Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


தல அஜித்துடன் முட்டி மோத தயாராகும் ஆர்யா ?

'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதுடன், வெளியீட்டுத் திகதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் 'தல'யின் அடுத்த படம் என்ன...?என்ற கேள்வியோடு அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

இந்தக்கேள்விக்குக் காரணம் இல்லாமல் இல்லை. விஜய் "கத்தி" படத்தை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் "மாரீசன்" என்ற படத்தில் நடிப்பது தான் இந்தக் கேள்விக்கான காரணமாம்.தற்போது அதுவல்ல விஷயம்.

 பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை தல யை  வைத்து இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது "யட்சன்" என்ற படத்தை இயக்குகின்றார். தொடர்கதை எழுத்தாளர் சுபா பிரபல வாரஇதழுக்கு எழுதிய கதையே சிறிய மாற்றங்களுடன் "யட்சன்" ஆக மாறியுள்ளதாம். இந்தப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்க, UTV மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றதாம்.

 இந்தப்படத்தில் தல கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக ஒரு செய்தி முன்னர் வெளியாகியிருந்தது. ஆனால் அந்தச் செய்தி  உண்மை இல்லை என்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக இளம் நடிகர்கள் 'சூப்பர்ஸ்டார் ரஜினியின்' ரசிகனாகவே படங்களில் தங்களை காட்டிக் கொள்வார்கள். ஆனால் 'தல' ரசிகர்கள் பெருமைப்படும் விதமாக இந்தப் படத்தில் நாயகனாக வரும் ஆர்யா 'தல'அஜித்தின் ரசிகர்மன்றத் தலைவர் பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் "வீரம்" படத்தில் வரும் அஜித்தின் தோற்றத்திலான மிகப்பெரும்  'கட்அவுட்' க்கு மேலே ஏறி, ஆர்யா 'தல'க்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சியும் "யட்சன்" படத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம். அத்தோடு அஜித்தின் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டமும் படம் நெடுகிலும் வந்துபோவது போல  காட்சியாக்கப்பட்டுள்ளதாம். இந்தக் காட்சிகள் படத்தின் விளம்பரப் படுத்தலுக்கான காட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளதாம். காரணம், "யட்சன்" படத்தை வியாபார ரீதியாக வெற்றிபெறவைக்க 'தல' ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் தந்திரமே என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 இது இவ்வாறிருக்க, ஆர்யா முதற்கொண்டு படக்குழுவினரே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம். வெளியிடப்பட்ட இந்தக் காட்சிகளைப்பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் ஆர்யாவுக்கு "சின்ன தல" என பட்டம் சூட்டி அழைக்க ஆரம்பித்துள்ளார்களாம். 'தல'அஜித்துடன் நெருக்கமாக உள்ள ஆர்யா, இந்த சம்பவத்தினால் 'தல'யுடனான தன் நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ...?என்ற கலக்கத்தில் உள்ளதாகவும் ஆர்யாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றதாம்.  

"யார் என்ன சொன்னாலும் 'தல' எப்பவும் 'தல' தான்......"
அஜித் ரசிகர்கள் சொல்றாங்க...

*கணேசமூர்த்தி ராகவன்.
11,530 Views
4வயது சிறுவனை கல்விக்காக இலங்கைக்கு அனுப்பிய ஜப்பான்.

ஜப்பானிய தம்பதியினர் 2013ம் ஆண்டு  ப்ரவரி மாதம் முதல்
இலங்கையில் வசித்துவந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் தாய் தன் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். மீண்டும் இலங்கை வருவதில்லை என்ற முடிவுடனே சென்றுள்ளார்.

குழந்தை, இலங்கை பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளது.
இதனால் கல்வியை தொடர்வதற்காகவும் பாதுகாப்பு குறித்தும் தந்தை வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நான்கு வயது ஆண் பிள்ளையை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஜப்பான நாட்டின் ஒசாகா மாவட்ட குடும்ப நீதிமன்றம் நேற்று பிள்ளையின் தாய்க்கு உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையின் தந்தை இலங்கையில் வாழ்ந்து வருவதால், குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பான ஹேக் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ள , இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜப்பானில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இதுவெனவும் குறிப்பிட்டுள்ளது.

    - வர்ஷி-
3,235 Views
கார் ஸ்டார்ட் ஆகாவிட்டால் நம்ம ஊர்ல எல்லாம் என்ன செய்வோம்? நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் செய்வோம். ஆனால் இங்க ஒருத்தர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இத்தாலியைச் சேரந்த ஸ்பார்டாகோ என்பவர், தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்பவர். இவர் அலுவலகத்திற்கு தினசரி தாமதமாகத் தானாம் போய் சேருவார். இதற்கான முக்கிய காரணம், பொது போக்குவரத்தில் அலுவலகம் செல்வது தான் என தானே முடிவுசெய்து கொண்டு, புதிய காரொன்றை சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.

மகிழ்ச்சியாக தனது சொந்த வாகனத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்த ஸ்பார்டாகோவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன் வழமை பொலவே, அலுவலகம் செல்ல தன் வாகனத்தில் அவசரமாக ஏறியுள்ளார். ஆனால் இவரின் அவசரத்திற்கு வாகனம் இயங்கவில்லை. வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை என்றதும் டென்ஷனாகிவிட்டார். கோபம் அதிகரிக்க, செய்வதறியாது.. வீட்டிற்குள் சென்று கோடரி ஒன்றை கொண்டு வந்து கொத்தோ கொத்து என்று காரை கொத்திவிட்டார். எப்படி கொத்தியுள்ளார் என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.பிரியமானவர்களிடம் தானே கோபத்தைக் காட்ட முடியும். நான் அதை தான் செய்தேன் என்று பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்பார்டாகோ. இதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்பார்டாகோவின் உறவினர்கள் இவரை ஒரு மனநல வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். கூடிய விரைவில் பூரண சுகம் பெற வேண்டுமென்பதே ஸ்பார்டாகோவின் குடும்பத்தினரின் பிரார்த்தனை.

சில சமயங்களில் நம்முள் எத்தனையோ பேர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். அதிகமாக கோபப்படுகிறோம், வெறுப்பை வெளிப்படுத்துகிறோம், எரிச்சலடைகிறோம் என எமக்கே தோன்றுமாக இருந்தால். உடலக்கும், மனதிற்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்துக் கொள்வோம்.

தொகுப்பு
ர. பிரவீனா.
1,617 Views
தமிழர்களுக்கான ஓர் அடையாளமாக திகழும் கானா பாடல்கள் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழர் வாழும் இடங்களில், குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் தங்களின் இன்பம், துன்பம், நட்பு, காதல் என அனைத்தையும் இந்த கானா பாடல்களில் கூறிவிடுவார்கள். நாட்டுப்புற பாடல்களைப் போன்று இந்த பாடல்களுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் தொடர்பிருந்தது, இன்றும் இருக்கிறது.

இவர்களின் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்த கானா பாடல்களை மேல்நாட்டு மக்கள், அல்லது மேல் குடியினர் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் அது பிழையில்லை. இந்த கானா பாடல்களுக்கு உயிர் கொடுத்து, தமிழ் சினிமாவில் இடம் பெற்றுக்கொடுத்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. இன்றைய பிறந்தநாள் நாயகன்.

இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கானா பாடல்களுடன் அதிக ஈடுபாடு கொண்ட தேவா, சினிமாவில் வாய்ப்பு பெற, தன் சகோதரர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்த கானா பாடல்களைப் பாடி காட்டி தான் இசையமைப்பாளராக வாய்ப்பும் பெற்றுக்கொண்டார். இவர் இசையமைத்த முதல் படம் 'மனசுக்கேத்த மகராசா'.
இந்த திரைப்படத்தின் பின் வைகாசி பொறந்தாச்சி, வசந்த கால பறவைகள், நாடோடிக் காதல், அம்மா வந்தாச்சு, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். எனினும் சூப்பர் ஸ்டாரின் படமான 'அண்ணாமலை' திரைப்படத்திற்கு இசையமைத்த பிறகு தான் இவரின் புகழ் வானுயர்ந்தது.
அடுத்து வந்த பாட்ஷா ரஜினியின் மிக முக்கியமான படமாக அமைந்ததற்கு தேவாவின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது புகழ்ச்சியில்லை.

அன்றிலிருந்து திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய் என அனைவரும் விரும்பும் இசையமைப்பாளரானார்.
இவர்களுடன் இணைந்து தேனிசைத் தென்றல் தேவா பணியாற்றிய வாலி, குஷி, முகவரி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், ரெட், தம் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. இவ்வாறு 100 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்து, இசை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, விஷேடமாக கானா பாடல்கள் மூலம் இடம் பிடித்து, இசையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் தேனிசைத் தென்றல் தேவாவிற்கு சூரியன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தொகுப்பு .

ர. பிரவீனா.
1,536 Views
த்ரிஷாவின் திருமணத்துக்கு சிக்கல்கொடுத்த ரஜினி,அஜித்...?

வயதையும் திருமணம் பற்றிய செய்திகளையும் நடிகைகள் தாங்களாக மறைப்பது சகஜமான விஷயம் தான். இருந்தும் நடந்து முடிந்த தன் நிச்சயதார்த்தம் பற்றி உலகுக்கு தெரியவந்தும் ஊடகங்கள் மூலமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகை த்ரிஷா. இதற்கு தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய மாஸ் நடிகர்களே காரணமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா.....?

கெளதம் மேனனின் இயக்கத்தில் 'தல' அஜித் நடிக்கும் "என்னை அறிந்தால்" படத்தில் த்ரிஷாவும் ஒரு நாயகியாக நடிக்கின்றார் என்பதை முன்னரே சொல்லியிருந்தோம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்ட த்ரிஷா அதற்காக பட்டபாடு கொஞ்சநஞ்சம் இல்லையாம். 30 வயதை கடந்த நிலையில் கொஞ்சம் வயது முதிர்ச்சியான தோற்றத்தில் உள்ள த்ரிஷாவை "என்னை அறிந்தால்" படத்தில் நடிக்க வைக்க 'தல' அஜித், தயாரிப்பாளர் உட்பட அந்தப் படத்தின் முக்கியமானவர்களுக்கு விருப்பம் இல்லையாம்.

இருந்தாலும் இந்தப் படத்தின் இயக்குனர் என்ற காரணத்தினால் கெளதம் மேனன் தன் செல்வாக்கை அந்த இடத்தில் பயன்படுத்தி த்ரிஷாவிற்கு சில நிபந்தனையுடனான வாய்ப்பினை வழங்கியிருக்கிறார். ஒரு மாதத்தில் இளமையான தோற்றத்துடன் வந்தால் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தாராம்.

அதைக் கேட்ட த்ரிஷாவும் உடனே கேரளாவுக்கு ஓடிச் சென்று, மிகுந்த சவாலுக்கு மத்தியில் கேரள ஸ்பெஷலான ஆயுர்வேத மூலிகை சிகிச்சை மூலம் துள்ளும் இளமைத் தோற்றத்துடன் குறித்த ஒரு மாத காலத்தில் திரும்பி வந்திருக்கிறார். இவ்வாறு வந்த த்ரிஷாவை, வேண்டாம் என முதலில் மறுத்த தயாரிப்பு வட்டாரமே பார்த்து குளிர்ந்துபோய் விட்டனராம். அத்தோடு படத்தில் த்ரிஷாவுக்கு மட்டும் தனி ஒரு பாடலை கொடுத்து ஆடவைத்து ரசிகர்களை அசர வைத்திருக்கிறார்களாம்.

இது இவ்வாறிருக்க, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கும் "லிங்கா" படத்திலும் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளாராம்.

இந்தநிலையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வெளியீட்டுத்திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் உள்ள இந்த இரண்டு படங்களிலும் நடித்துள்ள காரணத்தினால் தனது திருமணம் பற்றிய செய்தியை கூட அறிவிக்கமுடியாத கையறுநிலையில் உள்ளாராம் சாமியின் மாமி. காரணம் என்னவென்றால், திருமண செய்தி வெளியானால் வயதான நடிகையை திரையில் பார்த்து ரசிக்க யார் வருவார்கள்...? இதனால் படத்தின் வெற்றி மற்றும் வசூலுக்கு பாதிப்பு ஏற்படலாம் என படக்குழுவினர் கருதுவதுதான் என்ற விஷயத்தை வெளியில் கக்குகின்றது தமிழ் சினிமாத் திரையுலகம்.

ஆசை யாரைத்தான் விட்டது.....?
உலக நியதியில் த்ரிஷாவும் உள்ளடக்கம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
25,618 Views


திரைப்பட இயக்குனர் ருத்ரைய்யா நேற்று சென்னையில் காலமானார்.  இறக்கும் போது அவருக்கு வயது 67.

தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ருத்ரையா சென்னை அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்த இவர்,1978ம் ஆண்டு வெளிவந்து எல்லோராலும் பேசப்பட்ட படமான

'அவள் அப்படித்தான்' என்றபடத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இந்த படம் கமல்ஹாசன்,

ரஜனிகாந்த, ஸ்ரீ பிரியா ஆகியோரின் நடிப்பில் இளையராஜாவின் இசையில் வெளிவந்தது. தமிழில் வெளியான கடைசிக் கறுப்பு வெள்ளைப் படங்களில் இது ஒன்றாகும். வணிக ரீதியாகத் தோல்வி அடைந்தாலும், இது விமர்சகர்கள், திரையுலகக் கலைஞர்கள் மற்றும் இணைத் திரைப்படத்தில் ஆர்வமுற்ற ரசிகர்கள் ஆகியோரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

 

1980ம் ஆண்டு அவரின் இயக்கத்தில் புது முகங்களின் நடிப்பில்  வெளிவந்த 'கிராமத்து அத்தியாயம்' எனும் படமும் தோல்வியடைந்தது .

அதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தது. 

1,181 Views
நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படம் ‘வன்மம்’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி,  ‘கழுகு’ கிருஷ்ணா என இரண்டு நாயகர்கள் நடிக்கின்றனர். நாயகியாக சுனைனா நடிக்கிறார். ஆனால் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி கிடையாது. சுனைனா, கிருஷ்ணாவுக்குதான் ஜோடியாம். இவர்களுடன், ‘கோலி சோடா’ மதுசூதன்,ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். இவர், பி.கலைமணி, கமல்ஹாசன்,ஆர்.கே.செல்வமணி, சிம்பு போன்றவர்களிடம் பணி புரிந்தவர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒரு தனிப்பட்ட மனிதர் மீது நாயகனுக்கு உருவாகும் பகைமைஇ கோபம்தான் படத்தின் கதை. இதனை நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்ப்படும் கதை தான் வன்மம் திரைப்படம்1,492 Views
விமானம்னு சொன்னாலே பிரம்மாண்டம் தானே? அதுல புதுசா என்ன மிக பிரம்மாண்டம்னு நீங்க கேட்களாம்.

பாரிய எண்ணிக்கையானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் விமானம் இது. அன்ரனோவ் - 225 வகையைச் சேர்ந்த இந்த விமானத்தை ரஷ்ய விண்வெளி ஆய்வகம் வடிவமைத்துள்ளது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்நிக் டொன் எடையை தூக்கியவாறு மேலெழும் வல்லமை கொண்டதாம்.
இந்த விமானத்தின் நீளத்தை, ஒரு காற்பந்தாட்ட திடலின் நீளத்திற்கு ஒப்பிட முடியும் என இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். மேலும் இரு தினங்களுக்கு முன் இந்த விமானம் கெனடாவில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையிலேயே இது பிரம்மாண்டம் தான் நீங்களே பாருங்க...

வீடியோ இணைப்பு 

உலகின் மிகப்பெரிய விமானம் - World’s largest aircraft Antonov An-225 Mriya Landing at Torontoதொகுப்பு – ர. பிரவீனா.
9,653 Views
சாதனை படைக்குமா சூப்பர்ஸ்டாரின் லிங்கா...?

தமிழ் சினிமாவின் வசூல்மன்னன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது  நடித்துக்கொண்டிருக்கும் "லிங்கா" பற்றி வெளியாகும் செய்திகளுடன் வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தினம் தினம் ரசிகர்களிடம் படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடுகின்ற நிலையில், வெளியீட்டு முன்பாகவே "லிங்கா"வின் வசூல்சாதனைகள் பற்றிய விசயங்களும் இதயத்துடிப்பை எகிறவைத்துக் கொண்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் சந்தானம் கொமெடியில் கொடிகட்டுகின்றாராம். இந்தப்படப்பிடிப்பு நிறைவடையவுள்ள நிலையில், இதன் வெளியீட்டு திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் பிறந்தநாளான டிசெம்பர் 12-ம் திகதி "லிங்கா" வெளியாகுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் "லிங்கா"வின் வெளியீடு உட்பட அனைத்து உரிமைகளையும் வாங்கியுள்ள ஈரோஸ் நிறுவனம் படம்  வெளியாவதற்கு முன்பாகவே வெளிநாட்டு வெளியீட்டின் உரிமை, இந்திப்பதிப்புரிமை, செய்மதித்தொலைக்காட்சி உரிமை போன்றவற்றின் மூலமாக மட்டும் 200கோடி ரூபாவை வசூல் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனவாம்.

இதைவிட தமிழ், தெலுங்கு மொழிகளில் "லிங்கா" வெளியாகவுள்ள திரையரங்கங்களின் வியாபாரத்திலும் அனல் பறப்பதாகவும் கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன. ரொக்லைன் வெங்கடேஷிடமிருந்து 165கோடி ரூபாவுக்கு ஈரோஸ் நிறுவனத்தால்  வாங்கங்கப்பட்ட "லிங்கா"வின் உரிமை இப்போதே 200கோடியை வசூல் செய்யும் நிலையில் உள்ளதும் பிரமிக்க வைக்கிறதாம்.

 இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான இந்தப்படத்தின் பாடல்கள் "சூப்பர்ஹிட்" ஆகியுள்ள நிலையில், படம் வெளியானதன் பின்னர் வசூலில் எவ்வளவு சாதனை படைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பையும் அதிர்வலைகளையும் தென்னிந்தியத் திரையுலகில் உண்டாக்கியுள்ளதாம் "லிங்கா".

இமயம் நாடும் நாயகனின் "லிங்கா" வசூலில் இமயத்தின் சிகரம் தொடுமா......? கேள்வியுடன் கோடம்பாக்கம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
6,155 Views
இளசுகளின் இதயம் கவர் இளம் கன்னி நயனுக்கு இன்று 30 வயது. இவரின் இயற்பெயர் டயனா மரியா குரியன்..

ம்ம்ம் எவ்வளவு அழகான பெயர். இவர் மலையாள படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் இவருக்கு தமிழில் பெரிய வரவேற்ப்பு கிடைக்கவில்லை.

சூப்பர் ஸ்டாருடன் 'சந்திரமுகி' யில் நடித்த நயனுக்கு, சூர்யாவுடன் கஜினி திரைப்படத்திலும் இரண்டாம் கதாநாயகி வேடம் தான். இடையிடையே குத்து பாடலுக்கு நடனமாடிச் சென்றார். இப்படியிருந்த நயனுக்கு 'வல்லவன்' திரைப்படம், திரையுலகில் நல்ல காலத்தையும், காதலையும் கையில் கொடுத்தது. சிம்புவுடன் காதல் கிசுகிசுக்க, அப்படியே 'வில்லு' வில் இறங்கினார் நயன். சிம்புவின் காதல் முறிய பிரபுதேவாவுடன் காதல் என திருமணம் வரை கொண்டு சென்றது அந்த உறவு. சிறிது காலத்தில் அதுவும் முறிந்தது.ஒரு ஒய்வின் பின் மீண்டும் சினிமாவுக்கு வந்த நயனுக்கு 'ஆரம்பம்' நன்றாக அமைந்தது. அஜித்துடன் ஆரம்பித்து, ஸ்டாலின், ஆர்யா, ஜெய் வரை அனைவருடனும் நடிக்க தயார், கதை இருக்கா என்று கேட்டு களமிறங்கினார். ஆரம்பம், ராஜா ராணி என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். மேலும் ' மாஸ்' 'நண்பேண்டா' போன்ற படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் 'காஷ்மேரா' என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கிலும் பல வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆக்ஷன் கதைகளை தான் அதிகமாக எதிர்பார்கிறாராம் நயன். கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முப்பதில் காலெடுத்து வைக்கும் நயன்தாரா எனும் டயனாவுக்கு சூரியன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ர. பிரவீனா.
6,168 Views
தமிழ்சினிமாவில் தமக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் நடிகர்களை விட நடிகைகளே பெரும்பாடுபடுவார்கள். நிலைமை இவ்வாறிருக்கையில், 10வருடங்களாக தென்னிந்திய சினிமாத்துறையில் நாயகியாகவே வளைய வந்துகொண்டிருக்கிறார் "சாமி"யின் மாமி த்ரிஷா.

                              தமிழ் சினிமாவில் விக்ரமின் சாமி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்த நடிகை த்ரிஷா 30வயதையும் கடந்த நிலையில் இன்றும் முன்னணி நடிகையாக, கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக புதுவரவு நடிகைகளுடன் போட்டி போடுகின்றார் என்றால் தப்பில்லை.இந்தநிலையில் த்ரிஷாவின் திருமணம் பற்றிய கிசுகிசு திரையுலகில் மீண்டும் எழுந்திருக்கிறது.
 
                                                                 முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணிநடிகர் ராணாவுடன் காதல் என்றும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கதைகள் உலா வந்தமை தெரிந்ததே. அத்தோடு த்ரிஷாவின்அம்மா உமா கிருஷ்ணன் த்ரிஷாவிற்கு பொருத்தமான நல்ல மணமகனை தேடுவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.

                                                                        இது இவ்வாறிருக்க, தற்போது பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை நம்ம "சாமி"யின் மாமி கரம்பற்றவுள்ளாராம் என செய்திகள் கசிகின்றன. மாமி கைப்பிடிக்கும் இந்த வருண் மணியன் பிரபல தொழிலதிபர் என்பது மட்டுமல்லாமல் ஒரு சினிமா தயாரிப்பாளரும் கூட என கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.  

                         "வாயை மூடி பேசவும்" படத்தின் தயாரிப்பாளரான இந்த வருண் மணியன்,  இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவரவிருக்கும் "காவியத்தலைவன்" படத்தின் தயாரிப்பாளர்களில்  ஒருவர் என்றும், இன்னும் பல படங்களை தயாரிக்கவிருக்கிறார் எனவும் தெரியவருகின்றது.  

                                த்ரிஷாவும், வருண் மணியனும் சினிமாத்துறையில் இருக்கும் நிலையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  இருவரும் சந்தித்துக்கொண்டார்களாம். அப்போதே தமது எதிர்காலம் பற்றி முடிவெடுத்துக்கொண்டதாகவும் கிசுகிசு வெளியாகியுள்ளது.        

 "இதுதானா...? இதுதானா...?" என சாமியின் மாமி த்ரிஷா எதிர்பார்க்கும் அந்நாள் வருமா...? இல்லை இதுவும் கனவாகுமா......? காத்திருப்போம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
4,129 Views
உழைச்ச பணத்தை வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும். - ரஜினி

சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் தான் 'லிங்கா'. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைப்பெற்றது. இவ்விழாவில் பலதிரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். லிங்காவின் கதாநாயகன், நம்ம சூப்பர் ஸ்டாரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விழாவில் ரஜினி பேசும் போது, மனம் திறந்து பல விடயங்களைக் கூறியிருந்தார். அதில் 'உடல் நலக்குறைவிலிருந்து மிக கஷ்டப்பட்டு மீண்டு, நான் நடித்த படம் கோச்சடையான், இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும்... பண இழப்பீட்டையும் சந்திக்க நேரிட்டது. எதையுமே விளையாட்டுத் தனமாக செய்யக்கூடாது என்பதை அந்த படத்தின் பின் சௌந்தர்யா உணர்ந்திருப்பார் என்றார். தனது மகள் சௌந்தர்யா பற்றி இவ்விழாவில் பேசிய ரஜினி, நேரம், காலம், பணம், சினித் துறை இவையனைத்தையும் பற்றி கோச்சடையான் வெளியீட்டின் பின் சௌந்தர்யாவிற்கு புரிந்திருக்கும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'புதிதாக உழைக்கத் தேவையில்லை நான் உழைத்த பணத்தை வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும்' என சௌந்தர்யாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவின் மேடையில் சூப்பர் ஸ்டாரின் பேச்சு கொஞ்சம் காரமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. லிங்காவின் பாடல்கள் நன்றாக இருக்கிறது என்பது பலரின் கருத்து. பாடல்களைக் கேட்கும் போது படம் தொடர்பிலான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.


Lingaa - லிங்கா Gallery 

10,179 Views
விஜய்யின் அடுத்தபடம் என்ன?

கத்தி பட வெற்றியின் பின் விஜயின் அடுத்தபடம் என்ன? "மாரீசன்"
இயக்குகிறார் சிம்புதேவன், நாயகிகள் ஹன்சிகா,ஸ்ருதிஹாசன்.
இப்போது படப்பிடிப்பும் இடம்பெற்று வருகிறது. இது விஜயின் 58வது படம். இந்தத்தகவல்கள் நமக்கு தெரிந்ததே!

ஆனாலும், புதிய செய்தி என்னவென்றால், புது மாப்பிள்ளை அட்லியின் இயக்கத்தில் விஜயின் 59வது படம் 2016 பொங்கலுக்கு வெளிவரபோகிறது .

ராஜா ராணி வெற்றி கொடுத்த அட்லி, தனது இரண்டாவது படத்தை மாஸ் படமாக்கவேண்டும் என்ற துடிப்போடு விஜய்க்காக எழுதியுள்ள கதையாம் இது. விஜய் 59 படத்தின் வேலைகள் இப்போதே ஆரம்பமாகிவிட்டன. கலைப்புலி எஸ்.தாணு இயக்கும் படம் மாஸ் ஆக இருக்கும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வில்லு படத்தில் ஜோடிசேர்ந்த நயன் தான் இந்த படத்தின் நாயகி.59வது படத்தில் விஜய்க்கு போலீஸ் கதாபாத்திரம். ஏற்கனவே போக்கிரி, ஜில்லா படங்களில் போலீஸ் ஆக நடித்திருக்கிறார் விஜய்.

இந்தப் படத்தை கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். தாணு ஏற்கெனவே விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களைத் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இது ஜிவிக்கு 50வது படம்.

2016ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இணையத்தில் கசிந்ததை தொகுத்து தந்தவர்
-வர்ஷி-
10,342 Views
விஜய்யின் அடுத்த படத்தில் உண்மையான தயாரிப்பாளர் யார்..??

கத்தியின் வெற்றியை தொடர்ந்து இளையதளபதி "விஜய் 58" எனும் பெயர் சூட்டப்படாத தன் அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் இந்த "விஜய்58" படம் சரித்திரக்கதை சார்ந்ததாய் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. இந்த செய்தி உண்மையாய் இருக்கலாம் என உணர இந்தப் படத்தின் இயக்குனர் காரணமாவது முக்கியமானது.
                       
இயக்குனர் சிம்புதேவன் இம்சை அரசன் 23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் போன்ற சரித்திரக்கதை சார்ந்த படங்களை இயக்கியவர். அவரே விஜய்யை வைத்து இந்தப் படத்தையும் இயக்குவதால் கசிந்துள்ள செய்தியின் உண்மைத் தன்மை நம்பும்வகையில் அமைந்துள்ளதாம்.

அத்தோடு முதலாவது படப்பிடிப்பாக, பாடல் காட்சி ஒன்று சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலை பிரதேசத்தில் மிகப்பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்படுகின்றதாம். 100 நடனக் கலைஞர்கள் இணைந்த இந்தப்பாடல் காட்சியில், நாயகியாக நடிக்கும் ஹன்ஷிகா இளவரசிக்குரிய தோற்றத்தில், அதற்குரிய ஆடை அலங்காரத்தில் நடித்திருக்கிறாராம். இந்தப் படப்பிடிப்பு பற்றி ஹன்சிகாவே தன் ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதுவும் வெளியாகியுள்ள செய்திக்கு வலுவூட்டுவதாக உள்ளதாம்.

 இந்தநிலையில் இந்தப்படத்திற்கான இசையை தேவி ஸ்ரீ பிரசாத் வழங்க, தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி ஹன்சிகாவுக்கு அம்மா வேடம் ஏற்றிருக்கிறாராம்  இந்தப்படத்தில். ஹன்சிகா மட்டுமல்லாமல் ஸ்ருதி ஹாசனும் இந்தப்படத்தில் விஜய்யோடு இணைந்து நடிக்கிறாராம்.

இந்த "விஜய்58" படத்தின்  முதலாவதாக படமாக்கப்பட்ட இந்த ஒரேஒரு  பாடல் படப்பிடிப்பிற்கான ஆடை அலங்காரம், போடப்பட்ட செட் ஆகியவற்றின் செலவுகளுக்கு மட்டுமே  பிரமிக்கவைக்கும் அளவு பெரும்தொகை செலவாகியுள்ளதாம்.
                                           
இது இவ்வாறிருக்க,  விஜய்யின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பி.டி.செல்வக்குமார்தான் இந்தப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், சாதாரண ஒரு PROவாக இருந்த செல்வக்குமாரினால் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எவ்வாறு இந்தப் படத்தை தயாரிக்க முடியும் என ஒரு சாரார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
                                
கத்தியின் வெற்றியினால் துணிந்த இளையதளபதி தன் சொந்தச் செலவிலேயே இந்தப்படத்தை எடுப்பதாகவும், அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க பி.டி.செல்வக்குமார்  பயன்படுத்தப்பட்டிருக்கிறார் எனவும் ஒரு கிசுகிசு கோடம்பாக்கத்தில் பரவுகிறதாம்.

இந்தப்படத்திலும் சிக்கலில் சிக்குவாரா......?
இல்லை.. தப்புவாரா தளபதி...? ஏக்கத்தில் ரசிகர்கள்..

*கணேசமூர்த்தி ராகவன்.

8,819 Views
வியக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த ரோஹித் சர்மாவின் இரட்டை சதம்.

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி கொல்கொத்தா Eden garden மைத்தானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இந்த மைதானத்தின் பெயரை சொன்னாலே உங்களுக்கும் எங்களுக்கும் நினைவுக்கு வருவது 1996 உலக கிண்ணத்தின் இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி தான்.

அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் STUMPING முறைமூலமாக ஆட்டமிழந்து போக திக்குமுக்காடிப்போன இந்திய அணியின் தோல்வியை ஜீரணித்துக் கொள்ளாத இந்திய ரசிகர்கள் கற்களாலும்,தண்ணீர் போத்தல்களாலும் இலங்கை வீரர்கள் மீது தங்கள் வெறுப்பை காட்டினார்கள்.இன்னும் சிலர் மைதானத்தின் இருக்கைகளை சேதப்படுத்தியதோடு ஆங்காங்கே இருக்கைகளுக்கு தீ மூட்டி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு அழிக்க முடியாத அவப்பெயரை தோற்றுவித்தார்கள்.

         

இறுதியில் போட்டி மத்தியஸ்தரின் முடிவுப்படி போட்டி இடைநிறுத்தப்பட்டு இலங்கை முதல் தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இப்படியான கறைபடிந்த நிகழ்வுகள் அரங்கேறிய இந்த கொல்கொத்தா ஆடுகளம் இப்போது 150 வது ஆண்டில் கால்பதித்திருக்கிறது.  

ஆரம்பத்தில் கேக் வெட்டி இந்த நிகழ்வை இரு அணித்தலைவர்களும் வைபவ ரீதியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


இப்படியான சோககதைகளுக்கு பேர் போன இந்த கொல்கொத்தா மைதானத்தில் தான் ரோகித் சர்மாவின் வரலாற்றில் மறக்க முடியாத சாகசம் அரங்கேறப்போகிறது என்பதை யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை எனலாம்.

சோதனைகளால் அவதிப்பட்டவர் சாதனைகளால் மகுடம் சூடியிருக்கிறார்.மறக்கவே முடியாத ஒரு அபரிவிதமான ஒருநாள் போட்டி சாதனைக்கு சொந்தக்காரரானார் இந்த ரோஹித் சர்மா.

இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது காயத்தால் அவதிப்பட்ட நிலையில் அணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டார்.

பின்னர் அந்த அணிக்கெதிரான தொடரில் ஆரம்ப வீரராக வந்த அஜின்கியா ரஹானே தன் கன்னி சதத்தை பெற்று தானும் ஒரு சிறந்த ஆரம்ப வீரர் என்பதை அடையாளபடுத்தினார்  .

இப்படியிருக்க இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவை அணியில் உள்வாங்காமல் அஜின்கியா ரஹானியையே ஆரம்ப வீரராக பயன்படுத்த தீர்மானித்தனர்.

இந்த நிலையில் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய தேவையும்,ஆரம்ப வீரரராக அசத்த வேண்டிய தேவையும் இவருக்கு மறைமுகமாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது.

இப்படியான நிலையில் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனையை ரோகித் இன்று படைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை எட்ட முடியவே முடியாது என்று எல்லோரும் நினைத்துகொண்டிருந்த நேரத்தில் தென் ஆபிரிக்க அணிக்கெதிராக சச்சின் 147 பந்துகளில் 200* ஓட்டங்களை பெற்று முதல் தடவையாக சாதித்து காட்டினார்.

       

பின்னர் இன்னுமொரு இந்திய ஆரம்ப வீரர் விரேந்தர் சேவாக் 2011 ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இந்தியாவின் இந்தூர் மைதானத்தில் வைத்து 149 பந்துகளில் 219 ஓட்டங்களை பெற்று இந்த உலக சாதனையை புதுப்பித்தார்.

இதன்பின்னர் இந்த ரோஹித் சர்மா கடந்த 2013 நவம்பரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 158 பந்துகளில் 209 ஓட்டங்களை பெற்று 3 வது இரட்டை சதம் என்ற சாதனையை  மட்டுமல்லாது அதிக கூடியதான 16 ஆறு ஓட்டங்களையும் பெற்று இன்னுமொரு உலக சாதனை படைத்தார்.

சரியாக ஓர் ஆண்டு நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இன்னுமொரு இரட்டை சதத்தை பூர்த்தி செய்திருக்கிறார் ரோஹித் சர்மா.அது மாத்திரமல்லாமல் எவராலும் இனிவரும் நாட்களில் எட்ட முடியாத எண்ணிக்கை என நினைக்கும் ஓர்  ஓட்ட  எண்ணிக்கையை பதிவு  செய்து உலகையே வியந்து பார்க்க வைத்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

             

இதன்மூலமாக இந்திய அணி  400 க்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கையை 5 வது தடவையாக பதிவு செய்திருந்தது.இலங்கைக்கு எதிராக இரண்டாவது  தடவையாக இவ்வாறு  400 கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டிருப்பதோடு மாத்திரமல்லாமல் 153 ஓட்டங்களால் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றிருக்கின்றது.

ஒரு நாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில்  இன்றோடு சேர்த்து இதுவரை மொத்தம் 3544  போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை எட்டப்படாத சாதனைகள் பலது பதியப்பட்டிருக்கிறது இன்றைய போட்டியில்..

ஒருநாள் போட்டியொன்றில்  சச்சின்,சேவாக் ஆகியோர் தலா 25 நான்கு ஓட்டங்கள் பெற்றமைதான் இதுவரையான உலக சாதனையாகும்.இன்று அதனை கடந்து ரோகித் சர்மா 33 நான்கு ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்திலும் கூட ஆரம்ப வீரராக வந்த ரோகித் 111 பந்துகளில் 142 ஓட்டங்களை பெற்றுகொண்டார்.ஆயினும் அதன் பின்னரான 3 ஒரு நாள் ஆட்டங்களிலும் இவருடைய உடற்தகுதி நிலை காரணமாக தேர்வாளர்கள் இவருக்கான முக்கியத்துவத்தை கொடுக்கவில்லை.

3 போட்டிகளில் வாய்ப்பை பெற்றிராத இவர் இன்று தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 173 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள் 33 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 264 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் இறுதி ஓவரின் இறுதி பந்தில் மகேலவிடம் பிடி கொடுத்து இவர் ஆட்டமிழந்தார்.இதற்கு முன்னர் 4 ஓட்டங்களை பெற்றிருந்த போது திசர பெரேரா பிடியொன்றை தவறவிட்டார்.இதனை பயன்படுத்திகொண்ட ரோகித் இதன் பின்னரும் 2 பிடியெடுக்கும் வாய்ப்புக்களை வழங்கினாலும் இலங்கை வீரர்களால் இவரை ஆடுகளம் விட்டு அனுப்ப முடியாமலே இருந்தது.

முதலாவது 50 ஓட்டத்தை 72 வது பந்திலும் ,தன் 100 வது ஓட்டத்தை 100 வது பந்திலும்,150 வது ஓட்டத்தை 125 வது பந்திலும்,200வது ஓட்டத்தை 151 பந்திலும் பூர்த்தி செய்தார்.பின்னர் இறுதி 22 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்று சாதித்துக் காட்டினார்.

              

இந்திய அணி இன்று பெற்ற 404 ஓட்டங்களில் 65% ஓட்டங்கள் இவர் துடுப்பு மூலமாகவே பெறப்பட்டது.

இதுவரைக்குமான ஒருநாள் ஆட்டங்களில் 173 பந்துகளை சந்தித்து அதிகமான பந்துகளுக்கு முகம் கொடுத்தவர் என்ற பெருமையும் இவருக்கே.

இதுவரைக்கும் இவர்  பெற்றிருக்கும் 5 சதங்களுள் இரண்டை இரட்டை சதமாக்கியிருக்கிறார் இந்த ஆமைவேக ஆட்டக்காரர் என்று ஆரம்பத்தில் அழைக்கபட்ட ரோகித்.

ஒருநாள் போட்டிகளில் மத்திய வரிசையில் வாய்ப்பு கொடுக்கபட்ட ரோகித் சர்மா அதனை பயன்படுத்தாத நிலையில் ஆரம்ப வீரராக ஆடுகளம் அனுப்பபட்ட பின்னரே வெளியுலகுக்கு வெளிச்சமானர் என்பதும் கவனிக்கத்தக்கது.

எது எவ்வாறாயினும் உலக கிண்ணம் நெருங்கி வரும் நிலையில் ரஹானே +தவான் +ரோகித் என்று சொல்லி ஆரம்ப வீரராக களம் இறங்குவதற்கு மும்முனை போட்டி நிலவுகின்ற நிலையில் இந்திய தேர்வாளர்களுக்கு கடும் நெருக்கடியான சூழல் இப்போது உருவாக்கபட்டிருக்கிறது.

இதுவரைக்கும் ஒருநாள் இரட்டை சதங்கள் நான்கும் இந்திய ஆரம்ப வீரர்களால்,அதுவும் இந்திய மைதானங்களில் வைத்தே பெறப்பட்டிருக்கின்றன.

இப்படி சாதனைக்கு மேல் சாதனை படைத்த ரோகித் சர்மா இறுதியில் ஆடுகளம் விட்டு வெளியில் வந்து பேட்டியின் போது சொல்கிறார் இன்னுமொரு 50 ஓவர்கள் நான் ஆடுவதற்கு தயாராகவேதான் இருந்தேன் என்று.

 தன் உடற்தகுதி எப்படியென்பதை இதன்மூலமாய் இந்திய தேர்வாளர்களுக்கு இவர் காட்டியிருக்கிறார் என்றேதான் சொல்ல தோன்றுகிறது.

வாழ்த்துக்கள் NO +HIT  என்று அழைக்கப்பட்ட RO+HIT  சர்மா.

*தில்லையம்பலம் தரணீதரன்.

      
9,622 Views
[1]      «      363   |   364   |   365      »      [387]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top