Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.தனுஷ் நடிப்பில் இப்பொழுது எடுக்கபப்ட்டு வரும் படம் மாரி. விர்விருப்பாக இடம்பெற்று வரும் இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் படு வேகமாக முடிவடைந்து வருகிறது. இந்தப் படம் மிக விரைவில் வெளியாக தயாராகவுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷின் அடுத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி டீமோடு இணைந்துதான் என்பது எல்லோருக்கும் தெரியும். இசையில் அனிருத்தும், தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்ஸனும் நடிக்கவுள்ளார்கள்.

சரி, இந்நிலையில் இந்தப் படத்தின் பெயரும் வேலையில்லா பட்டதாரி 2 என்பதாகத்தான் அமையுமென பலரும் எதிர்பார்க்க, அதான் இல்லைங்க எனும் வகையில் பெயர் வெளியாகியுள்ளது. அதாவது படத்துக்கு டீக்கடை ராஜா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த டீக்கடை ராஜாவில், இளமையான தோற்றத்தோடு தனுஷை அவரது இரசிகர்கள் கண்டு களிக்கவுள்ளார்கள். இன்னும் தலைப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மிக விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பது உண்மை.

-கோடம்பாக்கக் குருவி-
2,762 Views
வாகை சூடவா, மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் போன்ற நல்ல படங்களில் நடித்து, தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை இனியா.

இப்பொழுது இவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக ஆர்.கேயும் நாயகியாக நீது சந்திராவும் நடிக்க, நடிகையாகவே நடிக்கிறார் இனியா. அதாவது ஸ்வப்னா ப்ரியா எனும் பெயரோடு வரும் நடிகையாக வருகிறார்.

யாருடைய தனிப்பட்ட வாழ்வு இதில் படமாகிறதோ என எமக்கும் சந்தேகம் இருந்தாலும், படம் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். இனியாவுக்கு இந்தப்படம் இன்னும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கிறதா என்பத படம் வந்த பின்னர் சொல்கிறோம்.

-கோடம்பாக்கக் குருவி-
2,788 Views
கிரிக்கெட் வீரர் பிரட்லீ நடிக்கும் சினிமா ”(UNINDIAN)”

அவுஸ்ரேலியாவின் முன்னாள் புயல்வேக வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ இந்தியாவை மையப்படுத்திய (UNINDIAN) ”இந்தியன் அல்லாதவன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடபட்டு உள்ளது.

இந்த திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையை மையமாக கொண்டது என்று சொல்லபடுகிறது. பிரட் லீ க்கு ஜோடியாக நடிகை தனிஷ்தா சட்டர்ஜி நடிக்கிறார்.

*T.T
3,487 Views
இந்தியா ,பங்களாதேஸ் கிரிக்கெட் தொடர் ரத்தாகிறது...?

உலக கிண்ணப் போட்டியின் காலிறுதி போட்டியில் பங்கெடுத்த பங்களாதேஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பந்து முறையற்ற பந்து என்று கள நடுவர்களால் அப்போது அறிவிக்கபட்டது.

இந்த ஆட்டமிழப்பு பெரும் சர்சையை உண்டுபண்ணியது.

இதனால் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த முஸ்தபா கமால் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு ICC யின் உயர்மட்ட கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீநிவாசன் மீதும் ICC மீதும் தன் குற்ற சாட்டுக்களை முன்வைத்தார்.

பின்னர் உலக கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் வெற்றிபெறுகின்ற அணிக்கு யார் கிண்ணத்தை வழங்குவது எனும் முரண்பாட்டில் இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனிவாசனுடன் முரண்பட்டு அதிலே அதிருப்தியுற்று தனது பதவியையும் தூக்கி எறிந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீனிவாசனது செயற்பாடுகளே தன்னுடைய பதவி விலகலுக்கும் காரணம் என்று அறிக்கை விட்டார்.

இதன் காரணத்தால் இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் இயல்பற்ற நிலைமை உருவானதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் சபை கூடி எதிர்வரும் நாட்களில் பங்களாதேஸ் தொடர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளது.

இதனால் 2 டெஸ்ட் ,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் ஜூலையில் பங்களாதேசில் இடம்பெறவிருந்த நிலையில் இது ரத்தாகும் வாய்ப்பிருப்பதாக அறியக் கிடைக்கிறது.

*T.T
10,316 Views
பொன்ராம் இயக்க, இமான் இசையமைக்க சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வரும் படம் ரஜினி முருகன். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் பல பிரதேசங்களிலும் நடைபெற்று வருகிறது. அமோகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் இந்த படத்துக்கும் முக்கியமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படப்பிடிப்பில் கலந்து கொள்கையில், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவியது. பலரும் அனுதாபங்களையும் நலம் விசாரிப்புக்களையும் வெளியிட்டு வந்தார்கள். இதனால் பதற்றமடைந்த சிவா, ''யோவ், கொஞ்சம் பொறுமையா கதை பரப்புங்கடா. நான் நல்லா தான் இருக்கேன். எனக்கு எதுவும் ஆகலை. இப்போ மதுரையில படப்பிடிப்பில இருக்கேன்யா'' என தனது ஸ்டைலில் விபரம் சொல்லியுள்ளார்.

என்னங்க, இப்பிடியெல்லாம் செய்தி செய்யலாமா?
சிவா பாவம்யா, நல்லா இருக்கிறவனை போய் விபத்து.. அது இதுன்னு..?

-கோடம்பாக்கக் குருவி-
4,879 Views
மார்ச் 31ம் திகதியில் இருந்து facebook தலைமையகம் Menlo Park, California விற்கு மாற்றப்பட்டுள்ளதாக மார்க் தன் முக புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களின் நோக்கம் அனைவரும் இணைந்து ஒன்றாக சுதந்திரமாக வேலைசெய்யவேண்டும் என்பதே எங்களுக்கு வேண்டும், எமது சேவை உலகம் முழுவதும் பரந்து விரிய வேண்டும். அதற்கு எங்கள் அணிகள் மத்தியில் இணைப்பு தேவைப்பட்டது. அதற்காக மிக பெரிய இடத்தை தெரிவுசெய்தோம். அதிகமானோர் வசதியாக வேலை செய்யவே இந்த இடத்தை தேர்வு செய்தோம். இந்த கட்டிடம் மிக எளிமையாகவும் மிக அழகாகவும் காட்சியளிககின்றது. நாங்கள் வேலை செய்யும் இடம் முன்னேற்றகரமானதாக இருக்கும் என நம்பவேண்டும்.

எங்களுக்கு தேவை நீங்கள் எங்கள் கட்டிடத்திற்குள் நுழையும்போது, நீங்கள் உணரவேண்டும். உலகத்தை இணைக்கும் எங்களது நோக்கம் எவ்வளவு பெரியது என்று, இனி வரும் காலங்களில் எமது புதிய அலுவலகத்தின் புதிய படங்களை வெளியிட காத்திருக்கின்றேன் என்றார்.

-வர்ஷி -
4,140 Views
ஆர்ப்பாட்டமில்லாமல், தன்னடக்கமாக புன்னகைத்தே தன் வேலைகளை நிறைவு செய்து கொள்ளும் நடிகர் உதயநிதின் கையில் ஏராளமான பட வாய்ப்புக்கள். நல்ல கதைகளாகவும், இளைஞர்களுக்கு பிடித்த படங்களாகவும் தெரிவு செய்து நடித்து வரும் இவரது கையில், இப்பொழுது ஏராளம் கதைகளும் படங்களுமுள்ளன.

இப்பொழுது வெளிவரவுள்ள நண்பேண்டா படத்தை தொடர்ந்து, எமி ஜாக்சனோடு இணைந்து ஒரு படத்திலும், இயக்குனர் அஹமத் இயக்கம் இன்னுமொரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

அஹமத் இயக்கும் படத்தில் உதயநிதியுடன் கொழுக் மொளுக் ஹன்ஷிகா ஜோடியாக நடிக்கவுள்ளார். இது இரண்டாவது முறையாக இவர்கள் இணையும் படம். அத்தோடு, இப்படத்தில் இன்னுமொரு பிரபலமும் இணைந்துள்ளார். அவர்தான் இளைய திலகம் பிரபு.

படத்துக்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. உதயநிதி, ஹன்ஷிகா, பிரபு ஆகியோருடன் இன்னும் பட நட்சத்திரங்களும் இணைந்து கலக்கவுள்ள இந்தப் படத்துக்கு நம்ம அனிருத் இசையமைக்கவுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
1,628 Views
கப்பல் படத்துக்குப் பின்பதாக வைபவ்க்கு வாய்ப்புக்கள் வந்து குவிந்தவன்னமே உள்ளன. எல்லா தரப்பிலும் இருந்து பல படங்கள் வந்து சேர்கின்றன. நல்ல கதைகளை தெரிவு செய்து ஒப்புக்கொண்டு வருகிறார் வைபவ்.

இந்நிலையில், குறிப்பிடத்தக்க படங்களாக ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும், குஷ்புவின் அவ்னி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னுமொரு படத்திலும் வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்களோடு இன்னும் சில படங்களையும் ஒப்பந்தம் செய்வதற்கு கதை கேட்டு வருகிறார்.

அத்தோடு, ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் இவருக்கு ஜோடியாக பேராண்மை, அரவாண், பரதேசி ஆகிய படங்களில் நடித்த அழகு நடிகை தன்ஷிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆக, இந்த ஜோடியின் இணைப்பாட்டத்தில் முருகதாஸ் படம் ஆஹா ஓஹோ என வரவுள்ளது என நம்பிக்கை வைக்கிறோம்.

-கோடம்பாக்கக் குருவி-
1,156 Views
ஸ்பெயின் கால்பந்து அணி மற்றும் பார்சிலோனா கழகம் ஆகியவற்றுக்காக விளையாடிய முன்னாள் தலைவர், உலகப்புகழ்பெற்ற கார்லோஸ் புயல் விடுமுறையைக் கழிக்க தனது மனைவியுடன் இலங்கை வந்துள்ளார்.
 
தன்னுடைய பேஸ்புக், ட்விட்டர் தளங்களில் இலங்கையின் இயற்கை அழகைப் புகழ்ந்து வருகிறார் புயோல். 
 
 
1,693 Views
ஒரு காலத்தில் இணையத்தை கலக்கிய நட்சத்திர காதல் ஜோசிகளாக இருந்தவர்கள் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா. இருவருமே இணையத்தை அதிகம் வளம் வந்த நட்சத்திரங்கள் எனலாம். அந்தளவுக்கு அவர்களின் இணைய அட்டகாசம் தாங்க முடியாமல் இருந்தது. அவ்வளவு நெருக்கமாக நட்புப் பாராட்டிக் கொண்டார்கள்.

பின்னர் அந்த நட்பு காதலாக மலர்ந்து, மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இருவருக்குமிடையில் காதல் இடைநிறுத்தப்பட்டது.

பார்த்துக் கொள்வதில்லை. பேசிக்கொள்வதில்லை. ஒருவர் பற்றி இன்னொருவர் ஒரு விடயத்திலும் ஏறெடுத்துப் பார்ப்பதுமில்லை. ஏன்னா ஆனது என்று யாருக்குமே தெரியாது. இதனால், இரசிகர்களுக்கு ஏமாற்றம். ஆனாலும், இப்பொழுது ஒரு புதிய செய்தி வந்துள்ளது.

இதுவரைக்கும் ட்விட்டரில் சமந்தாவை பின்தொடர்ந்து வந்த சித்தார்த், வெறுப்பின் காரணமாக அதிலிருந்து விலகியுள்ளார். அதாவது, சமந்தாவை பின் தொடர்வதை நிறுத்தியுள்ளார். அத்தோடு, தானுண்டு தன வேலையுண்டு என பயணிக்கிறார். அம்மணியும் அப்படித்தான் !!

-கோடம்பாக்கக் குருவி-
2,980 Views

புறம்போக்கு... இது ஒரு தலைப்பா... ஒரு மாதிரி இருக்கே.. என்று கொஞ்சம் ஃபீல் பண்ணவர்களுக்காக ஒரு மாற்றத்தை தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் எஸ்பி ஜனநாதன்.


படத்துக்கு இப்போதைய தலைப்பு: புறம்போக்கு என்கிற பொதுவுடைமை! எஸ்பி ஜனநாதன் இயக்கி தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள்.


தனது முதல் படமான ‘இயற்கை' மூலம் தேசிய அங்கீகாரத்தைப் பெற்ற ஜனநாதன், தனது அடுத்தடுத்த படங்களான ‘ஈ' மற்றும் ‘பேராண்மை' மூலம் மக்களுக்கான இயக்குநராகப் பரிமாணம் எடுத்தார்.


வேகமாக அதிகப் படங்கள் பண்ண வேண்டும் என்ற நினைப்பில்லாத இயக்குநர் இவர். பேராண்மை என்ற வெற்றிப் படம் தந்த பிறகும், நான்காண்டுகள் கழித்துதான் இப்போது புறம்போக்கு எனும் பொதுவுடைமை வருகிறது.


இந்தத் தலைப்பு மாற்றம் குறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், "குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தின் ‘புறம்போக்கு'என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமான அர்த்ததைக் கொண்டது.


‘புறம்போக்கு' என்ற சொல் தமிழில்,வழக்கத்தில் கொச்சையாகப் பயன் படுத்தப்பட்டாலும், இது ஆழமான அர்த்தம் கொண்ட, வரலாற்று ரீதியாக தமிழர்களின் வாழ்வியலோடு சேர்ந்த சொல்.

 

புறம்போக்கு நிலம் யாருக்கும் சொந்தமானது அல்ல. மக்களுக்கு பொதுவானது. மக்கள் தாங்கள் வசிக்கும் ஊரில் குடியிருப்பு பகுதியைத் தவிர்த்து பொது தேவைக்கு நிலங்களை; ஏரி புறம்போக்கு, சுடுகாடு புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு, மந்தைவெளி புறம்போக்கு, என்று பொது நிலங்களை பதினைந்து வகைகளுக்கும் மேல் பிரித்து வாழ்ந்தனர்.


மேலும், மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளை கட்டிக் கொள்வதற்கு நத்தம் புறம்போக்கு நிலங்களையும் விட்டு வைத்தனர்.


இதற்கு மேல் ஊர் பொதுவான சாலைகளும், பஸ் நிறுத்தம், மேலும் பள்ளிகூடம், மருத்துவனை கட்ட அரசு புறம்போக்கு நிலங்களும் இதில் அடக்கம். மலைகளும், பனி சிகரங்களும் துருவங்களும் சர்வதேச கடல் பரப்பும் புறம்போக்கே. காற்றும், ஒளியும் நிலவொளியும் சிகரங்களும் எல்லையற்ற அண்டவெளியும் புறம்போக்கே... எதுவும் தனியுடமை அல்ல, பொதுவுடமைதான்.


குழம்பிப் போன இந்த காலகட்டத்தில் பொதுவுடமை கருத்தை மறுபடியும் மறுபடியும் வலியுருத்தவே ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை' என்று தலைப்பு வைக்கப்பட்டது," என்றார்.

இந்த மாதம் இசையையும், வரும் மே முதல் தேதி பட வெளியீடும் இருக்கும் என்றார் 


=== CASTRO RAHUL ===

2,292 Views
அஞ்சலிக்கும் அவரது பெயரில் வரும் பிரச்சினைகளுக்கும் இப்பொழுது சில காலங்களாகத்தான் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அஞ்சலி இரசிகர்களுக்காக மனம் திறந்து பேசியுள்ளார்.

ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கர்’, விமல் ஜோடியாக ‘மாப்ள சிங்கம்’ படங்களில் நடிக்கிறேன். தமிழில் எனக்கு ஏற்பட்டிருந்த இடைவெளி, நானாக ஏற்படுத்தியது. ஒரேமாதிரி வேடங்களில் நடிப்பது சோர்வாக இருந்தது.
அதனால், வித்தியாசமான வேடத்தில் நடிக்க காத்திருந்தேன். திடீரென்று என் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து விட்டன. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். நல்லவேளை, இப்போது எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் மீண்டு வந்திருக்கிறேன்.
அப்பாடக்கர்’ படத்தில் த்ரிஷா நடிக்கிறார். அவர் எனக்கு நல்ல தோழி. படத்தில் எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே நடக்கும் கதை வேறு. எங்களுடன் சூரி இருப்பார். மூவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் கலகலப்பாக இருக்கும். ‘மாப்ள சிங்கம்’ படத்தில் ஷைலஜா என்ற வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறேன். அதிக புத்திசாலியான, ஆளுமை உள்ள பாத்திரம். வக்கீல் என்றதும், ஏதோ தூய தமிழில் கலந்து கட்டுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள். கதைக்கும், காட்சிக்கும் என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில், இந்த வயதில் நான் சந்திக்கவே கூடாத துயரமான பல சம்பவங்களைச் சந்தித்து விட்டேன். அதை நான் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவத்தை நிறையபேர் எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏற்படுத்திக் கொடுத்தனர். எல்லோருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.

கதை கேட்பது, சம்பளம் பேசுவது, கால்ஷீட் தருவது போன்ற வேலைகளை நானே பார்க்கிறேன். யாரையும் நம்பக்கூடாது என்பது என் நோக்கம் அல்ல. ஆனால், இனி யாரும் எனக்கு எந்தப் பிரச்னையும் கொடுக்கக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வுதான் என்னை இப்படி மாற்றியிருக்கிறது.

இப்போது என் அம்மாவுடன் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தங்கி யிருக்கிறேன். நடந்து முடிந்த எல்லாப் பிரச்னைகளும் அவருக்குத் தெரியும். அதனால், அவர்தான் எனக்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார். என்னை வெளியில் யார் நம்புகிறார்களோ இல்லையோ, என் அம்மா மற்றும் குடும்பத்தினர் நம்பு கிறார்கள். அது ஒன்றே போதும். எனக்கு மனநிம்மதி கிடைத்திருக்கிறது.

தமிழைத் தொடர்ந்து, தெலுங்கில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘சித்ரங்கதா’ படத்தில் நடிக்கிறேன். கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக ‘தீரா ராணா விக்ரமா’ படம் இருக்கிறது. மலையாளத்தில் ‘பையன்ஸ்’ படத்துக்குப் பிறகு நல்ல வாய்ப்பு அமையவில்லை. பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால், ஏற்றுக்கொள்ளவில்லை.

சினிமாவில் நல்ல பெயரும், புகழும் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டு கணவருடன் செட்டிலாக வேண்டும் என்பது அம்மாவின் கனவு. அதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என் திருமணத்தைப் பற்றி என்னென்னவோ வதந்திகள் வருகின்றன. அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

காரணம், உண்மையே இல்லாத ஒரு விஷயத்தை எத்தனை நாட்களுக்குத்தான் உண்மை மாதிரியே சொல்ல முடியும்? பதில் சொல்வதைவிட, எதுவும் பேசாமல் இருப்பதே மேல் என்று அமைதியாக இருந்தேன். கடைசி யில் அந்த அமைதி மட்டுமே ஜெயித்தது. என்னைப்பற்றி வெளியான அத்தனை தகவல்களும் பொய் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள்.
ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது, அவள் வாழ்க்கையில் நடக்க வேண்டிய மிக முக்கியமான நிகழ்ச்சி. அதை தவறவிடக் கூடாது. எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது. சரியான சந்தர்ப்பம் அமையும்போது திருமணம் செய்துகொள்வேன். ஆனால், ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். முறைப்படிஅனைவரையும் அழைத்து, ரசிகர்களுக்கு அறிவித்த பிறகுதான் என் திருமணம் நடக்கும். இவ்வாறு அஞ்சலி ஊடகர்களுக்கு அறிவித்துள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
2,725 Views
ரஜினி முருகன் படம் ஜூலை மாதம் 17ல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் நடிக்கும் சிவகார்த்திக்கேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி வண்ண வண்ண ஆடைகளோடு தேனி பகுதியில் ஆட்டம் போட்டுள்ளனர். அதாவது தப்பா நினைக்காதீங்க மக்கள்ஸ். கலர் கலர் ஆடையில் ஒரு பாடல் எடுத்துள்ளார்கள்.

காக்கி சட்டை படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கும் ‘ரஜினி முருகன்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அத்தோடு எல்லோரினதும் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பு தொடங்கி , பல பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-கோடம்பாக்கக் குருவி-
3,168 Views
ஹிந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கி அகிரா எனும் பாலிவுட் படத்தை தற்போது எடுக்கிறார் இயக்குனர் முருகதாஸ்.
இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுகிறது. தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த மௌனகுரு படத்தின் கதையே, முருகதாஸ் ஹிந்தியில் நாயகியாக மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

பிரபல ஹிந்திப் பட இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை சத்ருகன் சின்ஹாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். கஜினி'க்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர்தான் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பதும் முக்கியமானது.

இந்நிலையில், முக்கிய விடயம் என்னவெனில், நடிகை ராய் லட்சுமியும் இந்த ஹிந்திப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் முருகதாஸ் நல்ல ஒரு பாத்திரத்தை உருவாக்கி வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் மூலமாக, ஹிந்தியில் முதன்முறையாக கால் பதித்துள்ளதாக பெருமைப்படுகிறார் ராய் லட்சுமி.

-கோடம்பாக்கக் குருவி-
1,284 Views
பல நட்சத்திரங்களின் நடிப்பிலும், பரபரப்பான எதிர்பார்ப்பிலும், எக்கச்சக்க இரசிகர்களின் எதிர்பார்ப்போடும் வரவேற்க தயாராகியுள்ள படம் விஜய்யின் புலி. இந்தியாவின் பல இடங்களிலும் இந்தப் படத்தில் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வரும் நிலையில், புலியின் பெர்ஸ்ட் லுக் இம்மாதம் 14ஆம் திகதி தமிழர் புத்தாண்டன்று வெளியிடப்படுமென படக்குழு அறிவித்திருந்தார்கள்.

அவர்களது அறிவிப்பைத் தொடர்ந்து, நாமும் ஆர்வமாக அமோகமாக படத்தில் பெர்ஸ்ட் லுக்கை இரசிப்பதற்கு காத்திருந்தோம். ஆனாலும், மீண்டும் ஏமாற்றத்தையே அள்ளிக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது, இந்த மாதம் 14ஆம் திகதியும் பெர்ஸ்ட் லுக் வெளிவராது எனவும், இன்னும் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது எனவும் பிந்திக் கிடைத்த தகவல்கள் சொல்லி நிக்கின்றன.

-கோடம்பாக்கக் குருவி-
5,647 Views
[1]      «      594   |   595   |   596      »      [642]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top