களவாணி, மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, யாமிருக்க பயமே என்று தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவை பிக்பொஸ் நிகழ்ச்சி பிரபலபடுத்தியது.
இதனை அடுத்து, ஓவியா ஆர்மி என்று சமூக வலைத்தள பக்கத்தை உருவாக்கி அவருக்கு ஆதரவான கருத்துக்களை பல ரசிகர்கள் பதிவிடுகின்றனர்.
தற்போது காஞ்சனா 3-ம் பாகத்தில் ராகவா லாரன்சுடன் இவர் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகை ஓவியாவுக்கு சம்பளமாக 50 லட்சம் ரூபாய்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு படத்துக்கே இவ்வளவு சம்பளம் வாங்கும் நடிகை ஓவியாவைப் பார்த்தால், இப்போது பல நடிகைகளுக்கு பொறாமையாகத்தான் இருக்கும்.