தற்போது Torch light என்னும் படத்தில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் சதா நடிக்கிறார்.
பல நடிகைகள் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த இந்த படத்தை, சதா ஏற்று நடிப்பதை கண்டு பல பாராட்டுக்கள் இவருக்கு குவிந்தன.
குறித்த படம் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சொல்லும் கதையாகும். இந்த நிலையில் இந்த படத்தின் கதையை கேட்ட உடனேயே நடிகை சதா பலமணி நேரம் இடைவிடாது அழுததாக இயக்குனர் கூறியுள்ளார்.
பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் காம வெறியர்களின் பிடியில் சிக்கி தவிக்கும் பெண்களை நினைத்து, சதா கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது.