Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

முனியின் மூன்றாம் பாகமான கங்காவை இயக்குவதில், மும்முரமாக ஈடுபட்டுவரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லோரன்ஸ், தனது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். 
படத்துக்கு, ஒரு டிக்கெட்டில இரண்டு படம் என்று பெயர் வைத்துள்ளார். 

இதில் இரண்டு திரைக் காவியங்களை தீட்டியிருக்கிறேன். முதல் பாதி ஒரு படமாகவும், அடுத்த பகுதி இன்னொரு படமாகவும் திரைக்கு வர இருக்கிறது. முதல் பாதியில் கிழவன் என்றும், இரண்டாவது பாதியில் கருப்புதுரை என்றும் பெயரிட்டுள்ளேன் என்கிறார் லோரன்ஸ். 

"வழமையை விட கொஞ்சம் புதுமையோடு வரவுள்ள இந்தப்படத்தில், முதல் கதையில் எனக்கு ஜோடியாக ராய் லட்சுமியும், இரண்டாவதில் அண்ட்ரியாவையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 
புதுமுகம் லியோன் இசை வழங்குகிறார். 50 வயதான வயதானவரின் கதாபாத்திரத்திலும் நடிக்கிறேன்" என்கிறார் பெருமையோடு லோரன்ஸ்.
3,213 Views
திரையுலக பிரபலங்கள் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து விடுவார்கள். ரசிகர்களும் அவர்களுக்கு கோவில் கட்டுவது, பாலாபிஷேகம் செய்வது என்று தலையில் வைத்து கொண்டாடுவார்கள். தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் நடிக நடிகர்களுக்கும் ரசிகர் மன்றங்களை ஆரம்பித்துவிடுவார்கள். இது ரசிகர்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு முறை. 
 
குஷ்புவுக்கு கோயில் கட்டியது ஞாபகமிருக்கும்..
 
இந்த வகையில் மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியின் மகன்களான நாகராஜன், சுப்புரு எனும் இருவரும் சேர்ந்து தங்கள் அபிமான நடிகர் விஜயின் சிலையின் செதுக்கியிருக்கிறார்கள். 
 
சிறு வயதிலிருந்தே இளைய தளபதியின் தீவிர ரசிகர்களான இவர்கள் இருவரும் 'வேலாயுதம'; படத்தில் காட்சியளித்த விஜயின் தோற்றத்தையே சிமென்டினால் சிலையாக்கி வர்ணம் தீட்டியுள்ளனர். தத்ரூபமாக நடிகர் விஜய் போன்று காட்சியளிக்கும் இந்த சிலையின் படத்தை பேஸ்புக்கில் பார்த்த நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். 
மேலும் அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த நடிகர் விஜயின் தந்தையான இயக்குனர் ளு.யு சந்திரசேகரும் நாகராஜன் மற்றும் சுப்புரு ஆகிய இருவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். சிலையை செதுக்கிய இருவரும் சென்னைக்கு சென்று நடிகர் விஜயை நேரில் சந்தித்து சிலையை பரிசளிக்க திட்டமிட்டுள்ளனர்.  
 
 
8,494 Views
சிக்கலுக்கு மேல சிக்கல் எண்டா அது நம்ம தமிழ்சினிமாவில தான் எண்டு சொல்லணும்.இப்போ கொஞ்சநாளாகவே இளையதளபதி விஜய்க்கு சனியன் பனியனுக்குள்ள சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கு எண்டு தான் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரச்சனைகளுக்குள் மாட்டித் தவிக்கிறார் இளையதளபதி....

இயக்குனர் சங்கர் இயக்க, ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கும் விக்ரமின் "ஐ" திரைப்பட trailer நேற்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதல்ல. இந்த திரைப்பட யூனிட்டில் வேலை பார்க்கும் ஒருவரின் கைங்கரியத்தில் வெளியானது தான் அது. இதனால் கடுப்பாகிப்போன தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன் அந்த யூனிட்ஆளை தனது அலுவலகத்தில் வைத்து,வாய்க்கு வந்தபடி திட்டி, சரமாரியாக தாக்கியிருக்கிறார் அத்தோடு, யாருக்கும் பயந்தவன் நானில்லை, முதல்வர் ஜெயலலிதாகிட்ட வேணும்னாலும் போய் சொல்லு, நீ ஒண்ணும் எனக்கு பெரிய ஆள் கிடையாது எண்டும் சொல்லியிருக்கிறார்.

அந்தவேளையில் தான் முக்கியமான விசயமொன்றையும் கக்கியிருக்கிறார், தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன். "இளையதளபதி விஜய் கூட 15 கோடி ரூபாய் எனக்கு கொடுக்கணும், ஆனா அந்த பணத்தை திருப்பி தராமல் என் கண்ணில் சிக்காமல் ஒளிந்து திரிகிறார். தீபாவளிக்கு அவர் நடிச்ச கத்தி திரைப்படத்தை வெளியிட இருக்கிறாராம், என் பணத்தை திருப்பி கொடுக்காமல் எப்படி படத்தை திரையிடுவார்னு நானும் பார்க்கிறேன்" என விஜய்க்கு சவால் விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஒஸ்கார் ரவிச்சந்திரன்.


இந்தக் கதையை twitter இல் ஒருவர் அவிழ்த்துவிட அவ்வளவு தான் #VijayRanAwayWith15crores என்ற hashtag உடன் வெளுத்து வாங்கிடத் தொடங்கிவிட்டார்கள் இணைய சிகாமணிகள்.
பதிலுக்கு விஜய் ரசிகர்கள் #KATHTHIArrivesOnDiwali என்று தங்கள் தங்கள் கச்சேரியை ஆரம்பித்திருந்தார்கள்.

எனினும் இதுவரை எந்தவொரு உறுதிபட்ட அறிக்கையும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பக்கமிருந்தோ, விஜய் பக்கமிருந்தோ வரவில்லை.
விஜய் ரசிகர்களின் ஆத்திரமும் அடக்கமுடியாத கோபமும் சமூக வலைத்தளங்களில் கனன்றுகொண்டிருக்கிறது.

மறுபக்கம் நேற்று கத்தி கதை தனது கதை என்றும் இயக்குனர் முருகதாஸ் அதைச் சுட்டு விட்டதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்குத் தாக்கல் செய்த கதையும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

#பட்ட காலில தான் படும்னு பழமொழி சொல்லுவாங்க... கத்திக்கு சோதனை மேல சோதனை தான். இளையதளபதியின் கத்திக்காக, ரசிகர்கள் ஒஸ்கார் ரவிச்சந்திரனுக்கெதிராக கத்தி தூக்குவார்களா.....? இல்லையா...? பொறுத்திருந்து பார்க்கலாம்.
11,294 Views
பலரை ரசிக்க வைத்து, தன் குரலால் கட்டிப்போட்ட  தென்னிந்திய பிரபல பின்னணிப் பாடகி அனுபமா கடந்த வருடம் சீனாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.  
 
அங்கிருந்த தமிழ் வானொலி ஒன்றிற்கு பாடலொன்றை பாடிதருமாறு இவரிடம் அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  இதையேற்றுக்கொண்டு தன்னுடைய கணவன் த.முரளி கிருஷ்ணனின் வரிகளில் பாடலை பாடியிருந்தார். 
 
தன்னுடைய 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' ஆல்பம் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போதிலும் இதற்கென நேரம் ஒதுக்கி அவர் செய்திருந்த ‘ We are south asia’ என்னும் பாடல், இந்திய மற்றும் சீன இசை பாங்கில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

சீன வானொலிகளில் கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் இந்த பாடல் அங்குள்ள அனைவராலும் விரும்பத்தக்கதாக அமைந்துள்ளது. 
 
சீன தமிழ் வானொலி மூலம் அனுபமாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கி அனுபமாவின் இந்த படைப்பு, 170 பாடல்கள் மத்தியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டது என்பது பெருமைக்குறிய விடயமாகும். 
 
மேலும் இதைத்தொடர்ந்து இவர் எதிர்வரும் காலங்களில் சீனாவைச் சேர்ந்த இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்பதும் சிறப்பம்சமாகும். 
 
எங்கள் தமிழ்ப்பாடகி, போகிற போக்கில் முழுக்க முழுக்க சீனப் பாடகி ஆயிடுவார் போல இருக்கே.
 
அட, பாருங்களேன் இன்று அனுபமாவுக்கு பிறந்தநாள் வேறு.

பின்னணிப் பாடகி 'கொஞ்சம் நிலவு'புகழ் அனுபமாவின் பிறந்தநாள்.இனிய வாழ்த்துக்கள்.

சந்தோஷமா வாழ்த்திடுவோம்.
3,532 Views
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக  ஆண்டாண்டு காலமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் எல்லாரும். அரசியலுக்கு வருவீர்களா என்று அவரிடம் கேட்டால் "எல்லாம் ஆண்டவன் செயல்" என்பது தான் இது வரை அவர் பதிலாகவும் இருந்தது. இதுவரை ரஜினி அரசியலுக்கு வருவாரா?....மாட்டாரா? என்பதை உறுதியாக அறிவிக்கவில்லை. அவ்வப்போது இதுகுறித்து ஊகத்தின் அடிப்படையில் ஏதாவது கதைகள் வருவது நாங்கள் அறிந்தது தான். 

                             தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. லோக்சபா தேர்தலின் போது சென்னைக்கு பிரசாரத்துக்கு வந்த நரேந்திர மோடி, ரஜினி வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது.ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதனையும் சொல்லவில்லை.சிலநாட்களுக்கு முன் ஊடகத்துறை சார்ந்தவர்கள் அவரிடம் அரசியல்பிரவேசம் மற்றும் அவருடைய வெற்றி பற்றி கேட்டபோது "எல்லாம் மக்கள் கையில்.." என்ற வார்த்தையை முதன்முதலாக சொல்லியிருந்தார்.

                
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா, ரஜினியை தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு, அரசியலில் குதிக்கச்சொல்லி பாஜக மேலிடம் அழுத்தம் கொடுக்க கொடுக்க ரஜினிக்கு வீட்டிலும் நெருக்கடி ஆரம்பித்திருக்கிறதாம். 

                      அதாவது, இதுவரை திமுக தலைவர் கருணாநிதியை எதிர்ப்பதில் நம்ம சூப்பர் ஸ்டார்க்கு இஷ்டமில்லையாம்.தற்போது திமுக உட்கட்சி பூசலால் இனிவரும் தேர்தலில் கருணாநிதிக்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பாஜக வில் தனித்து இணையாமல், தனிக் கட்சி தொடங்கி பாஜக அணியில் உள்ள இதர கட்சிகள் அனைத்தையும் விட மிக மிக கூடுதலான தொகுதிகளில் போட்டியிட்டால்தான் மரியாதையாக இருக்கும் என்பதும் ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அட்வைஸாம். ரஜினிக்கும் தற்போது இது சரி என தோணவே தனக்கு நெருக்கமானவர்களிடம்  ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம். 

ஆசை யாரைத்தான் விட்டது....? இருந்தாலும் ஜெயிப்பதும் தோற்பதும் நம்கையில் இல்லையே... அதுவும்  சூப்பர்ஸ்டார் சொல்வதுபோல "ஆண்டவன் கையில் தானே...." இறங்கிடுங்க தலைவா.
4,112 Views
தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்து, ரசிகர்களைத் தன் வசப்படுத்தி, அவர்களால் செல்லமாக 'தல' என அழைக்கப்படும் அஜித்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர், இனம்தெரியாத நபர் ஒருவரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது, 
 
இதனையடுத்து ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேல் பொலிசார் சோதனை செய்து பார்த்து வெடிகுண்டு இல்லை என்பதை உறுதிசெய்திருந்தனர். இது தொடர்பில் மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், மிரட்டல் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரி, மதுரையிலுள்ள 'தல' யின் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். ' வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோழைகளை கைது செய்....' என்று ஆரம்பிக்கும் இந்த சுவரொட்டிகள் அந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
இதே மாதிரி ஒரு வெடிகுண்டு விஷயம் தான் 'பாட்ஷா' திரைப்படத்தின் வெற்றி விழாவின் பின்னர் ரஜினியை அரசாங்கத்தோடு மோத வைத்து, அரசியல் சாயத்தை ரஜினி மேல் பூச ஆரம்பித்தது.
இப்போது அமைதியாக இருக்கும் அஜித்...
ஏதோ பார்த்து நடந்துகொள்ளட்டும்.

தல 55 - புத்தம்புதிய படங்கள்

5,865 Views

 ஷங்கரின் பிரம்மாண்டமான இயக்கத்தில், வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி நடிக்கும் விக்ரமின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஐ’.
இப்படம் வரும் ஒக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை தயாரித்த ஆஸ்கார் ரவி சந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பில் “இப்படம் கண்டிப்பாக தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 22-ம் தேதி திரைக்கு வரும்.

படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வாஸ்நெகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

இப்படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா அதன் பின்னர் சில நாட்கள் கழித்து நடக்கவுள்ளது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிரடி நாயகன் ஜாக்கி சான் கலந்துகொள்ளவுள்ளார்” என ஆஸ்கார் ரவி சந்திரன் தெரிவித்தார்.


4,255 Views
ஸ்பெயினில் நடந்த தக்காளி திருவிழாவில், 1.25 லட்சம் கிலோ தக்காளி கூழாக்கப்பட்டது.
இது ஒவ்வொரு ஆண்டிலும் ஸ்பெய்னில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும்.

கடந்த 1945ல், தக்காளித் திருவிழா, ஸ்பெயின் நாட்டின், புணால் நகரில் துவங்கியது.ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த திருவிழா, கடந்த புதன்கிழமை நடந்தது. இதில், 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த, 1.25 லட்சம் கிலோ தக்காளிகளை எடுத்து, ஒருவர் மீது ஒருவர் எறிந்து விழாவை கொண்டாடினர்.

ஸ்பெயினில் நடக்கும், இந்த விழாவைக் காண, உலகம் முழுவதிலும் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், புணால் நகருக்கு படையெடுத்து வருகை தந்திருந்தனர்.
2,374 Views
 
ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு இசையமைத்து புகழ் சம்பாதித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கு ஏற்ற துள்ளிசைப் பாடல்களையும் பாடி பாடகராகவும் வலம் வந்தவர் இசையமைப்பாளர் விஜய் அண்டனி. 

பின்நாளில், நடிப்பதில் ஆர்வம் கொண்டு 'நான்' திரைப்படத்தில் நடிகராக களமிறங்கினார். எதிர்பார்த்தளவுக்கு படம் கை கொடுக்காவிட்டாலும், மீண்டும் வேதாளமாய் அடுத்த கதையோடு சலீம் என்ற பெயரில் கோதாவில் குதித்தார். 
நடிப்பில் கொண்ட ஆர்வத்தினால் இசையமைக்க வந்த வாய்ப்புக்களையும் தவிர்த்து வந்தார். சலீம் வேகமாக உருவாகினாலும் பல சிக்கல்களை சந்தித்து , இந்தா அந்தா என்று இழுபறியில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. 

இந்நிலையில், இப்பொழுது இன்னுமொரு அதிரடி முடிவினை வெளியிட்டிருக்கிறார். 

இனிமேல் எந்த ஹீரோக்களின் படத்துக்கும் இசையமைக்கப் போவதில்லை.

காரணம் என்னவென்றால், நான் நடிக்கும் படங்களில் தான் கவனம் செலுத்தப் போகிறேன். இசையமைப்பை கொஞ்சம் தள்ளி வைக்க உத்தேசித்துள்ளேன் என்கிறார் விஜய் அண்டனி. 
 
இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படுறது ரொம்ப தப்புன்னு 
இன்னும் கொஞ்ச நாள்ல உணருவீங்க சாரு..

(கோடம்பாக்கத்து குருவி)
5,349 Views

இப்பொழுதுள்ள நம்ம தமிழ் சினிமாவில், ஹீரோக்களோடு போட்டிபோடும் அளவில், அழகுப் பதுமைகளாக வெள்ளித்திரையில் உலாவரும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பள விபரம் இதோ....
சுட சுட உங்களுக்காய் ...(படிச்சிட்டு பயந்துடக்கூடாது)

1.நயன்தாரா- 2 கோடிகள்
2. ஹன்சிகா- 1.5 கோடிகள்
3. தமன்னா - 1.5 கோடிகள் 
4. அனுஷ்கா - 1.20 கோடிகள் 
5. ஷ்ருதி ஹாசன் - 1.5 கோடிகள் 
6. சமந்தா - 1 கோடி (இன்னும் அதிகரிக்கலாம்) 
7.த்ரிஷா- 70 லட்சங்கள் 
8. லட்சுமி மேனன்- 55 லட்சங்கள் 
9. ப்ரியா ஆனந்த் - 35 லட்சங்கள் 
10. ஸ்ரீ திவ்யா- 30 லட்சங்கள்

அழகு நடிகைகளின் கண்கவர் படங்கள் இங்கே....

Gossip.sooriyanfm.lk/gallery

13,807 Views
அன்னக்கொடி மூலம் கையை சுட்டுக் கொண்ட இயக்குனர் பாரதிராஜா, இப்பொழுது மீண்டும் ஒரு கதையோடு களம் இறங்கியுள்ளார். 
ஆனால் இயக்குனர் இமயம் என்று பெயர் எடுத்த இவர் இம்முறை படத்தை இயக்கப்போவதில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

புதிய இயக்குனர் ஒருவர் படத்தினை இயக்க, பாரதிராஜா எழுதிய கதை திரைக்காவியமாக உருவாகி வருகிறது.
படத்தினைப் பற்றி பாரதிராஜாவே கூறுகையில்...
"பாண்டியநாடு படத்துக்குப் பிறகு மீண்டும், நிறைய வாய்ப்புக்கள் என்னை திரையில் நடிகனாக்குவதர்க்கு வந்தன. ஆனாலும், நான் சம்மதிக்கவில்லை. இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், இங்கிருந்து லண்டனில் குடியேறுகின்ற ஒரு வயதானவருக்கும் , துடிப்போடு பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் ஒரு இளம் பெண்ணுக்கும் இடையிலே நடைபெறுகின்ற உணர்வுபூர்வமான கதையாக கதை நகருகிறது. அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்படும் பத்திரிகையாளன் என்பதால், கதையில் நானே பிடித்துப் போனதால் நடிக்க சம்மதித்தேன். இரண்டு மாதங்கள் லண்டனில் படப்பிடிப்பை நடத்தவுள்ளோம். 
இப்பொழுது வருகின்ற திரை மசாலாக்களை விட, இது யதார்த்தம் பேசும் படமாக திரைக்கு வரும்" என்றார். 

வரட்டும்..
பார்ப்போம்; ரசிப்போம்.
1,693 Views
விமல்,பிரியா ஆனந்த், சூரி நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 
 
பிரியா ஆனந்த் மட்டுமில்லாமல், இனியா, விசாகா சிங் ஆகியோரும் ஒன்றல்ல மூன்று லட்டு என்று கலக்கியுள்ள படம் இது.
 
இந்த படத்தின் பாடல் இறுவட்டு  வெளியிட்டு விழா சென்னையில் கோலாகலமாக இடம்பெற்றிருந்தது. இதில் விமல், பிரியா ஆனந்த்,இமான் மற்றும் விழாவுக்கு வருகை தந்த நடிகர்கள் என நிறையப்பேர் கலந்து கொண்டிருந்தனர் .... இந்த மேடையில் தான் வந்திருந்த நடிகர்களை மட்டும் இல்லாம, எங்களையும்   பொறாமைப்பட வைக்கிற மாதிரி நாயகி பிரியா ஆனந்த் வில்லங்கமான தன்னோட நீண்டநாள் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். 

                அதாவது, பிரியா ஆனந்த்துக்கு நீண்டநாளாக டி.இமானின் கொழுக் மொழுக் கன்னத்தை பிடித்து கிள்ளவேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதை தனது படக்குழுவினரிடம் அடிக்கடி சொல்லியும் வந்திருக்கிறார்.

அவருடைய இந்த ஆசையை படவிழாவில் இயக்குனர் ஞாபகப்படுத்த, பிரியா ஆனந்தும் இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று விழா மேடையிலேயே டி.இமானின் கன்னத்தை பிடித்து சுச்சும்மா, பிச்சுக்குட்டி, செல்லக்குட்டி என்று கிள்ளி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

   அழகான பொண்ணு கன்னத்தை கிள்ளும்போது யாருக்கு தான் சந்தோசம் இல்லை...
ஆனால் இங்கு தான் இமானுக்கு வில்லங்கமே.  ஏற்கனவே திருமணமானவர் இசையமைப்பாளர் டி.இமான். அதனால் வீட்டிற்கு போனால் என்ன ஆகுமோ எண்டு பயந்தாராம்,இன்று வீட்டுக்கு சென்றால் மனைவியிடம் உதை வாங்குவது உறுதி என விழா மேடையிலேயே தனது பயத்தையும் வெளிக்காட்டிக் கொண்டார் இசையமைப்பாளர்  டி.இமான். 

                   என்ன செய்ய......? ஆனானப்பட்ட அரசனே ஆனாலும் மனைவி எண்டு வரும்போது அடங்கித்தானே போகவேண்டியிருக்கு, அதுவே உலக நியதியும் கூட......
 
 
5,654 Views
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் கௌரவ வேடத்தில் தோன்றுவதும்,ஒரு பாடலுக்கு நடிகைகள் பல லகரங்களை வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போடுவதும் வழமையாக நடந்து கொண்டிருக்கும் சங்கதி.
 
நடிகர்,நடிகைகள் ஆடுவது ஓகே. 
இங்கே  இப்போது, தான் இசையமைக்கும் ஒரு படத்தில் பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் நடனமாடியிருக்கிறார்,அதுதான் விசயமே....
அண்மைக்காலமாக தேவி ஸ்ரீ பிரசாத், அனிருத் ஆகியோர் வரிசையில் யாரப்பா அது புதுசா என்று யோசிக்கிறீர்களா?

        புதுமுகம் ஜெய்நாத், நாயகி அக்ஷயா மற்றும் ஆடுகளம் நரேன், நம்ம இமான் அண்ணாச்சி ஆகியோர் 'நண்பர்கள் நற்பணி மன்றம்' என்ற ஒரு படத்தில் நடிக்கிறார்கள். 
 
இந்த  படத்திற்குத் தான் இசையமைக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. இசையமைக்கிறதோட நிக்காமல், இந்த படத்தில் கிராமப்புறத்தில் இடம்பெறும் படப்பிடிப்பில் வரும்  பாடலுக்கே   ஹீரோ மற்றும் ஹீரோயின் கூட தானும் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறாராம் ஸ்ரீகாந்த் தேவா.    
ஆடுவது ஓகே தான்... அனால் அந்த உடம்பை தூக்கி எப்பிடி ஆடியிருப்பார்...? 
இப்ப உங்க கற்பனை குதிரையை தட்டி மனத்திரையில பாருங்க... படம் வந்ததும் எல்லாருமா சேர்ந்து திரையில பார்ப்போம்...
 
2,481 Views
உலகிலுள்ள இளைய சமுதாயத்தின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் 'என்ரிக் இக்லேஷியஸ்'.
லத்தீன் அமெரிக்க பொப் பாடகரான இவர் அருமையான நடனக் கலைஞரும் கூட.

 தன் பாடும் திறமையால் மட்டுமல்லாது, தோற்றத்தினாலும் அனைவரையும் கவர்ந்தவர் என்பது அதிகமானோர் அறிந்த விடயம். 
இவரின் தாயார் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா??
 
'என்ரிக் இக்லேஷியஸ்' இன் தாயார் இசபெல் ப்ரைஸ்ளர்.
வயது 63.
ஆனால் என்ரிக் போலவே இப்போதும் இளமைத் தோற்றத்துடன் காணப்படுகிறார். 63 வயதுடையவர் என யாராலும் கூறமுடியாத அளவுக்கு அவருடைய தோற்றம் இளமையாக காணப்படுகிறது. 

இவர் தன்னுடைய இளம் வயதிலிருந்தே மொடலிங்கில் ஈடுபடுபவர் என்பது குறிப்பிடதக்க ஒரு விடயம். 1970ம் ஆண்டு திருமண பந்தத்தில்இணைந்துகொண்ட 'இசபெல் ப்ரைஸ்ளர்' எனும் இவருக்கு என்ரிக் இக்லேஷியஸ் உடன் சேர்த்து மூன்று பிள்ளைகள். 
தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றும் இசபெல்லின் புகைப்படங்கள் வெளியானது முதல்,மகனைப் போலவே தாயும் இப்போது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவராக மாறியுள்ளார். 
 
இனிமேலாவது தோற்றத்தை பார்த்து வயதை எடைபோடாமலிருக்க முயற்சி செய்வோம்.  
 
3,079 Views
காதலன் மீது வெறுப்பு கொண்ட காதலி, காதலனை தறதறவென பலபேர் பார்க்க தொடரூந்து நிலையத்தில் இழுத்துச் சென்ற சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. 
 
காதலிக்கும் போது சிக்கல்கள் ஏற்படுவது சகஜம் தான் இருந்தாலும் தொடர்ந்தும் காதலியை கவனிக்காது, ஐ போனை கவனித்த நபருக்கு ஏற்பட்ட நிலைதான் இது. 
 
தன்னிடம் அக்கறை கொள்ளாமல் போனுடன் பொழுதை கழித்த நபரின் காதலி அவர் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, நடு பாதையில் காதலனை காலால் உதைந்து, கையிலிருந்த தொலைபேசியை பறிக்க முயற்சிசெய்துள்ளார். பாதசாரிகள், மக்கள் முன்னிலையில் இது நடைபெற்றுள்ளது. 
இப்படி நடந்தும் அவர் தொடர்ந்தும் கையடக்க தொலைபேசியை பார்த்த வண்ணமே இருந்துள்ளார். இது காதலியை இன்னும் வெறுப்பேற்றியுள்ளது. (வீடியோ உங்களுக்காக)
5,971 Views
[1]      «      585   |   586   |   587      »      [596]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top