களை அழைத்துவந்து அவற்றை பாதுகாக்க பராமரிக்க வசதிகள் செய்து கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கும் அமேஸான் தலைமை அலுவலகத்தில் மொத்தம் 30 கட்டடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கட்டடத்திற்கு ரூஃபஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகளவில் நாய்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கும் மிக சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது அமேஸான். நாய்களை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், அப்படி அனுமதிக்கப்படும் நாய்களுக்குப் பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அமேஸான். 30 ஆயிரம் பேர் பணி புரியும் அமேஸான் தலைமை அலுவலகத்தில், ஒரு நாளைக்கு 6 ஆயிரம் நாய்கள் வருகை தருகின்றன.

உலகளவில் கூகுள், சேல்ஸ் ஃபோர்ஸ், மார்ஸ் போன்ற சில நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்திற்குள் நாய்களை அனுமதித்தாலும் கூட, அமேஸான் வழங்கும் வசதிகள் அதிகம் ஒருவர் தன் நாயைக் கொண்டு வர வேண்டுமென்றால், முதலில் தன் மேனேஜரிடமும், தன் டீம் உறுப்பினர்களிடம் அவர்களுக்கு இதனால் பிரச்னை இல்லை என்ற ஒப்புதலை பெற வேண்டும். பின்னர், நாய்க்கு சரியான தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக, நாய் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். அலுவலகத்தின் எந்தக் கட்டடத்திற்குள் நுழைந்தாலும் அங்கு ஓர் அழகான வரவேற்பாளர் உட்கார்ந்திருப்பார். அவருக்கு அருகே "Treat Bucket" என்று ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது முழுக்கவே நாய்களுக்குப் பிடித்த உணவுகளால் நிரப்பப்பட்டிருக்கும்.

நாய்கள் வரிசையில் நின்று அதைப் புசிக்கலாம். நல்ல ஆரோக்கியமான, சுவையான உணவை முடித்த பின் சும்மா இருக்க முடியாதல்லவா? எனவே, அது ஓடி, ஆடி விளையாட "Doggie Deck" என்ற இடம். இங்கு நாய்களுக்கான பல விளையாட்டுப் பொருட்கள் இருக்கும். நாய்களுக்கான காப்பீடு திட்டத்தையும் அமேஸான் நிறுவனம் வழங்குகிறது. மேலும், நாய்கள் இறந்துவிடும் பட்சத்தில், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அதன் உரிமையாளருக்கு "இழப்புத் துயர விடுமுறை" அளிக்கப்படுகிறது. அடுத்தது , ஆயிரம் சதுரடியில் நாய்களுக்கென ஒரு பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பெரிய பாறைகள், மரக் கட்டைகள் என நாய்கள் ஏறி, குதித்து விளையாடும் வகையில் பல விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. நாய்களுக்கான பூங்கா... பல இடங்களில் நாய்களுக்கான பிரத்யேக "Dogs Only Water Fountains" அமைக்கப்பட்டிருக்கின்றன. நாய்களுக்கான சிறுநீர் கழிக்குமிடம், மலம் கழிக்க தனியாக "Poop Bag Stations" என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1.அமேஸானில் மூன்று பிரபல நாய் இனங்கள் இருக்கின்றன: கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever), லேப்ரடார் ரிட்ரீவர் (Labrador Retriever), லேப்ரடூடல்ஸ் (Labradoodles). 2. நிறுவனத்தில் இருக்கும் நாய்களில் பிரபலமான மூன்று பெயர்கள் இருக்கின்றன: லூஸி (Lucy), பெல்லா (Bella), சார்லி (Charlie). இப்படியாக நாய்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, தேவைகளைக் கண்காணித்து மேம்படுத்துவது என நாய்கள் சம்பந்தமான விஷயங்களை முன்னெடுக்க, நாய்ப் பராமரிப்பிற்காகவே அங்கு ஒரு தனிக் குழு இயங்குகிறது. அந்தக் குழுவுக்கு மேனஜராக இருப்பவர் லாரா ஹிர்ச்ஃபீல்ட் "எங்கள் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் நாய்கள் வெறும் வளர்ப்புப் பிராணிகள் மட்டுமே கிடையாது.

அவர்களுக்கு அவை குழந்தைகள் மாதிரி. ஒருவர் ஒரு அலுவலகத்தில் திறன்பட செயல்பட வேண்டுமென்றால், அந்த அலுவலக சூழல் அவருக்குப் பிடித்த மாதிரியானதாக இருக்க வேண்டும். அந்தச் சூழலை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். நாய்களை அனுமதிப்பதால் எங்கள் ஊழியர்கள் மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி." என்று சொல்கிறார் லாரா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top