Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


இதுவரைக்கும் பெயர் வைக்கப்படாமல் குழப்பமாய் உருவாக்கி வந்த மணிரத்னம் படம் இப்பொழுது நாமம் சூடப்பட்ட படமாக மாறியிருக்கிறது.
ஏற்கனவே, ஒரு தலைப்பு வைத்து அதை மாற்றுவதா இல்லையா என குழம்பி, மீண்டும் பெயரில்லாமல் படம் உருவாக்கி வந்துகொண்டிருந்தது.

வாயைமூடி பேசவும் எனும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இளம் மலையாள நடிகர் துல்கர்சல்மான் மற்றும் நடிகை நித்யாமேனன் ஆகியோர் ஜோடியான இந்தப்படம் அரைவாசி படப்பிடிப்பை முடித்துள்ளது.

இனியும், பெயரில்லாமல் படம் தயாராவது நல்லதில்லை என்பதற்காக உறுதியாக படத்தின் பெயரை முடிவு செய்துள்ளார் மணிரத்னம். அதாவது ஒகே கண்மணி என்று சூட்டப்பட்டுள்ளது.

அலைபாயுதே படத்திற்கு பிறகு, இந்தப்படம் காதலை இன்னும் அழகாக பேசும் படமாக மாறுமென மணிரத்னம் சொல்லியுள்ளார். அத்தோடு, பார்த்து பார்த்து காட்சிகளை படம்பிடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மான் இசையிலும் படம் மெருகேறி உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
1,874 Views
 கிண்ணத்தை ஏந்தும் எண்ணத்தோடு இலங்கை கிரிக்கெட் அணி.

                                 
11 வது உலக கிண்ணத்தில் களம் காணும் ஒரு பலம் வாய்ந்த அணியாக இலங்கை அணி நோக்கப்படுகின்றது.சமபலம் கொண்ட அணியாக அண்மைய தோல்விகளை மறந்து உலக கிண்ணத்தில் கிண்ணத்தை ஏந்தும் எண்ணம்கொண்டு களமாடும் சிங்கங்களாய் களத்தில் கர்ச்சிப்பார்கள் என்பது இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கும் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பு எனலாம்.

அவுஸ்ரேலியா,இந்தியா,தென்னாபிரிக்கா ஆகிய அணிகளைத் தொடர்ந்து ஒருநாள் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் இலங்கை அணி இம்முறை குழு-A யில் இங்கிலாந்து, அவுஸ்ரேலியா,நியூசிலாந்து,வங்களாதேஷ் ஆகிய அணிகளை சந்திக்கபோகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
                             


அண்மைய நாட்களில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் 5-0 ,அத்தோடு நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் 4-2 என்று மோசமான தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரு அணியாக உலக கிண்ணம் போன்ற தொடர்களில் தங்கள் பலத்தைக்காட்டக் கூடிய ஒரு அணியாக இலங்கை அணியை நோக்கலாம்.

இலங்கை அணியின் குறித்த தோல்விகளின் போது இலங்கை அணி பல நெருக்கடிகளை எதிர்கொண்டமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.

சரியான ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியோ ,அல்லது ஆரம்ப துடுப்பாட்டத்தில் களமிறக்கப்பட்ட வீரர்களோ சரியான பங்களிப்பை அணிக்குச் செய்யத் தவறியமை பிரதானமான காரணமாக இருந்தது.

இதைவிடவும் அணியின் துல்லியமான பந்து வீச்சாளரான மலிங்க அணியில் இல்லாமை மிகப்பெரும் பாதிப்பை அணிக்கு கொடுத்தது,அத்தோடு இந்த இரண்டு தோல்விகளின் போதும் இலங்கை அணி எதிர் அணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே முகம்கொடுத்தமையும் இன்னொரு காரணமெனலாம்.

இப்படியான நிலைமைகள் கடந்து இப்போது இலங்கை அணி தங்களை கொஞ்சம் பலப்படுத்தியிருக்கிறது.மலிங்க அணிக்கு திரும்பியிருக்கிறார்,லகிறு திருமான நல்ல ஆரம்ப வீரராக அணிக்கு நம்பிக்கை கொடுக்கின்ற நிலையில் உலக கிண்ணத்தில் இலங்கை ரசிகர்களின் உலக கிண்ண ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான மஹேல ,சங்கா,டில்ஷான் ஆகிய வீரர்களின் துடுப்பாட்டம் இப்போது வழமையைவிடவும் அதிக முன்னேற்றம் கண்டிருக்கிறது.

தொடர்ந்தும் சிறப்பாக ஓட்டங்களை நல்ல முறையில் பெற்றுகொள்கின்றமையும் இதற்கான இன்னொரு காரணம் என்று சொல்லலாம்.உலக கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை 2007 ம் ஆண்டு முதற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் உலக கிண்ணப் போட்டித் தொடர்களில் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து பங்கெடுத்திருக்கும் அணியாக இலங்கை அணி பார்க்கப்படுகின்றது.

2007ம் ஆண்டு அவுஸ்ரேலியாவிடமும் ,2011 ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியிடமும் இறுதிப் போட்டிக்கு வந்து தோல்வியை தழுவியமை கவலையே !

இம்முறையும் இலங்கை அணி பலமான அணியாகவே பார்க்கபடுவதற்கு அணியின் மூத்த வீரர்கள் காரணமாய் இருக்கிறார்கள்.

இம்முறை பாகிஸ்தானின் சாகிட் அப்ரிடி ,நியுசிலாந்தின் டானியல் வெற்ரோரி ஆகியோரோடு போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கையின் மஹேல ஜெயவர்தனவுக்கு இது 5 வது உலக கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து தங்களது இறுதி உலக கிண்ணப் போட்டித் தொடரில் ஆடும் சங்ககார,மஹேல ஜெயவர்தன ஆகிய இருவரோடும் சேர்த்து இன்னுமொரு சிரேஸ்ட வீரர் டில்ஷான் ஆகிய மூத்த வீரர்கள் அணிக்கு நம்பிக்கை கொடுப்பார்கள் என்று எதிரபார்க்கலாம்.

         

அத்தோடு அணியின் தலைவர் மத்தியுஸ்,உதவி தலைவர் திரிமான்ன,சந்திமால்,திமுத் கருணாரத்ன ஆகிய வீரர்களோடு சகலதுறைகளிலும் பிரகாசிக்கும் ஜீவன் மென்டிஸ்,திஸ்சரா பெரேரா ஆகிய வீரர்களும் துடுப்பாட்ட பங்களிப்பை செலுத்தவல்லவர்களே.

அத்தோடு பந்து வீச்சில் கலக்கும் லசித் மலிங்க உபாதையிலிருந்து மீண்டு வந்திருக்கின்றமை அணிக்கு மேலும் புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது,இவரோடு அனுபவ வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர மற்றும் சுரங்க லக்மால் புதுமுக வீரர் துஸ்மந்த சமீரா ஆகிய வீரர்களும் சுழல் பந்து வீச்சில் கைகொடுக்கும் ரங்கன ஹேரத்,சச்சித்திர சேனநாயக்க ஆகிய வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதுவரையான 10 உலக கிண்ணப் போட்டிகளிலும் பங்கெடுத்துள்ள இலங்கை அணி 1996 ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்க தலைமையில் ஒரேயொரு உலக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இதுவரை மொத்தம் 66 உலக கிண்ணப் போட்டிகளில் பங்கெடுத்து தலா 31 வெற்றிகள் 31 தோல்விகளை இலங்கை அணி சந்தித்துள்ளது.

கடந்த 2 உலக கிண்ணங்களிலும் இறுதிப் போட்டிக்கு வந்திருக்கும் இலங்கை அணி இம்முறை இந்த இலக்கை அடைவதற்கு கடுமையான சவால்களை சந்திக்கவேண்டிவருமென்றாலும் பன்னாட்டு அணிகள் பங்கெடுக்கும் போட்டிகளில் இலங்கையின் பலம் பல்கிப்பெருகி பலதடவைகள் வெற்றிகள் ஈட்டப்பட்டுள்ள நிலையில் இலங்கை அணியின் ரசிகர்கள் உலக கிண்ண கனவுகளோடு நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சூரியனின் அன்பான வாழ்த்துக்கள்.

வாருங்கள் சிங்கங்களே வாகைசூடி!

*தில்லையம்பலம் தரணீதரன்.
2015.02.13

                           
4,420 Views
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச சேட்டைக்கார ஹீரோன்னா, அது நம்ம பாஸ் என்கிற ஆர்யாதான். அந்தளவுக்கு அவரோடு நடிக்கும் நடிகைகளும் சரி, ஏனைய பெண் இரசிகைகளும் சரி, ஆர்யாவோடு கலந்து நட்பாகி விடுவார்கள். என்ன மந்திரமோ மாயமோ என்று ஏனையவர்கள் புலம்புவது மட்டும் மிச்சம்.

இந்த விஷயம் இவ்வாறு இருக்க, இப்பொழுது ஆர்யா சந்தானம் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க''.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்கள் மிக வேகமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையில் ஆர்யா சந்தானம் மற்றும் தமன்னா ஆகியோர் கூட்டாக சீட்டு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள்.
இந்த விளையாட்டில் கைதேர்ந்தவரான தமன்னா இரு ஆண் சிங்கங்களையும் தோற்கடித்து வெற்றியைக் கைப்பற்றிக் கொள்கிறார். அதுமட்டுமில்லை, வெற்றி பெற்ற தமன்னா ஆர்யாவின் பொக்கட்டில் உள்ள தனக்கான வெற்றிப் பணத்தையும் கறந்துவிட்டுதான் விடுகிறார்.

இதனால், இப்பொழுதெல்லாம் யோசித்தே விளையாட ஆரம்பிக்கிறார் ஆர்யா. மணி (பணம்) போய்டுமே !!

கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
7,672 Views
எங்கள் அண்ணாவில் அழகுப் புயலாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நமீதா, இப்பொழுது கொஞ்சம் கிலோக்கள் அதிகரித்திருக்கிறார். பல காலமாக சினிமாவில் வாய்ப்புக்கள் இல்லாததால் கிடைக்கும் கடை திறப்பு விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலை காட்டி வருகிறார். 
 இவ்வாறு வாய்ப்புகளுக்காக வளைய வரும் நமீயை, சிலர் வேண்டுமென்று கடுப்பேற்றி வருவதாக கூறியுள்ளார். 
 
அதாவது, சமீபத்தில் நமீதாவுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்று புரளிக் குண்டு ஒன்றை பரப்பி விட்டார்கள். இதனால், கோபத்தில் கொதித்து எழுந்துள்ளது  இந்த அழகு மலை. 
 
''எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இன்னும் சில காலங்களுக்கு இல்லை. எதுக்காக, என்னோட திருமணத்தைப் பற்றி நீங்க முடிவு செய்றீங்க? தப்பான செய்திகளை பரப்பாதீங்க. இன்னும் மக்களுக்காக மக்கள் பனி செய்ய கடமை எனக்கு இருக்கு. அதற்க்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..'' என்று முடித்துள்ளார் நமீதா. 
 
இவர் போற போக்கைப் பார்த்தால், குஷ்பு போல அரசியலிலும் குதிக்கப் போகிறார் என்பது புரிகிறது. 
என்னமோ... மச்சான்ஸ் பலருக்கு ஆப்பு ரெடி!!
 
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
4,629 Views
தமிழில் குறுகிய காலத்தில் கோலோச்சிய நடிகை என்றால் அது தமன்னாதான். ஆரம்பம் சொதப்பினாலும், பின்னர் வந்த படங்கள் மூலம் சுதாகரித்துக் கொண்டார். மளமளவென கையில் கிடைத்த படங்களில் நடித்தவர் செய்த பெரிய தவறு, கதைகளை ஆராயாமல் நடித்தமை தான். பல படங்களில் நடித்தாலும், அந்தப் படங்களில் சில ஊத்திக் கொண்டன. இருந்த மார்கெட்டையும் இல்லாமல் செய்தது.

இறுதியாக அஜித்தின் வீரம் திரைப்படத்தில் நடித்தார். அதுவும் அவ்வளவாக தமன்னாவுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. . அவரது ரீ எண்ட்ரி அவ்வளவு நன்றாக அமையவில்லை. இதனால் சோகத்தில் உட்கார்ந்திருந்தவருக்கு, நண்பேண்டா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

முன்னணி நடிகையாக இருந்தவர், குத்துப் பாடலுக்கா என்று என்று நேநேகள் அனைவரும் யோசிப்பது புரிகிறது. என்ன செய்ய? இருக்கும் வாய்ப்பை தானே பயன்படுத்தலாம். முதலில் நயன்தாராவையே பாடலுக்கும் ஆட வைக்க கேட்டிருக்கிறார்கள். அம்மணி மறுக்கவே தமன்னாவுக்கு வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
2,258 Views
ஹிந்தியில் சவாலான வேடங்களை ஏற்று நடிப்பவர் நடிகை வித்யா பாலன். அவருக்கு என்றுதான் பல படங்கள் இயக்கப்படுவது போல இருக்கும். அந்தளவுக்கு நடிப்பில் நல்ல பெயர் பெற்றுள்ளார்.
    அத்தோடு, வித்யாபாலனை தேடிவரும் வாய்ப்புக்கள் அனைத்தும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களாகவே வருகின்றன.

இப்பொழுதும் வித்யாபாலனைத் தேடி இன்னுமொரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வந்துள்ளது. அவர்தான் அண்மையில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிய பிரதமர் பெனாசிர் பூட்டோ. இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் இவரது பாத்திரத்தில் நடிக்க வித்யாபாலனை அணுகியுள்ளார்கள்.

ஆனாலும், இது தொடர்பில் வித்யாபாலன் இன்னும் நடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
1,555 Views
ஒரு காலத்தில் கொடி கட்டி நாயகர்களுக்கு நிகராக புகழ் பூத்த நகைச்சுவைக் கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் கவுண்டமணி. அவர் நடிக்காத நாயகர்களே இல்லை எனும் அளவுக்கு பலருக்கும் பிடித்தவராகவும், எல்லோரும் விரும்பி அழைத்து நடிக்க வைக்கும் ஒருவராகவும் அறியப்பட்டார்.

சில காலங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த கவுண்டர், மீண்டும் தன கல்லாவை நிரப்பும் திட்டத்தோடு களமிறங்கியுள்ளார். வாய்மை எனும் படத்தில் நடித்து முடித்துவிட்டவர், 49-ஓ எனும் படத்தோடு இன்னும் இரண்டு படத்திலும் நடித்து வரும் நிலையில், இன்னொரு படத்திலும் ஒப்புக் கொண்டு ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இந்தப் படத்தில் கவுண்டமணி ஹீரோவாக நடிக்கிறார். அதிகமான பொருட்செலவில் படப்பிடிப்புக்கள் நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்தோடு இந்தப்படத்தில் மிக இளமையாக கவுண்டமணி காட்சியளிக்கவுள்ளார்.
இவ்வளவும் சொன்ன உங்களுக்கு, படத்துக்கு என்ன பெயருப்பானு கேட்க தோணலையா? அதாவது படத்தின் பெயர் '' எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது''

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
3,099 Views
தல அஜித் & கௌதம் வாசுதேவ மேனன் &த்ரிஷா & அனுஷ்கா கூட்டணியில் கடந்த 5ஆம் திகதி வெளியானது என்னை அறிந்தால்!
        படம் அப்படி இப்படி என்று பல விமர்சனங்களும் கருத்துக்களும் முன்வைக்கப்படாலும், சிறப்பாக இருக்கிறது என்பதே பலரது பொதுப்படையான கருத்தாக இருக்கிறது.திரையரங்க உரிமையாளர்களும் தமக்கு படவசூல் மகில்வளித்துள்ளதாகவே தெரிவிக்கும் நிலையில், நிச்சயம் பார்க்கக் கூடிய படமென நம்பமுடியும்.

பல இடங்களில் வசூல் மூலம் வாரிக் குவித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தரப்பு தகவல்கள்.
இன்னிலையில் ஒரு இந்திய தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சிக்காக என்னை அறிந்தால் திரைப்பட கூட்டணி கலந்துகொண்டுள்ளது. அஜீத் மட்டும் இல்லை. அப்பொழுது கௌதமிடம் கேட்டார்கள், ஆங்கில திரைப்படங்கள் இயக்கும் ஆசை உங்களுக்கு இல்லையா? யாரை வைத்து இயக்குவீர்கள் ?

    இந்தக் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த கௌதம் வாசுதேவ மேனன், ஆங்கில திரைப்படங்களை இயக்கும் ஆசை எனக்கும் உண்டு. ஆனால், ஆங்கில நடிகர்களை வைத்தல்ல, நம்ம ஊர் நடிகர்களை வைத்தே நான் இயக்கினால் இயக்குவேன். அதிலும் அஜித் நடிப்பிலேயே எனது ஆங்கிலப்படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். அவர் சம்மதித்தால் மிக விரைவிலேயே படம் ஆரம்பிக்கப்படும் என்றார்.
               இதற்க்கு தல சம்மதம் சொல்லுமா? பார்க்கலாம் பார்க்கலாம் என்பது மட்டுமே நம்மால் முடியும்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
4,391 Views

ராசியில்லா நடிகையாக கேடி படத்தோடு ஓரங்கட்டப்பட்ட மாநிற அழகி தமன்னாவுக்கு, கல்லூரி எனும் படம் மறு வாழ்வைக் கொடுத்தது. அடுத்தடுத்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் வாய்ப்பையும் கொடுத்தது.

ஏகோபித்த ஆதரவோடு தமிழில் முன்னணி நடிகையாக சிலகாலங்கள் வரைக்கும் வளைய வளைய வந்தவருக்கு மேற்கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவரே அவரைக் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏகப்பட்ட கண்டிஷன்கள், அதிகரித்த எக்குடோக்கு சம்பள விவகாரங்களால் தமிழ் சினிமா அவரை பின்தள்ளிவிட்டு, அவருக்கு பிறகு வந்த நாயகிகளை அரவணைத்துக் கொண்டது.
அம்மணி தன்தாய்மொழிப் பக்கம் போய் கல்லாவைக் கட்டத் தொடங்கினார்.

மீண்டும் வீரம் மூலமாக தமிழில் வந்தார். வீரம் ஏனையவர்களுக்கு புகழ் கொடுத்தது. தமன்னாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், திருமண வயதை அடைந்துள்ள அம்மணிக்கு, விரைவில் திருமணம் என்றும், இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும், பல செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், கோபமாக கொந்தளித்துள்ளார் தமன்னா.
''தவறான செய்திகளை தருகிறார்கள். நம்பாதீர்கள். எனக்கு இப்பொழுது திருமணம் செய்துகொள்ள ஒரு அவசரமும் இல்லை. இன்னும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களிலும் படங்களிலும் நடித்துதான் நான் விடைபெறுவேன். தேவையில்லா வதந்தியான செய்திகளை தயவு செய்து பரப்பாதீர்கள்'' என்றார் தமன்னா.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி- 
5,283 Views

ஹீரோ இல்லைன்னா கதையே இல்லைப்பா என்கிற அளவுக்கு நம்ம தமிழ் சினிமாவில், ஒன்றுக்கு பல பேரைப் போட்டு படத்தை ஓட்டப் பார்ப்பார்கள். இங்கு மட்டுமல்ல, எல்லா சினிமாவிலும் ஆண்களை நம்பி போடப்படும் முதல் தான் அதிகம்.

தமிழில் ஒரு சில படங்கள் பெண்களை களமிறக்கி வந்தன. அவை வெற்றிகளை எந்தளவுக்கு பெற்றன என்பது கேள்விக்குறிதான். இறுதியாக சிநேகிதியே வெளியானது. அதன்பிறகு, யாரும் இப்படியான தைரியத்தோடு களமிறங்கவில்லை. வீணாக, கருத்துச் சொல்லப் போய் ஏன் கையைச் சுட்டுக் கொள்வான் என அமைதியாய் வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படியாக இருந்த தமிழ் சினிமாவில், யாமிருக்க பயமேன் என்று ஒருவர் பெண்களை மட்டும் வைத்து இயக்கம் படத்தோடு குதித்துள்ளார். அவர், மலையாளத்தில் முப்பதுக்கும் அதிகமான படங்களை இயக்கிய துளசிதாஸ். இனிவரும் நாட்கள் என்று பெயரிட்டுள்ளார்.
ஆர்த்தி, இனியா, சுபிக்ஷா, ஈடன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கியமான பாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் முன்னைய நாயகி நதியா நடிக்கிறார். முழுக்க முழுக்க பெண்களே கரம் கோர்த்திருக்கிறார்கள் . எந்த ஆண் பாத்திரமும் படைக்கப்படவில்லை.

படத்தினை ஆட்சி செய்வது பெண்கள் மட்டும்தான். மற்றும்படி ஹீரோ என்றால் திரைக்கதை தான் என்று சந்தோஷமாக சொல்கிறார் இயக்குனர் துளசி தாஸ்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

5,955 Views

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் த்ரிஷா மற்றும் அனுஷ்கா, அருண்விஜய், விவேக் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் இன்று வந்துள்ள திரைப்படம் என்னை அறிந்தால் ஆகும்.
       இந்தப்படம் அஜித் இரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இரசிகர்களாலும் கொண்டாட்டப்படுகிறது. சமூக வலைத்தளங்கள், இணைய வெளிகள் என எல்லோருமே பேசும்படமாக மாறியிருக்கிறது.
படம் பார்த்தவர்கள், ஆளாளுக்கு அவரவர் பார்வையில் பட்டவற்றைப் பற்றி பேசிவருகிறார்கள்.
சரி! நமது தமிழ் சினிமாவின் பிரபலங்கள் யார் யார் .. படத்தை எப்படியெப்படி பேசியிருக்கிறார்கள் என்று  பார்க்கலாமா?

அனிருத்
என்னை அறிந்தால் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அஜித் & கௌதம் மேனன் அசத்தியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்

சிவகார்த்திகேயன்
உங்கள் படத்தை திரையில் பார்க்கிறதுக்காக காத்திருந்து பார்த்தேன் தல. படம் நம்ம பாஷையில பட்ட!!

சிம்பு
நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு. நடிப்பில் வாழ்ந்திருக்கிறார் தல. மனநலம் பாதிக்கப்படவர்கள் தான் இந்தப் படத்தை பார்க்க மாட்டார்கள்.

சுரேஷ்
கௌதம் +அஜித் + சத்யதேவ் கூட்டணியில் படத்தின் இரண்டாம் பாதி மிரட்டலாய் இருக்கிறது. தல ஜமாய்ச்சுட்டார், வாழ்த்துக்கள்

விவேக்
அஜித் சேரின் மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இரசிகர்களே கொண்டாடுகிறார்கள். படமும் அருமையாக வந்திருக்கிறது. நல்ல கதை எப்போதும் வெற்றிபெறும் என்பதற்கு என்னை அறிந்தால் ஒரு நல்ல உதாரணம்.

இவ்வாறு பார்த்தவர்கள் பலவிதமான பாணிகளில் வாழ்த்துக்களை தூவும் நிலையில், படத்தில் வில்லனாக மிரட்டியிருக்கும் நடிகர் அருண் விஜய் தியேட்டரில் இரசிகர்கள் செய்த அன்பின் அடையாளத்தால் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இவ்வாறு அமோக ஆதரவோடு பல திரையரங்குகளையும் நிறைத்திருக்கிறது என்னை அறிந்தால். மேலும் செய்திகள் கிடைக்கின்றபோது உடனுக்குடன் சூரியன் மூலமாக அறிந்து கொள்ளுங்கள்.
அப்போ நான் வரட்டா?

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
16,399 Views
தமிழ் திரையுலகில் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த திரைப்படங்களில் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரனே முன்னிற்கிறது.
இந்த பிரம்மாண்டமான படத்துக்கு இரசிகர்கள் கொடுத்த வரவேற்பு, இமாலய சாதனையை பெற்றுக் கொடுத்தது எனலாம்.

இந்நிலையில், ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் எந்திரன் பாகம் 2இல் நடிக்க ஆயத்தமாகி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன. அத்தோடு, இந்தப்படத்தில் ஹிந்தியின் இன்னொரு சூப்பர் ஸ்டார் அமீர்கானும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தியை நாமல்ல, தென்னிந்திய ஊடகங்களே பரப்பி வருகின்றன. அண்மையில், அமீர்கான் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருந்தார். அந்த சந்திப்பில் இந்த விடயமும் பேசப்பட்டதா என்பது குறித்து இப்பொழுது அலசப்படுகிறது.

ஷங்கர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் நடிக்கவிருக்கும் நிலையில், 2016ஆம் ஆண்டில் படவேலைகள் ஆரம்பமாகவுள்ளதாகவும் அத்தோடு, கதையைப் போல இவர்கள் மூவரும் இணைந்தால் இதுவே ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிகப் பிரம்மாண்டமான செலவில் எடுக்கப்படும் படமாக அமையுமென சினி உலக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

7,891 Views
தல அஜித் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் உங்களுக்கு தெரியும் என்னை அறிந்தால் என்பது. வழமையை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தப் படம். அத்தோடு, வெளியீட்டுத் திகதிகளும் பல மாற்றி மாற்றி இன்று தான் திரை கண்டது என்னை அறிந்தால்.

      பலரும் புகழ்ந்து பிரம்மாண்டமாக படத்தை கொண்டாடிவரும் நிலையில், அடிப்படையில் தல இரசிகரான நம்ம சிம்புவும் முதல் படக்காட்சியாக படத்தை அனிருத்துடன் சென்று பார்த்துவிட்டு, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தார். வழமையாகவே, சிம்பு சொல்ல வரும் விஷயங்கள் சிக்கலைக் கிளப்புவது தெரியும். இந்தமுறையும் அதேகதையாகி விட்டது இவரது ட்விட்டர் பகிர்வு.

''நிறைய நாட்களுக்கு அப்புறமாக ஒரு நல்ல தரமான படத்தை பார்த்ததான உணர்வு. தல அழகாகவும் அதிரடியாகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸாகவும் பெஸ்ட் கிளாசாகவும் படம் அமைந்திருக்கிறது என்னை அறிந்தால். இந்தப் படத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றைய அனைவரும் பார்த்து மகிழ்வார்கள்'' இதுதான் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கொறித்த பதிவு.
இது போதாதா நம்மாட்களுக்கு?
       எப்படி ஒரு படத்துக்காக மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இதனுள் இழுத்து, அவர்களின் மனம் நோகும்படி பேசலாம் சிம்பு என்று, ஒரு தரப்பு கொந்தளித்துள்ளது. உளநிலை சரியில்லாதவர்களை பாதிக்குமளவுக்கு எப்படி இவர்  பேச முடியும் என, சில இந்திய சமூக சேவைகள் அமைப்புக்கள் சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்க்கு சிம்பு தரப்பிலிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை. இன்னும் என்னென்ன சிக்கல்களை சிம்பு சந்திக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். -

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
34,962 Views
தமிழில் வந்தார் நடித்தார் சென்றார் என்றது போல பாவனாவின் வருகையும் முடிவும் அமைந்து விட்டது. அழகான நடிகை, நடிக்கத் தெரிந்தவர் என்று நல்ல அம்சங்கள் பல இருந்தும் பாவனாவை தமிழ் சினி உலகம் ஓரங்கட்டியது யார் தப்போ?

தமிழ் இந்த பட்சி ''சித்திரம் பேசுதடியில்'' தான் அறிமுகமானது என்பது நமக்கு தெரியும். ஆனாலும், மலையாளத்தில் அதற்க்கு முதலே 20 படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறது இந்த மலையாள மங்கை.
வாய்ப்பில்லாமல், அல்லாடுகிறார் பாவனா என்றெல்லாம் பல கதைகள் வந்தன. ஆனாலும், நானா அப்பிடி? என்கிற அளவில் பாவனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அதாவது மலையாள கன்னட படங்களில் இப்பொழுதும் முன்னணியாக நடித்து வரும் பாவனா, மலையாளத்தில் இயக்குனராக வர விரும்பும் ஒரு இளைஞருக்காக தானே அவரது குறும்படத்தில் நடித்துக் கொடுக்க முன்வந்துள்ளார். 3 கதைகளைக் கொண்ட கருவில் அமையும் கதையாகவே இந்த குறும்படம் அமைந்துள்ளது. நானே நடிக்கிறேன் என, அந்த வாலிபருக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் பாவனா.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி- 
1,668 Views

த்ரிஷாவின் திருமணத்தின் பின்னர் அவர் நடிக்க மாட்டார் என்று, ஆருடம் சொல்லி வந்தவர்களுக்கு அம்மணியின் புதிய பட அறிவிப்பு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

அடுத்தவனையே அடிக்கடி நோட்டமிட்டு பழகிப்போன நம்ம மனதை, மாற்ற முடியாமல் பலர் அவதிப்படும் வேளை, திருமணம் முடிந்ததும் த்ரிஷா இனி சினிமாவில் இல்லை என பலர் வாதிட்டு வரிந்து கட்டியிருந்தார்கள். இப்பொழுது என்னடாவென்றால், அத்தனையும் பொய்யென நிரூபித்துள்ளார் த்ரிஷா.

இமான் அண்ணாச்சி இசையமைக்க தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் போகி எனும்  படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. இவரோடு, இன்னும் இரண்டு குச்சி ஐஸ்களும்  கலந்து கதகளி ஆட வைத்துள்ளார்கள். பூனம் பஜ்வா மற்றும் ஓவியா ஆகிய நாயகிகளோடும் இணைந்தே த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அன்றொருநாள் அருண்விஜய் மற்றும் மந்த்ராவை வைத்து ''ப்ரியம்'' படத்தை இயக்கிய பாண்டியன் இயக்குகிறார். பெண்களின் துணிச்சல் பேசம் கதையாக படமாகவுள்ளது போகி.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
4,091 Views
[1]      «      407   |   408   |   409      »      [441]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top