Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
Gmail கணக்கில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மோசடி!

Sooriyan Gossip - Gmail கணக்கில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மோசடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,669 Views
ஜிமெயில் பயனர்களின் கணக்கில் இருந்து நம்பமுடியாத மோசடி ஒன்று ஏற்ப்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது, அதன்படி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam எனப்படும் தேவையற்ற மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உலகத்திலேயே ஜிமெயில் தான் அதிகம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. மேலும் இந்த சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய வசதியை Android மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிலும் பெற முடியும். இவை Suggestions அடிப்படையில் செயல்படுகிறது.

ஜிமெயில் பயன்படுத்தும் அனைத்து மக்களுக்கும் spam எனப்படும் மின்னஞ்சல்கள் கண்டிப்பாக அனுப்பப்படும், மேலும் இதனை தவிர்க்க அவற்றின் Server கணிப்பொறிகளில் spam filter எனப்படும் முறையால் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam மின்னஞ்சல்கள் அனுப்பப்படும் புதிய மோசடி இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக ஜிமெயில் பயனர்களுக்கு இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் spam filter கட்டுப்பாட்டையும் மீறி மெயில் வந்துவிடுகிறது.

இவ்வாறு அனுப்பப்படும் spam மின்னஞ்சல்கள் டெலஸ் எனப்படும் கனடா நாட்டுத் தொலைதொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படுவது போல போலியாக வைத்துக் கொள்கின்றன. மேலும் அந்த மின்னஞ்சல்களின் தலைப்பு உடல் எடையைக் குறைக்கும் வழிகள் மற்றும் மருந்துகள் என்பதாக அமைந்துள்ளன. மேலும் இப்போது வந்துள்ள இந்த மோசடி தகவல்கள் மஷாபில் எனும் தொழில்நுட்ப இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

மேலும் இதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால், சிறிய அளவிலான ஜிமெயில் பயனர்களின் சேவையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அறிந்துள்ளோம், விரைவில் இதனை சரிசெய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயலில் பாதுகாப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்துபவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுளின் இலவசமான ஜிமெயில் சேவையை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர் அத்தோடு அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாகவும் ஜிமெயில் உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top