Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.பரபரப்பை உருவாக்கி வரும் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக நடிகையரைத் தேர்வு செய்யும் படலமும் வேகமாய் நடைபெற்று வருகிறது. இசையில் அனிருத் புகுந்து விளையாட இருக்கிறார். அதே போல, தலயுடன் ஜோடி சேரப்போகும் வாய்ப்பை ஒருவர் இழந்து விட்டார்.

அவர் தான் ஸ்ருதி ஹாசன். அவருடைய குளறுபடிகள் காரணமாக, அவருக்கு படங்களில் நடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டதையடுத்து, அஜித் ஜோடியாக ஒப்பந்தமான அவருடைய வாய்ப்பு நம்ம தமன்னாவுக்கு கைமாறியுள்ளது.

அத்தோடு, முக்கியமான இன்னொரு பாத்திரமாக, அஜித்துக்கு தங்கையாக நடிக்கவும் ஒரு நடிகையை தேடி வந்துள்ளார்கள். அதில் சில படங்களில் நகைச்சுவையில் நடித்த வித்யுலேகா ராமன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.

இறுதியில், பிந்து மாதவி தெரிவாகியுள்ளார். ஆக, அடுத்த படத்திலும் ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இந்தப்படத்திலும் இணையவுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி.

-கோடம்பாக்கக் குருவி-
3,628 Views
அட்டக்கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் நுழைந்த நந்திதா தற்போது சீனு ராமசாமியின் இயக்கத்தில் இடம்பொருள் ஏவல், ராதாமோகன் இயக்கத்தில் உப்புக்கருவாடு, விமலுக்கு ஜோடியாக அஞ்சல, மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியா பெயரிடப்படாத ஓர் படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

தனது நடிப்புத் திறனை வெளிகாட்டும் விதமான படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று உறுதியாகவுள்ள நந்திதா நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புகொள்கிறார்.

இந்நிலையில் சிலர் தங்களை நந்திதாவின் மேனேஜர் என்று கூறி தயாரிப்பு நிறுவங்களிடம் பேசி வருகின்றனர் என்பதை தனது நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட நந்திதா சற்று கோபமடைந்துள்ளதோடு இப்படி சிலர் செய்வது தனது வளர்ச்சிக்கு தடையாகுமே என எண்ணி தனக்கென தனியாக மேனஜர் என்று யாருமே கிடையாது என்றும், தனது கால்ஷீட் விவரங்களை தனது பெற்றோர்தான் கவனித்துவருவதாகவும், தனது மேனேஜர் எனக்கூறிக் கொண்டு யாராவது தயாரிப்பாளர்களிடன் அணுகினால் அவர்களை நம்பவேண்டாமென்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
1,798 Views
சிம்புவுக்கும் அவரது திரைப்படங்களுக்கும் அடிக்கடி ஏதாவது சிக்கல்கள் வந்த வண்ணமே உள்ளன. எந்தப் படம் வந்தாலும், ஏதாவது பிரச்சினையோடுதான் வந்து சேர்க்கிறது.

இப்படியாக, அவர் நடித்த வாலு திரைப்படம் இம்மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதோடு ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மே மாதம்தான் அப்படம் வெளியாகக் கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்பட்டு வருகிறது. இப்படி தொடர்ந்து தனது படம் தள்ளிப்போகிறதே என நொந்துபோய்வுள்ள சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு எதிராக சிலர் தொடர்ந்து சதி செய்துவருவதாகவும், தன் மீதான பொறாமை, வெறுப்பு காரணமாகவே இதுபோல் நடந்து கொள்வதாகவும், ஆனால் தனக்கு கவலை இல்லை என்றும், மன வருத்ததோடு கூறியுள்ளார்.

இதற்க்கு என்ன பதில் வந்து செரப்போகிறதோ?

-கோடம்பாக்கக் குருவி-
2,265 Views
மனித முக அதிசயம் - கத்திக்கு தப்பியது வெள்ளாட்டுக்குட்டி.

தென் மேற்கு ரஷ்யாவில் உள்ள தகிஸ்தான் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அவரது வளர்ப்பு வெள்ளாடு போட்ட குட்டிகளில் ஒன்றின் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது.

 தாடி வைத்து பெரிய மூக்கு கொண்ட கோபக்காரக் கிழவன் ஒருவர்  கோபமாக முறைத்து பார்ப்பதைப் போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கும் அந்த வெள்ளாட்டுக்குட்டியைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறார் அந்த வெள்ளாட்டை வளர்த்தவரான பிலாசியஸ் லாவ்ரெண்டிவ்.

இப்படியொரு விசித்திர சம்பவம் இடம்பெற்றதைக் கேட்டால் ஊர் மக்கள் சும்மா இருப்பார்களா என்ன....? ஊர் மக்கள் மட்டுமல்லாமல் விஷயத்தை கேள்விப்படும் அத்தனை பேருமே பிலோசியஸ் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.  

நிலைமை இப்படியிருக்க, பிலோசியசிற்கு கவலை வேறுவிதமாக தோன்றியிருக்கிறது. இந்தக் குட்டியை வளர்த்தும் இறைச்சிக்கடைக்கு கூட கொடுக்க முடியாதே, யாரும் வாங்கவும் மாட்டார்களே என்ற கவலை தான் அது. இந்நிலையில், இந்த செய்தியை அறிந்து வந்து, அந்த வெள்ளாட்டுக்குட்டியை கண்ட ஒரு சர்க்கஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முகவர், அந்த வெள்ளாட்டுக்குட்டியின் சாதாரண பெறுமதியைப் போன்று 10மடங்கு விலை தந்து அதை வாங்கிக் கொள்வதாக உத்திரவாதம் அளித்துள்ளாராம். அவரது விலை மதிப்பீட்டுக்கு பிறகு, இன்றுவரை பலர் நான்- நீ என போட்டி போட்டுக்கொண்டு, அதிக விலைக்கு அந்த வெள்ளாட்டுக்குட்டியை வாங்க தயாராகியுள்ளார்களாம்.

இதேவேளை, இவ்வாறு முகத் தோற்றத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்ததற்கு காரணம் என்னவென்று ஆராச்சியில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர்கள், கருவுற்றிருந்த வேளையில் அந்த தாய் ஆட்டுக்கு "விட்டமின்-ஏ" சக்தி நிறைந்த உணவு வகைகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் இந்த முக அமைப்பு உருவாகி இருக்கலாம் என கருத்து கூறியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, முதலில் எவ்வாறு ஆட்டுக்குட்டியை விற்பது என்ற கவலையில் இருந்த அந்த ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் பிலோசியஸ் லாவ்ரெண்டிவ், தற்போது மனமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார். அதனால் "எனது அழகு ஆட்டுக்குட்டி யாருடைய சாப்பாட்டு மேஜையின் மீதும் இறைச்சியாக இருப்பதையோ, அல்லது மற்றவர்களுக்கு காட்சிப் பொருளாக மாறுவதையோ நான் விரும்பவில்லை" கருத்துக் கூறியுள்ளாராம்.

S.G.R

%MCEPASTEBIN%
2,944 Views
ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நாம் சில நேரங்களில் தவறாக சில பதிவுகளை இடுவது வழமைதான். இந்த ஒரு தவறைத்தான் நாகர்ஜுனாவும் செய்து பின்பு மன்னிப்பு கோரியிருக்கிறார்.

பட்மிண்டனில் no இடத்தை பிடித்த இந்தியாவின் சாயினா நேவாலைப் பாராட்டி twitt செய்திருந்த இவர், சாயினவுக்கு பதிலாக சானியா என்று குறிப்பிட்டிருந்தார் . பின்பு தன் தவறை உணர்ந்த இவர், பின் தவறுக்கு மன்னிப்பையும் பதிவு செய்துவிட்டார்.

ஆக டென்னிஸ், பட்மிண்டன் இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விளையாட்டுதானே என்று குழம்பி இருப்பாரோ ??
ஹீஎ ஹீ ஹீஎ

-கந்தப்பன் பிரஷாந்த்-
1,118 Views

படம் எடுக்க ஆரம்பிப்பார்கள் அதுவரை பிரச்சனை இல்லை. ஆனால் எடுத்து வெளியிடும் கடைசி தருவாயில் கதை என்னுடையது. ஜாதிக் குழப்பம் மதக்குழப்பம் என அங்கங்கு இருந்து கிளம்பிவிடுவார்கள்.

இது தற்போது தமிழ் சினிமாவில் அதிகரித்திருக்குறது. இது இப்போது தமிழில் fashion ஆகிவிட்டது , இதுபோல் ஒரு குழப்பம் இப்போது கார்த்தியின் கொம்பன் படத்திற்கு வந்திருக்கிறது ..

படம் பற்றி ஏகப்பட்ட எதிர்மறை கருத்துக்கள் பரப்பப்படுகின்றது

படத்தை வெளியிடக்கூடாது என்று ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். இதற்கு காரணங்கள் பல சொல்லப்படுகின்றது . படம் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி வெளியாக இருந்தது, ஆனால் இப்போதய நிலைக்கு படம் வெளி வருமா என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.

படத்தில் ஒரு ஜாதி சார்ந்த மனிதர்கள் இழிவு படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது ..ஆனால் இது நன்பேண்டா படத்தால் வந்த அரசியல் தில்லு முல்லு என்று என்னொரு கதையும் கிளம்பி இருக்கிறது.

கொம்பனுக்கு ஆதரவாக திரையுலகமும் சேர்ந்திருக்கிறது. ஆக 2இல் கொம்பன் கோதாவில் குதிக்குமா?
இப்ப வரைக்கும் டவுட்டுதான் !!

-கந்தப்பன் பிரஷாந்த்-
2,455 Views
நான் கடவுள் படத்தில், பாலா மூலம் பவர்புல் வில்லனாக அறிமுகமானவர் ராஜேந்திரன். இவரது மொட்டைதலை இவருக்கு ஒரு பிளஸ். பின்பு சில படங்களில் வில்லன் பாத்திரம் ஏற்றார். ஆனால் இவருக்கு நகைச்சுவை நன்றாக கை கொடுத்தது. இப்போது பல படங்களில் நகைச்சுவைக்கு சார் பிஸி.

இவரது உடல் மொழி ரசிகர்களிடம் போய் சேர்ந்து விட்டது. இப்படி மவுசோடு இருக்கும் இவருக்காக மாஸ் படக்குழுவும் காத்திருந்திருக்கிறது என்பதுதான் இப்போதைக்கு hot நியூஸ்.

மாஸ் படத்தில் நடிப்பதற்கு இவரிடம் நேரம் இல்லாததால் இவரின் கால்சீட்டுக்காக மாஸ் படக்குழு காத்திருந்து பின்பு தான் ஆளைப்பிடித்திருக்கிறார்கள். ஆக இது கொமடியன் காலம்தான் !!

-கந்தப்பன் பிரஷாந்த்-
7,976 Views
இசையில் சில வித்யாசங்களோடு தமிழ் சினிமாவில் பெயர் வாங்கியவர் வித்யாசாகர். இவர் போன்ற இசையமைப்பாளர் ஏன் இன்னும் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்று தான் ஆச்சரியப்படுவதாக SPB போன்ற ஜாம்பவான்களால் நல்ல விமர்சனம் வாங்கியவர்.

இவர், இவர் போட்ட சில மெட்டுக்கள் இன்று வரை சூப்பர் ஹிட் . குத்துபாட்டுகளும் மிகப்பெரிய ஹிட் , இருந்தும் இவருக்கான நிலையான இடம் தமிழில் கொஞ்சம் தடுமாற்றம்தான்.

தமிழில் கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் வடிவேலுவின் எலி படத்தின் மூலம் கலக்க வருகிறார். வடிவேலுவும் இயக்குனரும் இவரிடம் இருந்து எலிக்கு சூப்பர் மெட்டுகள் சிலவற்றை வாங்கியிருப்பதாக சொல்லபடுகிறது.

ஆக ஒதுங்கியிருந்த நேரத்தில் சேமித்த இசையை எலியில் விருந்தாக தருவார் என்று நாமும் எதிர்பார்க்கலாம்.

-கந்தப்பன் பிரஷாந்த்-
1,152 Views

ட்ரீம் ஸ்சோன் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பி.சி.கே.சக்திவேல் தயாரிக்கும் படம் – மாங்கா. இந்த படத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கிறார்.


கதாநாயகிகளாக அத்வைதா, லீமா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் இளவரசு, ரேகா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், தென்னவன், ஷாம்ஸ், வெங்கல்ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.


ஒளிப்பதிவு – செல்வா ஆர்.எஸ்

இசை – பிரேம்ஜி அமரன்

படத்தொகுப்பு – சுரேஷ்அர்ஸ்

கலை – Dr.ஸ்ரீ

நடனம் – அஜெய்ராஜ்

சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஆர்.எஸ்.ராஜா.

தயாரிப்பு – பி.சி.கே.சக்திவேல்


‘மாங்கா’ படம் பற்றி இயக்குநர் ஆர்.எஸ்.ராஜா சொல்லும் போது..


“இந்த படத்தில் சிவாவாக வரும் பிரேம்ஜி தன்னை ஒரு பெரிய விஞ்ஞானியாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள். இவனுடைய வாழ்நாள் குறிக்கோள் தானே சொந்தமாக ராக்கெட் தயாரித்து அதன் மூலம் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை அடைத்து மக்களை காக்க வேண்டும் என்பதுதான்.


இவனுடைய முட்டாள் தனமான கண்டுபிடிப்புகளால் எல்லா மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.  இவனுடைய கண்டுபிடிப்பால் 1950 காலகட்டத்தை சேர்ந்த பாகவதர் (பிரேம்ஜி)யை சந்திக்கிறான்.

 இருவருக்குள்ளும் கடும் போட்டி ஆரம்பிக்கிறது.


இருவரில் யார் ஜெயித்தார்கள், சிவா ராக்கெட் அனுப்பி ஓசோன் ஓட்டையை அடைத்தானா? என்பதே திரைக்கதை.” என்றார் இயக்குனர்.

கதை செம இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்போலருக்கே… 


=== CASTRO RAHUL ===

4,118 Views
சோதனையில் சாதனை கொண்டால் வேதனை விலகும் விடிவிற்கான வாசல்கள் திறக்கும் ...ஏறலாம்  ஏணியிலே எட்டும் தூரத்தில் தான் அந்த வானமும் இது சாதனையாளர்களுக்கு சொந்தமான வாசகம் ...சாதிக்கும் கனவுகளோடும் உலகினை ஆளும் நினைவுகளோடும் கடந்த ஆண்டு சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எதிர்கால பயணத்திற்கான வாயில்கள் நேற்றையதினம் திறக்கப்பட்டன... ஆம் ! சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களிற்கான பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகின (30-03-2015)

முதல் பத்தில் ஒற்றை இடத்தையேனும் எம்மவர் பிடிக்கவில்லை எனும் கவலை பலருக்கு ..இருப்பினும் உயர்தரத்தில் எம்மவர் சிகரம் தொடுவார் எனும் நம்பிக்கையோடு நற்பெறுபேறுகள் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை சொல்லி நிற்பதோடு சாதாரண பெறுபேறுகள் பெற்றவர்கள் சளைக்காது முயலுங்கள் ஒரு நாள் நீங்களும் வெல்வீர்கள இது சத்தியம்  

இதே வேளை நேற்றையதினம் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவன் தரிந்து நிர்மல்  அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

கம்பஹா திருச்சிலுவை  கல்லூரியைச் சேர்ந்த சந்தினி நவன்க்ஜன அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

விசாக்கா கல்லூரியைச் சேர்ந்த அமாஷி நிவர்தனா மற்றும் கண்டி மஹாமாயா கல்லூரியைச் சேர்ந்த எச்.அபேசிங்க, ரத்னாவலி மகளிர் மகா வித்தியாலய மாணவி நுவனி நெத்சரனி ஆகியோர் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

அதேவேளை பாடசாலை மட்டத்தில் 9 'ஏ' க்களை அதிகளவானோர்  பெற்ற பாடசாலைகள் வரிசையில் முன்னணி வகிக்கும் தமிழ் பாடசாலையாக யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மீண்டும் ஒருமுறை தன் முத்திரையை பதித்திருக்கிறது  இம்முறை இக்கல்லூரி மாணவிகள் 28 பேர் 9 பாடங்களிலும் 'ஏ' சித்திகளை பெற்றுள்ளதுடன் 49 மாணவிகள் 8 ஏ க்களை பெற்றுள்ளார்கள் ..இதேவேளை வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி (சைவமங்கையர் கழகம்) மாணவிகள் 25 பேர் இம்முறை 9 'ஏ' க்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள்

ஏனைய தமிழ் பாடசாலைகளில் 9 ஏ க்களை பெற்ற மாணவர் விபரம்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரி 24 மாணவிகள்

யாழ் இந்துக்கல்லூரி 18 மாணவர்கள்

கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரி 14 மாணவிகள்

பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி 14 மாணவர்கள்

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரி 10 மாணவர்கள்

வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் 08 மாணவிகள்    

2,180 Views
சவால்கள் சர்ச்சைகள் உக்கிரதாண்டவம் ஆடும் அதி தீவிர ரசிகர்களின் சூடான பேசுக்கள் இப்படி இந்திய அணியினரை போட்டு வாட்ட..அரையிறுதி ஆட்டத்தில் தோற்ற சோகத்தோடு இரவோடு இரவாக நாடு திரும்பிய இந்திய அணியினருக்கு  தோனி  நீங்களே இந்திய அணியின் உயற்சிக்கு ஏணி..பிடியுங்க இந்த 1000 ரூபாவை..                   இப்படி சொல்லி ஒரு காசோலையை தோனிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் உத்தர பிரதேச போலீஸ் உயர் அதிகாரி அமிதாப் தாகூர் .அவ் அதிகாரி இக் காசோலையோடு ஓர் கடிதத்தையும் இணைத்து தோனிக்கு அனுப்பி வைத்துள்ளார் .அதில் அவர் கூறிய கருத்துக்கள் சற்று வேடிக்கையாக இருப்பதோடு தீவிர இந்திய ரசிகர்களை கோபப்படுதுவதாகவும் அமைந்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது  

                   தோனி அவர்களே களத்தில் இந்திய அணி  துடுப்பெடுத்து ஆடுகையில் நாட்டில் விடுப்பெடுத்து நாட்டின் வளர்ச்சியினையும் பொருட்படுத்தாது கடுப்பேத்தும் குடிமக்களை பார்க்கையில்  சற்று கவலையாக இருக்குறது இந்நிலைமை தொடர்ந்தால் நாட்டின் வளர்ச்சி அதலபாதளத்திற்கு சென்றுவிடும் ...எனவே கிரிக்கெட் போதைக்குள் சிக்கி தவிக்கும் இந்திய ரசிகர்கர்கள் தம் அலுவலகங்களில் விடுப்பெடுத்து ஆட்டங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டிய சமூக பொறுப்பு உங்களுடையது எனக்கூறி 1000 ரூபா பெறுமதியான காசோலையினையும் அனுப்பி வைத்துள்ளார் இவ்வதிகாரி
(போலீசுகாரு  போலீசுகாரு  என்ன கொடும சார் ..வாழைப்பழத்தில ஊசி எத்துற மாதிரி இப்பிடி எல்லாம் உண்மைய சொல்லுறீங்கள் ....)

6,377 Views

எஸ்.ஏ.வி. பிக்சர்ஸ் சார்பில் த.சக்திவேல் தயாரிக்கும் படம் ‘கைபேசி காதல்’. இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். திம்மம் பள்ளி சந்திரா இதனை இயக்கியுள்ளார்.


பலரது காதலுக்கு கைபேசி உதவுகிறது. அதனால் கைபேசி மீது மோகம் இன்று அதிகரித்து வருகிறது. ஆனால் கைபேசி என்கிற ஜடப் பொருள் மீதே காதல் கொள்கிறான் இளைஞன் ஒருவன் என்றால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வித்தியாசமான கதை கொண்ட படம்தான் ’கைபேசி காதல்’.


இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, படக்குழுவினரை வாழ்த்திவிட்டு, தான் சொந்த ஊரிலிருந்து 20 கி.மீ. சைக்கிளில் சென்று, ‘முரட்டுக்காளை’ படப்பிடிப்பு பார்த்த அனுபவத்தைக் கூறினார்.


இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் எளிமையைப் பற்றிக் குறிப்பிட்ட பேரரசு, “திறமை உள்ளவர்களுக்கு கர்வம், தலைக்கனம் இருக்கலாம். அது கர்ப்பிணிப் பெண்ணின் வயிறைப் போல மரியாதைக்கு உரியது. திறமை இல்லாதவர்களின் தலைக்கனம் என்பது பெண்ணின் தொப்பை வயிறு போன்றது. தொப்பையை ரசிக்க முடியுமா? திறமை இருந்து கர்வம் இல்லாதவர்கள் நடிகை இலியானாவின் வயிறு, இடுப்பு போன்றவர்கள். இலியானாவின் இடுப்பு மெலிதாக இருக்கும். அது ரசிக்கத்தக்கது. அப்படி ரசிக்கத் தக்க ஒருவர்தான் எஸ்.பி.முத்துராமன்.


“அவர் என்றும் எளிமைக்குச் சொந்தக்காரர். நான் ஏவிஎம்மில் படப்பிடிப்பில் இருந்தபோது அவர் அங்கு வந்து என்னைப் பாராட்டினார். தேடிச் சென்று பாராட்டும் அந்த உயர்ந்த பண்பை அவரிடம் கற்றுக் கொண்டேன்’ ‘என்றார் இயக்குனர் பேரரசு.


அது போகட்டும்…! ஆண்ணின் ரசிப்புக்காக பெண் தன்னை வருத்தி ஒட்டிய வயிறுடனும், மெல்லிய இடுப்புடனும் இருக்க வேண்டும் என்ற ஆரோக்கியமற்ற கருத்தாக்கத்தை பெண்ணியவாதிகள் நார் நாராய் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரம் பெண்ணின் வயிறு மற்றும் இடுப்பு ஆராய்ச்சியாளரான பேரரசுக்குத் தெரியுமா…?

=== CASTRO RAHUL ===

1,349 Views

ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பாபி சிம்ஹாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதற்காக அவரை திரையுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கிறது.


திரையுலகம் மட்டுமல்ல அவரை முன்பின் அறியாதவர்கள் கூட மானசீகமாக அவரை வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்த்துக்களுக்கு எல்லாம் பாபிசிம்ஹா தகுதியானவர்தானா?


‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ பட விஷயத்தில் பாபி சிம்ஹா நடந்து கொண்டதைப் பார்த்தால் வாழ்த்துக்கு மட்டுமல்ல… இந்த வாழ்க்கைக்கே தகுதி இல்லாதவர் என்றே தோன்றுகிறது.


அப்படி என்னய்யா செய்தாரு?

அதுக்கு முன்னால் ஒரு பிளாஷ்பேக் இருக்கு.

ஸ்டாட்… கேமரா… ஆக்ஷன்…


எம்.மருதுபாண்டியன் என்ற இயக்குனர்தான் முதன் முறையாக பாபிசிம்ஹாவுக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்தவர்.

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை இவர் எடுக்க முன் வந்தபோது பாபிசிம்ஹாவை பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரியாது.


அந்த படத்தின் இயக்குனர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் மருதுபாண்டியன்தான். படம் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கும்போதே தனது அறைத்தோழரான ‘நேரம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், ‘என் படத்துல பாபின்னு ஒரு பையன் நடிக்கிறான். அற்புதமான நடிகன். உங்க படத்துல அவனுக்கு வாய்ப்பு கொடுங்க’ என்கிறார்.


மருதுபாண்டியன் சொன்னார் என்பதற்காக பாபியை ‘நேரம்’ படத்தில் நடிக்க வைக்கிறார் அவர்.
இப்படிதான் ஆரம்பித்தது பாபி சிம்ஹாவின் கேரியர்.


நடுநடுவே போராடி ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தை முடித்தார் மருதுபாண்டியன். அதற்குள் உயரத்திற்கு போய்விட்டார் பாபி.


இந்த படத்தில் டப்பிங் பேச வேண்டும் என்று அவரை அழைத்தபோது ‘இருபத்தைந்து லட்ச ரூபாய் கொடுத்தா பேசுறேன். இல்லேன்னா ஸாரி’ என்று பாபி கூற, அப்போதுதான் பாபி எவ்வளவு பெரிய நடிகர் என்பதையே உணர்ந்தார் மருதுபாண்டியன்.


‘இந்த படம் ரிலீஸ் ஆகி லாபம் வரட்டும். கண்டிப்பா நீங்க கேட்கிற பணத்தை நான் கொடுக்கிறேன். இப்போதைக்கு படத்தை ஏடிஎம் என்ற நிறுவனம்தான் வெளியிடுகிறது. அதனால் படம் வெளியாவதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்றாராம் மருதுபாண்டியன்.


அப்படின்னா இந்த படத்தின் லாபத்தில் எனக்கு பாதி பங்கு கொடுப்பேன்னு அக்ரிமென்ட்ல சைன் பண்ணி கொடுங்க. அதே மாதிரி படம் வெளிவந்ததும் கணக்கு வழக்குகளை எங்கிட்ட முறையா ஒப்படைக்கணும். அதுக்கெல்லாம் சம்மதிச்சா நான் டப்பிங் பேசுறேன்’ பாபி சிம்ஹா சொன்னதை அவருக்கு முதல் வாய்ப்பு கொடுத்த மருதுபாண்டியன் கூட ஏற்றுக் கொள்வார் – வேறு வழியில்லாமல்.


படம் தரமாக வந்திருக்கிறது. உதவி இயக்குனர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொன்ன படம் என்பதற்காக ரசனை உள்ளத்தோடு படத்தை வெளியிடும் ஏ.டி.எம் நிறுவனம் அதற்கு எப்படி ஒப்புக் கொள்ளும்?

சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் இந்த விஷயத்தில் பாபியை சமாதானப்படுத்த முன் வந்தும், ‘லாபத்தில் ஐம்பது சதவீதம் கொடுங்க. இல்லேன்னா இருபத்தைந்து லட்சம் பணம் கொடுங்க. இரண்டும் இல்லேன்னா முடியாது’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டாராம் பாபிசிம்ஹா.


இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும் அவர் வரவில்லை. இது குறித்து பாபியை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், ‘அந்த படத்தை பற்றி பேசாதீங்க’ என்று கூறி எஸ்கேப் ஆகி வருகிறார் அவர்.


சிறந்த நடிகரான பாபி சிம்ஹா…. பணத்துக்காக இப்படி பாவி சிம்ஹா ஆவதுதான் வருத்தமாக இருக்கிறது.

=== CASTRO RAHUL ===

1,893 Views

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா (எ) அப்துல் ஹாலிக், சில மாதங்களுக்குமுன், முன்னறிவிப்பு எதுவுமின்றி, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சப்ரூன் என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அப்போது முதல் அவர் செய்தியாளர்களைச் சந்திக்காமலும், படவிழாக்களில் கலந்து கொள்ளாமலும், ஊடக வெளிச்சம் படாத தொலைவில் ஒதுங்கியே இருந்து வந்தார்.


இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஞாயிறன்று (29ஆம் தேதி) மாலை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யுவன் ஷங்கர் ராஜா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-


சமீபநாட்களாக நீங்கள் செய்தியாளர்களை சந்திக்க தயங்குகிறீர்களே… என்ன காரணம்?

எப்போதுமே நான் அதிகம் பேசுபவன் இல்லை. எனவே நான் ஆரம்பத்தில் இருந்தே தனியாக இருந்து பழகிவிட்டேன். சமீபத்தில் என்னுடைய வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ஆகையால், ஒரு பாதுகாப்பான கூண்டுக்குள் என்னை நானே அடைத்துக் கொண்டேன். மற்றபடி, நான் செய்தியாளர்களை சந்திக்கத் தயங்குவதற்கு வேறு எதுவும் காரணம் இல்லை.


உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது?

மாஷா அல்லா! என் திருமண வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.


உங்களது 
மதமாற்றம், தற்போதைய திருமணம் ஆகியவற்றில் உங்கள் அப்பா இளையராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறதே…?

அப்பா எனது முடிவுகளுக்கு எப்போதுமே தடை போட்டதில்லை. மதமாற்றம் குறித்துகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. ‘உனக்கு அமைதி கிடைக்கிறது என்றால் செய்’ என்றுதான் சொன்னார்.

அதுபோல, என்னுடைய திருமணம் என் அப்பா சம்மதத்துடன் தான் நடைபெற்றது. திருமணத்தில் அப்பா கலந்துகொள்வதாகத் தான் இருந்தது. ஆனால், பெண் வீட்டார் தரப்பில் இருந்து உடனடியாக திருமணம் என்று கோரிக்கை வந்தது. நான் அப்பாவிடம் போன் போட்டு இது பற்றி சொன்னேன். ‘இரண்டு நாளில் திருமணம் என்றால் என்னால் கலந்துகொள்ள முடியாது. நீ சென்னை திரும்பியவுடன் கண்டிப்பாக சந்திக்கலாம்’ என்றார். அதன்படி, திருமணமான மறுநாளே சென்னை வந்து, அப்பாவை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினேன். என்றாலும், என்னுடைய திருமணத்தில் அப்பா கலந்து கொள்ளாத வருத்தம் எனக்கு இருக்கிறது.

 

திலீப்குமார் மதம் மாறியபின் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரை பயன்படுத்தி வருகிறார். ஆனால் நீங்கள் மதம் மாறிய பிறகும் அப்துல் ஹாலிக் என்ற பெயரை பயன்படுத்தாமல், யுவன் ஷங்கர் ராஜாவாகவே இருக்கிறீர்களே…?

கீ-போர்டு பிளேயராக இருந்த திலீப்குமார், திரைப்பட இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பாகவே  மதம் மாறிவிட்டார். ஆகவே, அவர் முதல் படத்திலேயே ஏ.ஆர்.ரஹ்மானாகவே அறிமுகம் ஆனார். ஆனால் நான் அப்படி அல்ல. யுவன் ஷங்கர் ராஜாவாக அறிமுகம் ஆனேன். இப்போதும் அதே பெயராலேயே அறியப்படுகிறேன். அப்படியிருக்கும்போது, இப்போது பெயரை மாற்றினால் ரசிகர்கள் என்னோடு கனெக்ட் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் பெயரை மாற்றவில்லை.


வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 
மாஸ் படத்துக்கான உங்கள் இசையமைப்பில் ஏதோ பிரச்சனை என்றும், அதனால் ஒரு பாடலுக்கு தமன் இசை அமைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறதே?

உண்மையில் நடந்தது என்னவென்றால், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தமன், ‘நான் யுவனின் இசையமைப்பில் பணிபுரிய ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். இது குறித்து வெங்கட் பிரபு என்னிடம் கேட்டபோது, ‘ஏதாவது நல்ல சந்தர்ப்பம் வரும்போது பண்ணலாம்’ என்று கூறியிருந்தேன்.

‘மாஸ்’ படத்திற்கு நயன்தாரா தேதிகள் உடனே கொடுத்து விட்டதால், ஒரு பாடல் உடனே அவசரமாக வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது நான் பிஸியாக இருந்ததால், அந்த பாடலுக்கு நான் மெட்டு மட்டும் போட்டு கொடுத்தேன். தமன் அதற்கு இசை வடிவம் கொடுத்தார். அதாவது ட்யூன் என்னுடையது. ஆர்கஸ்ட்ரேஷனுக்கு ஏற்பாடு செய்தது தமன். அவ்வளவுதான்.

 

 === CASTRO RAHUL ===
6,280 Views

விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் இயக்கம் திரைப்படம் பிறவி. இப்படத்தில் விக்ராந்த் , அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோர் நாயகிகள். அத்தோடு நடிகர் அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்நிலையில், பிறவி படத்தின் ப்ரமோ பாடலுக்காக விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகிய மூவரும் நடனம் ஆடுகின்றனர்.

ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வுதான் கதை. அதை குறிக்கும் விதத்தில்தான் 'பிறவி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.த்ரில்லர், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் இசையமைக்கிறார் இந்தப் படத்தில் ‘தேடி தேடி பார்த்தோமே’ என்ற பாடலை ரஞ்சித்துடன் இணைந்து விக்ராந்த் பாடியுள்ளார்.

அத்தோடு பிறவி' படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ப்ரமோ பாடல் ஒன்றை உருவாக்குகிறார்கள். தக தக எனத் தொடங்கும் அப்பாடலுக்கு விக்ராந்துடன் இணைந்து ஆர்யா, விஷால்,விஷ்ணு ஆகிய மூன்று ஹீரோக்களும் நடனம் ஆடுகிறார்கள்.

இந்த விடயத்தை விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கோடம்பாக்கக் குருவி-
3,369 Views
[1]      «      513   |   514   |   515      »      [559]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top