Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்க, இமான் இசையமைக்க படம் வேகமாக கதையாகி வருகிறது ரஜினி முருகன் 

இந்தப்படத்தை அவசர அவசரமாக வெளியிட உத்தேசித்திருக்கும் படக்குழு தெரிவு செய்துள்ள திகதி தல அஜித்தின் பிறந்ததினமான மே.01.
 காரணம், ஏற்கனவே சிவா நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற எதிர்நீச்சல் படத்தையும் தலயின் பிறந்த நாளில் தான் வெளியிட்டார்கள்.
படம் ஏகோபித்த ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்று வெற்றிப் படமாகியது.
அந்த வழியில் இந்த ரஜினி முருகனையும் நகர்த்தி வெளியிட்டு ஹிட்டடித்துவிட வேண்டும் என்பது படக்குழுவின் எண்ணமாக உள்ளது.

சிவாவும் அஜித்தை போல வர வேண்டுமென தன் நெருங்கியவர்களிடம் கூறி புளகாங்கிதம்   அடைந்து வருவதால், எதிர்வரும் மே-01 ரஜினி முருகனை நாமும் சந்திக்கலாம்.

#வாங்க ரஜினி முருகன்... பேசலாம் !

3,048 Views

மலையாளத்திலிருந்து வந்து குதித்து கோடம்பாக்கத்தை கட்டிப் போட்டிருக்கும் பதுமைகளே அதிகம். இவர்கள் வரிசையில் சிந்தும் புன்னகை மூலம் அறிமுகமானவர் ''பீட்ஸா'' புகழ் ரம்யா நம்பீஷன்.

    சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் பீட்ஸாவுக்கு  பிறகாவது நல்ல படங்களும் பெயரும் அமையும் என காத்திருந்தவருக்கு, வாய்ப்புக்கள்  கதவைத் தட்டவில்லை.
பலர் எதிர்பார்த்தார்கள் ரம்யாவுக்கு நல்ல எதிர்காலம் வரவுள்ளது என்று! ஆனால், டமால் டுமீல் என ஒரு படத்திலே நடித்தார். அதுவும் பேசப்படவில்லை. பின்னர், இரண்டு பாடல்களைப் பாடினார். அதுவும் என்னவோ போலாகிவிட்டது.
உடனே தாய்மொழி மலையாளத்துக்கு தாவிவிட்டார்.

    மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் அம்மணி தலைகாட்டுவதாக தகவல் வர விசாரித்தோம்.
   அப்போதுதான் கசிந்தது உண்மை.
ஜெயசூர்யா ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீஷன், படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் தோன்றுகிறாராம். அதாவது, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக அரிதாரம் பூசுகிறார். 10 வயது மகன், 6 வயது மகளாக இரு குழந்தைகளோடு படம் முழுக்க வந்து தன் பாத்திரத்தை உயிர்ப்பிக்க உள்ளார் ரம்யா.

#என்னம்மா? இப்போவே அம்மா ஆகிட்டீங்க?2,547 Views
தைத்திருநாள் பொங்கலன்று, நமக்கெல்லாம் இரட்டிப்பு மகிழ்வை அள்ளித் தெளித்திருக்கிறது கோடம்பாக்கத்து படப் பட்டியல்களின் விபர வெளியீடு.

ஏகோபித்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்திருக்கும் திரைக் காவியங்கள், அபிமான நட்சத்திரங்களின் நடிப்பில், வித விதமான கதைக் களத்தோடு, புதிது புதிதான உத்திகளைக் கையாண்டு நீயா நானா? என போட்டியிட்டு வெளிவர தயாராகவுள்ளன.

இந்தப் படம் வரும், அந்தப் படம் வராது என்று, இடையிடையில் குழப்பங்கள் வேறு பேச்சாக கிளம்பினாலும், இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்தனவே தவிர குறைந்தபாடில்லை. அந்தளவுக்கு வர இருக்கும் ஒவ்வொரு படங்களும் ஏற்படுத்தியிருக்கும் பிரம்மாண்டங்களின் நீளம் அதிகம்!

இந்த வரிசையில் அதிகமாய் பொங்கல் வெளியீடுகளாய் எதிர்பார்க்கப் படும் படங்களைப் பற்றியும், அவைகளின் தற்போதைய நிலை பற்றியும் இந்தச் செய்தி விரிவாய் அலசுகிறது.

    ♥கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் என்னை அறிந்தால் படத்திற்கு, ஆரம்பம் தொடக்கம் இற்றைவரை ஆதரவும் அகோர எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்துட்ட பாடல்களில்,  சில பாடல்கள் ஊத்திக் கொண்டாலும் ஏனைய பாடல்கள் எல்லாம் சபாஷ் போடும் ரகம்தான்! பல திரையரங்குகளை தனக்கென இந்தப்படம் பிடித்துக் கொண்டாலும், இடையில் தடாலடியாக படக்குழு 29ஆம் திகதிக்கு ரிலீஸ் திகதியை மாற்றிக் கொண்டார்கள். காரணமாக, படத்தில் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையவில்லை என்று அறிவித்தார்கள். ஆக, என்னை அறிந்தால் பொங்கல் போட்டியில் கலந்து கொள்ளாது  என்பது தெளிவாகிவிட்டது.

    ♥ அடுத்து, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் விக்ரம், எமி ஜக்ஸன் ஆகியோர் நடித்து இன்னும் பரபரப்பை கூட்டியிருக்கும் படம் ஐ.  டிரைலர் மற்றும் பாடல் முன்னோட்டங்கள் மூலமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஓஹோ என்று காணப்படுகிறது. எக்கச்சக்கமான திரையரங்குகளில் ஐ தான் ஆதிக்கமாகியிருக்கிறது. இதுவரைக்கும் நிச்சயப்படுத்தப்பட்ட படமாக உள்ளது ஐ மட்டும்தான்!
        ♥ அடுத்து ஐயுடன் இணைந்து உறுதிப்படுத்தப்பட்ட பொங்கல் வெளியீட்டில் உள்ள படம், விஷால், ஹன்ஷிகா ஆகியோரின் நடிப்பில் வந்துள்ள சுந்தர்.சி இயக்கியுள்ள படம் ஆம்பள. இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொங்கலில் திரையில் தவழும் படமாக இந்தப்படமும் காத்திருக்கிறது.
        ♥  என்னை அறிந்தால், ஐ, ஆம்பள ஆகிய படங்களே பொங்கல் போட்டியில் இதுவரை குதித்திருந்தும் என்னை அறிந்தால் விலகிக் கொண்டதால், ஏக கொண்டாட்டத்தில் போட்டியிடும் இரண்டு படக்குழுவும் காணப்பட்டன. இப்பொழுது இறுதியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மகிழ்ச்சிக்கு முற்று வைப்பதாய், இன்னும் இரண்டு படங்கள் பொங்கல் ரேஸில் மோதத் தயாராகியுள்ளன.

சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யா ஜோடியாகியுள்ள ''காக்கிச் சட்டை'' மற்றும் இசையமைப்பாளர் பாடகரென வலம் வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள ''டார்லிங்'' ஆகிய படங்கள், இந்தப் பொங்கல் போட்டியில் தம்மையும் இணைத்துக் கொண்டுள்ளன. எனவே, இப்பொழுது பெரிதாய் எதிர்பார்க்கப்படும் படங்களாக இந்த படங்கள் நான்குமே வரவிருப்பது உறுதியாகி விட்டது.
விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள், இரசிகர்களிடையே இந்த படங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு இன்னுமின்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
   இதில் பெரிய படங்களோடு மோதி ஏன் நம்மை நாமே தோல்விப் பாதைக்குள் இட்டுக் கொள்வான் என்று, கார்த்தியின் கொம்பன் படம் தானாக விலகிக் கொண்டது.

 மொத்தத்தில், பெரிய படம் சின்னப் படமென மொத்தமாக 4 படங்கள் பொங்கலுக்கு வருகிறது. இவற்றில் இரசிகர்கள் மத்தியில் எந்தப்படம் இடம்பிடித்து வெற்றியடைகிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து இரசிப்போம்.


 

3,863 Views

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்ட செட்டில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 30 ஆம் தேதியோடு இந்த செட்டில் படப்பிடிப்பு நிறைவடைகிறது. எனவே படப்பிடிப்பு தற்போது வேகம் பிடித்துள்ளது.

'புலி' என இப்போது உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் மிக எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் கதை சரித்திர பின்னணி மற்றும் இன்றைய காலகட்டம் என இரு மாறுபட்ட காலகட்டங்களில் நிகழ்கிறது.

சரித்திர பின்னணியில் நடைபெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. நிகழ்கால காட்சிகளை கேரளாவில் படமாக்க இருக்கிறார்கள். பிப்ரவரி முதல் தேதியிலிருந்து கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற உள்ளது.

இப்படம் குறித்து புதிய தகவல் கிடைத்திருக்கிறது. அந்த புதிய தகவலின் படி இப்படத்தில் இடம்பெறும் சரித்திர கதையில் விஜய், தந்தை – மகனாக நடிக்கிறார். ஆக இந்தப் படத்தில் விஜய்க்கு 3 வேடங்கள்.

ஏற்கனவே விஜய், ‘அழகிய தமிழ் மகன்’, ‘கத்தி’, ‘வில்லு’ ஆகிய படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் ‘வில்லு’ படத்தில் விஜய்யின் தந்தையாக விஜய் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சியில் மட்டும் வருவார். சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யின் தந்தை – மகன் கேரக்டர்கள் சம முக்கியத்துவமுள்ள கேரக்டர்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

விஜய்யுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார் என்பதும், ‘நட்டி’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதுதெல்லாம் எல்லோரும் அறிந்த தகவல்கள்.

11,047 Views

நடிகர் வினீத்தை உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

புதிய முகம், ஜென்டில்மேன், ஆவாரம்பூ, காதல் தேசம், சந்திரமுகி உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். தவிர, ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள வினீத், நடனக்கலையிலும் தேர்ச்சி பெற்றவர். நடிப்பு போக மற்ற நாட்களில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக உலகம் முழுக்க சுற்றிக் கொண்டிருப்பார்.

அதனாலேயே நடிப்பில் ஒரு நிரந்தர இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை என்று திரையுலகில் சொல்வார்கள். சில வருடங்களுக்கு முன் கதாநாயகனாக மட்டும் நடித்த வந்த வினீத், சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களில் நடித்தும் சிறந்து விளங்கி வருகிறார்.

இந்நிலையில், விரைவில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் வினீத். ஆயாள் ஞானல்ல (அந்த ஆள் நான் இல்லை) என்று பெயரிடப்பட்டிருக்கும் ஒரு மலையாள படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. ஆயாள் ஞானல்ல படத்தில் வினீத் நடிக்கவில்லையாம்.

 

1,099 Views
ஆறடி உயரம் அழகிய உருவமென தென்னிந்தியாவில் மின்னி வரும் பதுமை அனுஷ்கா. இவரைப் பொறுத்தவரை, தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். முன்னணி நடிகர்கள் தேடிச் சென்று ஒப்பந்தம் செய்யுமளவுக்கு திறமையிருக்கிறது. இதனாலேயே ஒரு நல்ல பெயரும் அனுஷ் வசமிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்பொழுது இவரின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களாக பாஹுபாலி, ருத்ரமாதேவி, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்கள் வரவுள்ளன.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கூவும் படத்தினை தெலுங்கிலே எடுக்க இருக்கிறார்கள்.
இதில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவுக்கு சிலை வைப்பார். இதையே தெலுங்கில் நடிக்கும் நடிகர் அனுஷ்காவுக்கு சிலை வைப்பதாய் காட்சி அமைக்கப்படவுள்ளது. இதில் தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை அனுஷ்காவுக்கு சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
 அனுஷ்கா தரப்பிலிருந்து பதில் வரா விட்டாலும், அனுஷ்காவின் பிரம்மாண்டமான சிலை தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

#அந்த சிலையை அப்பிடியே எங்காவது பொது இடத்தில் வைச்சு வடிவு பாருங்கைய்யா !

3,106 Views
நீண்ட நாட்கள் திரையில் தன்னைக் காட்ட விரும்பாத பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்பொழுது மகன் சரணின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

படத்தின் கதையும் அது சொல்ல வருகின்ற கருத்துக்களும் தன்னை கவர்ந்துள்ளதால் தான், தான் நடிக்க அமோதித்ததாக கூறுகிறார் இந்த கம்பீரப் பாடகன்.

  தம் திறமைகளை இந்த உலகத்துக்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களின் கதைதான் இந்த மூணே மூணு வார்த்தை !
இதில் அர்ஜுன் மற்றும் ''சுட்ட கதை'' புகழ் வெங்கி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு படத்தின் உயிரோட்டமான பாத்திரத்தில் பாடும்நிலாவும் லக்ஷ்மியும் நடிக்கிறார்கள். இவர்களும் படத்தின் வெற்றிக்கும் யதார்த்ததிற்கும் முக்கியமானவர்களாய் தோன்றுகிறார்கள் என்கிறார் கதையை இயக்கம் இயக்குனர் மதுமிதா!
புதியவர்களை களமிறக்கியுள்ள இந்தப் படத்தின் மொத்த நம்பிக்கையும் கதைதான் என்று சொல்லப்படுகிறது.

#சினிமாத்தனமில்லாது வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்  
2,236 Views
தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறடி பாயும் என்பது போல, தந்தைக்கு தப்பாமல் அசத்தும் வாரிசுகளில் முன்னிலையில் இருக்கின்றவர் உலக நாயகன் கமல்ஹாசன் மகள் சுருதி ஹாசன்.

கமல் இப்பொழுது, விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களில் நடித்து முடித்து 2015க்குள் வெளியிட திட்டமிட்டு வருகிறார். தனது 3 படங்களையும் எப்படியான காலங்களில் இறக்கலாம் என்பது அவருடைய திட்டம்.
ஆனால், தந்தையை மிஞ்சிய மகளாய் ஸ்ருதி அகோர வேகத்தில் 2015 வெளியாகும் 7 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பொலிவூட்டில் ராக்கி ஹேண்ட்ஸம் மற்றும் வெல்கம் பேக் ஆகிய படங்களில் ஜான் ஆபிரஹாமுடனும், கப்பார் எனும் படத்தில் அக்ஷய் குமாருடனும், யாரா என்ற படத்தில் வித்யூத் ஜம்வாலுடன் ஜோடி சேர்ந்துள்ள ஸ்ருதி, நம்ம தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில், விஜய், மகேஷ்பாபு மற்றும் நாகர்ஜுனா  + கார்த்தி இணைந்து நடிக்கும்  சேர்த்து மொத்தமாக 7 படங்களில்  நடிக்கிறார்.
இந்தப்படங்கள் அனைத்தும் இந்த வருடமே வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#இப்பிடியே போனால் ஸ்ருதிதிதி.........!
4,764 Views

இப்பொழுது நம்ம சினிமாவுலகில், ஒரு புது ஸ்டைல் ஆரம்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது, முன்பென்றால் நடிப்பு நடிகர்களோடு மட்டும் முற்றாகிவிடும். இசை இசையமைப்பாளர்களின் வேலை. பாடலுக்கென்றே அடையாளப்படுத்தப்பட்ட பாடகர்கள் இருந்தார்கள். இந்நிலை இப்பொழுது தலைகீழாகி விட்டது.

முடிந்தால் முன்னேறலாம் என்பது போல, யாருக்கு முடியுமோ அவர் இதுமட்டும்தான் என்கின்ற வரம்பை உடைத்து எல்லா துறையிலும் பிரகாசிக்கலாம் என்பதாய் முன்னேறியிருப்பது ஆரோக்கியமானது தான்.
உதாரணமாக பலரை சொல்லலாம்!

சரி, இப்போ சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், கடுகு சிறிதானாலும் காரம் பெரிதென்பது போல, திறமையால் இன்று இளசுகளுக்கு மிகப் பிடித்த ஒரு இசையமைப்பாளர் பாடகர் அனிருத்.
''ஆமா... நம்ம அனிருத்து'னு வாய்மூடாமல் பார்ப்பவர்களுக்கு இன்னொரு இனிப்பான செய்தி.
லட்சுமணன் இயக்க ஜெயம்ரவி ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடிக்கும் படம் ரோமியோ ஜீலியட்.
இந்தப்படத்துக்கு இசையமைக்கிறார் நம்ம இமான் அண்ணாச்சி.
சரி, விஷயம் என்னய்யான்னா.. நம்ப புள்ள அனிருத், இமான் அண்ணாச்சி இசையில் ஒரு கானா பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல் மிக அமோக வரவேற்பை பெறுமென அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஸோ, ஓகே !
எதோ பண்ணுங்க, ஆனால்.. பாட்டு நல்ல வந்தால் சரிதானுங்கோ !

3,088 Views
உலக நாடுகளில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம் 2015.

2014 ற்கு விடைகொடுத்து 2015 ஐ வரவேற்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில மணிப்பொழுதுகளே 2015 புதுவருடத்தை வரவேற்கவிருக்கும் நிலையில், ஒரு சில நாடுகள் மலரும் புதுவருடக் கொண்டாட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் தற்போது மிகப்பிரம்மாண்டமான முறையில் அழகிய வானவேடிக்கைகளுடன் கூடிய வரவேற்பை வழங்கி 2015-ம் ஆண்டை வரவேற்றிருக்கிறார்கள்.
அந்தக் காட்சிகள் உங்களுக்காக.*தொகுப்பு-கணேஷமூர்த்தி ராகவன்

2,583 Views

சில காலங்களுக்கு முன்னர், முக்கிய நடிகர்களான அஜித், விஜய், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன், விக்ரம், பிரஷாந்த் போன்றோருடன் இணைந்து நடித்து பெயர் பெற்றவர் மல்கோவா மாமி கிரண். 
இவரின் வேகத்தைப் பார்த்தால் தமிழில் ஒரு பெரிய இடத்துக்கு வருவாரென, பலர் கிரணைப்  புகழ்ந்து ஆரூடம் சொல்லி வந்தார்கள். ஆனால், நடந்ததோ வேறுவிதமாய்!

கவர்ச்சியை அள்ளிக் கொட்டினாரே தவிர, நடிக்கக் கூடிய பாத்திரங்களில் உணர்ந்து நடிக்கவில்லை என்று, தமிழ் இரசிகர்கள் கிரணை தாய்வீடான மலையாளப் பக்கமே அனுப்பி வைத்தார்கள். 
எதிர்பார்ப்பு சிதரிவிட்டதே என்று, கவலையில் கண்ணீரிலும் (தண்ணியிலும், ஆமாங்க அதேதான்) மிதந்து தக்கக்கா பித்தக்கா ரேஞ்சில் கொழுத்துப் போனார் அம்மணி. 

மலையாளம் கன்னடத்திலும் வாய்ப்புக்கள் வரவில்லை. 
எடையை கொஞ்சமாக முயன்று குறைத்தவர், தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவேன் என சபதமிட்டபடி கோடம்பாக்கத்துக்கு வந்து பலரிடம் தூது அனுப்பினார். 
யாரும் நாயகியாக கிரணை நோக்கவில்லை. 
அந்த தோற்றத்தில் அம்மணியும் இல்லை என்பதே பொருத்தம். 
என்ன செய்வதென்று, பச்சாத்தாபப்பட்டு சுந்தர்.சி மட்டும் தன்னுடைய ஆம்பள படத்தில் ஒரு சின்ன பாத்திரம் வழங்கினார். 
அதை கப்பென்று பிடித்துக் கொண்டவர், தனக்கு தெரிந்த அத்தனை பேரிடமும் வாய்விட்டு வாய்ப்பு கேட்டு வருகிறார். 
#அம்மணி!!
கிடைக்கும்போது பயன்படுத்தனும்மா..
இல்லைன்னா இப்பிடித்தான் ! 
2,423 Views
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் அமைரா தஸ்தூர் நடிப்பில் உருவாகி வெளியாகவுள்ள திரைப்படம் அனேகன்.
அமோக வரவேற்பை இந்தப் படத்தின் பாடல்கள் பெற்றுள்ளதையடுத்து
படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

இந்நிலை தொடர, படத்தின் ட்ரைலர் எதிர்வரும் தைமாதம் முதல்மாதம் வெளியாகுமென கே.வி.ஆனந்தும் தனுஷும் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிந்துள்ளனர். எனவே ஆர்வமாக இன்னும் அனைவரின் பார்வையும் அனேகன் மீது வீழ்ந்துள்ளது.
       அனேகன் கதை இப்படி இருக்கையில், பால்கி இயக்கத்தில் தனுஷ், அமிதாப்பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வளரும் படம் ஷமிதாப்.
        இந்தப்படத்தின் ட்ரைலரும் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென அப்படக் குழுவும் அறிவித்துள்ளது.
அதேபோல அனேகன் ஜனவரி இறுதியிலும், ஷமிதாப் பெப்ரவரி தொடக்கத்திலும் வெளியாகுமென தெரிகிறது.
ஆக, இந்த புதுவருடத்தில் அடுத்தடுத்து இரண்டு தனுஷின் படங்கள்தான் கல்லாவை கட்டப் போவது உறுதியாக தெரிகின்றதால், ஜாலியாக நாமும் அரங்கை நிறைப்போமே !

2,759 Views

டெஸ்ட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் M.S.டோனி!


இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான ஓர் அணித்தலைவர் என்று போற்றப்பட்ட மகேந்திர சிங் டோனியின் டெஸ்ட் வாழ்க்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டியோடு முடிவுக்கு வந்திருக்கின்றது.

ஒரு சாதாராணமான குடும்பத்தில் பிறந்து சாதனையால் உலகம் அறிந்த ஓர் உன்னத கிரிக்கெட் வீரன் தன் ஓய்வை சாதாரணமாகவே அறிவித்து TEST கிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்திருக்கிறார்.

சாதனைகள் பலது படைத்து கிரிக்கெட் உலகை ஆண்ட பல  விற்பன்னர்கள் தங்கள் இறுதிக் காலகட்டத்தில் தங்கள் ரசிகர்களாலே வெறுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று கோஷமிட்டு வேதனைகள் பலவற்றை சுமந்துகொண்டு விடைபெறும் முடிவை அறிவித்த நிலைமைகளும் கிரிக்கெட்டில் நாம் அறிந்ததே!

டோனிக்கும் இந்த நிலைமை வந்து விடக்கூடாது என்று எண்ணியவர்கள் பலரிருக்கிறார்கள்.வெற்றிகளை பெறுகின்ற போது அந்த அத்தனை பெருமைகளையும் தன் அணிக்கு அற்பணிக்கும் டோனி மாறாக தோல்விகளை தழுவுகின்ற போதிலெல்லாம் அந்த தோல்விகளுக்கான முழுப் பொறுப்பையும் தானே தன் தோளில் சுமந்து கொள்கிறார்.

   

இதுதான் டோனி அதிகம் விமர்சிக்கபடக் காரணமாக அமைந்து விட்டது.

வெளிநாட்டு மண்ணில் அதிகமான,அதுவும் மோசமான தோல்விகளை சந்தித்த அணியாகவும்,அந்த மோசமான அணியை வழிநடத்திய தலைவராகவும்தான் டோனியின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வு நிறைவுக்கு வந்திருக்கின்றது.

சச்சின்,டிராவிட்,லக்ஷ்மன் ,சேவாக்,கம்பீர் என்று பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் அணியில் இருந்த காலத்திலேயே டோனி தலைமையிலான அணி 2011 ம் ஆண்டு பருவகாலத்தில் அதுவும் டெஸ்ட் தரநிலையில் 18 மாதங்களாக முதலிடம் வகித்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 8 டெஸ்ட் போட்டிகளில் மோசமான தோல்விகளை தளுவஆரம்பித்ததிலிருந்து டோனியின் டெஸ்ட் தலைமைத்துவம் கேள்விக்கு ஆளானது.

இதற்கு பின்னர் மோசமான பின்னடைவுகளை சந்தித்த டோனி தலைமையிலான இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 30 test  போட்டிகளில் ஆடியிருக்கிறது. ஆனால் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில்தான் வெற்றியை ருசிக்க முடிந்திருக்கின்றது.

                       

2011 இல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு எதிரான 4-0 என்ற அடிப்படையிலான தோல்விகளுக்கு பின்னர் 2013 இல் தென்னாபிரிக்க அணிக்கெதிரான  2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையிலும், பின்னர் 2014 இல் நியூஸ்லாந்து அணிக்கெதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையிலும் இங்கிலாந்து அணிக்கெதிராக இந்தாண்டில் 3-1 என்ற அடிப்படையிலும் இந்திய அணி வழமையான அதே வெளிநாட்டு தோல்விகளை  தழுவியது.

இப்போது இடம்பெறும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற அடிப்படையில் இந்திய அணி இன்னுமொரு வெளிநாட்டு டெஸ்ட் தொடரை இழந்த நிலையில்தான் ஒரு போட்டி மீதமாகவுள்ள நிலையில் டோனியிடம் இருந்து இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

டோனியின் ரசிகர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட ஒட்டுமொத்தமான கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்த வரையில் இந்த தீர்க்கமான முடிவுக்கு அதிக வரவேற்பே கிடைத்திருக்கின்றது.

   

என்ன காரணம் என்றால்,இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் மோசமான தோல்விகளை தழுவுகின்றது என்கின்ற அடிப்படை வாதக் கருத்துக்கள் சரியாகப் பட்டாலும் ஒரு ஒட்டு மொத்த அணியாக இளையவர்களை கொண்ட இந்த இந்திய அணி போராட்டகுணம் கொண்ட  அணியாக அந்நிய மண்ணிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கின்ற ஒரு காலத்திலேயே இந்த முடிவை டோனி எடுத்திருக்கின்றார்.

2011 பருவ காலத்தில் இந்திய அணி மோசமான தோல்விகளை தழுவிய காலகட்டத்திலோ,அல்லது சிரேஸ்ட வீரர்கள் ஓய்வை அறிவித்த காலத்திலோ இவர் அணியின் தலைமையிலிருந்து ஒதுங்கும் முடிவை எடுத்திருப்பாராயின் அது இன்னுமின்னும் இந்திய கிரிக்கெட்டை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கும்.

ஆனால் இப்போது இருக்கும் இந்திய அணி என்பது தோற்றுப்போனாலும் இறுதிவரைக்கும் போராடியே தோற்றுப் போகின்றது.

அடிலையிட்டில் நடந்த முதலாவது TEST போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்துதான் போட்டியை கோட்டைவிட்டது ,அதேபோன்று பிரிஸ்பேன் டெஸ்டில் மிக குறைந்த வெற்றி இலக்கை நிர்ணயித்திருப்பினும் அவுஸ்ரேலியாவின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்தது.

அதேபோன்று இன்றைய மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியா சமப்படுத்தியிருக்கின்றமை கூட இந்தியா அணியை பொறுத்த  வரையில் ஓர் வெற்றியாகவும் அவுஸ்ரேலிய அணியை பொறுத்தவரையில் அது ஒரு தோல்வியுமாகவே நோக்கபடுகின்றது.இறுதியாக இந்த மைதானத்தில் நடந்திருக்கின்ற 25 டெஸ்ட் போட்டிகளில் 2 மட்டுமே சமன் செய்யப்பட்டிருக்கிறது.அதுவும் 1997 ம் ஆண்டுக்கு பின்னர் இந்த மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இன்றைய போட்டியைத் தவிர எந்தவொரு போட்டியும் சமநிலையில் முடியவில்லை.

அதனைவிடவும் இந்திய அணி இந்த மைதானத்தில் இறுதியாக சந்தித்த 5 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியையே தழுவியிருக்கின்றது. இப்படியான மைதானத்தில் இன்றைய போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்திருக்கின்றமை பலரையும் புருவங்களை கொஞ்சம் உயர்தச் செய்திருக்கின்றது.

இப்படி எழுச்சியான பாதையில்,அணியை பயணிக்கச் செய்த பின்பே டோனியின் இந்த முடிவு வந்திருக்கின்றது.

ஆனால் இனிவரப்போகின்ற நாட்களில் இந்தியா அணி விராட் கொஹ்லி தலைமையில் வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை பெற்றால் அப்போது இந்த கிரிக்கெட் உலகம் கோஹ்ளியை புகழவும் தோனியை இகழவும் மறக்காது எனலாம்.எது எப்பிடியோ இனிவரும் நாட்கள்தான் அதற்கான பதிலை கொடுக்கபோகின்றது.

டோனியின் தலைமையில் இந்தியா அணி தோல்விகளை தழுவுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை!

டோனியின் வியூக அமைப்புக்கள் அதிகம் தற்காப்பு ஆட்டத்து நிகராகவே மேற்கொள்ளபடுகின்றன.இது டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்புடையதல்ல.அதனைவிடவும் மிகச் சிறந்த அணித்தலைவராக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அணியை வழிநடத்தும் டோனியால் டெஸ்ட் போட்டிகளில் அணியை சீராக வெற்றியை  பெறுகின்ற அணியாக மாற்ற முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை.

MSD அணித்தலைவரான பின்னர் தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்கவேயில்லை. அதில் 8 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளிலும் சமநிலையும் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் ஒரு அணி வெற்றியை பெறுவதற்கு எதிரணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தக் கூடிய தரமான பந்து வீச்சாளர்கள் அவசியமானது.

வேகபந்து வீச்சில் துல்லியமாக செயற்படும் நல்ல வேகப் பந்து வீச்சாளர்களை அவர் அணியில் கொண்டிருக்கவில்லை.அதனைவிடவும் வெளிநாட்டு மண்ணில் அணியின் பிரதான சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின் போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்தும் சுழல் வித்தைக்காரனாகவும் செயற்படவில்லை.

இப்படியான பல காரணங்களைஇவர் தோல்விகளுக்கு அடுக்கி கொண்டே போகலாம்.ஆனாலும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளை பொறுத்த வரையில் அணியின் பந்து வீச்சு மோசமாக இருந்தாலும் துடுப்பாட்ட பலத்தை அபரிவிதமாக வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றிகள் பலதை பெற்றிருக்கிறது.

எது எவ்வாறாயினும் இந்த தொடரில் விராட் கொஹ்லி துடுப்பாட்டத்திலும் ,அணியின் தலைமைத்துவத்திலும் நம்பிக்கை தரக் கூடிய வகையில் செயற்பட்டுள்ளமையால் இந்த தொடரின் முடிவுக்கு பின்னர் இந்திய தேர்வாளர்களுக்கு ஒரு நெருக்கடியான நிலைமை வந்திருக்கும்.

                  

அதனை கருத்தில் கொண்டு டோனி கௌரவமாக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.

2005 இல் அறிமுகமான டோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 ஆட்டமிழப்புகளையும்,4876 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.அவுஸ்ரேலிய அணிக்கெதிரான அதிகபட்சமான 224 ஓட்டங்கள் அடங்கலாக 6 சதங்களையும் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை டோனி பங்கெடுத்துள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 534 ஓட்டங்களையே பெற்றிருந்தார்.
    
         

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கிடைத்த நல்ல துடுப்பாட்டம் தெரிந்த விக்கெட் காப்பாளர் என்ற பெருமையும் தோனிக்குத்தான் இருக்கின்றது.

ஆனால் டோனியின் இந்த வரவால் இந்தியா கிரிக்கெட் அணியில் நிரந்தர இடத்தை தக்க வைக்க முடியாமல் அவதியுறும் தினேஷ் கார்த்திக்,ரிடிமான் சஹா,நாமன் ஓஜா ,பார்த்திவ் பட்டேல் ஆகிய வீரர்கள் இனிவரும் நாட்களில் இந்த இடத்தை குறிவைக்கலாம்.ஏன் இந்த மெல்போர்ன் டெஸ்டில் அறிமுகம் கொடுக்கப்பட்ட 22 வயதான லோகேஷ் ராகுலும் ஒரு விக்கெட் காப்பாளரே!

ஆனாலும் இப்போதைய நிலையில் உடனடித் தீர்வாக இந்த இடம் ரிடிமான் சஹாவுக்கே கிடைத்திருக்கிறது.

எது எவ்வாறாயினும் இந்தியா கிரிக்கெட் அணியை எட்ட முடியாத எல்லைகள் எங்கும் பயணிக்கச் செய்து ,மகுடங்கள் பலவற்றை பெற்றுக் கொடுத்து இன்றோடு டெஸ்டுக்கு விடைகொடுத்திருக்கும் டோனியை வாழ்த்தி வழியனுப்புவோம்.

*தில்லையம்பலம் தரணீதரன்.
30.12.2014


    
 

      

                         6,452 Views

ஒவ்வொரு நடிகரும் சரி, நடிகைகளும் சரி அவர்களது வாழ்க்கையில் பல கிசுகிசுக்கள், சிக்கல்கள், பிரச்சனைகளை விரும்பியோ விரும்பாமலோ சந்தித்தே ஆக வேண்டியவர்களாகவே சினிமாவில் திரை வருகிறார்கள்.
இந்நிலையில், பலரது வாழ்க்கைக்குள் பல புரட்டப்படாத இரகசிய பக்கங்கள் இருப்பது தெரிந்ததே!

அவர்களாக சொன்னால்தான் சில விஷயங்கள் நமக்கு வெளிச்சத்துக்கு வரும்.
இப்படித்தான் நம்ம ராய் லக்ஷ்மி மனம் திறக்கிறார்.
'' எனக்கும்  டோனிக்கும் ஒரு காலகட்டத்தில் காதல் இருந்தது.. ஆனால், அந்தக் காதல் இப்போ இல்லைங்க, எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு, நாங்களே பிரிஞ்சுட்டோம். இப்போ நல்ல நட்பும் மரியாதையும் இருக்கு. அவ்வளோதான். எப்போவோ இருந்து இல்லாமல் போனதை இப்போ நினைச்சு நினைச்சு எழுதி, பேசி வதந்திகளை கிளப்புரவங்க யோசிக்கவே மாட்டாங்களா..?''
ராய் லக்ஷ்மி தனக்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் டோனிக்கும் இடையிலான உறவு பற்றி இந்தமுறை வெளிப்படையாக மனந்திறந்து பேசியதைக் கேட்டு பலர் வாயடைத்துப் போனார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக டோனியிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை என்பதே ஹைலைட்.
என்னமோ நடக்குது.. நடக்கட்டுமே !


5,218 Views

இளைய தளபதி விஜய்யும் நடிகர் ஜீவாவும் நண்பன் படத்தில் நண்பர்களாக இணைந்த தருணம் தொடக்கம் இன்று வரை நல்ல நண்பர்கள்.
இந்த நட்புக்கு இலகனமாக ஜீவாவின் தந்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ஜில்லாவில் நட்புக்காக ஹீரோவானார் விஜய்.
இந்த நன்றிக்கடனுக்கு பிரதியுபகாரமாக, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிவரும் ''டூரிங் டாக்கிஸ்'' படத்தில், இசைஞானி இளையராஜாவின் இசையில் இரண்டு பாடல்களை பாடிக் கொடுத்துள்ளார் ஜீவா.

புதுமுகங்கள் நடித்துவரும் இந்தப் படத்திலே, ஜீவா பாடிய இந்தப் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதாகவும், இவை படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாகவும் அமையுமென சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, பல கலைஞர்கள் பயணிக்கும் வரிசையில் நடிகராகவும் பாடகராகவும் தானும் அடியெடுத்து வைத்துள்ள ஜீவா.
இசைஞானியின் இசையில் பாடியது புதுமையான மனது மறக்காத அனுபவம் என்கிறார்.
வாழ்த்துக்கள் இன்னும் பாட ஜீவா ....
1,441 Views
[1]      «      555   |   556   |   557      »      [584]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top