Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
நிறம் மாறிய தாஜ்மஹால்

sooriyan gossip - நிறம் மாறிய தாஜ்மஹால்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

463 Views

தாஜ்மஹால் எனும் பெயர் வந்தாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது உலக அதிசயம் , காதலர்களின் காதல் சின்னம் அதுவும் ஷாஜகான் மும்தாஜிற்காக கட்டிய காதல் கோட்டை இந்த தாஜ்மஹால் என்பதே.
இந்தியாவில் ஆக்ரா எனும் பகுதியில் தாஜ்மஹால் இருக்கின்றது.வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வந்தால்  இந்த தாஜ்மஹாலை பார்வையிட தவறுவதில்லை.

அப்படிப்பட்ட  அழகிய பளிங்கு மாளிகை போல காட்சியளித்த தாஜ்மஹால் இப்போது ஒரு வகையான பச்சை மற்றும் பழுப்பு நிறம் கொண்டதாக காட்சியளிக்கின்றது.இதனால்
இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான எம்.சி. மேத்தா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தாஜ்மஹால் இப்படி காட்சியளிக்க காரணம் தாஜ்மஹாலை அண்மித்திருக்கும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை என்றும் தாஜ்மஹாலை ஒட்டியுள்ள யமுனை ஆற்றுப் பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதாலும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, தாஜ்மஹாலை பராமரிக்கும் நிர்வாக பொறுப்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ளதாக குறிப்பிட்டார்.

தாஜ்மஹாலை மாசுப்பாட்டில் இருந்து பாதுகாக்க உங்களிடம் தேவையான நிபுணர்கள் இல்லையா? அல்லது, இருந்தும் இதுதொடர்பாக நீங்கள் அக்கறை எடுக்கவில்லையா? தாஜ்மஹால் எப்படியாவது போகட்டும் நமக்கென்ன என்று முடிவெடுத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளதை தொடர்ந்து உங்களிடம் நிபுணர்கள் இல்லாமல் போனாலும் நமது நாட்டில் உள்ள நிபுணர்கள் அல்லது வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள் இவ்வழக்கின் விசாரணையை வரும் 9-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top