Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வெட்டுவான் கோவிலின் சோக வரலாறு!!

Sooriyan Gossip - வெட்டுவான் கோவிலின் சோக வரலாறு!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,188 Views
பாண்டிய நாட்டில், தலை சிறந்த சிற்பி  ஒருவன் இருந்தான். அவன் தெய்வ தச்சன் என்றழைக்கப்பட்டான். 

சுவாமியின் சிலைகளைச் செய்வதில், அவனது திறமை தனியாக இருந்தது. அவன் ஒரு சிலை செய்தால், கடவுளே நேரில் வந்து விட்டதைப் போலத் தோன்றும்.

அவனுக்கு ஒரு மகன் இருந்தான். ஒரு நாள் திருவிழாவில் தன் மகனை அவன் தொலைத்து விட்டான். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மகன் தொலைந்த கவலையில், கழுகுமலைக்கு வந்த அந்த தச்சன், அங்கேயே வருடக் கணக்கில் தங்கி விட்டான்.

அங்கு வாழ்ந்த சமணர்களுக்காக, பல சிற்பங்களை எல்லாம் உருவாக்கிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட பலரும், ''இந்த சிற்பங்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது.

ஆனால், இங்கே உள்ள சிற்பங்களை விட கீழே ஒரு இளைஞன் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்கள் தான், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருக்கிறது'' என்று பேசினார்கள்.

தலை சிறந்த சிற்பியான தெய்வ தச்சனுக்கு, இந்த வார்த்தைகள் அவனது நெஞ்சைத் துளைத்தன. நம்மை விட சிறந்த சிற்பி இந்த நாட்டில் யார்? என்று கோபம் அடைந்தான்.

அவனைப் பற்றிப் புகழ்ந்து பேசுபவர்களிடம் தேவையில்லாமல் தனது எரிச்சலைக் கொட்டினான். அந்த புதிய சிற்பி மீது அவனுக்கு கொலை வெறி வந்தது.

ஒரு நாள், கோபத்துடன் மலைக்கு கீழே வந்தவன், அங்குள்ள மலையில் சிற்பம் செதுக்கிக் கொண்டிருந்த, அரும்பு மீசை கொண்ட, அந்த புதிய சிற்பி இளைஞன் மீது, தனது சுத்தியலை வீசினான்.

அது அந்த இளைஞனின் தலையை இரண்டாகப் பிளந்து, ரத்தம் கொட்டியது. அவன், "அப்பா... என்று கதறியவாறு கீழே சாய்ந்தான்.

தெய்வ சித்தன், வேகமாகச் சென்று, அந்த இளைஞனைப் பார்த்தான். திருவிழாவில் தொலைந்து போன தன் மகன் தான் அவன், என்பதை உணர்ந்து கதறினான்.

அதனால், அங்குள்ள வெட்டுவான் கோயிலின் பணிகள் முற்றுப் பெறாமலே போய் விட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top