Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

புலி 120 கோடியா?????

பொதுவாக பெரிய நடிகர்களின் படம் வெளிவருகிறது படம் வந்து ஒரு சில நாட்களில் படம் 100 கோடி வசூல் ,200 கோடி வசூல் என  தொடர்ந்து கட்டுக்கதைகள் அவர்களது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரப்பப்படுகின்றது.

இந்த செய்திகள் எந்தளவு உண்மை, பொய் என்பது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது ..
8,785 Views
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிறார் சவ்ரவ் கங்குலி.

இந்திய கிரிக்கெட் கட்டமைப்பை இரண்டாயிரமாம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட்டுடன் சேர்ந்து மிகசிறப்பாக செதுக்கி எடுத்தவர்தான் இந்த சவ்ரவ் கங்குலி.

சர்வதேச அளவில் பல துடிப்பான இளம் வீரர்களை உருவாக்கி உலக அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பான அணியாக உருவாக்கி காட்டியவர்.

இன்றும் இந்தியர்களின் இதயம் வென்ற கதாநாயகனாக வலம் வரும் கங்குலியே இந்திய அணியின் இதுவரைக்குமான சிறந்த அணித்தலைவர் என்று பெருமையோடும் பேசப்படுபவர்.


1,869 Views
உங்கள் கைப்பட எழுதி வாழ்த்துக்கள் அனுப்பும் வசதி-அசத்தல் அறிமுகம் கூகிள் மூலம்.

பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களை நாமெல்லாம் அனுப்புவது வழமையானதுவே,எங்களது சொந்தங்கள் ,உறவுகள்,நட்புக்கள் என்று எல்லோருக்குமான வாழ்த்துக்களையும் நாங்கள் அந்த நாட்களில் கடிதம் மூலமாக அனுப்பி அதன் பதிலுக்காக பல நாட்கள் காத்திருப்பது வழமையானது.

ஆனால் இந்த காலத்தின் இணையப் புரட்சி மூலமாக SMS , E cards, E Mail என்று அத்தனை வாழ்த்துக்களையும் உடனுக்குடன் அனுப்பி மகிழ்கிறோம்.

ஆனால் இதிலே ஒருவித குறைபாடு இருக்கிறது என்பதை கணடறிந்த Google நிறுவனம் பயனர்களின் வசதியை இன்னுமின்னும் விரிவாக்கும் நோக்கில் அவர்களது கைப்பட எழுதிய வாழ்த்துக்கள்,செய்திகளை அனுப்பும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
 

4,764 Views

இந்தியப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்நாட்டு யுவதிகள் இருவர் ரெப் பாடலொன்றை வெளியிட்டுள்ளனர்.

 2,100 Views

உரிக்க உரிக்க உள்ளே எதுவுமே இல்லாததால்தான் சிலரை திட்டும்போது வெங்காயம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்கள். ஆனால் உணவிலும், மருத்துவத்திலும் பெரும் பயனைத் தருவது இந்த வெங்காயம்.

பொதுவாக வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவது சகஜம் தான். இந்தநிலையில்  இவ்வளவு கஷ்டப்பட்டு, கண்ணீர் விட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும்? எதற்கு கஷ்டப்பட வேண்டுமென நினைத்திருக்கிறார்கள் ஜப்பானிய விவசாய அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள்.


1,120 Views
இந்தியாவின் , குஜராத்தில் தந்தையொருவர் தனது குழந்தைகள் மூவரை குணப்படுத்தும் பொருட்டு , அவரது சிறுநீரகமொன்றை விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.
3,831 Views
உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த மூன்று படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து சாதனை புரிந்த இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான், அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக வந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் ரஜினியின் புகழ்பெற்ற வசனமான போடா ஆண்டவனே என் பக்கம் என்ற பெயரில் உருவாகவுள்ள படத்திற்கும் ஜிப்ரான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

2,424 Views
தமிழில் உள்ள முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டவர்கள் தான், நடிகைகளான அனுஷ்கா மற்றும் தமன்னா. அஜித் விஜய் சூர்யா என, அத்தனை ஹீரோக்களோடும் ஒரு வலம் வந்தவர்கள்  இருவரும்!
4,595 Views
சீனாவை சேர்ந்த மின்செங் வங்கியும் ஹூரன் ஆய்வு நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு மூலம் சீனாவில் ரூபா 500 கோடிக்கும் மேல் சொத்துக்களை வைத்துள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 17000 பேரையும் தாண்டியுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

   நாட்டின் பொருளாதாரம் மந்த கதியில் இருந்த போதும், அந்த நாட்டில் இது வரை இல்லாத அளவுக்கு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்த 500 கோடி  சொத்து மதிப்புள்ள இந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பானது 315 லட்சம் கோடி ரூபா பெறுமதியாகும் அதாவது இவர்களின் சொத்து மதிப்பு நோர்வை நாட்டின் உள் நாட்டு உற்பத்தியை விட 10 மடங்கு அதிகமாம். இந்த பணக்காரர்கள் பெரிதும் வீடு விற்பனை துறை,தொழில் முறை முதலீட்டு துறையை சார்ந்தவர்கள் என்று  அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Rimzath
1,615 Views
நடிப்புக்காக படிப்பை விட்ட நடிகைகள்தான் அதிகம். லட்சுமிமேனனோ படிப்புக்காக நடிப்பையே துறக்க முடிவு செய்தவர். பிறகு அவரது நலம்விரும்பிகள் பலரும் கேட்டுக் கொண்டதால் பரீட்சையை முடித்துவிட்டு மீண்டும் நடிக்க வர சம்மதித்தார்.
 

பரீட்சைக்காக புதுப்பட வாய்ப்புகளை மறுத்து வந்த லட்சுமிமேனன், தற்போது பரீட்சையை எழுதி முடித்துவிட்டதால் இனி புதுப்படங்களை ஒப்புக்கொள்ள இருக்கிறாராம். ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளத்திலிருந்து சென்னைக் வந்திருந்தார் லட்சுமிமேனன்.
 

அப்போதுதான் இந்தத் தகவலை தெரிவித்தார்.
 

பிறகு ‘கொம்பன்’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்…
 

”கொம்பன்’ படத்தில் நடித்தது பற்றி சொல்ல வேண்டும் என்றால்… அந்தப் படத்தோட ஷூட்டிங் நடக்கும்போது ஒவ்வொரு காட்சியை எடுக்கும்போதும் இயக்குனர் முத்தையா கஷ்டப்பட்டு, விரிவாக சொல்லிகிட்டே இருப்பார்!  நான்தான் நல்லா நடிக்கிறேனே, எதற்கு இவர் இப்படியெல்லாம் ஸ்ட்ரெயின் பண்ணி சொல்லி தருகிறார் என்று அப்போதெல்லாம் நான் நினைத்ததுண்டு!


சொல்லப் போனால் அவர் அப்படி சொல்லி தரும்போது விருப்பம் இல்லாமல்தான் நடித்தேன்! ஆனால் இப்போது தெரிந்தது எதற்கு அவர் அப்போது அப்படியெல்லாம் சொல்லி தந்தார் என்று! படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. இதுவரை நான் நடித்த படங்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு வரவேற்பு கொம்பன் படத்திற்கு கிடைத்துள்ளது. தினம் தினம் எனக்கு நிறைய Phone Calls  வருகிறது.”
 

என்று முத்தையா மற்றும் கொம்பன் பற்றி சிலாகித்துப்பேசிய லட்சுமி மேனன் அடுத்து சொன்னதுதான் ஹைலைட்ஸ்
 

”நான் இதுவரைக்கும் ‘கொம்பன்’ படத்தை பார்க்கவில்லை. அதற்கு காரணம் இதுவரை நடந்து வந்த பரீட்சைதான். ஆனால் கண்டிப்பாக விரைவில் பார்த்து விடுவேன்!”
 
செம படிப்பா இருப்பார் போலருக்கே!


=== CASTRO RAHUL ===
20,611 Views

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் ‘இக்னைட் பிக்சர்ஸ்’ நிறுவனத்தாரின் முதல் படைப்பு ‘டொலர் தேசம்.’


அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்தின் பல தரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது ‘டொலர் தேசம்’.


பொருளாதார படிநிலைகளால் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ள மனிதர்களும், அவர்களின் பல்வேறு முகங்களும், வெகுஜன மக்கள் அறிந்திராத அவர்களின் அன்பும், வன்மமும், காதலும், வாழ்க்கையும் இந்தக் கதையின் முதுகெலும்பாக இருக்கும்.


சமூகத்தோடு இணைந்து பின்னப்பட்டுள்ள இக்கதையை, தொய்வின்றி நகர்த்திச் செல்லும் நூற்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை யதார்த்தமாக நடிக்க வைத்திருப்பது இந்த திரைப்படத்தின் தனிச்சிறப்பு.


நவீன திரைக்கதை உத்தியோடு சொல்லபட்டிருக்கும் இக்கதை அனைத்து ரசிகர்களையும் கவரும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது.


‘பருத்தி வீரன்’, ‘யோகி’ படங்களில் இயக்குனர் அமீரிடம் பணியாற்றிய முத்து கோபால், இப்படத்தின் இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பன்முக அவதாரம் எடுத்து அறிமுகமாகிறார்.


பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் ‘பருத்தி வீரன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ போன்ற படங்களில் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அருண் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.


ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவிடம் பணியாற்றிய பிரசாத் வி.குமார் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 


‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ மற்றும் ‘மூடர்கூடம்’ படங்களில் பணியாற்றிய அத்தியப்பன் சிவா, படத்தொகுப்பை கையாள்கிறார். பாடல்கள் சினேகன். படத்திற்கு வசனம் – சுந்தர் மற்றும் இந்திரஜித்.


மேலும் பல தொழில் நுட்பக் கலைஞர்கள் பணிபுரியும் இத்திரைப்படம் வெகுவிரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

=== CASTRO RAHUL ===
1,405 Views
என்னது? நம்ம இளைய தளபதி விஜய் திருநங்கையா? அடடா... அப்பிடி எல்லாம் அவரு நடிக்க மாட்டாரே? நம்பலாமா? விடலாமா? இப்படி ஆயிரம் கேள்விக்குறிகள் வந்து உங்கள் மனதையும் பிராண்ட ஆரம்பித்திருக்கும். இதனால் தான், பதறாமல் கீழே உள்ள செய்திகளையும் வாசிங்கன்னு சொல்றோம். 

என்னமோ நடக்குது படத்தை அடுத்து இயக்குனர் ராஜபாண்டி மற்றும் நடிகர் விஜய் வசந்த் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் அச்சமின்றி. இந்த படத்தில் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக வெளிவந்த செய்தி இப்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதற்க்கு பதில் வழங்கியுள்ள இயக்குனர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்கு முதலில் சிகண்டி என்ற மகாபாரதத்தில் வரும் கேரக்டரின் பெயரை டைட்டிலாக வைத்திருந்ததாகவும், சிகண்டி என்ற கதாபாத்திரம் மகாபாரத போரில் பீஷ்மரை பழிவாங்க சரியான நேரத்திற்காக காத்திருந்ததை போல, இந்த படத்தின் ஹீரோ தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற சரியான நேரத்திற்காக காத்திருப்பதால் இந்த தலைப்பை முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் விசமிகள் சிகண்டி பாத்திரம், மகாபாரதத்தில் திருநங்கையாக இருப்பதால் விஜய் வசந்த் திருநங்கையாக நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையில் விஜய் வசந்த் திருநங்கை பாத்திரத்தில் நடிக்கவில்லை என்றும், அவர் நாயகனாகவும் நல்ல பாத்திரத்திலே தான் நடிக்கிறார் என்றும் இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
4,742 Views

காதல் கணவர் விஜயின் இயக்கத்தில் , இது என்ன மாயம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை மைனா அமலாபால் தனது கணவரை கலாய்த்தது அந்த நிகழ்வில் ஒரு ஹைலைட்.

அதாவது, வெளிநாடுகளுக்கு சென்றோம் என்றால், அங்கும் எனது ஆசைக்கணவர் கதை சொல்லி சொல்லியே என்னை சாகடிப்பார். நானும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பேன். என்ன செய்ய? நம்ம கணவர் ஆயிற்றே?

இப்படியாக, எனக்கும் சொல்லி நானும் கதையை மிகவும் இரசித்து அவரிடம் படமாக்கச் சொல்லி சொன்ன படம் தான், இப்பொழுது விக்ரம் பிரபு நடிப்பில் வந்துள்ள இது என்ன மாயம் படம். அவ்வளவு அற்புதமான கதை இந்தப் படமாக உருவாகியுள்ளது என்று சிரித்துள்ளார் அம்மணி.

வீட்டில சண்டை போடாமல் இருந்தால் சரிதான் அம்மணி...!!

-கோடம்பாக்கக் குருவி-
12,005 Views
படிக்கும் காலத்தில் எனக்கும் ஒரு பெண்ணுக்கும், அழகான காதல் மலர்ந்திருந்தது. காதல்ன்னா அப்பிடி ஒரு காதல். அல்லு அர்ஜுன் மூலமாக தான் எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் உறவு ஆரம்பித்தது. நல்ல முறையாக நடந்த எமது காதலில், சில பிரச்சினைகள் வந்து அந்த காதலை முடித்துக் கொள்ளவேண்டி வந்தது. இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பிறகு, உங்களுக்கும் தெரியுமே !

எனக்கு வரும் காதல் நிலையில்லாதது அத்தோடு நிரந்தரமற்றது. இப்பொழுது தனிமை மட்டுமே எனக்கு துணையாக உள்ளது. கவலைப் படவில்லை. வாழ்க்கை போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன். இவ்வாறு சோகம் மல்க பெசியுல்லவர் யார் தெரியுமா?

நம்ம நடிகை த்ரிஷாவின் முன்னாள் (நல்ல) நண்பர் திரு ராணா அவர்கள் தான். என்ன பண்ண பாஸ்? காலம் இப்பிடித்தான். ஏதாவது கிறுக்குத்தனம் பண்ணிக் கொண்டே இருக்கும்.

-கோடம்பாக்கக் குருவி-
2,880 Views
இந்திய கிரிக்கெட் அணித்தலைவருக்கு போலிஸ் அபராதம்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் MS தோனிக்கு போலிஸ் அபராதம் விதிக்கபட்டிருக்கிறது.கிரிக்கெட் போட்டிகளில் குறித்த நேரத்திற்குள் பந்து வீச தவறும் பட்சத்தில் அணியின் தலைவராக இருந்த தோனிக்கு அபராதம் விதிக்கபட்ட வரலாறு அதிகம் இருக்கிறது.

ஆனால் இப்போது இவருக்கு சட்ட ஒழுங்கை மீறினார் எனும் அடிப்படையில் போலிஸ் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறமை எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.

IPL போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் கிரிக்கெட் போட்டிகளில் தீவிர ஆற்றலைக் காட்டி வரும் மஸ்த், ஒரு மோட்டார் வாகனப் பிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.விதவிதமாக மோட்டார் வாகனம் வாங்குவதும் அதனை செலுத்துவதும் இவரது பொழுது போக்குகளாகும்

தனது இருசக்கர வாகனத்தின் இலக்க தகட்டை தவறாக வைத்திருந்ததன் காரணமாக அவருக்கு அபராதம் விதித்தது அவரது சொந்த ஊரான ராஞ்சி போலீஸ்.

இலக்க தகடு சரியாக இல்லாத காரணத்தினால் தோனிக்கு 450/= அபராதம் விதித்ததாக ராஞ்சி போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

வாகனத்தின் ஒளி விழக்குக்கு கீழ் பகுதியில் அதாவது சாரதிக்கு குறுக்கான திசையில் இருக்க வேண்டிய இலக்க தகடு வாகனத்தின் திசையிலேயே பக்கவாட்டில் இருந்த காரணத்தாலேயே இந்த அபராதம் விதிக்கபட்டது.

நேற்று ஜுவ்ராஜின் தந்தையாரால அதிகம் விமர்சிக்கப்பட்ட நிலையில் தோனியின் இந்த அபராத விடயமும் அவர் ரசிகர்களை இன்னும் கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

*T.T


5,333 Views
[1]      «      567   |   568   |   569      »      [618]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top