Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


துறு துறு விழிகள் படபடவென சிறகடிக்க, அழகிய இள மானொன்று சின்னத்திரை நாடகங்களிலும், ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்து களை கட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுதே பலரும் சொன்னார்கள், இந்தப் பொண்ணு நல்லாதானே இருக்கு. நடிக்க வரலாமேன்னு !
அப்போ சொன்ன அந்த வாய் முகூர்த்தம் , இப்பொழுது பலித்திருக்கிறது. அவர்தான் ஆனந்தி. இது யாரடா புதுசா ஒரு ஆனந்தின்னு நீங்க யோசிக்கலாம். அவர்தான், மீகாமன் படத்தின் ஹன்ஷிகாவின் தோழியாக வருவாரே ! அவர்தான் இவர், அதாவது நான் சொல்லும் ஆனந்தி.

என்னம்மா ஒரே குழப்பமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? சரி, இனி குழம்பாதீங்க. கயல் படத்தில் வர்ற ஆனந்தி போலவே, இவரும் நல்ல கலரும் எல்லோரையும் கவரும் அழகும் கொண்டு உலா வருகிறார். மீகாமன் மூலமாக தனது சினிமா வாழ்வை ஆரம்பித்துள்ள இந்த சின்னத்திரை ஆனந்தி, இனி தொடர்களில் நடிப்பதில்லை. சினிமாவில் மட்டுமே முழுக் கவனமும் என்கிறார்.

அந்த ஆனந்தி இருக்கும்போதே, அதே பெயரோடு வர்றீங்கலேன்னா, நடிப்பில் வித்தியாசம் இருக்கும். கவலைப்பாடாதீங்கன்னு நமக்கே ஆறுதல் சொல்றாங்க. அப்போ பாருங்களேன் ....!!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
5,987 Views
என்னை அறிந்தால் கொடுத்த உற்சாகம், குட்டித் தல பிறந்த பூரிப்போடு வசந்தங்களை அள்ளி அணைத்தவராய் இப்பொழுது அஜித். அடுத்த படத்துக்கான பரபரப்பு அத்தோடு அன்புள்ள அப்பாவாய், குழந்தையோடு கொஞ்சிக் குலாவி நேரத்தைக் கழித்து வந்த இவர், இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் தனது அடுத்த படத்துக்கு ஆயத்தமாகியுள்ளார்.

இந்நிலையில், அஜித்தின் மூக்கில் சைனஸ் என்று சொல்லப்படும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது, மூக்கில் தசை வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அஜித் சைனஸ் நோய்க்கான அறுவைச் சிகிச்சையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இப்பொழுது பூரண சுகத்தோடு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் சொல்லியுள்ளன.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
2,749 Views
அஜித் படத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக, பலரும் பல தியாகங்களை செய்து அவர் படத்தில் இணைந்து கொள்வார்கள். இதற்க்கு பலரை உதாரணமாக சொல்ல முடியும்.

இந்நிலையில், தம்பி ராமையா பற்றி உங்களுக்கு தெரியும். சொல்லத் தேவையில்லை. அவரது நடிப்பும் உடல் மொழியும் எல்லா இரசிகர்களுக்கும் பிடித்தமானது. அவரது மகன் கதாநாயகனாக களமிறங்கும் படமொன்றை இவரே தயாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், அஜித் சிவா இணையும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனால், மகனின் படத்தையும் தள்ளி வைத்துவிட்டு அஜித் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் தம்பி ராமையா. அந்தளவுக்கு அஜித் மீது பக்தி என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
4,882 Views
 உலக கிண்ணம் 2015.
காலிறுதிக்கு முன்னர் கலக்கலும்..கலக்கமும்..

பதினோராவது உலக கிண்ணத்தின் உச்ச பட்ச பரபரப்புக்கான நாட்களுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் உலகளாவிய ரீதியில் இப்போது தயாராகிவிட்டனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் உலக கிண்ணத்தின் உச்சபட்ச பரபரப்புகளுக்கு மத்தியில் காலிறுதியில் இப்போது எட்டு அணிகள் முட்டிமோதக் காத்திருக்கின்றன.

எட்டு அணிகளிலிருந்து அரையிறுதியை எட்டும் அந்த நான்கு அணிகள் எது என்றும் அவற்றிலிருந்து அரையிறுதிக்கு தேர்வாகி கிண்ணத்தை வெல்லப்போகும் சாம்பியன் அணி எதுவென்ற கேள்விகளுக்கு மத்தியில் இதுவரையான 42 ஆட்டங்களில் நிகழ்த்தப்பட்ட ஒரு சில சாதனைகளைப் தொகுத்து பட்டியலிடுகின்றோம்.

குழுநிலை ஆட்டங்களை பொறுத்தவரையில் குழு 'A' யில் நியூசிலாந்து அணியும் 'B' பிரிவில் இடம்பிடித்த நடப்பு உலக சாம்பியனான இந்தியாவும்தான் குழுநிலை ஆட்டங்களில் தோல்வியே காணாத அணிகளாகும்.

இந்த இரண்டு அணிகளும் அவர்களது குழுநிலை ஆட்டங்களின் 6 போட்டிகளிலும் வெற்றியையே பெற்றுள்ளன.அதிலும் இந்திய அணி பங்கெடுத்த 6 போட்டிகளிலும் எதிரணிகளின் 60 விக்கெட்களையும் கைப்பற்றிய அணி என்கின்ற சாதனையோடு இப்போது காலிறுதியை எட்டியிருக்கிறது.

இப்படி இந்த இரு அணிகளும் தோல்விகளையே சந்திக்காத நிலையில் இந்த உலக கிண்ணத்தில் வெற்றிகளையே ருசிக்காத அணிகளும் இருக்கத்தான் செய்கின்றன.

'B' பிரிவில் இடம்பெற்ற UAE மற்றும் 'A' பிரிவில் இடம்பெற்ற ஸ்கொட்லாந்து ஆகிய இரு அணிகளும், தங்களது குழுநிலைப் போட்டிகளில் ஒரு போட்டியிலும்கூட வெற்றியைப் பெறாமல் தங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கின்றன.

அதிலும் குறிப்பாக ஏற்கனவே 2 உலக கிண்ணத் தொடர்களில் ஆடியிருந்தும் எந்தவொரு உலக கிண்ண வெற்றியையும் பெற்றிராத நிலையில் இம்முறையும் பங்கெடுத்த ஸ்கொட்லாந்து அணி 6 ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்திருக்கிறது.

உலக கிண்ணப் போட்டிகளில் அதிக சதங்களைப் பெற்ற வீரர் எனும் சாதனையாளராக சச்சின் திகழ்கிறார்.இவர் 1992 முதல் 2011 வரையில் மொத்தம் 6 உலக கிண்ணத் தொடர்களில் பங்கெடுத்து 6 சதங்களைப் பெற்றுள்ளார்.ஆனால் இலங்கையின் குமார் சங்ககார இந்த உலக கிண்ணத் தொடரில் மட்டும் 4 சதங்களை விளாசியுள்ளார்.

இதன்மூலம் அதிக உலக கிண்ண சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சினுக்கு அடுத்த நிலையில் சங்கா (5 சதங்கள்) திகழ்கிறார்.

வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து 4 சதங்கள் பெற்று புதிய உலக சாதனையை படைத்தார் குமார் சங்ககார.

ஏற்கனவே ஒட்டு மொத்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே அடுத்தடுத்து 3 சதங்கள் பெற்ற வீரர்களாக பாகிஸ்தானின் சகீர் அப்பாஸ்,சயிட் அன்வர் ,தென்னாபிரிக்காவின் கேர்சல் கிப்ஸ் ,டி வில்லியர்ஸ்,குயிண்டன் டி கொக் ,மற்றும் நியுசிலாந்தின் ரோஸ் டெயிலர் ஆகியோர் சாதித்து இருந்தாலும் இவ்வாறு 4 தொடர்ச்சியான சதங்களைப் பெற்ற வீரர்கள் யாரும் இல்லை எனும் நிலையில் இந்த அபரிவிதமான சாதனையை அதுவும் உலக கிண்ணத் தொடரில் அடுத்தடுத்து 4 சதங்கள் பெற்று சங்கா சாதித்திருக்கிறார்.

         

குழுநிலைப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராகவும் சங்கா காணப்படுகின்றார். 6 போட்டிகளில் விளையாடி 496 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

இதுவரைக்குமான 41 ஆட்டங்களின் அடிப்படையில் மொத்தம் 35 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இலங்கையின் வீரர்கள் 8 சதங்கள் பெற்றுள்ளனர்.இந்தியாவின் வீரர்கள் 4 பெற்றுள்ள நிலையில் இம்முறை உலக கிண்ண அறிமுகம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி மட்டுமே சதங்களைக் குவிக்கத் தவறிய அணியாகும்.

தவான் ,டில்ஷான் ,மக்மதுல்லா ,ப்ரெண்ட டெயிலர் ஆகியோர் தலா இவ்விரு சதங்களைக் குவித்துள்ளனர்.

இத்தோடு உலக கிண்ணத்தில் பெறப்பட்ட அதிகபட்ச அணியொன்றின் ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனையை இந்தியா 2007 இல் பேர்முடாவுக்கு எதிராக 413 ஓட்டங்களைப் பெற்று சாதித்திருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலிய அணி (417 ஓட்டங்கள்) இம்முறை அந்த சாதனையை புதுப்பித்துள்ளது.

400 க்கும் அதிகமான ஓட்டங்கள் 3 தடவைகள் பெறப்பட்டது.தென்னாபிரிக்க அணி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கெதிராக 2 தடவைகள் 400 க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆஸ்திரேலியா ஒரு தடவை பெற்றுக் கொண்டது.

அதிக ஓட்டங்கள் குவிக்கப்படும் இந்த உலக கிண்ணத்த் தொடரில் அணியொன்றின் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக UAE அணியின் 102 ஓட்டங்கள் பதிவானது.இந்திய அணிக்கெதிரான போட்டியில் இந்த மோசமான பெறுபேற்றை UAE பெற்றது.

மிக விறுவிறுப்பான போட்டி முடிவாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணியின் 2 பந்துகள் மீதமான வெற்றியும்,அயர்லாந்து மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி பெற்றுக்கொண்ட 5 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியும் அமைந்தது.

அத்தோடு இந்த 40 ஆண்டுகால உலக கிண்ண வரலாற்றில் இதுவரை இரட்டை சதம் குவித்த வரலாறு உலக கிண்ணத்தில் இல்லையெனும் குறையை சிம்பாவே அணிக்கெதிரான போட்டியில் கிரிஸ் கெயில் 215 ஓட்டங்கள் பெற்று புதிய சாதனை படைத்தார்.

அத்தோடு வேகமான உலக கிண்ண சதம் எனும் சாதனையை அயர்லாந்தின் வீரர் கெவின் ஒ பிரையன் தன் வசம் வைத்ருக்கின்றார்.50 பந்துகளில் இவர் இங்கிலாந்துக்கு எதிராக 2011 இல் சதம் குவித்தார்.

இந்த சாதனையை முறியடிக்கும் இரண்டு அருமையான சந்தர்ப்பம் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மக்ஸ்வெல்லுக்கு கிடைத்தாலும் அதனை அவர் தவறவிட்டிருந்தார்.

ஆயினும் 51 பந்துகளில் இலங்கை அணிக்கெதிராக இந்த உலக கிண்ணத் தொடரில்  
மக்ஸ்வெல் சதத்தை எட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இது உலக கிண்ணத்தில் பெறப்பட்ட 2 வது வேகமான சதமாகும்.

ஒரே போட்டியில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 33 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்திய நியுசிலாந்தின் டிம் சவுத்தி  ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக திகழ்கிறார்.
ஸ்கொட்லாந்துக்கு எதிராக 319 ஓட்டங்களை விரட்டிச் சென்று வங்கதேச அணி வெற்றி பெற்றதுதான் குழுநிலை போட்டிகளின் அணியொன்றின் பெரிய சேஸிங் வெற்றியாகும்

இதேவேளை தென் ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டி வில்லியர்ஸ் இதுவரை மொத்தமாக 20 சிக்சர்கள் விளாசி முதலிடத்திலுள்ளார். 54 நான்கு ஓட்டங்களை விளாசி அதிக நான்கு ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்ககாரா முதலிடத்திலுள்ளார்.

சிம்பாப்வே அணியின் சோன் வில்லியம்ஸ் மற்றும் பாகிஸ்தானின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் தலா 4 அரை சதங்கள் பெற்று அதிக அரை சதம் பெற்றுக்கொண்ட வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த உலக கிண்ணத் தொடரில் மெல்போர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.இதுதான் உலகக் கிண்ணத்தில் இதுவரையான ஒரேயொரு ஹாட்ரிக் சாதனையாகும்.

உலக கிண்ணப் போட்டி வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவும் வரலாறு இம்முறையும் 6 வது தடவையாகவும் நிகழ்ந்திருக்கிறது.ஆனால் தென்னாபிரிக்காவை இந்தியா உலக கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெற்றதில்லையானாலும் இம்முறை அதனை இந்தியா தகர்த்து தென்னாபிரிக்காவை வென்று அந்த வரலாறை
புதுப்பித்திருக்கிறது.

வேகப்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆசிய நாட்டு வீரர்களின் ஆதிக்கம் இருக்காது எனும் கருத்தை பொய்பித்து இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு ஆசிய நாடுகள் உலக கிண்ண கிரிக்கெட்டின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை இதுதான் முதல் முறையாகும். முன்னதாக 1996ல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் கிரிக்கெட்டை அறிமுகப் படுத்திய நாடு எனும் பெருமை பெற்றுள்ள இங்கிலாந்து இம்முறையும் காலிறுத்திக்கு கூட தேர்வாகாது வெளியேற்றப்பட்டுள்ளமை ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

                                        

                    #காலிறுதிப் போட்டி அட்டவணைகள்.

1.இலங்கை VS தென்னாபிரிக்கா -சிட்னி மைதானம் 9.00 AM
2.இந்தியா VS பங்களாதேஷ்-மெல்போர்ன் மைதானம் 9.00 AM
3.பாகிஸ்தான் VS ஆஸ்திரேலியா -அடிலெயிட் மைதானம் 9.00 AM
4.நியூசிலாந்து VS மேற்கிந்திய தீவுகள் -வெலிங்கடன் மைதானம் 6.30 AM

எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் காலிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை வரையும் இடம்பெறக் காத்திருக்கின்றன.

மொத்தம் 49 ஆட்டங்கள் அட்டவணைப் படுத்தப்பட்டிருக்கும் இந்த உலக கிண்ணத்தில் இதுவரை 42 ஆட்டங்கள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் 14 அணிகள் பங்கெடுத்த 11 வது உலக கிண்ணத்தில் இப்போதைய 8 அணிகளுக்குள் மகுடம் சூடும் அணி எதுவெனும் பலத்த கேள்வி இப்போது வலுப்பெற்றிருக்கிறது.

*தில்லையம்பலம் தரணீதரன்.
2015.03.16
5,920 Views
தல அஜித் ஜோடியாக பில்லா 2 இல் இறக்குமதியானது, இந்த புன்னகை பூகம்பம் பார்வதி ஓமனக்குட்டன். அழகான ஒல்லிப்பிச்சான் நடிகையாக கோடம்பாக்கத்துக்குள் வந்த அம்மணிக்கு வேறு படங்கள் கை கொடுக்கவில்லை. வாய்ப்பும் வரவில்லை.

ஆனாலும், இந்த அழகி 2008இல் மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் என்பதும் முக்கியமானது. அஜீத்துக்காக தமிழுக்கு வந்தாலும், அம்மணி ஏற்கனவே ஹிந்திப் படங்களில்  படு பிசியான நடிகை. பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், பார்வதிக்கு இப்பொழுது சமூக சேவை சார்ந்த அம்சங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் ஏனைய பொதுநலன் சார்ந்த அமைப்புகளுக்கும் அடிக்கடி விஜயம் செய்து வருகிறார். இவை அனைத்துக்கும் மேலாக தனது உடல் உறுப்புக்களில் அடுத்தவர்களுக்கு பயன்படும் உறுப்புக்களை தானம் செய்துள்ளார்.

தன்னால் முடிந்த சின்ன உதவி இது என பெருமையாக பேசி வருகிறார் பார்வதி ஓமனக்குட்டன்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
1,844 Views
இந்த வருடத்துக்கான நோர்வே நாட்டின் விருதுகள், தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் விருதுகள் வழங்கப்பட்ட படங்களுக்கும் கலைஞர்களுக்குமான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறந்த படம் - குக்கூ

சிறந்த இயக்குனர் - வசந்தபாலன்(காவியத்தலைவன்)

சிறந்த நடிகர் - சித்தார்த்(காவியத்தலைவன்)

சிறந்த நடிகை - வேதிகா(காவியத்தலைவன்)

சிறந்த கதாபாத்திர நடிகர் - சிம்ஹா(ஜிகர்தண்டா)

சிறந்த குணச்சித்திர நடிகர் - நாசர்(காவியத்தலைவன்)

சிறந்த குணச்சித்திர நடிகை - குயிலி(காவியத்தலைவன்)

சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாரயணன்(ஜிகர்தண்டா)

சிறந்த பாடலாசிரியர் - யுகபாரதி(குக்கூ)

சிறந்த பாடகர் - ஹரிச்சரண்(காவியத்தலைவன்)

சிறந்த பாடகி - வைக்கம் விஜயலட்சுமி(என்னமோ ஏதோ)

சிறந்த ஒளிப்பதிவாளர் - வெற்றிவேல்(கயல்)

சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன்(ஜிகர்தண்டா)

சிறந்த சமூக விழிப்புணர்வு திரைப்படம் - சிகரம் தொடு

வாழ் நாள் சாதனையாளர் விருது - கே.பாலசந்தர்

கலைச்சிகரம் விருது - சிவக்குமார்

சிறப்பு ஜுரி விருது - வின்செண்ட்(கயல்)

பாலுமகேந்திரா விருது - ரா.பார்த்திபன்(கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்)

பாலசந்தர் விருது - விவேக்

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
873 Views
ஐ கொட்டிக் கொடுத்த, கோடி கொடியான வெற்றிகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார் சீயான் விக்ரம். மீண்டும் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆயத்தமாகி விட்டார். அதுவும் ஐ படத்துக்கு செலவழித்தது போல, கிட்டத்தட்ட 2 வருடங்களை இனியும் எந்தப் படங்களுக்கும் வழங்கப் போவதில்லை என தெளிவான முடிவோடு அடுத்த கதையை கேட்டுள்ளார்.

இனி 6 மாத காலம் மட்டுமே ஒரு படத்துக்கு வழங்கும் கால அவகாசமாக இருக்கும் என்றுள்ளார் சீயான். இவர் நடிக்கும் அடுத்த படத்தை அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கவுள்ளார்.

படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தற்காலிகமானதா  இல்லை நிரந்தரமானதா என்று இதுவரைக்கும் எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனாலும், இதுவரைக்கும் வந்த தகவல்களின் அடிப்படையில், படத்தின் பெயர் மர்ம மனிதன்.
விக்ரம் படமென்றால் பல மர்மங்களும் ஆச்சர்யங்களும் ஒளிந்து கிடக்கும். இந்தப் படத்தில் என்னென்ன புதுமைகள் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-கொண்டு கோடம்பாக்கக் குருவி-
3,883 Views
ஆரம்பத்தில் கொஞ்சம் வயதுக்கு மீறிய வேலைகள் செய்து சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இப்பொழுது அனுபவமும் பக்குவமும் நிறைந்த ஒருவராக சமத்துப் பையனாய், தானுண்டு தனது வேலையுண்டு என்று இசையமைப்பில் கவனம் செலுத்துகிறார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.

இசையமைப்பது மட்டுமில்லாமல், ஏனைய இசையமைப்பாளர்கள் அழைத்தால் அவர்களுக்காக பாடுவது, நட்புக்காக பாடல்களில் நடிப்பது என, பல துறைகளிலும் கோலோச்சி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயம் ரவிக்காக அப்பாடக்கர் படத்தில் ''டண்டனக்கா  '' பாடலை பாடியிருந்தார். அத்தோடு, இப்பொழுது நகைச்சுவை நடிகர் விவேக் எழுதி நடிக்க அவரோடு சோனியா அகர்வால் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களாக நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் ''பாலக்காட்டு மாதவன்'' படத்திலேயே இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.

இது பற்றி விவேக் ''அனிருத் மிகுந்த நல்ல மனது கொண்டவர். நான் கேட்டதும் என் அழைப்பை மறுக்காமல் ஏற்று, வந்து பாடிக்கொடுத்தார். பெருந்தன்மை இல்லாத ஒரு திறமைசாலி'' என்றுள்ளார். இவற்றோடு, தனுஷ் நடிப்பில் வரவுள்ள மாரி படத்திலும் ஒரு பாடல் பாடி, தனுஷோடு இணைந்து அந்தப் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளார் அனிருத். இப்படியே சென்றால் இன்னும் ஏற்றம் பெறலாம் அனிருத்.

கட்ச் த பாயிண்ட்

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
1,452 Views
பட்டத்துயானை படத்தின் மூலமாக, வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். அழகாய் இருக்கிறார், நடிக்கவும் தெரிந்திருக்கிறது, ஆனாலும், ஒரு படத்தோடு யாரும் பின்னர் இவர் வீட்டு கதவை தட்டவில்லையே என கோடம்பாக்கமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.

இந்நிலையில், அப்பாவின் இயக்கத்தில் மூன்று மொழிகளிலும் தயாராகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக ஐஸ்வர்யாவே சொல்கிறார்.

''வேறு யாராவது இயக்குனர்கள் படமென்றால் சொல்வதை நடித்துவிட்டு போய் விடலாம். இது அப்பா படம். அவருக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. அதனால், கஷ்டப்பட்டு நடிக்கவேண்டிய கடமை இருக்கிறது. ஹீரோ இன்னும் முடிவாகவில்லை. உறுதியானதும் அப்பாவே அறிவிப்பார். நான் இப்படத்தில் கதக் நடனக் கலைஞராக வருகிறேன் '' என்று பேசுகிறார் ஐஸ்வர்யா.

பார்க்கலாம், அப்பவின் படமாவது இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புக்களை வாங்கிக் கொடுக்கிறதா என்று??

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
2,268 Views
ஷங்கரின் ஐ படம் பெற்றுக் கொடுத்த புகழும், கொண்டு வந்து சேர்த்த புதிய வாய்ப்புக்களும் எமியைப் பொறுத்தவரையில் ஏராளம். அவரது நோக்கமெல்லாம் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்பது மட்டுமே!

இப்பொழுது, பல படங்கள் இவரது கையில் இருக்கிறது. உதயநிதியுடன் ஒரு படம், பெயரிடப்படாத இன்னுமொரு நகைச்சுவைப் படம். அத்தோடு, தனுஷுடன் இன்னுமொரு புதிய படமென அம்மணியின் பட்டியல் நீள்கிறது.

இந்நிலையில், இந்த அழகுப் பதுமை வெளிப்படையாக வாய்திறந்து பேசியிருக்கிறது. அதாவது, எனக்கு நடிகர் தனுஷுடன் ஜோடியாக நடிக்க ஆசி. அவரது நடிப்பும் உடல்மொழியும் அதிகம் எனக்குப் பிடிக்கும். அவரோடு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்குமென காத்திருக்கிறேன் என்று, விலாவாரியாக சொல்லியிருக்கிறார்.

ஆக இந்த அம்மணி பிழைத்துக் கொள்ளத் தெரிந்தவர் என்பதோடு, சினிமாத்துறைக்கும் மிகப் பொருத்தமானவர்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
1,871 Views
இந்தியாவில் குறிப்பாக சினிமாவில் கவர்ச்சியான நடிகர் எனும் வாக்கெடுப்பை, பொலிவூட் லைப் எனும் இணையதளம் கணித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் இந்தி நடிகர்களான அமீர்கான் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோரை பின்தள்ளி தல அஜித் முதலிடம் பிடித்துள்ளார்.

ஆச்சர்யமாக இருக்கிறதா?
இல்லை, நம்பித்தான் ஆகவேண்டும். அதாவது, வயதை மறைக்காமல் எளிமையாக, தன்னிடம் என்ன இருக்கிறதோ அதையே வெளிப்படுத்தும் அஜித்மீது இரசிகர்களுக்கு தனி மரியாதையும் பற்றும் இருக்கிறது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பில் அமீர்கான், அக்‌ஷய்குமார், மிலந்த் சோமன்,ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளோனி போன்றவர்கள் இருந்தும், அவர்களால் அஹித் பெற்ற புள்ளிகளை பெற முடியவில்லை.

அஜித் முதலிடத்திலும், அக்ஷய்குமார் இரண்டாமிடமும், ஜார்ச் குளோனி மற்றும் அமீர்கான் முறையே மூன்றாம் நான்காம் இடத்தை பெற்றுள்ளார்கள். இவைகளுக்கு நடுவில், இத்தனை ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பட நடிகர்கள் மத்தியில் தமிழ் நடிகராக அஜித் வெற்றி பெற்றுள்ளமைக்கு பலரும் வாழ்த்துக்களை அள்ளி வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
10,769 Views
அஜித்தின் என்னை அறிந்தால் முடிந்த கையேடு தனது திருமண நிச்சயதார்த்ததி முடித்துக் கொண்டு திருமணத்துக்கு தயாராகிவரும் நடிகை திரிஷாக்கு, இன்னும் வாய்ப்புக்கள் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் வாய்ப்பில்லாமல் உட்கார்ந்திருந்த அம்மணிக்கு, இப்பொழுது மவுசு கொட்டிக் கிடக்கிறது. இன்றுள்ள இளம் நடிகைகளோடும் போட்டி போட்டு தமிழ் சினிமாத்துறையில் நின்றுபிடிக்கும் தைரியம் வாய்ந்த நடிகை இவர்தான்.

இப்பொழுது, பூலோகம், அப்பாடக்கர், போகி, லையன் போன்ற படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், 3 மொழிகளிலும் தயாராகும் படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தியில் அக்ஷைகுமார் காஜல் நடித்த ஸ்பெசல் 26 எனும் படத்தின் தயாரிப்பு உரிமையை தியாகராயன் வாங்கியுள்ளார். இதில் தமிழில் பிரஷாந்தும் தெலுங்கில் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். கன்னடம் யாரென முடிவாகவில்லை.

இந்த 3 மொழி தயாரிப்பிலும் நாயகி த்ரிஷா என்பது ஆச்சர்யமானதுதான்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
1,258 Views
அனைவரையும் கவர்ந்த திரைப்படமாகவும், வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாகவும் 1991இல் வெளிவந்த படம் என் ராசாவின் மனசிலே! ராஜ்கிரண் மற்றும் மீனா, வடிவேலு, பிரீத்தா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருக்க, இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார்.

ராஜ்கிரண் அறிமுகமானதுடன், தமிழ் சினிமாவின் நகைச்சவை மன்னன்களில் ஒருவர் வைகைப்புயல் வடிவேலுவும் களமிறங்கிய படம் இது.

சரி, இதை ஏன்  இப்போ சொல்றன்னு நீங்க யோசிக்கலாம். இங்கதான் இருக்கு விஷயம். இந்த என் ராசாவின் மனசிலே திரைப்படம், இபொழுது மீளவும் பாகம் 2ஆக தயார் செய்யப்படவுள்ளது. வெள்ளி விழாப் படமான இப்படத்தை, 24 வருடங்களுக்கு பிறகாக, இப்பொழுது மீண்டும் எடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதிலும், நாயகனாக ராஜ்கிரணும் ஜோடியாக மீனாவும் நடிக்கவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இளையராஜா இசையமைக்கவுள்ள இப்படத்துக்கு இப்பொழுதே இரசிகர்கள் மத்தியில் கிராக்கி கூடியிருக்கிறது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
3,092 Views
ஹிந்தியில் அமீர்கான் நடித்து வெளியாகி சர்ச்சைகளையும் கிளப்பி, எக்கச்சக்க வசூலையும் குவித்த படம் பிகே. இந்தப் படத்தை தமிழில் கொண்டு வருவதற்காய் அதன் தமிழ் உரிமையை வாங்கியது நம்ம ஜெமினி கலர் லேப் நிறுவனம். வாங்கிய நிறுவனம் யாரை வைத்து படத்தை ஆரம்பிக்கலாமென திட்டம் தீட்டி வந்தது.

பலரும் தமது அறிவுக்கு எட்டிய ஆருடங்களை கூறி வந்தார்கள். கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டால் கமல் நடிக்க வாய்ப்புண்டு என பலர் கூறி வந்தார்கள். ஆனாலும், கமல் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இந்நிலையில், ஜெமினி கலர் லேப் நிறுவனம் 3 இயக்குனர்களிடம், கமலை நாயகனாக வைத்து படத்தை இயக்க சம்மதமா என்று கோரியதாகவும், மூவருமே சம்மதம் சொன்னதாகவும், அதில் யாருக்கு இந்த படத்தை இயக்கம் அதிஷ்டம் வாய்க்கப் போகிறது என காத்திருக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்!

இந்த விவகாரம் இப்படி இருக்க, இப்பொழுது இன்னொரு கதையும் கசிந்து வந்திருக்கிறது. பிகே படத்தின் ஹிந்திப் பதிப்பில், சஞ்சய் தத் நடித்த பாத்திரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியை நடிக்க வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

ரஜினி நடிப்பாரா இல்லையா என்பது குறித்து அவரது தரப்பும் இன்னும் வாய் திறக்கவில்லை. அத்தோடு, இந்தப்படத்தில் எப்படியும் ரஜினி கமல் இணைவார்கள் என, திரையுலக தீர்க்கதரிசிகள் கூறிவருகின்றனர். பார்க்கலாம் ! இணைந்தால் நமக்கும் மகிழ்ச்சிதான் !!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

5,820 Views

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பஸ்ஸில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி பிபிசி நிறுவனம் சார்பில் ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படம் உருவாக்கப்பட்டது.

இயக்குநர் லெஸ்ஸி உட்வின் உருவாக்கிய இப்படத்தில், கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் சர்ச்சையான பேட்டியும் இடம்பெற்றதால் இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட ‘இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப வேண்டும் என்று ஒரு சில அரசியல்வாதிகளும், நடிகர், நடிகைகளும் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக குற்றவாளியின் பேட்டியை தடை செய்தது தவறு என்றும், சரி என்றும் மாறுபட்ட கருத்துக்கள் சினிமா நட்சத்திரங்களுக்குள் உருவாகி வருகிறது.

இது குறித்து சமந்தா கூறும்போது, ‘ஒருவர் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு அனுமதிக்க வேண்டும். நல்ல கருத்தாக இருந்தால் ஏற்கலாம், தவறானதாக இருந்தால் தவிர்த்துவிடலாம். பொதுவாக அதன் மூலம் ஏதாவது ஒன்றை அறிய முடியும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் இப்படியொரு நிலை இருப்பது பரிதாபம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்ரேயா கூறும்போது, Documentary படத்தை பார்க்க குறுக்கீடு வந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. நமது எண்ணங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இந்தியாவின் மகள் என்ற பெயரில் பிபிசி தயாரித்த Documentaryயை நான் ஆதரிக்கிறேன். அதேசமயம் ரத்த வெறிபிடித்த சைக்கோ குற்றவாளி தனது குரூர எண்ணத்தை வெளிப்படுத்தும் அளவுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தது ஏன்? என கோபத்தை வெளிப்படுத்தினார்.
Documentaryயை வெளியிட தடை விதித்ததற்கு நடிகர் சித்தார்த்தும் தனது எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் ஆணின் துணை இல்லாமல் பெண்கள் இருக்க முடியாது என்று குற்றவாளியின் வழக்கறிஞர் கூறியதற்கு நடிகை அமலா பால் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.‘வழக்கறிஞர் அப்படி சொல்வது மானபங்கத்துக்கு எந்தவித்திலும் குறைவில்லாத குற்றம்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கனவே இதுகுறித்து நடிகை டாப்ஸி கூறும்போது, குற்றவாளியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கடவுள் எனக்கு ஒரு கொலை செய்ய அனுமதி கொடுத்தால் அந்த குற்றவாளியை கொல்வேன்‘ என ஆவேசமாக கூறினார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் கூறும்போது‘இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் தலைகுனிய வேண்டும், இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொன்னவர்கள் வெட்கப்பட வேண்டும்’ என்று கோபமாக கூறியுள்ளார்.

நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
 
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம்  பி.பி.சி.–4 குழுவினர் மற்றும் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்திற்காக பேட்டி கண்டார்.
 
இதற்காக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முகேஷ் சிங்கிடம், சிறை அதிகாரிகள் அனுமதியுடன் பேட்டியும் எடுத்தனர். குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டியை பி.பி.சி முழுமையாக வெளியிட்டது.
 
இது தொடர்பாக இந்திய அரசு பிபிசி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம் என்பது சர்வதேச அளவிலான கருத்து என்று லெஸ்லி உட்வின் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக கூறியுள்ள லெஸ்லி உட்வின், ”உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாகப் புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது.
 
நிர்பயாவுக்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போடத் தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது.
 
படத்தை தடை செய்தது ஜனநாயக விரோதம், அரசியல்சாசன சட்டத்துக்கு முரணானது என்பதே சர்வதேச அளவிலான கருத்து. ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ள பேட்டிகளுக்கு நான் பணம் கொடுத்ததாக இந்திய ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றன. ஆனால் அதில் உண்மையில்லை.
 
சட்டப்படி உரிய அனுமதி பெற்றுதான் திஹார் சிறையில் உள்ள கொலை குற்றவாளியை பேட்டி எடுத்தேன். அவரது பேட்டி எந்த இடத்திலும் வெட்டப்படவில்லை.
 
இந்திய உள்துறை அமைச்சகம், காவல் துறையினரின் உரிய அனுமதியுடன், காவல் துறையினர், மருத்துவர்கள் முன்னிலையில் குற்றவாளியிடம் அந்த பேட்டி எடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

ஆவணப்படத்தை பார்க்க இதை சொடுக்கவும் ---- இந்தியாவின் மகள் ஆவணப்படம் ----

=====CastroRahul======
2,307 Views
[1]      «      317   |   318   |   319      »      [355]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top