Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மனோரம்மாவுக்கு பிறகு, சிறந்த குணச்சித்திர மற்று நகைச்சுவையில் வெளுத்து வாங்கும் நடிகையாக பார்க்கப்படுகின்றவர் நடிகை கோவை சரளா.

கே. பாக்கியராஜ்ஜின் முந்தானை முடிச்சு படத்தில், சிரிப்பு நடிகையாக அறிமுகமானவர்தான் இந்த கோவையை சேர்ந்த சரளா. கடைசியில் கோவையும் அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது. அவரது நடிப்பும் உடல்மொழியும் இரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், கோவை சரளா என்னதான் சிரிக்க வைத்தாலும், குணச்சித்திர வேடங்களில் வந்து மனதை உருக வைக்கும் காட்சிகளில் இதுவரை பெரிதாக நடிக்கவில்லையே எனும் கவலை நிறையப் பேருக்கு இருக்கிறது. அந்தக் கவலைக்கு முற்றிடும் முகமாக கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் கொம்பன் படத்தில் கார்த்தியின் அம்மாவாக ஆக்ரோஷமான காட்சிகளில் எல்லாம் சபாஷ் வாங்கியுள்ளார் சரளா.

படத்தில் இறுதிக் காட்சியில், கார்த்தியை பழிவாங்க அனுப்பும் வீர வசனங்களை பேசுபவர் இவர்தான். ''நல்லவன் சாகவும் கூடாது. தப்பானவன் வாழவும் கூடாது'' என கொதித்துப் போகும் ஒரு அம்மாவாக நடித்துள்ளார் கோவை சரளா. இதன் மூலம், அவர் இன்னும் பல அழுத்தமான படங்களை கைப்பற்றிக் கொள்ளுவார் என பலரும் பேசி வருகின்றனர்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
5,696 Views
கற்றது தமிழ் எனும் படம் மூலம் தன் பயணத்தை ஆரம்பித்து, மாறுபட்ட கதைகளும் வெல்லும் என்பதை தங்கமீன்கள் மூலம் நிரூபணம் செய்தவர் இயக்குனர் ராம். தங்கமீன்கள் அள்ளிக் கொண்ட விருதுகளும் பெற்றுக் கொண்ட பாராட்டுக்களும் எண்ணிலடங்காதவை.

இப்பொழுது தரமணி எனும் படத்தை எடுத்து வருகிறார். படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார். ஹீரோவாக நடிக்க மம்முட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹீரோயின்கள் யாரென்று கேட்டால் அசந்து அதிர்ந்து போவீர்கள். காரணம், மம்முட்டி கொஞ்சம் முதிர்நிலை ஹீரோ. அதாவது சீனியர் ஹீரோ எனலாம். இவ்வாறு ஒரு ஹீரோவுக்கு நாயகிகளாக நடிக்க இப்போதுள்ள நடிகைகள் யாரும் விரும்ப மாட்டார்கள். இதுதான் வழமை.
                 
                         ஆனாலும், ஒருவர் என்பதையும் கடந்து இருவர் இப்படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க இசைந்துள்ளனர். ஆண்ட்ரியா மற்றும் அஞ்சலி ஆகிய இளம் பறவைகளே இப்படத்தின் மூலமாக ஒன்றாய் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ஆஹா, என பலரும் வியக்க, நாம இது நடக்கப்படாதே என்ற கோணத்தில் ஆராய்ந்தோம். அப்போதுதான் விஷயம் வெளியே கசிந்தது. அதாவது, அஞ்சலியின் குருநாதர் தான் ராம் (கற்றது தமிழ்). ஆண்ட்ரியாவுக்கும் தரமணி எனும் படம் மூலம் மாறுபட்ட பாத்திரத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்தவர் இவர் என்பதால் தான், இருவரும் தமது நன்றிக்கடனை இப்படத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். எது எப்பிடியோ? மம்முட்டிக்கு மச்சம்தான்!!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
1,066 Views
சண்டமாருதம் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்துள்ளதால், மீண்டும் நடிப்பில் தன் கவனத்தை திருப்பியுள்ளார் நடிகர் சரத்குமார். ஒரு காலத்தில் கொடிகட்டிப்  பறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். நல்ல நடிப்பை தேர்ந்த பாத்திரங்கள் மற்றும் படங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்தவர் இவர்.

பின்னர், அரசியலில் ஈடுபாடு ஏற்படவே படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனாலும், இடையிடையே காஞ்சனா போன்ற நல்ல படங்களில் நடித்தும் வந்தார். இந்நிலையில், மீண்டும் சண்டமாருதம் படத்தில் நடித்து, படம் அண்மையில் வெளியாகி முதலுக்கு மோசமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

எனவே, இப்படம் கொடுத்திருக்கும் உற்சாகத்தால், மீண்டும் புதுத் துணிவோடு தன்னை தேடி வந்த படங்களில் 5 படங்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார். அவைகளில், மிஸ்கின் இயக்கும் ஒரு படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கும் ஏய் இரண்டாம் பாகத்திலும், சமுத்திரக்கனியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்கிறார்.
                            இதுதவிர, கே.ஆர்.செல்வராஜ் இயக்கும் விடியல், வேளச்சேரி ஆகிய படங்கள் வெளியாக தயாராகியுள்ளன. இது தவிர பிற மொழிகளான மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ஒவ்வொரு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் சரத்குமார்.

ஆக, 2015 சரத்குமாருக்கு இன்னும் வாய்ப்புக்களை வழங்கும் ஆண்டாக அமையும் என்பது இப்பொழுதே புரிகிறது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
4,647 Views
"தல" ரசிகர்கள் சொல்ல விரும்புவது  என்ன.......???
-அதிரும் திரையுலகம்

தென்னிந்திய தமிழ்த்திரையுலகில் தூக்கிவிட கையின்றி, தன்னம்பிக்கையை மட்டும் கொண்டு தனக்கென்று தனியொரு இடம்பிடித்து மின்னும் ஒரே நட்சத்திரம் யாரென்றால் "தல"அஜித் மட்டும் தான்.

தடைகளையெல்லாம் முட்டிமோதி முளைத்து முழு விருட்சமாகி நிற்பவர், அந்த விருட்சத்தின் நிழல் தேடி உதவி என்று வருபவர்களுக்கு வெளியில் தெரியாமலேயே வாழ வழி செய்பவர், "அமராவதி"யில் தொடங்கி "என்னை அறிந்தால்" மூலம் தன்னை அறியவைத்தவர், திரையுலகமே வியந்து பார்க்க உயர்ந்தவர் என ரசிகர்கள் கொண்டாடும், நடிப்பை நிஜவாழ்வில் கலக்காத நல்ல மனிதர் இவர்.

இது இவ்வாறிருக்க, திரையுலகம் சார்ந்தோர் உட்பட பிரபலமானவர்கள் பற்றிச்  சொல்லவரும்போது சமூகவலைத்தளங்கள் பற்றியும் சொல்லவேண்டியது தவிர்க்க முடியாத ஒரு நிலையாகிவிட்டது என்றால் மிகையில்லை. ஏனெனில்  எந்தவொரு விடயத்திற்கும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், உதவியும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இது சினிமாவிலும் அதன் தாக்கத்தை செலுத்தத் தவறவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை வேறு எந்த தமிழ் நடிகர்களின் தீவிர ரசிகர்களும் புரிந்துகொண்டு ஒன்றுபட்டுச் செயற்பட முன்னரே, முக்கியமாக Facebook, Twitter ஆகிய சமூகவலைத்தளங்களில் "தல"அஜித் ரசிகர்கள் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இப்போதெல்லாம் ஒரு விஷயத்தை Twitter இல் ட்ரெண்ட் பண்ணுவதிலும், அதை தக்கவைப்பதிலுமே அந்த விசயத்தின் முக்கியத்துவம் வெளிக்கொண்டுவரப்படுகின்றது என்பது பரவலான எண்ணப்பாடு. அந்த வகையில் அஜித் ரசிகர்களும் அதையே பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

              

'தல' இன் ஆரம்பம் படத்தில் ரசிகர்கள் மெல்ல ஆரம்பித்த இந்த ஆட்டம் முழுதாக சூடு பிடித்தது எப்போதென்றால் "என்னை அறிந்தால்" மூலமாகவே. "என்னை அறிந்தால்" என்ற தலைப்பு அறிவிக்கப்பட்டபோது ஆகட்டும். பின்னர், படத்தின் விளம்பர முன்னோட்டக்காட்சி (டீசர்) வெளியீடு, படத்தின் இசை வெளியீடு என அத்தனை நிகழ்வுகளையும் படம் வெளியாகும்வரை ஒன்று விடாமல் Twitter இல் ட்ரெண்ட் பண்ணியிருந்தார்கள்.

இவ்வாறு டுவிட்டரில் அதகளம் பண்ண ஆரம்பித்தவர்கள் படத்தோடு மட்டும் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. கடந்தவாரம் பிறந்திருக்கும் ஜூனியர் 'தல' யின் வருகை, கொண்டாட்டம், அதற்கென தனியான Favebook சமூகவலைத்தளப்பக்கம் ஆரம்பித்தது என புதிது புதிதாக ட்ரெண்ட் பண்ணி தொடர்ந்து அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்கள் Twitter ஐ மட்டுமல்ல, ஏனைய நடிகர்களையும் சேர்த்தேதான். ஏனெனில், ஒட்டுமொத்த இந்திய திரையுலகில் எந்த ஒரு நடிகருக்குமே அவர்களது ரசிகர்கள் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்று வியக்கிறது திரையுலகம்.   

           

ஏதோ ஒன்றை சொல்ல வருகின்றார்கள் தல ரசிகர்கள்.......
அது என்ன என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகின்றோம்.

*கணேசமூர்த்தி ராகவன்.

%MCEPASTEBIN%
21,232 Views

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு. அதன் பின்னர் இப்பொழுது ஜீவா வரைக்கும் அவரது படங்கள் இரசிகர்களுக்கு பிடித்த படங்களின் பட்டியலில் உள்ளன. எளிமையான இளம் நடிகராக எல்லோருக்கும் பிடித்தமானவர் விஷ்ணு.

இந்நிலையில், கிரிக்கெட் மீது அதிகமான பாசமும் பற்றும் கொண்டவர் இவர். கடந்த 2012இல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, கையில் காயமுற்றார். இதனால், அவருடைய கையில் மெட்டல் ப்ளேட் என்று சொல்லப்படும் இயந்திரம் பொருத்தப்பட்டது.

பின்னரும், அதையும் பொருட்படுத்தாமல், 2014இலும் தனது திறமையை போட்டியில் கலந்து கொண்டு நிரூபித்தார் விஷ்ணு. இப்பொழுது கடந்த இரு நாட்களுக்கு முன்பு விஷ்ணுவுக்கு கையில் வைக்கப்பட்டிருந்த இயந்திரம் அகற்றப்பட்டது. எனவே, அவர் வைத்திய சாலையில் அனுமதிப்பட்டிருந்தார்.
          இந்த விடயத்தை தெரிந்து கொண்ட தல அஜித், விஷ்ணுவை வைத்தியாசாலையில் சென்று சந்தித்து சுக நலன்களை விசாரித்து பேசியுள்ளார். அன்போடு ஆரத்தழுவி ஆறுதலும் சொல்லியுள்ளார். இதனால் மனம் நெகிழ்ந்துள்ள விஷ்ணு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ''அஜித் இவ்வாறு வந்து என்னை பார்ப்பார் என்று நான் நம்பவில்லை. இவ்வளவு பெரிய நடிகர் இப்படி எளிமையான மனிதராக நடந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது'' என மகிழ்வோடு பகிர்ந்துள்ளார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
6,989 Views
இயக்குனர் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஆரம்பித்துள்ள புதிய படம் ''24''. இதற்க்கு என்ன அர்த்தம் என்பது நம்மில் பலருக்கு இன்னும் புரியவில்லை. யாராவது மௌனம் களைந்து தாங்களாக சொன்னால்தான் நமக்கெல்லாம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் நாயகியாக நடிகை சமந்தாவையே மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே அம்மணி சூர்யாவுடன் லிங்குசாமி இயக்கிய அஞ்சான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது மீண்டும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது சூர்யாவின் படத்தில் அவருக்கு !

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல் பதிவு பணிகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ள நிலையில், சமந்தாவின் ''24'' பட பாத்திரமானது, வெறுமனே ஹீரோவோடு நடனமாடி விட்டு இல்லாமல் போகும் பாத்திரமாக அல்லாமல், நகைச்சுவையோடு பேசும் சிறப்பான வேடமாக இப்படத்தில் அமையவுள்ளது.

ஏற்கனவே, அஞ்சானில், கவர்ச்சி கதகளி ஆடிய சமந்தா, இப்படத்தில் சிரித்து சாவடிக்கவுள்ளார் போல.... !!

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
2,193 Views
ஜீவாவின் அண்மைய படங்கள் எதிர்பார்த்தளவுக்கு கை கொடுக்காததால், கொஞ்சம் கவலை அப்ப உலாவிய நடிகர் ஜீவா, மீண்டும் புத்துணர்வோடு எழுந்துள்ளார்.

தனது அடுத்தபடம் எப்படியும் வெற்றிப்படமாக இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில், மிகவும் அவதானமாக கதைகளை தேர்வு செய்துகொண்டு வந்தார். அதன்படி இயக்குனர் அட்லீயின் உதவியாளர் கொண்டு வந்த கதையை தனது அடுத்த படத்துக்காக தெரிவு செய்துள்ளார் ஜீவா.

கதை அட்லீயால் எழுதப்படாது என்றாலும் , அவரது உதவியாளர் தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். ஜீவா மற்றும் ஸ்ரீதிவ்யா இப்படத்தில் இணைகின்றனர்.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
2,327 Views

எதிர்வரும் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, தெலுங்கு யுவா சக்தி எனும் அமைப்பு இந்தியாவின் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளார்கள். அந்த விழாவில் நடிகை விமலா ராமனுக்கு சாதனைப் பெண்மணி எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சந்து மெண்டொட்டி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யா, தமிழ் படமொன்றில் முதன் முறையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இயக்குனர் நடிகர் பிரபுதேவா, தனது அடுத்த தமிழ் படத்தை எடுக்க கதை தயார் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கமல் அல்லது விஜய் தான் நடிப்பார்கள் என பரவலாக பேசப்படுகிறது.

வாய்ப்புக்கள் இல்லாமல் காத்திருந்த நடிகை தமன்னாவுக்கு பரத்தின் படமொன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஆனாலும், எதையும் கேட்காமல் பரத் நாயகன் என்றதும் மறுத்துள்ளார் தமன்னா. தன்னைப் போல முன்னணி நாயகர்களோடு மட்டும்தான் ஜோடி செர்வாராம் அம்மணி.

கவர்ச்சி நடிகை சோனாவுக்கு இதுவரை ஒரே போன்ற வேடத்தில் நடித்து அலுத்து விட்டதாம். அதனால், வில்லியாக நடிக்கவே ஆசையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூண்டு தடவைகள் தனது பெயரை மாற்றிக் கொண்ட நடிகை யார் தெரியுமா? என் ஆள பாக்க போறேன்னு பாடிய கயல் நாயகி ஆனந்தி தான். தமிழில் ஆனந்தியாக வரும் இவர், தெலுங்குப் படங்களில் ரஷிதா என்று நடிக்கிறார்.

உத்தம வில்லன் படத்தில் ஐந்து பாடல்களை எழுதி விட்டு, அதில் ஜிப்ரானின் இசையில் ஆறு பாடல்களையும் அவரே பாடியுள்ளார். அவர் யார் தெரியுமா? நம்ம உலக நாயகன் கமலஹாசன் !

இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும், கேரளாவின் அத்திரப்பல்லி எனும் நீர்வீழ்ச்சியில் புலி படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். விஜய் மற்றும் சுருதி ஹாசன் ஆகியோர் பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. 

அஜித்தின் 56ஆவது படத்தில் நடிக்க ஹன்ஷிகா மற்றும் தமன்னா ஆகியோரிடையே போட்டி நிலவினாலும், ஸ்ருதி ஹாசனுக்கே வாய்ப்பு சென்றுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
3,214 Views
தாழ் பணிந்த சிம்பு - வாழ்வு கொடுப்பாரா ரஜினி மகள் ஐஷு.....?????

கோடம்பாக்கத்தில் குழப்படிக்குக் குறைவில்லாத ஒரே நடிகர் என்றால் வாலு நடிகர் சிம்பு தான். லிட்டில் சூப்பர்ஸ்டார் என சொல்லி சுற்றித்திரிந்த இவர் சூப்பர்ஸ்டார் மகளுக்கும் நூல்விட்டு தன் காதல்வலையில் சிக்கவைத்தவர் என்றால் தப்பில்லை.

வாலுத்தனத்துக்குக் குறைவில்லாத இந்த மன்மதன் தன்னுடன் சேர்ந்து நடித்த நடிகைகளை எப்படியாவது தன் காதல்வலையில் சிக்க வைப்பதில் செம கில்லாடி. முதலில் சூப்பர்ஸ்டார் ரஜினியின்மகள் ஐஸ்வர்யா, பின்னர் நயன்தாரா, அவரைத் தொடர்ந்து ஹன்சிகா என இவருடைய பட்டியலில் நடிகைகளின் பெயர்கள் தொடர்கின்றன. இவ்வாறு சிக்குவது நடிகையானாலும் இறுதியில் அவஸ்தைப்படுவதும், வருந்துவதும், தன்னுடைய பெயரைக் கெடுத்துக்கொள்வதும் என்னமோ இவர்தான்.நடிகைகளிடம் தன் பெயரைக் கெடுத்துக்கொண்டதோடு மட்டும் நிறுத்தவில்லை இந்த விரல்வித்தை மன்மதன். படப்பிடிப்பு தளங்களிலும் படக்குழுவினருக்கு சரியாக ஒத்துழைப்புத் தருவதில்லையாம். படப்பிடிப்பு தருணங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை, தயாரிப்பாளர்களுடன் முரண்பாடு என தமிழ்த்திரையுலகில் தன் பெயரைத்தானே கெடுத்துக்கொண்ட பெருமை பெற்றவரும் இவரே.

இந்தநிலையில், சிம்புவை வைத்து எந்த தயாரிப்பாளர்களும் படம் எடுக்க முன்வராததால் இரண்டு வருடங்களாக இவரின் நடிப்பில் எந்தவொரு படமும் வெளிவராத நிலையில், நீண்ட இழுபறிகளுக்கு மத்தியில் இந்த மாதமளவில் வெளியாகவுள்ளன வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள். இப்படி வெளிவரவுள்ள படங்களையும் வெளியிடுவதில் உள்ள சில சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனமான ஈரோஸ் நிறுவனத்திடம் நேரில் சென்று தன் படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டிருக்கிறாராம் சிம்பு. இந்த ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய சென்னை கிளைக்கு தற்போது பொறுப்பேற்றிருப்பவர் யாரென்று பார்த்தால் இந்த சிம்புவின் முன்னாள் காதலி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் தான். இந்த நிலையில் அக்காவிற்கு தங்கை எதிர்மாறாக இருக்கவா போகிறார்...? என தமக்குள் வினவிக்கொள்கின்றார்களாம் தமிழ்த்திரையுலகினர். 

                  

இது இப்படியிருக்க, சிம்புவின் மீதுள்ள கோபத்தினால் அவரை சினிமாவில் கீழ்நிலைக்கு கொண்டுவரவே தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனை சினிமாவில் முன்னிறுத்தி அவர்களை மேலே கொண்டுவர ஐஸ்வர்யா முயற்சிப்பதாக செய்திகள் பரவலாக வெளியாகியிருந்தன. இந்தநிலையிலேயே தன்மானத்தை அடகுவைக்கும் சிம்புவின் இந்த அடிபணிதல் இடம்பெற்றிருக்கின்றதாம். அதுமட்டுமல்லாமல் அடுத்து, தான் நடிக்கவிருக்கும் படத்தை ஈரோஸ் நிறுவனம் சார்பாக நீங்களே தயாரிக்க வேண்டும் என
சௌந்தர்யாவிடம் வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறாராம் இந்த வாலு மன்மதன்.

இவ்வாறு தன் நிலையிலிருந்து இறங்கிக் சென்ற சிம்பு, சௌந்தர்யாவிடம் அபயம் கேட்டதனால் தங்கையின் சிபாரிசிற்கு     செவிசாய்த்து மன்னிப்பாரா ஐஸ்வர்யா என்ற கேள்விகள் கோடம்பாக்கத்தில் வலுக்கின்றன. ..?

சரண் புகுந்தார் சிம்பு.... அபயம் அளிப்பாரா ஐஷு.....??? - கேள்வியுடன் கோடம்பாக்கம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
43,830 Views
'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக கால்பதித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், தனது அடுத்தப்படமான 'பென்சில்' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் அவருடைய மூன்றாவது படமான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது.

இப்படத்தில் நடிப்பது குறித்து, தனது நடிகர் அவதாரம் குறித்தும் கூறிய ஜி.வி, "நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது’

“தற்பொழுது கேமியோ பிலிம்ஸ் சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போ செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த  உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். .விரைவில் இசையுடன் ‘கம்மிங் ஒன்  த வே டி  செல்லக் குட்டீஸ்” என்று தனது மென்மையான சிரிப்புடன் சொல்லினார்

CastroRahul
1,487 Views

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் படம் ‘உத்தமவில்லன்’ நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  நடந்தது. இதில் நடிகர் நாசர், நடிகைகள் கௌதமி, ஊர்வசி, இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி, விக்ரமன், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதோடு. விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:–

ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று கூறி வருகிறார்கள். பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்றவேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன்.

பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதை கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாக தொடர்கிறது. எனது மகா குருவாக அவரை கருதுகிறேன்.

உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு கிடைத்த பெரிய பெருமை. இந்த பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதி இருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்து இருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்கு செய்து இருப்பேன்.

பாலச்சந்தரில் நான் பாதியாக இருக்கிறேன் என்று இங்கே பேசிய பார்த்திபன் குறிப்பிட்டார். அப்படி அவர் பேசியதை கர்வமாக எடுத்துக் கொள்ளாமல் கடமையாகவும் உரிமையாகவும் ஏற்றுக் கொள்கிறேன்.

பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன்.

இவ்வாறு கமல்ஹாசன் உருக்கமாக பேசினார்.

CstroRahul


 

1,733 Views
அழகுப் பதுமை, ஆறடி அழகி அற்புத நடிப்பாற்றல் கொண்ட நடிகை என பல நாமங்களால் அர்ச்சிக்கப்படும் நடிகை அனுஷ்காவின் நடிப்பில் பாகுபாளி மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்கள் வரவுள்ளன.

இந்நிலையில், ஆர்யாவுடன் இணைந்து ஜீரோ சைஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது என்பது இன்னும் சிறப்பு.

பொதுவாக, நாயகிகளை மட்டும் நம்பி படமெடுப்பது குறைவு, ஆனாலும், அனுஷ்காவை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டி படமெடுக்க பலரும் தயார். அந்தளவுக்கு அவரது நடிப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அதிகம்.

என்ன சிறப்பு என்று சொன்னால், இந்த ஜீரோ சைஸ் படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார் அனுஷ்கா. உடல் எடை அதிகரித்த தோற்றம் ஒன்றும், ஒல்லியான தோற்றத்தோடு இன்னொன்றுமாய் புதிய பரிணாமத்தில் தோன்றுகிறார். பல நாயகர்கள் தமது படங்களுக்காய் உடலை வருத்தி உழைக்கும் நேரத்தில், நடிகையாக தன்னையும் அடையாளம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் அனுஷ்கா.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
1,496 Views
அனேகன் படத்தில் பாடலாசிரியர் ராகேஷ் எழுதி இடம்பெற்ற டங்கமாரி ஊதாரி பாடல் வெளியாகிய நாளில் இருந்து இன்று வரைக்கும், மிகப் பெரிய வரவேற்பையும் செம்ம ஹிட் என்கிற அளவுக்கு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அந்தளவுக்கு, பாடல் சாதாரண சென்னைத் தமிழில் எல்லா மட்டத்துக்கும் பிடிக்கும் அளவுக்கு இசைக் கோர்ப்போடு வந்துள்ளது. அனேகன் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தனுஷ் மற்றும் மரண கானா விஜி ஆகியோர் பாடியிருந்தார்கள்.

இப்பொழுது, அந்தப் பாடலுக்கு போட்டியாக இன்னொரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையைக்க ஜெயம் ரவி ஹன்ஷிகா நடித்துவரும் ரோமியோ ஜூலியட் படத்தில் சேர்த்திருக்கிறார்கள். அதுவும் டங்கமாரி பாடலாசிரியர் ராகேஷ் எழுத, இமானின் இசையில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார். பாடலின் ஆரம்ப வரி டண்டனக்கா என ஆரம்பிக்கிறது.
இந்தப் பாடலும் அந்தப் பாடல் போல, சாதாரண தமிழில் எல்லோரையும் மிகக் கவர்ந்த பாடலாக மாறியுள்ளது. அத்தோடு டங்கமாரிக்கு கிடைத்த அதே பாராட்டும் வரவேற்பும் இந்த டண்டனக்காவுக்கும் கிடைத்திருக்கிறது.

இன்றைய தினம், உங்கள் சூரியனிலும் டண்டனக்கா பாடல் அறிமுகப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டங்காமாரிக்கும் தனுஷுக்கும் எதிராகவே இந்த டண்டனக்கா பாடலை இமானும் அனிருத்தும் உருவாக்கியுள்ளதாக இன்னொரு தரப்பு கிசுகிசுக்கிறது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
6,728 Views

‘மொழி’, ‘அபியும் நானும்’ ‘பயணம்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமரவேல், சாம்ஸ், ரக்ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் இசையமைக்கிறார். இவருடைய இசையில் மதன் கார்க்கி எழுதிய ‘புது ஒரு கதவு திறக்குது…’ என்ற பாடலை கௌதம் மேனன் பாடியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் ராதாமோகன் கூறும்போது, இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது.

கௌதம் அவர்களின் குரல் இந்த பாட்டிற்கு துள்ளலை தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ் கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார்.

படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். கௌதம் மேனன் பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார்.

கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

1,461 Views

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த மணிரத்னம், மீண்டும் திரைக்கு தன் தலையை காட்ட ஆரம்பித்து இருக்கிறார் தற்போது ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் மூலம் நமது மனதைக் மீண்டும் கொள்ளை கொள்ள இருக்கிறார்.

 

‘ஒ காதல் கண்மணி’ படத்திற்காக, ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம். ‘மெளன ராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும் ‘அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல் தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும் 12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு நிமிடம் இருபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரை மார்ச் 6-ம் தேதி முதல் திரை அரங்குகளில் வெளியிடவுள்ளனர்.

 

2,346 Views
[1]      «      420   |   421   |   422      »      [457]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top