Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான மாணவி ஒருவர் தான் பிரபல animation திரைப்படமான (கோச்சடையான் போல அரைகுறையாக அல்ல) Frozen படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக கூறி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ப்லொரிடா நகரை சேர்ந்த அன்னா ஃபைத் கால்சன் (Anna Faith Carlson) என்பவர், தான் Frozen திரைப்படத்தில் வரும் இளவரசி எல்சாவை போல் உள்ளதாக தெரிவித்து தன் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அன்னா கால்சன் சொல்கிறார் , நான் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அதில் நடித்ததாகவே உணர்வதாகவும், இந்த புகைப்படத்தினால் கிடைத்த பெருமை மூலமாக எனக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.


இவரது சகோதரி படத்தில் வரும் இளவரசியின் தங்கை அன்னா போல ஆடைகள் அணிந்து சிறு குழந்தைகள் மற்றும் புற்று நோயாளிகளை மகிழ்வித்துவருகிறார். இவ்வாறு குழந்தைகளுக்காக நடித்து அவர்கள் முகத்தில் சிரிப்பை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் நம்ப முடியாமல் இருந்தாலும், உண்மை என்பதால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும் !

இனி அன்னாவுக்கு வாய்ப்புக்கள் வரும் போலவே தெரிகிறது.
அன்னாவும் விடாமல் விதவிதமான தனது படங்களை இணையத்தில் ஏற்றி வருகிறார்.

3,361 Views
இணையத்தின் பிரபல தேடுதளங்களில் முதல் இடம் வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அபார சலுகைகளை வழங்கி வருகின்றது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொருவரின் உழைப்பின் காரணமாக அந்நிறுவனம் வருடம் ஒன்றிற்கு 5 அரை கோடி ரூபாய் லாபத்தினை பெற்றுக்கொள்கிறது.

இந்த லாபத்தின் ஒரு சிறு பகுதியைக் கொண்டு தனது ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றது. அப்படி என்ன அபார சலுகைகள்னு யோசிக்கிறிங்களா?
நல்லா மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு இதோ வாசியுங்க ..............

1. வேலை செய்துகொண்டிருக்கும் போது தூக்கம் வந்தா குளு குளுனு அறை இருக்கு......( போய் தூங்கலாமாம்).

2. உள்ளக விளையாட்டுகள் உண்டு. விளையாடலாம். (வேலை நேரத்துல என்ன விளையாட்டு வேண்டியிருக்குனு கேட்க மாட்டாங்க யாரும்.)
இடையிடையே இவ்வாறான சின்ன சின்ன இடைவேளைகள் அவர்களுக்கு புத்துணர்ச்சி தருகின்றன.

3. நீச்சல் தடாகம் இருக்கு நீந்தலாம். (களைப்பு பொய் ப்ரெஷ்ஷா வரலாம்)

4. பல ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்நிறுவனத்தைச் சுற்றியுள்ள பசுமையான சுற்றுப்புறத்தை வேண்டிய நேரம் சுற்றி வரலாம். நடக்கவும் தேவையில்லை. தனியாகவோ, குழுவாகவோ நீங்க பயணம் செய்ய சைக்கிள் இருக்கு. வழியில் சாப்பிடுவதற்கு நொறுக்கு தீனிக்கடையும் உண்டு.

5. வீட்டில் முடி வெட்ட நேரம் இல்லையா? கட்டிங் செய்யவும் இடம் இருக்கு....( இதுவுமா...)

        

6. துணி துவைக்க நேரம் இல்லையா? பிரச்சினையே இல்ல துவைச்சு காயவைச்சும் தருவாங்க. (ஆகா இது நல்லா இருக்கே)

7. சம்பளத்துடன் வாரத்தின் ஒரு நாளைக்கு உங்கள் தேவைகளுக்காக மட்டும் தேடல்களை மேற்கொள்ளும் வசதி உண்டு. (சம்பளத்தோட...)
அட இது தான் தேடலுக்கு பேர் பெற்ற இடமாச்சே

8. நொறுக்குத்தீணி மற்றும் குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எடுத்து உண்ணலாம். (இலவசமாக தானாம்.......ஒரு கட்டு கட்டிற வேண்டியது தான்).

9. களைப்பா சோர்வா இருக்கா தேர்ச்சி மிக்க கலைஞர்களைக் கொண்டு மசாஜ் செய்து கொடுக்கப்படும்.

10. ஒரு சின்ன காயம் வந்தாலும். உடனடியா மேசைக்கே மருத்துவர் வரும் வசதி.

கூகிளின் தலைமை அலுவலகம்இதோ கூகிளின் ஐரோப்பிய அலுவலகம் அமைந்திருக்கும் சூரிச் நகர அலுவலகம்இங்க எங்களுக்கும் வேலை கிடைக்காதானு யோசிக்கிறீங்களா? ம்ம்ம்ம்........ ஆசை யாரையும் விட்டுவைக்காதே.

திறமையிருந்தா நிச்சயம் இடம் இருக்கு. முயற்சி செய்யுங்கள் ; தேர்ச்சி பெறுங்கள்.
4,042 Views
2010ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் போட்டி முடிவுகளை ஆரூடம் சொன்ன போல் என்ற பெயருடைய ஒக்டோபஸ் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

2008 ஐரோப்பிய கிண்ணம், 2010 உலகக்கிண்ணம் ஆகியவற்றின் முடிவுகளை மிகத் துல்லியமாக (கணித்த முடிவுகளில் இரண்டே தவறு ; 12 சரி) ஆரூடம் சொல்லியது போல்.


ஜெர்மனி விளையாடும் போட்டிகளில்
இதன் ஆரூடங்கள் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டன.

எனினும் 2010இன் இறுதிப் பகுதியில் இந்த போல் இறந்துபோனது.


இம்முறை போலின் வெற்றிடத்தை நிரப்ப சீனாவில் பன்டாக் குட்டிகளும், ஜேர்மனியில் நெல்லி என்ற யானையும் இருப்பதாகச் சொல்லப்பட்டன.

எனினும் மத்தியகிழக்கில் இருந்து ஷாஹீன் என்ற புத்திசாலி ஒட்டகம் புறப்பட்டுள்ளது என டுபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஷாஹீன் இதுவரை கணித்த முடிவுகளில் எல்லாமே சரியாக நடந்துள்ளன.

அதிலும் யாரும் எதிர்பாராத ஸ்பெய்னின் தோல்வி பற்றியும் ஷாஹீன் எதிர்வு கூறியுள்ளது.இப்போது சுவாரஸ்யம் என்னவென்றால் இன்று இரவு இடம்பெறும் ஜேர்மனி - போர்த்துக்கல் ஆட்டத்தில் எல்லோரும் எதிர்பார்த்துள்ள ஜேர்மனி தோற்கும் என்றும் போர்த்துக்கல் வெல்லும் என்று ஷாஹீன் சொல்லி இருப்பது தான்.

(சூரியனில் தினமும் காலை 8.30க்கும் இரவு 7.30க்கும் உலகக்கிண்ண நாளேட்டில் தினசரி உலகக்கிண்ண போட்டி முடிவுகளையும் புதிய செய்திகளையும் கேட்டறியுங்கள்)

இன்றிரவு இப்படி நடந்தால் அது இந்த உலகக்கிண்ணத்தின் மற்றொரு அதிர்ச்சியாக அமையும்.

அப்படி நடக்காவிடின் ஒட்டகத்தின் குட்டு உடைந்துபோகும்.

எது நடக்கும்?
2,623 Views
கொஞ்சம் மண்டையில் இலேசாக தட்டு தட்டிப் பாருங்க, உடனே கங்கனாவா அப்பிடின்னு கேட்பீங்க. தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம்ரவியோடு டூயட் பாடிய அதே நடிகை தான் இவர்.

பளீர் வெள்ளைநிற அழகி. ஆனாலும், தொடர்ந்தும் நம்ம தமிழ் திரையுலகம் இவரை ஓரங்கட்டி விட்டது, கண்டு கொள்ளவேயில்லை. இந்த நிலை இங்கே என்றாலும், அம்மணி பொலிவூட்டின் மிக முக்கியமான நாயகி. ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்து முத்திரை பதித்தவர்.

அண்மையில் குயின் என்ற படத்தில் தன் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த கங்கனா, இப்பொழுது ரிவால்வர் ராணி உட்பட 3 படங்களில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், சொல்ல வந்ததை மறந்து போய்ட்டம்பா!!

கஹானி படத்தை திரைக்கு கொண்டுவந்த சுஜாஷ் கோஸ் இப்பொழுது இன்னுமொரு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அந்த திரைப்படத்தில் 14 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க முதலில், வித்யாபாலனை அணுகிய இயக்குனர், பின்னர் கங்கனாவையே ஒப்பந்தம் செய்துள்ளார்.

27 வயதான கங்கனா, 14 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக்கொண்டது கொஞ்சம் ஆச்சர்யம்தான் !

அப்போ கங்கனா அம்மாவாயிட்டாங்க!!
5,025 Views
தொலைக்காட்சியால் வீட்டிலே மனைவிமாரிடம் அகப்பட்டுக்கொண்டோர் சங்கம் ;)
1,848 Views
சீனாவைச் சேர்ந்த ஜியான் பெங் இவர் தனது அன்பு மனைவியை விவாகரத்து செய்துள்ளார். என்ன காரணம் என்று விசாரித்த போது தெரிய வந்த விடயம் அனைவரையும் அதிசயிக்க வைத்தது. 
 
அவலட்சணமாக குழந்தைகளைப் பெற்றமையே இந்த விவாகரத்துக்கு காரணமாம். ஜியானும் அவரது மனைவியும் அழகானவர்கள். இந்த அழகான தம்பதியினருக்கு ஏற்கனவே அழகான இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு மூன்றாவதாக பிறந்த குழந்தை தான் அவலட்சணமாக பிறந்துள்ளது. அழகின் மேலும் முகத்தோற்றத்தின் மேலும் அதிக விருப்பம் கொண்ட ஜியானால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் அடுத்தகட்டமாக மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஜியான் வைத்திய பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார், அப்பரிசோதனைகள் கூட இக்குழந்தையின் தந்தை ஜியான் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. 
 
எது எப்படி இருந்தாலும் அழகான எங்களுக்கு இப்படி ஒரு குழந்தையா என்பது தான் ஜியானின் கேள்வி. அவரின் கேள்விக்கு அவருக்கு கிடைத்த பதில் தான் அதிர்ச்சியான விடயம். 
 
இவரின் மனைவி இத்தனை காலமும் மறைத்துவைத்த உண்மையை கூறினார்.


தான்
 ஜியானை சந்திக்கும் முன் அதாவது திருமணத்தின் முன் தனது தோற்றம் அழகில்லை; அதனால் தான் முகமாற்று சிகிச்சை செய்து கொண்டதாகவும், தன் கணவரிடம் இருந்து அந்த உண்மையை மறைத்ததாகவும் கூறியுள்ளார். 
 
மனைவி தன்னை ஏமாற்றிய குற்றத்துக்காக வழக்கு தொடர்ந்த ஜியானுக்கு மான நஷ்ட ஈட்டுடன்(120000 அமெரிக்க டொலர்கள்) விவாகரத்தும் கிடைத்தது.   
7,025 Views

நேற்று பிரேசிலின் சவோ போலோ நகரில் உள்ள கொரிந்தியன்ஸ்  அரங்கில் இடம்பெற்ற உலகக்கிண்ண ஆரம்பவிழாவின் கண்கவர் புகைப்படங்களின் முழுமையான தொகுப்பு  ​

3,120 Views
திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்த விஜய் - அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிபடங்களுக்கு நன்றி - நிகில் முருகன்  
22,296 Views
மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இருந்தும் பாடசாலைகள் மூடப்படும் நாட்டில் இருக்கும் நாம் இந்த அதிசயம் எங்கே நடக்கிறது என்று ஆச்சரியப்படுவோம்.
 
இது இங்கல்ல, இத்தாலியில்.
இத்தாலியில் ஒரே ஒரு மாணவிக்காக இயங்கி வரும் இந்த பாடசாலை உலகிலேயே மிகச் சிறிய பாடசாலை என்ற பெயரை பெற்றுள்ளது. தரம் மூன்றில் படிக்கும் எட்டு வயது மாணவியை மையமாகக் கொண்டு இயங்கும் இப்பாடசாலையில் 33 வயதான ஆசிரியை ஒருவர் கற்பித்து வருகிறார். 

கடந்த ஆண்டு நான்கு மாணவர்கள் தரம் 5ல் கல்வி கற்று வெளியேறியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஆரம்ப பிரிவில் இணைவதற்கும் மாணவர்கள் தயாராக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும் இப்போதைக்கு இவர் மட்டுமே இங்கே கற்கிறார்.

தனது கல்வி தொடர்பில் அங்கே கல்வி பயிலும் மாணவியிடம் பேசியபோது ....... 
இங்கே தனிமையை உணர கூடியதாக உள்ளது எனவும், அருகில் மற்றவர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு தான் பாடம் படிப்பதாகவும் கூறியுள்ளார். 
தனக்கு முன்னே பல மாணவர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டு தானாம் அந்த ஆசிரியையும் கற்பிக்கின்றார். 
 
( அடகடவுளே எங்களுக்கும் இப்படி தனித்தனிய ஸ்கூல் இருந்திருந்தா ஒவ்வொரு எக்ஸாம்லயும் முதலாம் பிள்ளையா வந்திருப்பமேடா.........).
2,962 Views
அபிமான நடிகர்களைத் தலைவனாக எண்ணி, தன் தலைவனுக்காக ஏதேதோ செய்யத்துணியும் ரசிகர்கள் மத்தியில், விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் செய்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
 
இந்த ரசிகர் தன் நெஞ்சில் 'விஜயின் ஆயுட்கால விசுவாசி' என பச்சை குத்தியுள்ளார். விஜயின் மீது தான் கொண்ட அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தவே இவர் செய்துள்ளார்.
 
தன் ரசிகனின் அன்பைக்கண்டு அவருடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துள்ளார் விஜய். அத்தோடு சில அறிவுரைகளும் கூறியுள்ளார், "உங்கள் ஆதரவு மட்டும் போதும், என் மேல் கொண்ட அன்பினால் உங்களை கஷ்டப்படுத்திக்கொள்ளாதீர்கள்" என்றும் கூறியுள்ளார் இளைய தளபதி விஜய்.
 
15,388 Views
சின்னத்திரையில் நிரந்தர நடுவராகவே மாறிப்போன தன்னை ரசிகர்கள் மறந்திடுவார்களோ என்ற அச்சத்தில் உள்ள நமீதா  தனது திரையுலகில் மாற்றுரு எடுக்கிறாராம். 
 
கவர்ச்சி காட்டத் தயார் என்றாலும் வித்தியாசமான கதைகளோடு வருவோரை வரவேற்பதாக நமீதா அறிவித்தார்.
உடனேயே சிலர் அதிரடி action கதைகளோடு இவரை நாடியுள்ளனர்.
 
கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்ன நமீதா இப்போது கடுமையாக உடற்பயிற்சி பெற்று வருகிறார். படத்துக்காக குத்துச்சண்டை பயின்றும் வருகிறார். ஜிம்மில் கடுமையாக பயிற்சி செய்து விட்டு, மைதானத்தில் வந்தும் குத்துச் சண்டை பயிலுகிறார். இப்போது ஒரு குத்துச்சண்டை வீரருடன் மோதும் அளவுக்கு இதனை பயின்றுவிட்டாராம் நமீதா.
(யப்பா கேட்டாலே கண்ணைக் கட்டுதே)
 
அவ்வப்போது கயிறு கட்டி தொங்கும் பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றாராம்... குத்துச்சண்டைக்குத் தான். ( கயிறு கட்டியா?????? அவ்...........)
 
வெகு விரைவில் நமீதாவை ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக திரையில் காணும் எதிர்பார்பில் உள்ளனர் நமீதா ரசிகர்கள். 
 
2,069 Views
பிரபல ஹிந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா அடிக்கடி தனது டுவிட்டரில் ஏடாகூடமான பதிவுகளை போட்டி மாட்டி கொள்வது உணடு . கோச்சடையான் வெளிவந்த நேரம் தனது டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த்தின் மார்பு பற்றி கிண்டல் செய்யப்போய் பெரிய சர்ச்சையில் மாட்டியிருந்தார்.

ரஜினியின் மார்பு - சர்ச்சையில் ராம் கோபால் வர்மா

ராம்கோபால்வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்கும் நாளில் பாகிஸ்தான் சிறையில் இருந்த மீனவர்களும், இலங்கை சிறையில் இருந்த மீனவர்களும் விடுவிக்கப்பட்டது குறித்து ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் மனதில் என்ன நினைத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பதிவு வெளியிட்டு உள்ளார்.

அதில்,மீனவர்கள் ரிலீஸ் ஆனதில் தனக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஏனேனில் அவர்களால் ஆயிரக்கணக்கான மீன்கள் தங்கள் உயிரை இழக்க இருக்கின்றன. என்று எழுதியுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டில் ‘சோனியாவின் மகள் பிரியங்காவை விட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.

பிரியங்கா காந்தி 


மரியம் நவாஸ் ஷெரிப்  


இப்போதே இதற்கான எதிர்வினைகள் ட்விட்டர் பக்கங்களில் கிளம்பியிருக்கின்றன.

யார் யார் இனி சட்ட ரீதியில் வம்பிழுக்கப் போகிறார்களோ?
ராம் கோபால் கொஞ்சம் கவனமாகத் தான் இனி இருக்கவேண்டும்.
2,815 Views
ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக்கொண்டிருப்பவர்களில் நடிகர் விஜய்சேதுபதியும் ஒருவர். இவர் தங்கள் படங்களில் நடிக்க சம்மதம் கிடைக்காதா என்று சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூட அலைந்து கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதுசம்பந்தமாக த்ரிஷாவை அணுகியபோது அவர் மறுத்து விட்டதாக செய்தி பரவியுள்ளது.

இதேபோல், தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது டாணாவில் நடிப்பது போன்று அடுத்து தனுஷ் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. இப்போது அதுபற்றி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதி.அதில், எனக்கு பிடித்த நடிகர்களில் தனுஷும் ஒருவர். அவரது தயாரிப்பில் நடிக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஏற்பேன். ஆனால். அதுசம்பந்தமாக என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. அதனால் தனுஷ் தயாரிப்பில் நான் நடிப்பதாக வெளியான செய்தி தவறானது என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இவர் மிக வெளிப்படையான நடிகர் என்றும் பட்டதைப் பட்டபடி பேசிவிடுபவர் என்றும் பேச்சு நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.
2,343 Views
கோச்சடையான் வெளியான பின்பு பல பிரபலங்கள் படம் தொடர்பில் கருத்து வெளியிட்டனர், அந்த வகையில் சிம்பு தனது டுவிட்டர் தளத்தில் படத்தின் கிராபிக்ஸ் சரியாக அமையவில்லை என பதிவேற்றியுள்ளார். அதற்கு சௌந்தரியா சற்றும் கோபப்படாமல் 'நன்றி' சொல்லியிருந்தார்.
 
அடடா என்ன இது இப்படியொரு விஷயம் சப்பென்று முடிந்ததே என்று யோசித்துக்கொண்டிருக்க, சந்தர்ப்பம் பார்த்து சிம்புவுக்கு பதில் அட்டாக் கொடுத்திருக்கிறார் ரஜினி புதல்வி.

 சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த சௌந்தர்யாவிடம் 'ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை கேட்கலாம் என்று கேட்க..... 
உடனே சௌந்தர்யா 'நான் சிம்புவிடம் தயவுசெய்து பாடாதீர்கள்' என கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார். 
 
இது சிம்புவை பழிவாங்குவதற்காக செய்த ஒரு செயல் எனவும் இதனால் சிம்பு மிகவும் மனவருத்தப்பட்டார் என சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
சும்மாவே சிம்பு அந்த மாதிரி.. இப்ப இந்தப் பொண்ணு வேற கிண்டி விட்டிருக்கு.
"எவண்டி உன்னைப் பெத்தான்" ரக பாடல் ஏதாவது பாடிக்கீடி ரஜினியையும் வதைக்கப் போறார் வம்பு.. இல்லை சிம்பு.  
 
 
4,355 Views
படத்துல என்ன தான் மேக்கப் போட்டு எக்ஸ்ட்ரா அழகா காட்டிக்கொண்டாலும் சின்ன வயசுல எல்லாரும் இயற்கையாவே ரொம்ப அழகு தான்.

அசின் அன்று 


அசின் இன்றுபாவனா அன்று


பாவனா இன்றுபாமா அன்று


பாமா இன்று


குரங்கும் கூட குட்டியில் அழகு என்று சும்மாவா சொன்னார்கள் என்று கோக்கு மாக்கா சொல்லக் கூடாது.
8,837 Views
[1]      «      419   |   420   |   421      »      [426]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top