Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

10 கோடி குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் -ஷாருக் கான்

ஷாரூக் கானின் உதவியாளரான ஆலி மொரானியின் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் BMW கார் லேசாக சேதம் அடைந்தது. ஷாரூக் கானை  குறி வைத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்று காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார் அவர் உதவியாளர்.

இதனடிப்படையில் தனக்கு ஆபத்து ஒன்று இருப்பதை கணித்த நடிகர் ஷாருக் கான் 10 கோடி (Bomb proof ) குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஷாருக்.

இவரது  சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் நேர்த்தியாக வரி கட்டும் நடிகர்களில் ஷாருக் கானும் ஒருவர்.

நடிகர்+ தயாரிப்பாளர்+ விளம்பர நடிகர், IPL கொல்கொத்தா அணியின் உரிமையாளராகவும் இருக்கும் ஷாருக் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் வரிசையிலும் முன்னணியில் இருப்பவர்.

ஏற்கனவே அமீர் காணும் இதே வகை காரை அண்மையில் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

2 முறை IPL  கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ள காம்பிர் தலைமையிலான KKR அணிக்கு பரிசுத்தொகையாக இந்த ஆண்டு மட்டும் 15 கோடி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படி கோடான கொடிகள் கொட்டி புரளும் IPL அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்குக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.   
10,840 Views
இந்திய உலக கிண்ண அணியில் ஆஷிஸ் நேஹ்ரா.......????

அடுத்தாண்டு பெப்ரவரியில் அவுஸ்ரேலிய மற்றும் நியூஸ்லாந்தில் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண போட்டிகளை எதிர்பார்த்து ஒவ்வோர் அணிகளும் தங்களது முயற்சிகளை மேற்கொள்கின்றன.

உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரினதும் கனவாக காணப்படுகின்றது.இந்த நிலையில் உலக கிண்ணத்தை வெற்றி கொள்கின்ற அணிகளில் இடம்பிடிப்பதும் ஒவ்வொரு வீரரதும் கனவு எனலாம்.

இப்படியிருக்கின்ற போது நடப்பு உலக சாம்பியன்களான இந்தியாவுக்கு உலக கிண்ணத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியை தேர்வு செய்வதில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.எப்போதும் போல் துடுப்பாட்டத்தில் கலக்கும் இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சில் தடுமாறுவது வழமையானது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு அனுபவ வேகப்பந்து வீச்சாளராவது உலக கிண்ண அணியில் இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்த அனுபவசாலி சகீர் கான் அண்மைய நாட்களில் உபாதையால் அவதிப்படுகின்றார்.

ஆயினும் 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் அணியில் வாய்பின்றித் தவித்த 35 வயதான ஆஷிஸ் நேஹ்ரா அண்மைய நாட்களில் சென்னை அணிக்காக IPL போட்டிகளில் கலக்கி வருகின்றார்.

140 KM /H வேகத்திலும் பந்து வீசக்கூடிய நேஹ்ரா வேகப்பந்துக்கு சாதகத்தை கொடுக்கவல்ல ஆடுகளங்களில் சிறப்பாக செயற்படுவார் என்றும் நெருக்கடியான தருணங்களில் ஒரு அனுபவ பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கும் பலம் சேர்க்கும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகின்றது.

இதற்கான முன்னாயத்தமாக எதிர்வரும் அவுஸ்ரேலிய  அணிக்கெதிரான தொடரில் நேஹ்ரா அணியில் இணைக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.    

நேஹ்ரா,சகீர்கான் ,ஹர்பஜன்,ஜுவ்ராஜ் ஆகிய பந்து வீச்சாளர்கள் கடந்த 2011 இல் இந்தியா உலக கிண்ணத்தை 28 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி கொள்வதற்கு வலுச்சேர்த்தவர்கள்.

இம்முறை இவர்கள் இல்லாத நிலையில் புவனேஸ்வர் குமார் ,மொஹமெட் சாமி,மோகித் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ அல்லது அஸ்வின், ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உலக கிண்ண அனுபவம் இல்லை என்பதை வைத்து கொண்டு நேஹ்ராவை மீண்டும் தேசிய அணியில் உள்வாங்க ஏற்பாடு நடக்கிறது.

எது எவ்வாறாயினும் சென்னை அணி நிர்வாகம் ஆஷிஸ் நேஹ்ராவை தேடி எடுத்து IPLஅணியில் இணைத்த போது,வெகுவிரைவில் நேஹ்ரா இந்திய தேசிய அணியில் இணைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று நாம் sooriyan-sports பக்கத்தில் கருத்து வெளியிட்டமையும் நினைவுக்கு வருகின்றது.

நெஹ்ராவின் வரவு இந்தியாவுக்கு சாதகமானது என்ற நிலைப்பாட்டில் இந்திய தேர்வாளர்கள் ஆர்வம் காட்டுகின்றமையை நோக்குகின்ற போது இதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரிகின்றது.
4,678 Views
அரசியல் காரணங்களால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை ஏற்படுவது சாதாரணமானது. ஆனால் அணைக்கட்டுகளால் சிலநாடுகள் பொருளாதார நெருக்கடியையும் சிக்கலையும் எதிர்கொண்டிருக்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா..?  

                                1934-ம் ஆண்டுக்குப்பின் கட்டப்பட்ட 245அணைகள், அவை உள்ள நாடுகளுக்கு பெரும் பொருளாதாரச்சிக்கலை உண்டாக்கியிருப்பதாக லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரேசிலின் "பெல்மொண்ட்" அணைக்கட்டு, சீனாவின் "ஜின் ஷா" அணை, எதியோப்பியாவின்"ஜிப்"ஆகியன இந்த நெருக்கடி நிலைக்கு காரணமான அணைக்கட்டுகளில் பிரதானமானவையாக  கருதப்படுகின்றனவாம்.        

                         உலகிலேயே அதிக அணைக்கட்டுக்கள் சீனாவில் தான் காணப்படுகின்றன.அதேபோல அனைக்கட்டுக்களை கட்டும் முன்னணி நிறுவங்களும் கூட சீனாவில் தான் உள்ளனவாம்.தற்போது 70நாடுகளில் மேற்கொள்ளப்படும் 300 அணைக்கட்டுகள் கட்டும் வேலைகளை இந்த சீன நிறுவனங்களே மேற்கொள்கின்றனவாம்.

எங்கள் நாட்டிலும் சீனர்கள் அதிகமாக இப்போதெல்லாம் காணப்படுவதால் எங்கேயாவது அணை கட்டப்படுகிறதோ என்று கவனிப்போம்.
5,955 Views

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பேஸ்புக்கில் 100 மில்லியன் likes .

பிரபல கால்பந்தாட்ட நடசத்திரம் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து களத்தில் கல்ல்குவதொடு மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் கலக்குகிறார்.

இவர் பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகளை பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இவ்வாறு 100 மில்லியன் லைக் பெறும் முதல் விளையாட்டு வீரர் எனும் சிறப்பையும் ரொனால்டோ  பெற்றுள்ளார்.

பேஸ்புக் வரலாற்றிலேயே 100 மில்லியன் லைக் பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையும், முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் ரொனால்டோவுக்கு கிடைத்திருக்கிறது.

100 மில்லியன் லைக்குகளை முதலில் பெற்ற பெருமை கொலம்பிய பாப் பாடகி ஷகிராவுக்கு உரியது.

இப்படியிருக்க அர்ஜென்டினா வீரர் லீயோனெல் மெஸ்ஸி 74 மில்லியன் லைக்குகளுடன் 9 வது இடத்தில் உள்ளார்.

ரொனோல்டோவுக்கு Twitter தளத்தில் 305 மில்லியன் Followers  இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கலக்கல் நாயகன் ரொனால்டோவுக்கு வாழ்த்துக்கள்.
1,627 Views
இன்றைய பிறந்த நாள் கதாநாயகன் அனிருத் உள்ளம் திறக்கிறார்?
உறங்கி கிடந்த அனுபவ பகிர்வுகள் உங்களுக்காக.

1. 'ஐ’ திரைப்படத்துக்கான மெர்சலான அனுபவம் பற்றி...?''

''நான் பாடகனே கிடையாது. பாடுறதுன்னா எனக்கு உள்ளுக்குள்ள உதறும். 'எதிர்நீச்சல்’ மியூசிக் பண்ணப்ப, 'பூமி என்ன சுத்துதே...’ பாட்டு வரிகளைக் கேட்டதும் சொந்த வாழ்க்கையோட ரிலேட் பண்ணிக்கிட்ட மாதிரி இருந்தது. சும்மா பாடினேன். ஹிட் ரெவ்யூஸ் வந்ததும் அடுத்தடுத்து பாட நம்பிக்கை வந்துச்சு. ரஹ்மான் சார் என் பாடல்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் கேட்டு, நல்லா இருந்துச்சுன்னா வாழ்த்துவார். திடீர்னு ஒருநாள், 'ஒரு பாட்டு பாடுறியா?’னு வரச் சொன்னார். பார்த்தா 'ஐ’ ஒலிப்பதிவு .

ஷங்கர் சார்  உக்கார்ந்திருக்கார். நிஜமாவே மெர்சலாகிட்டேன். ரஹ்மான் சார்தான் ரிலாக்ஸ் பண்ணி 'எப்படிப் பாடணும்’னு சொல்லிக்கொடுத்துப் பாடவெச்சார். அவரைப் பார்த்து மியூசிக் பண்ணக் கத்துக்கிட்டவன், அவர் மியூசிக்லயே பாடினது... சர்ப்ரைஸ் சந்தோஷம். சும்மா ஜிவ்வுனு இருக்கு!''

2.'விஜய்  + முருகதாஸ்னு 'கத்தி’ படத்துக்கு மாஸ் எதிர்பார்ப்பு. அந்தப் பட இசைக்கு முருகதாஸ் உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்?''

'' 'எதிர்நீச்சல்’ வெளியாகி மூன்றாவது நாள் முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பாடல்கள் ஹிட் ஆனதுக்கு வாழ்த்து சொல்லக் கூப்பிடுறார்னு நினைச்சுப் போனேன். 'இப்பத்தான் 'எதிர்நீச்சல்’ பார்த்தேன். மியூசிக் பிரமாதம். அடுத்து விஜய் சார்கூட 'கத்தி’ பண்றேன். நீங்கதான் மியூசிக்’னு எனக்கு ஷாக் கொடுத்தார் முருகதாஸ் சார். நம்பவே முடியலை.

ஒருநாள் கம்போஸிங்ல, 'என்னை ஏன் சார் இந்தப் படத்துக்கு செலெக்ட் பண்ணீங்க?’னு வாய்விட்டே கேட்டுட்டேன். 'என் ஃப்ளாட்ல சின்ன பசங்கள்லாம் 'எதிர்நீச்சலடி...’ பாட்டை கோரஸா பாடிட்டு இருந்தாங்க. அது ஏதோ ராப் மாதிரி இருந்துச்சு. எனக்குப் புரியலை. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிக்குதுனா, அதுல ஏதோ இருக்குனு தோணிச்சு. அப்புறம் 'எதிர்நீச்சல்’ பட டைட்டில்ல உங்க பேர் வந்தததும் தியேட்டர்ல பயங்கரமா கை தட்டினாங்க. ஃபுல்பார்ம்ல இருக்கீங்கனு புரிஞ்சுபோச்சு. அதான் உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சிரிச்சார்.''3. 'கத்தி’ படத்துல விஜய்யை 'lets take A selfie pulla..’ பாடல் பாடவெச்ச அனுபவம்...''

''விஜய் சார் செம சின்சியர். செல்ஃபி பாடலோட டியூனையும் வரிகளையும் அவருக்கு முன்னாடியே அனுப்பிட்டேன். அவர் நாலைஞ்சு வெரைட்டியில பாட்டு பாடி ரிக்கார்ட் பண்ணி எடுத்துட்டு வந்தார். 'அனிருத் இதுல எது ஓ.கே-னு சொன்னீங்கன்னா, நான் அதை ஃபாலோ பண்றேன்’னு சொல்லிட்டு என் ரியாக்ஷன் பார்த்தார். ஒரு மாஸ் ஹீரோ ஒரு பாடல் பாடுறதுக்கு இவ்வளவு சின்சியரா இருக்காரேனு எனக்கு ஆச்சர்யம்.  பாட்டு கம்போஸிங்ல, 'நாம ஒரு செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போடுவோம். வைரல் ஆகும்’னு ஐடியா கொடுத்ததும் அவர்தான்!''  

'4. 'தனுஷ்-சிம்பு சண்டை’, 'சிம்பு-நயன் பேசிக்கிறதில்லை’னு நியூஸ் படிச்சுட்டு ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணா, நீங்க, தனுஷ், சிம்பு, நயன்தாரானு எல்லாரும் செம பார்ட்டி பண்ணிட்டு இருக்கீங்க... என்னதாங்க நடக்குது?''

(சத்தமாகச் சிரிக்கிறார்) ''நாங்க எல்லாரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவங்க எல்லாரையும் நான்தான் சேர்த்துவெச்சேன்னு எழுதுறாங்க. ஆனா, உண்மை என்னன்னா நான்தான் அவங்ககூட போய் சேர்ந்துக்கிட்டேன். சிம்பு-தனுஷ் ரெண்டு பேருமே இப்போ குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஃபாரின் டூர் எல்லாம் சேர்ந்து போயிருக்கோம். அப்படி அப்படியே அந்த கேங்ல எல்லாரும் சேர்ந்துட்டாங்க. யார் மனசுலையும் பழைய விஷயங்கள் எதுவும் இல்லைனு நினைக்கிறேன். ரொம்ப கேஷ§வலா, ஜாலியாப் பேசிப்போம். குரூப்ல ஒரே பிரச்னை... நானும் சிம்புவும்தான் அங்கே பேச்சுலர்ஸ். அதனால எதுனாலும் எங்களைத்தான் ஓட்டி எடுப்பாங்க!''

5.''சமீபத்துல சினிமாவில் திக் ஃப்ரெண்ட்ஸ்னா தனுஷ்-சிவகார்த்திகேயனைச் சொல்றாங்க. ஆனா, திடீர்னு அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லைன்னு தகவல்... உண்மையா?''

''சிவா எப்பவுமே எங்க கேங்லதான் இருக்காருங்க. நான், தனுஷ் சார், சிவா மூணு பேரும் வாட்ஸ்அப்ல ஒரு குரூப்பே நடத்திட்டு இருக்கோம். நடுவுல அவங்கவங்க வேலையில் பிஸி ஆகிட்டதால, முன்ன மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை; அவ்வளவுதான். தனுஷ் சார் தயாரிப்புல சிவா நடிக்கிற 'டாணா’ படத்துக்கும், விஜய் சேதுபதி நடிக்கிற படத்துக்கும் நான்தான் மியூசிக்!''

6.''ஆண்ட்ரியா... காதல்... பிரேக்-அப்... போட்டோ நெட்ல ரிலீஸ்... காயம்லாம் ஆறிடுச்சா?''

'' 'கொலவெறி வைரல்’னு இன்டர்நெட்  மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விளையாட்டுத்தனமா செஞ்சது பெரிய பாடம் கத்துக்கொடுத்துச்சு. இப்போ நிறைய மெச்சூரிட்டி வந்திருக்கு. அதனால தெளிவா இருக்கேன்!''

நன்றி-விகடன்2,359 Views
தமிழ்சினிமாவின் திரை இசையில் இன்றுவரை இசையின் ராஜாவாக, "இசைஞானி"யாக தனித்தடம் பதித்து இசைத்துறையில் நாற்பது ஆண்டுகளாக சாதித்துக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா என்றால் மிகையில்லை. ரசிகர்களுக்கு "இசை" தந்த ராஜா தற்போது "பரிசு" தரப்போவதாக ஒரு தகவல்...... 

                                         மொழி கடந்த அவரது இசைப்பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் என  பல மொழிகளில் வெளியான 1000ற்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இசைஞானி. இந்தநிலையில் தன் இசையை நேசிக்கும் ரசிகர்களுக்காக ஒரு போட்டியை தானே நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இதுவரை தன் இசைப்பயணத்தில் இடம்பெற்ற படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் தான் இந்தப்போட்டி நடைபெறவுள்ளது.

                           இந்தப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்ற ரசிகர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள்,அந்தப் படங்கள் வெளியான திகதி என அனைத்து தரவுகளையும் தெரிந்து வைத்திருத்தல் இங்கு முக்கியமான விஷயம்.

                                போட்டியில் கலந்துகொள்ளும்  ரசிகர்கள் செய்யவேண்டியது இதுதான். தாம் சேகரித்த இந்த தகவல்களை ஒழுங்கு படுத்தி சமர்ப்பிக்க வேண்டுமாம், அந்தத் தரவுகள்  இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு பரிசு வழங்கப்படவுள்ளதாம். 

                              வழங்கப்படவுள்ள பரிசு என்ன..? போட்டி எப்போது ஆரம்பிக்கப்படவுள்ளது..? போன்ற விபரங்களை இசைஞானி விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.அதிலும், சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகருக்கான முதல் பரிசை இசைஞானி இளையராஜாவே அந்த ரசிகரை நேரில் அழைத்து  வழங்கப் போவதாகவும் ஒரு செய்தி.    .

பாடத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா போட்டியில ஜெயிக்க முழுமூச்சா முயற்சி பண்ணுங்க...பரிசு, படத்தில பாடுற வாய்ப்பாகக் கூட இருக்கலாம்.....
2,178 Views
மிக பிரபலமாக, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவுனரான மார்க்ஸ் சுக்கர்பேர்க் ஹவாய் தீவிலுள்ள அழகான ஒரு கடற்கரை நிலப்பரப்பினை விலைக்கு வாங்கியுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

100 மில்லியன் டொலர் கொடுத்து 'கவுவாய்' எனும் ஹவாய் தீவின் 700 ஏக்கர் நிலப்பரப்போடு சேர்ந்த தீவையே இவர் வாங்கியுள்ளார். வெள்ளை மணல் கொண்ட ஒரு பகுதியும், விளைச்சல் செய்யக்கூடிய ஒரு வகையான வளம் மிக்க மண்ணும் இந்த தீவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விடுமுறையை களிக்க தன் மனைவியுடன் ஏற்கனவே இந்த தீவிற்கு வந்துள்ள மார்க், இந்த தீவை மிகவும் ரசித்ததாகவும், தன்னுடைய மனைவிக்கு இந்த தீவும், இந்த ரம்மியமான பிரதேசமும் மிகவும் பிடித்திருந்ததாலும், தன்னுடைய குடும்ப தனிப்பட்ட தேவைகளுக்காக இதை வாங்கியதாகவும் கூறுகிறார் மார்க்.

 

6,763 Views
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் தனது திறமையை காட்டிக்கொண்டிருக்கும் ஆந்திரத்து அழகியான தமன்னா, படப்பிடிப்புக்கு முழுக்குப்போட முடிவு செய்துள்ளாராம்.

                                    கடந்த சில மாதங்களாக தமிழ்,தெலுங்கு,இந்தி என மாறி மாறி தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நடிப்பில் அக்கறை காட்டிய காரணத்தினால் தனது குடும்பத்தில் அக்கறைகாட்ட முடியவில்லை தமன்னாவுக்கு. இதனால் குடும்பத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதைவிட உறவினர்களின் திருமணங்கள், தோழிகள் வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாம்.

                 இதனால் வீட்டாரின் கோபத்துக்கு ஆளானது மட்டுமல்லாமல்,உறவினர்கள் மத்தியிலும் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டதோடு,    வேண்டப்பட்ட பலர் தமன்னாவுடன் பேசுவதையும் நிறுத்தி மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளார்கள்.

                    எனவே குடும்பத்தினருக்காகவும், உறவினர்களுக்காகவும் நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் ஓய்வில்லாமல் நடித்து வந்த அவர்,தற்போது படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைக்கும்படியும்  அந்தப்படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளாராம். ஒரு மாத ஓய்வை முடித்து விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ள தமன்னா, அடுத்த வருடம் கோடை விடுமுறை வரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல்.

                        ஒரு மாத ஓய்வில் இருக்கும் நாட்களில் உறவினர்கள், தோழிகள் வீட்டுக்கு செல்வது மற்றும் அவர்களுடன் விருந்து, கொண்டாட்டம், நிகழ்ச்சிகள் நடத்துவது என  தினமும் வீட்டை அமர்க்களப்படுத்தப் போகிறாராம் இந்த தெலுங்கு தேசச் சிங்காரி.

ரசிகர்களுக்கு மட்டும் தான் தீபாவளியா......?
உங்களுக்கு வேண்டாமா...?"
சொந்தங்களோடு கொளுத்துங்க  பட்டாசு...

தமன்னாவின் அழகிய கலக்கல் படங்கள் இங்கே 

Thamanna

Thamanna Stills

2,873 Views
ஆசிய நாட்டவர்கள் பந்தை எறிகின்றனர் - நடுவர் டரெல் ஹெயர்.
டரெல் ஹெயர்க்கு பைத்தியம் என்கிறார் ஹர்பஜன்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அண்மைய நடவடிக்கைகள் காரணமாக பல சுழல் பந்து வீச்சாளர்கள் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டமையும் நோக்கத்தக்கது.

அண்மைய நாட்களில் இலங்கையின் சச்சித்திர சேனநாயக்க,பாகிஸ்தானின் அஜ்மல்,வங்களாதேசின் சோகக் காஸி   நியூஸ்லாந்தின் கன் வில்லியம்சன், ஜிம்பாபெயின் ப்ரோப்பேர் உட்சயா ஆகியோருக்கு ICC  தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.    

இப்படியிருக்கின்ற போது 1995 ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் வைத்து Boxing Day டெஸ்ட் போட்டியில் இலங்கையின் முரளிதரனுக்கு "No ball"  பிடித்து சர்ச்சையை தோற்றுவித்த அவுஸ்ரேலியாவின் நடுவர் டரெல் ஹெயர் தெரிவித்துள்ள கருத்துக்கள் கொஞ்சம் ஆசிய நாட்டவர்களை சீண்டி இழுத்திருக்கிறது.

அவுஸ்ரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட்(Sydney Morning Herald) நேர்காணலின்  போதே டரல் ஹெயார் சர்சையான கருத்துக்களை வீசி எறிந்திருக்கிறார்.இந்தியாவின் ஹர்பஜன், இலங்கையின் முரளி, பாகிஸ்தானின் சக்லைன் முஸ்டாக் ஆகிய பந்து வீச்சாளர்களை சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதித்திருக்கக் கூடாது என்று அவுஸ்ரேலியாவின் முன்னாள் நடுவர் டரெல் ஹெயார்  கூறியுள்ளார்.

பந்துவீசாமல் எறிபவர்களை 20 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற்றிருக்க வேண்டும் .பந்தை எறிபவர்களை அனுமதித்தால் ஒரு காலத்தில் பந்தை யாரும் ஒழுங்காக வீசாமல் எல்லோரும்  பந்தை எறிவார்கள்.சக்லைன் முஷ்டாக், ஹர்பஜன், முரளிதரன் ஆகியோரை பின்பற்றுவார்கள் என்று எச்சரித்தேன்.

இப்போது செய்வது போல் அப்போதே ICC இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.1990 ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே நான் கூறிய கருத்துக்களை யாரும் கணக்கில் எடுக்கவில்லை.அப்போதே கணக்கில் எடுத்திருந்தால் இப்போது இது பிரச்சனை ஆகியிருக்காது என்று அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஹர்பஜன், “இவரது பேச்சு கொஞ்சம் அதிகம்தான். நாங்கள் பந்து வீச்சில் வரம்பு மீறவில்லை, ஆனால் டரல் ஹெயர் வாயால் வரம்பு மீறிவிட்டார் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல் தெரிகிறது" என்றும்  ஹர்பஜன் இதற்க்கு பதில் கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் கண்டு பிடித்த தூஸ்ராவை இப்போது இளம் தலைமுறையினர் பயன்படுத்துகின்றனர், அதற்காக வரம்புக்கு மீறி முழங்கையை மடக்கி வீசினால் தான் தூஸ்ரா விழும் என்று அர்த்தமில்லை, முறையாக வீசியே தூஸ்ராவைச் சாதிக்க முடியும்.
டரல் ஹெயார்  தனது வாயை மூடிக் கொண்டு போகட்டும் என்றும் ஹர்பஜன்  சீறியுள்ளார்.

டரல் ஹெயாருடைய கருத்துகள் எப்போதும் ஆசிய நாட்டு பந்து வீச்சாளர்களை சீண்டி இழுக்கின்ற விதத்திலும்,கோபமூட்டும் விதத்திலும் இருந்தமை வரலாறே !!!!
2,252 Views
யார்தான் ஆரம்பித்து வைத்தது இந்த பேய் பட சீசனை தமிழ் சினிமாவில்?
இப்போது 12க்கும் மேற்பட்ட பேய் படங்கள் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன. ரொம்பத்தான் தமிழ் சினிமாவை பேய் படங்கள் போட்டு ஆட்டுவிக்கின்றன.

சுந்தர் சியின் அரண்மனையைத் தொடர்ந்து நம்மளை கதிகலங்க வருகிறது டார்லிங். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நிக்கிதா கல்ரனி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் நா. முத்துக்குமார்.

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த பிரேம கதா சித்ரம் என்ற படத்தின் ரீமேக்தான் இந்த டார்லிங். தெலுங்கில் ஹிட்டடித்து வசூலை வாரிக் குவித்த படம் தமிழிலும் வசூலை அள்ளும் என்று நம்பலாமா??

2,184 Views
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இளைஞனொருவன் சிறுத்தையின் கூண்டில் சிக்கிக்கொண்டு தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரவலாக பேசப்பட்டது. அனைத்து உள்ளங்களை சஞ்சலப்படுத்திய விடயம் இது. இதே போன்ற இன்னுமொரு சம்பவம் நேற்றுமுன் தினம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் லைட் ரொக் மிருகக்காட்சி சாலையிலுள்ள சிறுத்தைக் கூண்டுக்குள் சிறுவன் ஒருவன் விழுந்து, தாக்கப்பட்டு, பலத்த காயங்களோடு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தை மற்றும் தாத்தாவுடன் மிருககாட்சிசாலைக்கு சென்றுள்ளான் இந்த சிறுவன், 16 அடி உயரமான கூண்டின், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கம்பிகளுக்கு மேல் சிறுவனை அமரவைத்து, தந்தை புகைபடங்கள் எடுத்துக்கொண்டிருக்கையில், கால் தடுமாறி சிறுவன் கூண்டிற்குள் விழுந்துள்ளான்.

கூட்டிலிருந்த இரு சிறுத்தைகளும், சிறுவனின் கழுத்திலும், காலிலும் கடித்துள்ளது. உடனடியாக அந்த இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி சிறுவனை காப்பாற்றியுள்ளனர். பலத்த காயங்களுக்ககுள்ளான சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவனின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சித்தரிக்கப்பட்ட வீடியோ பதிவு இதோ உங்களுக்காக....


32,310 Views
சீரழிந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தின் ஒரு சில மனிதர்களையும் அவர்களின் சமூகப் பிறழ்வான நடத்தைகளையும் குணாதிசயங்களையும் வெளிக்காட்டும் சர்ச்சைக்குரிய படங்களான உயிர், மிருகம், சிந்துசமவெளி படங்களை இயக்கி மக்களிடையே எதிர்மறையான கருத்துக்களை சம்பாதித்துக் கொண்டவர் இயக்குனர் சாமி.

       சாமி என பெயர் வைத்துக்கொண்டு ஆசாமித்தனமான இயக்குனராக, முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கும் சமூகத்துக்கு ஏற்றதல்லாத படங்களை எடுப்பதாக அவர் மீது விமர்சனமும் எழுந்தது. வெளியில் மட்டுமல்லாது, வீட்டிலும் கூட எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தாராம் சாமி. "அந்தப் படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு "என்று சாமி கூறியிருக்கிறார்.                                                                       இந்தநிலையில், சமூக பிறழ்வான கதைக்கருக்களை கைவிட்டு, தற்போது குடும்பப்பாசத்தை கையில் எடுத்திருக்கிறார் கதையாக. தற்போது "கங்காரு" என்ற படத்தை இயக்கும் அவர்,அதில் அண்ணன்,தங்கை பாசத்தை கதைக்கருவாக்கியிருக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனா ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக சாமியால் தேர்வு  செய்யப்பட்டவராம்.ஆனால்,ஏதோவொரு காரணத்தால் அதில் ஆதியை நடிக்க வைத்தார். தற்போது இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை நடிக்க வைத்துள்ளார். இவரது தங்கையாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார். பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.இதில், வர்ஷா அஸ்வதி, தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன் என முக்கிய நடிகர்களும் கதையோட்டத்துடன் பயணிக்க இருக்கிறார்கள்.                                                                                    நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன. கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும் எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். இந்தப்படம் என்னை திட்டிய என் அம்மாவே பாராட்டும் படியாக இருக்கும் என சொல்கிறார் சாமி. 

        "நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன்.யாருமே என்னை கவனிக்கவில்லை.என்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியான படங்களை எடுத்தேன்.தற்போது எல்லோரும் என்னை கவனிக்கிறார்கள்.ஆனால் என்னுடைய பெயர் தான் கெட்டுப்போய்விட்டது. அதை மாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன்" என மனம் திறக்கிறார் இயக்குனர் சாமி.
                                          
சாமி........!!!
நடக்கும் சமூகப்பிறழ்வுகளை தானே திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டினீர்கள், தப்பில்லை. "உண்மையை சொன்னால் உலகம் ஏற்பதில்லையே". தொடரட்டும் உங்கள் வெற்றிப்பயணம் தமிழ்த் திரையுலகில்............................................


4,030 Views
"லிங்கா"கதை தெரியுமா?
 
50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. அதைப் போக்குவதற்காக கலெக்டர்  ரஜினி பொறியியலாளராகி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கிறார். அப்போது சமூக விரோதக் கூட்டம் ஆங்கிலேயருடன் சேர்ந்துகொண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துகிறது. ''எனக்கு இந்துவும் வேணாம், கிறிஸ்தவரும் வேணாம். முஸ்லிமும் வேணாம். செட்டியார், முதலியார், நாடார் வேணாம். இந்தியனா இருக்குறவங்க மட்டும் என் கூட வாங்க '' என்று ரஜினி அழைக்கிறார். மக்கள் படை திரண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து அணை கட்டுகிறார்.

ஊர் நாட்டாமை விஜயகுமார் ரஜினியை நினைத்துப் பெருமைப்படுகிறார். அணை கட்டுவதற்கு உதவியாகவும், ரஜினிக்கு ஆறுதலாகவும் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா சந்தோஷப்படுகிறார். அப்போதுதான் நடக்கக்கூடாத  அந்த விபரீதம் நடக்கிறது.  ஆங்கிலேயருக்குக் கைத்தடியாக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன் அணை திறப்பு விழாவிற்கு வரும் ரஜினியை அவமானப்படுத்துகிறார். இதனால், மனம் கலங்கும் ரஜினி அணை திறக்காமலேயே சென்றுவிடுகிறார். ரஜினியுடன் சோனாக்‌ஷி சின்ஹாவும், சோனாக்‌ஷி தந்தை ராதாரவியும் சென்றுவிடுகிறார்கள்.

அதற்குப் பிறகு அந்த அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. எந்த இடத்தில் வைரம் கிடைத்தாலும் அதைக் கொள்ளையடித்துவிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பார். அவரை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அணை வழியாக வரும் ரஜினி அங்கேயே தலைமறைவாகி விடுகிறார். அப்போதுதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒளிந்திருந்து வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவதைக் கண்டுபிடிக்கிறார். அந்த சமயத்தில் பெரியவர் ரஜினியை சந்திக்கிறார். மனம் திருந்துகிறார்.  

பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டுக் மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் மீதிக்கதை .

இக்கதையை எப்படி K.S ரவிக்குமார் படமாக்கியிருக்கிறார் என்பதை திரையில் பார்த்து தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கலாம்.
6,328 Views
தலைமுறை தாண்டி தனக்கென்று தனியிடத்தை ரசிகர்களின் இதயங்களில் கொண்டவர், இன்றும் சூப்பர்ஸ்டார் ஆக தமிழ்சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். அரசியலிலும் கூட ஒரு ரவுண்ட் வரவிருக்கிறார் என்பது மேலதிக தகவல்.

                                  சூப்பர்ஸ்டார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் "லிங்கா". கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, ராதாரவி, சந்தானம் மற்றும் பலர் நடித்து வரும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை வழங்குகிறார்.

                                                   இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரோடு "எந்திரன்" படத்திற்கு பிறகு மீண்டும் சந்தானம் கொமெடியில் கொடிகட்ட போகிறாராம்.

"எந்திரன்" திரைப்படத்தில் ரஜினியுடனான கொமெடிக்காட்சிகள் சந்தானத்துக்கு இல்லை. சந்தானம், கருணாசுடன் தான் கொமெடி செய்துகொண்டிருப்பார்.ஆனால் "லிங்கா" படத்தில் சந்தானம், இளையதலைமுறை நடிகர்களை கலாய்த்து நடிப்பது போன்றே, ரஜனியையும் கொமடியில் கலாய்த்து நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

                இதேவேளை,சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம் பெறும் வசனம் போன்று, ரஜினி, சந்தானத்திடம் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்” என்று கூறும் வசனம் இதில்  இடம்பெற்றுள்ளதாம்.ரஜினி இளமை தோற்றத்தில் இந்தப்படத்தில் நடிப்பதோடு, சந்தானத்தை கொமடியில் குலுங்கவைத்திருப்பதாகவும் ஒரு செய்தி.

                  அத்தோடு ரஜினியின் அறிமுகப்பாடல் ஒன்று வெளிநாட்டில் படமாக்கப்படுகின்றமை இதுவே முதல்முறை என்ற விசயமும் வெளியே கசிந்துள்ளது. ஹொங்கொங் நகரத்தில் தான் இந்தப்பாடல் படமாக்கப்படவுள்ளதாம்.

மாறி மாறி கலாய்ச்சுக் கொள்ளுங்க.... ஆனா எங்களை படம் பார்க்காமல் மட்டும் கலைச்சிடாதிங்க.....
4,297 Views
பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திரமான பிடியெடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ஓட்டங்களை  வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய போது ஆட்டத்தின் 18-வது ஓவரில்  அவுஸ்ரேலிய வீரர் டோஹெர்ட்டியின் பந்தை பாகிஸ்தான் இடது கை கலக்கல் ஆட்டக்காரர் பவட் ஆலம் முகம்கொடுத்தார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைப்படி பந்து வீசப்பட்டு அது துடுப்பாட்ட வீரரை சென்று ,அதை அவர் ஆடுவதற்கு முன்பாக எந்த ஒரு களத்தடுப்பாளரும் தங்கள் இடத்தை/ஸ்தானத்தை விட்டு நகர்வது முறையற்றது.இப்படி ஏதாவது நடந்தால்  நடுவர்கள் அதனை முறையற்ற பந்தாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை.

ஆனால் களத்தடுப்பாளர்  ஏற்கனவே தீர்மானித்து நகர்வது  துடுப்பாட்ட வீரரை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது என்று கள நடுவர்கள் அந்த நகர்வுக்கு விளக்கம் அளித்தால் அது செல்லாது. ஆனால் விசித்திரம் என்னவென்றால் ஸ்மித் விவகாரத்தில் அவர் செய்தது சரி என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை  இப்போது விளக்கம் கொடுத்துள்ளது.

இப்படியெல்லாம் சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் எப்பிடி ஸ்மித் பிடி எடுத்தார் தெரியுமா?

பாவாட் அலாம்  இடது கையால்  துடுப்பெடுத்து ஆட தயாரான போது ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஸ்டீவ் ஸ்மித் நிறுத்தப்பட்டார்..  பாவாட் அலாம் பந்தை sweep செய்ய ஆயத்தமானவுடன் slip  திசையில் நின்ற ஸ்டீவ் ஸ்மித் Leg Slip ற்கு மாறினார். அப்போது பந்து வீசப்பட்டு கொண்டிருந்தது. ஸ்டீவ் ஸ்மித் மாறியதை பாவாட் அலாம் கவனிக்கவில்லை. இந்த நிலையில்  பந்தை Leg Slip  திசையில் ஸ்டீவ் ஸ்மித் மிக எளிதாக பிடி எடுத்து ஆட்டமிழக்க செய்தார்.


ஆனாலும் விதிமுறையின்படி ஸ்மித் பிடித்த பிடியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ICC சமீபமாக இந்த விதிமுறையை சற்றே தளர்த்தியுள்ளது. அதன்படி ஸ்மித் ஸ்லிப்பிலிருந்து Leg  slip ற்கு நகர்ந்து பிடி எடுத்தது ஏற்புடையதே என்று ICC  தெரிவித்துள்ளது.

இறுதி ஓவரில் 2 விக்கெட்கள் கையிருப்பில் இருக்க 2 ஓட்டங்களை பெற முடியாது பாகிஸ்தான் பரிதாபமாய் தோற்றுப்போன  3-வது ஒருநாள் போட்டியில் ஸ்மித் பிடித்த பிடிதான் இந்த சர்ச்சைக்கு காரணமானது.

தொடரில் பாகிஸ்தான் 3-0 என்று அவுஸ்ரேலியாவிடம் தொல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.11,422 Views
[1]      «      579   |   580   |   581      »      [596]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top