Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - விஜய் சேதுபதி செய்தது என்ன.....?????

Sooriyan Gossip - சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் - விஜய் சேதுபதி செய்தது என்ன.....?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,832 Views
இந்திய அளவில் பெயர்பெற்ற தமிழ்த் திரையுலக இயக்குனர் மணிரத்னம் "காற்று வெளியிடை" படத்தைத் தொடர்ந்து, தற்போது இயக்கி வரும் புதிய திரைப்பம் "செக்கச் சிவந்த வானம்". பல தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களை இணைத்து இந்தப் படத்தை இயக்கி வருகிறார். 
மணிரத்னம் படம் என்றால் இசைப்புயல் இல்லாமல் படம் உருவாகுவதென்பது அரிதாகையால், இந்தப் படத்திலும் எப்போதும் போலவே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்  தன்  பணியைத் தொடர, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது "செக்கச் சிவந்த வானம்". இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹிடாரி, டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலிகான் என பல நட்சத்திரப் பட்டாளமே களம் இறங்கியிருக்கின்றது. 
 
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் "செக்கச் சிவந்த வானம்" படத்தில் சிம்பு பொறியியலாளராக நடிக்க, அவருடன் அரவிந்த்சாமி அரசியல்வாதியாகவும்,  விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரியாகவும்  நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் சிம்பு மற்றும் அரவிந்த்சாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதி, அருண் விஜய் மற்றும் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படஉள்ளனவாம்.
 
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி "செக்கச் சிவந்த வானம்" படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி  வருகிறது. இந்த நிலையில், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள், மே மாதம் நடுப்பகுதி வரை படமாக்கப்படவுள்ளதாம். இந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிப்பதாகவும், ஜோதிகா ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்ணாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top