Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தியாவை அதிரவைக்கும் முத்த போராட்டம்

என்னடா தலைப்பு இது என்று யோசிக்கின்றிர்களா?
வேலை நிறுத்த போராட்டம்,
அமைதி போராட்டம்,
உணவுதவிர்ப்பு போராட்டம்,
மனிதசங்கிலி போராட்டம்,
சட்டப்படி வேலைசெயும் போராட்டம் என நாம் பல போராட்டங்களை கேள்விபட்டிருகின்றோம் இப்போது இந்தயாவில் நடக்கிறது 'முத்தப்  போராட்டம்'

கேரளாவில் உள்ள ஒரு தேநீர் விருந்தகத்தில் ஆண்களும் பெண்களும் அநாகரீகமாக நடந்துகொள்கின்றனர் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின்  இளைஞர் அணியினர் அந்த விருந்தகத்தை சேதபடுத்தினர் இதனை கண்டித்து சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் அமைப்பு கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முத்த போராட்டம் நடத்தியது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரபல ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களும் இன்று முத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரளாவை அடுத்து கொல்கத்தாவிலும் இந்த போராட்டம் தொடர உள்ளது.

சிலர் தானாக வந்து இளம் ஜோடிகளை தாக்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடத்துவதாகவும், இதில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கொல்கத்தா  பிரெசிடென்சி பல்கலைக்கழக மாணவர்களும் முத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இன்னுமின்னும் எத்தனை பேர் தங்கள் தங்கள் வசதிகளுக்கும் விருப்புக்களுக்கும் ஏற்றார் போல் என்னவென்ன போராட்டங்களை ஆரம்பிப்பார்களோ ...!!


இணைய செய்தியை தொகுத்து வழங்கியது
                              -வர்ஷி-

8,446 Views
'NASA'வுக்கு போவதாக உலகையே ஏமாற்றிய கேரள போக்கிரி பயல்.

அந்த போக்கிரி பயல் பெயர் அருண்.அவன் வாழ்தது இந்தியாவின் கேரளாவில்.ஏமாளிகள் இருக்கும் வரை எமாற்றுபவருக்கு கொண்டாட்டம் தான் என்பது போல் இந்த ஏமாற்றுக் காரப்பயபுள்ளைக்கு ஏமாற்றும் சிந்தனை வந்தது ஒன்றும் வேடிக்கையல்ல.

வடிவேலுவின் நானுன் ரவுடிதான்...நானும் ரவுடிதான் ...பாணியில் இந்த பயல் கடந்த 2 ஆண்டுகளாக இந்திய ஊடகங்கள் மூலமாக உலகையே ஏமாற்றியிருக்கிறான்.

சங்கதி இதுதான் .நானும் விஞ்ஞானி ஆகிட்டேன் ,நாசாவில் எனக்கு வேலை கிடைத்து விட்டது என்று அவன் பாணியில் அவன் பொய்யுரை ஒன்றைப் பரப்ப அதனையும் நம்பிப்போன இந்தியாவின் பிரபல ஊடகங்கள் மூலமாய் ஒரே நாளில் உலகளவில் பேசப்படும் ஹீரோவாகிவிட்டான் இந்த அருண்.

பிரபல இந்திய ஊடகங்களால் புகளின் உச்சிக்கே கொண்டு செல்லப்பட்ட அருணுக்கு இவ்வாறும் உச்சபட்ச கௌரவம் கொடுத்தார்கள்.

அதாவது பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான வாய்ப்பு வந்தும், சிறு வயதில் ஆசிரியர்கள் கூறியபடி ஆராய்ச்சி மனப்பான்மைதான் அருணுக்கு விஞ்சி இருப்பதாக சான்றிதழும் அளித்து கட்டுரைகள் பிரசுரித்தார்கள்.

இதனிடையே டெலிகிராப் நாளிதழ் 'patriot NASA boy turns hero' என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு, அருணை பிரதமர் மோடி அழைத்து அரை மணி நேரம் சந்திப்பு நடத்தியதாகவும், இந்திய விண்வெளி ஆய்வு வாய்ப்பு கதவுகள் அருணுக்காக எப்போதும் திறந்திருக்கும் என மோடி உறுதியளித்ததாகவும் அந்த ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டது.

இப்படியெல்லாம் உலகையே ஏமாற்றி வந்த வாலிபரின் வாலிபத் திருட்டு இப்போது நாசாவில் வேலை செய்யும் ஒரு மலையாளி மூலமாகவே வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஹீரோ இப்போது சீரோவாகிவிட்டார்.

துளியளவு கூட உண்மையில்லாது எல்லோரையும் ஏமாற்றிய நாடகம் இப்போதாவது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது என்று எண்ணினாலும் பொய்யைச் சொல்லுவதையும் பொருந்த சொல்லவேண்டும் என்பார்களே !

இந்த உலகத்தில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கோ....
நாளைக்கு நானும் 'NASA 'வுக்கு போகிறேன் என்று யாராவது கிளம்பினால் எல்லோரும் என்ன சொல்வார்கள் தெரியுமா?

"நீ நாசாவுக்கு போகாட்டாலும் பரவாயில்ல ராசா ..
நாசமா மட்டும் போயிடாதே !!!!!

*தில்லையம்பலம் தரணீதரன்
3,469 Views
A .R ரஹ்மானின் அழைப்பும்......சின்மயியின் மறுப்பும் ...

ஒரு தெய்வம் தந்த பூவே என்று "கன்னத்தில் முத்தமிட்டால்" மூலம் தமிழுக்கு சின்மயி என்ற இந்த பூவை அறிமுகம் செய்தவர் ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

 முதல் பாடலிலேயே முழு இதயங்களையும் கொள்ளை கொண்டவர் இந்த சின்மயி என்றால் மிகையில்லை. இசைப்புயலில் இசையில் உருவாகும் படங்களில் ஒரு பாடலையாவது பாடுவதற்கான வாய்ப்பு சின்மயிக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மிகப்பிரமாண்டமாக உருவாகிக்கொண்டிருக்கும் "ஐ" படத்தில் கூட "என்னோடு நீயிருந்தால்.." என்ற பாடலை பாடியிருக்கிறார்.     
        
இது இவ்வாறிருக்க, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் "லிங்கா" திரைப்படத்திற்கான இசையமைக்கும் பணியை ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஏற்றிருக்கிறார். ஆனால் ஒஸ்கார் நாயகனின் இசையில் "லிங்கா" படத்தில் ஒரு பாடலைத்தன்னும் பாடும் வாய்ப்பு பாடகி சின்மயிக்கு கிடைக்கவில்லையாம். இதனால் சின்மயியின் ரசிகர்கள் ரொம்பவே கவலையடைந்துள்ளனர்.

                                              சின்மயிக்கான வாய்ப்பு தவறிப்போனமைக்கு யார் செய்த சதியோ.....? என தேடிப்பார்த்ததில் அவரே காரணமானது தான் கவலையிலும் கவலை. "லிங்கா" படத்தில் பாடுவதற்காக இசைப்புயல் தன்னை அழைத்தாராம். அந்தநேரத்தில், தான் சென்னையை விட்டு வெளியே வேலையாக இருந்ததால் அந்த வாய்ப்பை தவறவிட நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார் சின்மயி. அத்தோடு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சேர்ந்து தனது கவலையையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாடகி.

                                              சின்மயி கொண்ட இந்தக் கவலையை "லிங்கா" இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கொஞ்சம் தீர்த்து வைத்திருக்கிறாராம். "லிங்கா" படத்தில் டப்பிங் பேசுவதற்கான வாய்ப்பை சின்மயிக்கு கொடுத்திருக்கிறாராம் இயக்குனர். அந்த வாய்ப்பை தவறவிடாமல், பாடகி சின்மயியும் அழகாக டப்பிங் பேசி முடித்துள்ளாராம்.

"திறமை இருந்தால் தேடி வரும் வாய்ப்பு" - உண்மைதான் போலும்......

*கணேஷமூர்த்தி ராகவன்.
29,502 Views
நம்மில் எத்தனையோ பேர் தங்களுக்கு பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்துவது குளியலறையில் தான். நான்கு சுவருக்குள் சத்தமாக பாடுவார்கள். தண்ணீர் சத்தத்தை விட இந்த சத்தம் அதிகமாக கேட்கும் வெளியில் இருப்பவர்களுக்கு இதை சகிக்க முடியுமா என்பதைப் பற்றி யோசிப்பதே இல்லை.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்துவிட்டது பாடும் ஷவர். இனி நீங்க பாட தேவையில்லை இந்த ஷவரே பாடும். நாங்க சொல்வதை விட நீங்க இந்த வீடியோவ பார்த்தா உங்களுக்கு புரியும்.

2,882 Views
கண் மூடும் நேரமும் நம் முன்னே வந்து போகும் மண் மூடிய மலையக வரலாறு .

இயற்கையின் கோரத்தாண்டவதுக்கு இலக்காகி இயல்பு நிலை இழந்து இதயங்களை பதைபதைக்க வைத்த இலங்கையின் மலையக மண்ணின் கொஸ்லாந்தை,மீரியபெத்த மக்களின் துயர வரலாறு மலையைக் மக்களின் வாழ்வியல் துன்பங்களில் ஓர் அத்தியாயம் மட்டுமே.

இலங்கையின் வனப்பு மிகு இடமாகவும் சுற்றுலாப் பயணிகளின் சுவர்க்க பூமியாகவும் திகழும் மலையகத்தின் அழகை மட்டுமே பார்த்து ரசித்த நம்மவர்கள் அழகுக்கு பின்னால் இருந்த ஆபத்தை கண்டுகொள்ளாமல்  விட்டதுதான் வேதனையான ஒன்றாகிவிட்டது.

காலதிகாலமாய் கல்வியறிவின்றி,கண்ணீரில் காவியம் படைத்த மலையக மக்களின் வரலாறு என்பது இந்தக் காலகட்டத்து இளைஞர்களுக்கு ஓர் படிப்பினையாகவும் இதுவே இனிவரும் நாட்களிலும் தொடர்கதையாகியும் விடக்கூடாது என்பதற்காகவே இந்திய இணையமொன்றில் படித்தவற்றைக் கொண்டு தொகுத்து தருகின்றோம்.

                   

அது தமிழக வரலாற்றில் கொடூரமான காலகட்டம் 1835-40. நிலப்பிரபுத்துவ முறை, சாதிக் கொடுமைகள், கோரப் பஞ்சம், துரத்தும் வறுமை.

பல்லாயிரக் கணக்கானோர் பசியால் உயிர்துறந்த காலகட்டம். இந்த காலகட்டத்தை வசமாக பயன்படுத்துவதற்கு ஆங்கிலேயர்கள் எண்ணம் கொண்டனர்.

இந்தியாவையும் இலங்கையையும் ஆண்ட அவர்கள், இலங்கையில் தங்களால் நடத்தப்பட்ட கோப்பி , தேயிலை, ரப்பர் தோட்டங்களுக்கு தேவையான தொழிலாளர்களை எப்படி பெற்றுகொள்வது என்று திண்டாடிய நேரத்தில் வசமாய் அவர்கள் முன் மாட்டிகொண்டவர்களே இந்த மலையக வம்சாவளிகள்.

நல்ல வேலை, நல்ல சாப்பாடு, நல்ல கூலி என்று ஆசை காட்டி கொஞ்சம் பணத்தை முற்பணமாகக் கொடுத்து வேலைக்கு தேவையானவர்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து செல்வதுதான் இவர்களது குறிக்கோள்.

இந்த அப்பாவி ஏழைகள் தனுஷ்கோடி வரை கால்நடையாகவே நடத்திச் செல்லப்பட்டார்கள்.அங்கிருந்து தோணிகள் மூலம் கடல் கடந்து, மீண்டும் கால்நடையாகவே இலங்கையின் தோட்டங்களுக்கு நடத்திச் செல்லப்பட்டனர்.

               

இவ்வாறு  ஆங்கிலேயர்களின் ஆசை வார்த்தைக்குள் அகப்பட்டு
நடைப்பயணத்தின்போதே பலர் இறந்து போயினர். பணத்தாசையின் காரணமாக, கங்காணிகள் 100 பேரை ஏற்ற வேண்டிய தோணிகளில் 500 பேர், 1,000 பேர் வரை ஏற்றிச் சென்றதால் கனவுகளோடு பயணித்த இவர்கள் வாழ்க்கை கடல் நடுவே கண்ணீரோடு காவியமானது.

இப்படி ஆயிரக் கணக்கான ஏழைத் தமிழர்களுடன் பயணித்த ‘ஆதிலட்சுமி' கப்பலும் கரைசேர்வதற்கு முன்பாகவே கடலில் மூழ்கியது. 1841-49-க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் 70 ஆயிரம் தமிழர்கள் இப்படிப் பலியானதைப் பதிவுசெய்திருக்கிறது ‘கொழும்பு அப்சர்வர்' பத்திரிகை.

இங்கிருந்து சென்றவர்கள் கண்டி, ஹட்டன், மாத்தளை, புசல்லாவ, நுவரேலியா என மலையகத்தின் அழகுக்கு அத்திவாரம் கொடுக்கும் முனைப்பில் பல்வேறு இடங்களிலும் அடர்வனங்களைத் திருத்திப் பெருந் தோட்டங்களாக மாற்றியமைத்தார்கள்.

மலைகளில் போக்குவரத்துக்காக வீதிகளை  உருவாக்கினார்கள். சுரங்கங்களை வெட்டி ரயில் பாதை உருவாக்கினார்கள். கடுங்குளிரிலும் பனியிலும் ஓயாத மழையிலும் அட்டை, பூரான்களின் அவஸ்தைகளுக்கு மத்தியில் ஒரு நாளுக்கு  12 மணி நேரம் வரை உழைத்தார்கள். ஆனால், இவர்கள் வாழ்நிலையோ குரூரமான கொத்தடிமைகளின் நிலையிலேயே இருந்தது.

         

தனிமனித சுதந்திரமோ,தொழிலாளர் உரிமைகளோ அன்றி ஆங்கிலேயரின் ஆசை வார்த்தைகளை நம்பி அல்லும் பகலும் அடிமைகளாய் சொல்லொன்னா துயரங்களை சந்திக்க ஆரம்பித்தார்கள்.

இலங்கையின் பொருளாதாரத்தைத் தங்கள் தோளில் சுமக்க ஆரம்பித்தார்கள்.நாட்டின் பொருளாதாரத்தையே தங்கள் தோள்களில் சுமக்க ஆரம்பித்தவர்களை வந்தேறு குடிகளாய் நோக்க ஆரம்பித்தார்கள் இலங்கையின் ஏனைய பகுதி மக்கள்.

இந்த நிலையில் ஆங்கிலேயர்களால் அங்கிருந்து அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் 1935 காலகட்டத்தில் அநீதிகளை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர்.

இலங்கையிலிருந்து மலையகத் தமிழர்களைத் கண்டுகொள்ளாத அரசு, ஒருகட்டத்தில் 10 லட்சம் மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கியது. ஏறத்தாழ 130 ஆண்டுகளாக இலங்கைக்காக உழைத்தவர்கள் நாடற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த 10 லட்சம் பேரையும் இந்தியாவுக்கு அனுப்ப முயன்றது இலங்கை. இந்தியாவோ ஏற்க மறுத்தது. ஒருகட்டத்தில் வேறு வழியில்லாமல், கிட்டத்தட்ட ஆளுக்குப் பாதி என்பதுபோல, இரு அரசுகளும் ஒரு ஒப்பந்தத்தைச் செய்தன. இதன்படி 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள்.

1964-ல் இலங்கை பிரதமர் சிறீமாவும், இந்தியப் பிரதமர் சாஸ்திரியும் செய்துகொண்ட ஒப்பந்தம் அக்டோபர் 30 திகதியோடு  50 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது.

            

இந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் 50 ஆண்டுகளை கடந்தாலும் இன்னும் மலைய மக்களின் வாழ்வில் சுபீட்சம் எட்டவேயில்லை.

மலையக மக்களின் வாக்குளில் சொகுசு வாழ்க்கை நடத்தும் அரசியல் தலைகள் இனிமேலாவது கொஞ்சம் சிந்திக்கட்டும்.

மலையக மக்களின் அடிப்படைதேவைகள் அபிவிருத்தி கண்டு அவர்களும் சற்றேனும் சிந்திக்க ஆரம்பிப்பார்களானால் அங்கு அரசியல் செய்ய முடியாது என்பதை நன்கு அறிந்து தெரிந்தவர்களுக்கு அப்பகுதியின் அனர்த்த எச்சரிக்கை அறிந்து ஏன் ஒரு மாற்று வாழ்விடத்தை அமைத்துக் கொடுக்க இயலாது போனது என்பதுதான் இப்போது வலுப்பெற்றிருக்கும் முதன்மை கேள்வியாகிறது.

ஊவாவில் நடந்து முடிந்த தேர்தலின் போது, இன்று இன்னலுறும் அந்த மக்கள் வீடுதேடி வாக்கு வேட்டைக்காக மட்டுமாவது அந்த அரசியல் தலைமைகள் அங்கு செல்லாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று வாய்விட்டு அழுது புலம்பும் உறவுகளை தேடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதால் மட்டும் அவர்கள் தேவைகள் முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை.

இது இத்தோடு முடியட்டும்,இனிமேலாவது இப்படியான அனர்தத்திற்கு மலையக மக்கள் முகம் கொடுக்காமல் இருக்க இவர்களுக்கு இறைவனாவது உதவுவானா என்றே எண்ணத் தோன்றுகின்றது.

மண்ணோடு மண்ணாகி போன மலையக மனித இனத்தின் இந்த கறைபடிந்த இந்த சோக வரலாறு முடிவாகி, லயத்து வாழ்க்கை முறைமை ஒழிக்கப்பட்டு நிரந்தர வீடுகள் கட்டிகொடுக்க வேண்டும், அவர்கள் குறைகள் முற்றாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது தீர்க்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய எல்லோருடைய பிரார்த்தனையுமாகும்.

                                          
* த.ஹிந்து இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது .

*தில்லையம்பலம் தரணீதரன்.
10,981 Views
தல அஜித்தின் 'என்னை அறிந்தால்'வெளியாகும் திகதி அறிவிப்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், த்ரிஷா, அனுஷ்கா ,அருண் விஜய் ஆகியோர் நடிபில் உருவாகும் படம் ‘என்னை அறிந்தால்’

வெகுகாலமாக பெயர் வைக்கப்படாமல் தல55 என்று அழைக்கப்பட்ட படம் இப்போது 'என்னை அறிந்தால் 'என்று பெயர் வைக்கப்பட்டது.

இப்போது இந்த படத்தலைப்பு வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கின்ற ஒரு 'A' சகீலா நடித்த படமொன்றின் தலைப்பு என்ற சர்சையும்   கிளம்பியிருக்கின்றது.

எது எவ்வாறாயினும் இந்த படத்தின் இசை வெளியீடு,Teaser, படம் வெளியிடப்படும் திகதி என்பன அறிவிப்பது பற்றிய திகதிகள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 20 முதல் 24 ம் திகதிக்குள் Teaser வெளியிடப்படும் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்திலும் வெளியாகவுள்ளது.

டிசம்பர் இறுதிப் பகுதியில் அல்லது பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் இப்போது படக்குளுவினர் அறிவித்துள்ளனர்.

*T.T
13,132 Views
2014 - சனிப் பெயர்ச்சி பலன்கள் சூரியனுக்காக கணித்தவர் - தெஹிவளை வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் 'விஷ்ணு சாகரம்' - சத்திய நாராயண குருக்கள்.
 

1.மேஷ ராசி நண்பர்களே. 


 
உங்கள் ராசிக்கு 7 ல் இருந்து சனி இதுவரை குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை கொடுத்திருப்பார். கருத்து வேறுபாடு காரணமாக சில நேரங்களில் குடும்பம் பிரிந்திருக்கலாம். தீயோர் சேர்க்கை உங்களை அவப்பெயருக்கு உள்ளாக்கியிருக்கும். இதனால் பணவிரயம் ஏற்பட்டிருக்கும். இப்படி கெடு பலன்களைத் தந்த சனி இப்போது 8 ம் இடத்திற்கு சென்றுள்ளார்.
அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மைதர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்களிடையே மனக்கசப்பும் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். இவையெல்லாம் அஷ்டமத்தில் சனியின் பொதுவான பலன்கள் தான். ஆனால் இந்த கேடு பலன்கள் இப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் கோச்சார பலன்களைப் பார்க்கும் போது, சக்தி கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் இப்போது குரு பகவான் 4ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது, பொதுவாக குரு பகவான் 4 ல் இருக்கும் போது, மன உளைச்சல், உறவினர்களின் வீண் பகை என்பவற்றை உருவாக்குவார். ராகு தற்போது 6 ம் இடமான கன்னி ராசியில் இருக்கின்றார். இதனால் நன்மை கிடைக்கும், குடும்பத்தில் இருக்கின்ற குழப்பங்கள் வெகுவாக குறையும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வார். முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். காரியத்தில் வெற்றியை காணலாம். பகைவரின் சதியை முறியடிக்கும் திறனை பெறுவீர்கள். 
உங்கள் ஆற்றல் மேம்படும். 
 
பரிகாரம்
சந்தர்ப்பம் கிடைக்கும் போது, நவக்கிரகங்களைச் சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும். சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வசதி படைத்தவர்கள், ஆடை வழங்கி உதவி செய்யுங்கள். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்குங்கள். மேலும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். சன்னியாசிகளுக்கு உதவி செய்யுங்கள். காக்கைகளுக்கு அன்னமிடுங்கள். 
 
 
 
2.ரிஷப ராசி அன்பர்களே


 
இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் இடமான துலாமில் இருந்து. பல்வேறு நன்மைகளைத் தந்தார். குறிப்பாக நல்ல பணப்புளக்கத்தையும், பிடித்த காரியத்தில் வெற்றியையும் கொடுத்திருப்பார். மேலும் உங்களுக்கு அபார ஆற்றலைத் தந்திருப்பார். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் மாற்றியிருப்பார். உடல்நலத்தையும் சிறப்பாக பாதுகாத்திருப்பார். இந்த நிலையில் சனிபகவான் 7 ம் இடமாக விருச்சிகத்துக்கு செல்கின்றான். இது சிறப்பான இடமல்ல. அவரால் முன்பு போல நற்பலனைத் தர முடியாது. பொதுவாக சனி இந்த இடத்திலிருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். அலைச்சல் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம் என்பது பொதுவான பலன்கள். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமான நிலையில் இல்லாவிட்டாலும், ஏனைய கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். கோச்சார பலனைக் கணக்கிடும் போது மற்றைய கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொண்டு கணிக்க வேண்டும் அந்த வகையில் முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது ஆகியோரின் நிலை பொதுவாகும். குருபகவான் 3 ம் இடத்தில் உள்ளார். பொதுவாக குரு 3 ம் இடத்தில் இருக்கும் போது முயற்சிகளில் தடை ஏற்படும். பணி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். தற்போது ராகு 5 ம் நிலையான கன்னியிலுள்ளார். 5 ம் இடமாக அங்கு அவரால் நன்மை தர இயலாது. அதானால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். 
 
பரிகாரம்.
 
பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். குரு பகவான் சாதகமாக இல்லை என்பதால், அவருக்கு அர்ச்சனை செய்யலாம். முல்லை மலர் மாலை அணிவித்து வணங்குங்கள். ஊனமுற்றோருக்கு ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு நன்மைத் தரும். 
 
 
 
 
3.மிதுன ராசி அன்பர்களுக்கு


 
இதுவரை உங்கள் ராசிக்கு சனி பகவான் 5ம் இடத்திலிருந்து 6 ம் இடத்திலுள்ள விருச்சக ராசிக்கு சென்றுள்ளார். அவர் 5 ல் இருக்கும் போது பல்வேறு இடையூறுகளைத் தந்திருப்பார். குறிப்பாக குடும்பங்களில் பிரச்சினைகளைத் தந்திருப்பார். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவியிடையே பிரிவு ஏற்பட்டிருக்கும். இந்த நிலையில்தான் சனிபகவான் துலாம் ராசிக்கு அடி எடுத்து வைக்கின்றார். இங்கு நல்ல பணப்புழக்கத்தையும் காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். மேலும் சனி 10 ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும் காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுப்பார். கோச்சார பலனைக் கணக்கிடும் போது மற்றைய கிரகங்களையும் கவனித்தில் கொண்டு கணிக்க வேண்டும். அந்த வகையில் முக்கிய கிரகங்களான குரு, ராகு, கேது. இப்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 ம் இடத்தில் இருக்கின்றார். உங்கள் ஆற்றல் மேம்படும். உங்கள் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். ராகு தற்போது கன்னி ராசியில் இருக்கின்றார். இங்கு அவரால் நன்மை தர இயலாது தோள் உபாதையைத் தரலாம். வீட்டில் பொருள்கள் களவு போக வாய்ப்புண்டு. 
 
பரிகாரம்
 
ராகு, கேது அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். பௌர்ணமி நாளில் வீட்டில் விளக்கேற்றி சித்திரபத்த நாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். 
 
 
 
 
4.கடக ராசி அன்பர்களே


 
இதுவரை சனிபகவான் 4 ம் இடத்திலிருந்து வெவ்வேறு பிரச்சினைகளை தந்திருப்பார். உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல் நலம் பாதிப்படைந்து உங்களைக் கவலைக்குள்ளாக்கியிருக்கும். இந்த நிலையில் சனிப்பெயர்சி இடம்பெறுகின்றது. சனி பகவான் 5 ம் இடத்திற்கு மாறுவது போல இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் 4 ம் இடத்திலிருந்ததை போன்று பின்தங்கிய பலன்களை தர மாட்டார். 5 ம் இடத்தில் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில சிக்கல்கள் ஏற்படும்.  அவர் திருப்தியற்ற நிலையிலிருந்தாலும், அவரின் 7 ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் மற்றைய கிரகங்களாக இருந்தாலும் நன்மைகள் கிடைக்கும். 
 
பரிகாரம்
வியாழக்கிழமை தட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். தற்போது கொண்டை கடலை வாங்கி தானம் செய்யலாம். சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணைத் தீபம் ஏற்றுங்கள். துர்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றவும்.  கேதுவுக்கு நீல நிற வஸ்திரத்தால் சாற்றி அர்ச்சனை செய்யுங்கள். இது நன்மை தரும். 
 
 
 
 
5.சிம்ம ராசி அன்பர்களுக்கு.


 
இதுவரை சனிபகவான் 3ம் இடத்திலிருந்து பல்வேறுபட்ட நன்மைகளைத் தந்தார். குறிப்பாக பொதுவாக பொருளாதார வளர்ச்சியைத் தந்திருப்பார். முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றிருப்பார். இந்த நிலையில் சனி பகவான் 4 ல் அடியெடுத்து வைக்கிறார். இந்த நிலை அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4 ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண் கஷ்டத்தைக் கொடுப்பார்.ஊர் விட்டு   ஊர் செல்லும் நிலை ஏற்படும்.தாயை  பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இவையெல்லாம் பொதுவான பலன்கள். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும். அவரது 3 ம் இடத்துப் பார்வை மிக சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிகவும் சாதகமான நிலை. 
 
பரிகாரம்.
 பத்திரகாளி அம்மன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது நவக்கிரகங்களைச் சுற்றி வலம் வாருங்கள். பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றலாம். வியாழக்கிழமை தட்சனாமூர்த்திக்கு மஞ்சள் மாலை அணிவித்து வழிபடுங்கள். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். 
 
 
 
 
6.கன்னி ராசி அன்பர்களே


 
இது உங்களுக்கு மிக சிறப்பான காலம். ஏழரை சனி பிடியிலிருந்து பூரணமாக விடுபட்டுவிட்டீர்கள். சனி பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களைத் தரவுள்ளது. ஏழரை சனி காலத்தில் பட்ட துன்பங்கள் கணக்கிலடங்காது. தொட்டதெல்லாம் தோல்வியின் நிலையே ஏற்பட்டிருக்கும். குடும்பத்தில் பல்வேறுபட்ட பிரச்சினையிருந்திருக்கும். சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்தே சென்றிருப்பார்கள். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு போயிருக்கும்.  இந்த நிலையில் இப்போது சனி பகவான் 3 ம் இடத்திற்கு மாறியுள்ளார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சி'கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்து ஓங்கச் செய்வார். குரு பகவான் இப்போது 11ம் இடத்தில் இருப்பதனால். இது உங்களுக்கு உன்னதமான நிலை. 
 
பரிகாரம்.
 
கேதுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். ராகுக்கு அர்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு சிறந்த உயர்வைத்தரும். ராகு காலத்தில் வைரவருக்கும் தயிர்சாதம் படைத்து வழிபடுங்கள். வியாழக்கிழமை தட்சனாமூர்த்தியை வழிபடுங்கள். 
 
 
 
 
7.துலா ராசி அன்பர்களுக்கு. 


 
உங்களுக்கு சனி பகவான் கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான சிக்கல்களையும் பிரச்சினைகளையும் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உங்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தியிருப்பார். வேலைப்பழு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது. தொல்லைகளே மிஞ்சிருக்கும். உங்களின் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு உதவி ஏதும் செய்திருக்க மாட்டார்கள். வீண் அலைச்சல் உங்களுக்கு மனச் சோர்வைத் தந்திருக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பீர்கள். இந்த நிலையில் சனி பகவான் 2ம் நிலைக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடமல்ல. ஆனால் மேலே சொன்ன போக்கான பலன்கள் இனி நடக்காது. ஏழரைச்சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2 ம் இடத்திலிருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருளாதார இழப்புகள் ஏற்படும். களவு கொடுக்க நேரிடும். இது பொதுவான விதி. ஆனால் மற்றைய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் . கடந்த இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிக்கட்டம் இந்த காலகட்டத்தில் சனி அதிக பலனைக் கொடுத்தாலும். அதற்கான பலனையும் தர தயங்கமாட்டார். மேலும் சனி பகவான் இந்த இடத்திலிருந்து 3 ம், 10 ம் இடங்களைப் பார்பார். அவரது 10 ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கும். இதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். 
 
பரிகாரம்
சனிக்கிழமை சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமை சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். தட்சனாமூர்த்தியை கொண்டை கடலை படைத்து வணங்குங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், சிறுவர்களுக்கும் உதவி செய்யுங்கள். 
 
 
 
8.விருச்சிக ராசி அன்பர்களே. 


 
உங்களுக்கு சனி பகவான் நல்லது தரும் காலம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே சனிபகவானால் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். குறிப்பாக. பொருள் நாசம். வீண் அலைச்சல், காரிய கைகூடாமை, மன உளைச்சல் போன்ற இன்னல்களை கண்டிருக்கலாம். இப்போது சனி பகவான் 12 ம் இடத்திற்கு வருகிறார். இது சனியின் உச்சக்கட்டம். இதற்காக கவலைகொள்ள வேண்டாம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலம். உடல் பாதிக்கப்படலாம். உறவினர்கள் மத்தியில் வீண் மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகின்றது. இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். மற்ற கிரகங்களால் நன்மைக் கிடைக்கும். சனி பகவான் நிற்கும் இடத்திலிருந்து 3ம், 7ம், 10ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3 ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் ஏற்படுத்துவார். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழில் வளர்ச்சியும் தருவார். 
 
பரிகாரம்.
சனிபகவானுக்கு  நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வணங்கி வாருங்கள். ஊனமுற்றோருக்கு உதவி செய்யுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும் உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுங்கள். 
 
 
 
9.தனுசு ராசி அன்பர்களேசனி பகவான் இதுவரை 11ம் இடத்திலிருந்து பல்வேறு நன்மைகள் தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருந்திருக்கும். பொன் பொருள் என வாங்கியிருப்பீர்கள். இப்போது சனி பகவான் 12ம் இடமான விருச்சக ராசிக்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்பு போல நன்மைகளை எதிர்ப்பார்க்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனியின் ஆரம்ப காலம். சனி 12ம் இடத்திலிருக்கும் போது பொருளாதார இழப்பு ஏற்படும். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு இதனால் நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும். சனியின் 7ம் இடத்துப் பார்வை ரிஷபத்தில் விழுவதால், அவர் நல்ல பொருளாதார வளர்ச்சியைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்க்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். இதுதவிர மேலும் மற்றைய கிரகங்களான குருவும் ராகுவும் அவ்வப்போது நன்மைகளைத் தருவார். விரைவாக செல்லும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்களினாலும். நன்மை கிட்டும். அந்த வகையில் மற்ற கிரகங்களை விட உங்களுக்கு நல்ல காலம் உண்டு. 
 
பரிகாரம். 
பத்திரகாளி அம்மனுக்கு விளக்கேற்றுங்கள். வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். சனி பகவானுக்க அர்ச்சனை செய்யுங்கள். உங்களுக்கு ஆஞ்சனேய வழிபாடு உறுதுணையாக இருக்கும். 
 
 
 
10.மகர ராசி அன்பர்களே


 
கடந்த பல ஆண்டுகளாக சனி பகவான் குறிப்பாக பல இன்னல்னளைத் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக உடல்நிலை உபாதைகளும். தொழில் மந்த நிலையும். உங்களுக்கு கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கௌரவம் போன்றவற்றிற்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்காது.  ஆனாலும் கடந்த சில வாரங்களாக குரு பகவானும் கேதுவும் நன்மை தந்து உங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் தான் சனி பகவான் இப்போது 12ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம்.அவரால் பொன் பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். இது உங்களுக்கு சிறந்த காலம். படிப்படியாக முன்னேற்றம் காணும் காலம். 
 
பரிகாரம். 
 
சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழக்கிழமை தட்சணா மூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வைரவர் வழிபாடு சிறப்பைத்தரும். 
 
 
 
 
11.கும்ப ராசி அன்பர்களே


 
இதுவரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9வது இடத்திலிருந்தார். அவர் முயற்சிகளில் பல்வேறு தோல்விகளைத் தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் ஏற்பட்டிருக்கும். சிலர் எதிரிகளுக்கு அடங்கிப் போயிருப்பார்கள். உறவினர்கள் நண்பர்களிடம் மனத்துவேசம் உருவாகி அது பகையாக மாறியிருக்கலாம். இந்த நிலையில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 10ம் இடத்திற்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்துவந்த தடைகள் அகலும் ஆனால் தொழில்களில் சில சில பின்னடைவுகள் ஏற்படும். உங்கள் செல்வாக்கு முன்போல இல்லாமல் போகலாம். இதுதவிர சனி 10ம் இடத்திலிருக்கும் போது பொதுவான பலன்களைத் தரும். இதைக்கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். வேறு கிரகங்கள் நன்மை தர காத்திருக்கின்றன. முக்கிய கிரகங்களான குரு, ராகு ஆகியவற்றின் நிலையால் முன்னேற்றம் ஏற்படும்.  
 
பரிகாரம். 
 
குரு பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வந்தால் தடைகள் அகலும். ஞானிகளை சந்தித்து காணிக்கை கொடுத்து ஆசிபெறுங்கள்.
 
 
 
 
12.மீன ராசி நண்பர்களே


 
இதுவரையில் சனிபகவான் அஷ்டம் எனும் இடத்தில் 8 ம் இடத்திலிருந்து பல கஷ்டங்களைத் தந்திருப்பான். குறிப்பாக குடும்பத்தில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு வந்திருக்கலாம் .அவர்களிடையே விரிசல் ஏற்பட்டு விரிசல் நிலை வந்திருக்கும். உறவினர்கள் பகையில் மனக்கசப்பு உருவாகியிருக்கும். உங்கள் முயற்சிகளில் தடை வந்து நீங்கள் நினைத்தது செய்ய முடியாது போயிருக்கும். சனி இந்த பிரச்சினையோடு மட்டும் இருந்திருக்காது. கடந்த சில காலங்களாக முக்கிய கிரகங்களும் இந்த நிலமையில் தான் இருந்திருக்கும். இந்த நிலையில் சனிபகவான் 09 ஆம் இடமான விருட்சிக ராசிக்கு வந்துள்ளான். மிகவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல கொடுமை நிலைக்கு விடமாட்டார். பொதுவாக சனி 09 ம் இடத்தில் இருக்கும் போது உங்கள் முயற்சிகள் தடைப்படலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுபட்டு போகும் நிலை உருவாகும் என்று சோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 
இந்த கெடுபலன்கள் அப்படியே நிலவும் என்று எண்ண வேண்டாம். கோச்சார பலனை கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையினையும் கருத்தில் கொள்ள வேண்டும் 
அந்த நிலையில் அவ்வப்போது நன்மை கிடைக்கும். 
 
சனிபகவான் சாகதமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தாம் இருக்கும் நிலையில் இருந்து 3ம், 7ம் , 10ம் இடங்களை பார்ப்பார். அந்த 03 பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. எனவே சனிப்பெயர்ச்சி காலம் சிறப்பானதாக அமைகிறது. 
 
பரிகாரம்
பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுங்கள். குரு பகவான் சாதகமாக இல்லையென்பதால் அவருக்கு அர்ச்சனை செய்யலாம். மலர்மாலை அணிவித்து வணங்குங்கள். சனிபகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள். ஆஞ்சநேயரை வணங்குங்கள். மேலும் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள் அது உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
 

சூரியனுக்காக கணித்தவர் -
தெஹிவளை வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் 'விஷ்ணு வித்யாசாகரம்' - சத்திய நாராயண குருக்கள்.
 
56,551 Views
இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பு, கவர்ச்சி குண்டு ஆன ஷகீலாவின் படங்களுக்கு வைக்கப்பட்ட தலைப்புக்களை அஜித்தும் விஜய்யும் தங்கள் படங்களுக்கு வைக்கப்பட்டது தான்.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் பெயர் நீண்ட காத்திருப்பின் பின்னர் கடந்த வாரம் வெளியாகி பரபரப்பானது.

இதற்கிடையில் யாரோ ஒருவர் 'என்னை அறிந்தால்' என்ற இந்தப் பெயரில் முன்பே ஷகீலா நடித்த படம் ஒன்று வந்திருப்பதாக கிளப்பிவிட, போட்டிக்கு அஜித் ரசிகர்கள் 'வசீகரா' என்ற பெயரிலும் ஷகீலா நடித்த படம் இருப்பதை தேடிஎடுத்து இணையவெளியில் பரப்பியுள்ளார்கள்.

எங்கிருந்து தான் வர்றாங்களோ?


- சினி CID
45,344 Views
ஒரே நாளில் ஒரு மில்லியன்-லிங்கா  Teaser.

K.S . ரவிக்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் சொனாக்க்ஷி சிங்கா நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்றுள்ள 'லிங்கா'திரைப்படத்தின் teaser நேற்றைய நாளில் you tube தளத்தில் நேற்று வெளியானது.  

ஏற்கனவே கோச்சடையான் படத்தின் போஸ்டர் டீசரும் முதல் நாளில் ஒரு மில்லியனைத் எட்டிய நிலையில் இப்போது 'லிங்கா' வும் சாதித்திருக்கிறது.

http://sooriyanvideos.sooriyanfm.lk/index.php?page=videos-watch&id=547

ஆயினும் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த  'ஐ' படத்தின் டீசர் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டு முதல் நாளில்  23 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்படமை குறிப்பிடத்தக்கது.

*T.T
7,024 Views
அஜித் கரம் பிடிக்க ஆசைப்படும் ஹன்சிகா!

தல55 என்று அறியப்பட்ட அஜித்தின் படத்திற்கு இப்போது 'என்னை அறிந்தால் 'என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  

மிக நெடுகாலம் பெயரின்றியே பேசப்பட்ட இப்படம் இனிவரும் நாட்களில் 'என்னை அறிந்தால்'என்ற படப் பெயர் மூலமாக ரசிகர்களால் பேசப்படும் என்ற நம்பிக்கையில் எல்லோரும் காத்திருக்கின்றோம்.

இப்படியிருக்க அஜித்தின் அடுத்த படத்துக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.’வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படத்தில் நாயகியாக ஹன்சிகா, ஸ்ருதி ஹாஸன், சமந்தா இந்த  மூவரில் யாரேனும் நடிக்கலாம் என்று செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

அஜித் போன்ற ஒரு மாபெரும் நடிகருடன் நடிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அது மிகப்பெரும் வாய்ப்பு என்று சமூக வலைத்தளத்தில் ஹன்சிகா இப்போது பதில் கொடுத்துள்ளார்.

சந்தானம் மட்டுமே இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுள்ள நிலையில் வெகுவிரைவில் கதாநாயாகி பெயர் உத்தியோகபூர்வமாய் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது.

*T.T
7,118 Views
பின்லேடன் எப்படி கொல்லப்பட்டார்??
கசியும் பரபரப்பு தகவல்கள்.

ஒசாமா பின்லேடன் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல? இப்படி ஒருகாலம் இருந்தது அமெரிக்காவுக்கு.

11/09/2001 அன்று அமெரிக்காவின் பெண்டகன் தகர்க்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு மூலகாரணம் ஒசாமா பின்லேடன். இவரை பிடிப்பதற்கான பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 2011ம் ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ரகசிய வீட்டில் பதுங்கிருந்தபோது, அமெரிக்காவின் சீல் படைபிரிவு வீரர்களால் சுட்டு கொல்லபட்டார். இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் .ஆனால், பின்லேடனை சுட்டது யார் என்பதையும், யாரெல்லாம் அந்த படையில் இருந்தனர் என்பதை அமெரிக்கா இதுவரை சொல்லவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க சீல் படைப் பிரிவில் இடம் பெற்றிருந்த பின்லேடனை, நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை முதல் முறையாக வெளிப்படுத்தவுள்ளார்.

பாக்ஸ் தொலைகாட்சியில் தன்னை வெளிப்படுத்த உள்ளார்.
"The Man Who Killed Osama Bin Laden" என்ற ஆவணப்படம், நவம்பர் மாதம் 11,12ம் திகதிகளில் இரண்டு பாகமாக ஒளிபரப்பாக உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் இதுவரை வெளிவராத பல முக்கியத் தகவல்கள் இடம்   இடம்பெறவுள்ளதாம். மேலும் பின்லேடனுடன் நடந்த மோதலின் அந்த பரபரப்பு தருணங்கள் குறித்தும், அந்த வீரர் விரிவாக பேசப் போகிறாராம்.

பின்லேடனை நேரில் பார்த்தது, அவருடன் நடந்த மோதல், சாகும் முன்பு பின்லேடன் பேசியது உள்ளிட்ட அனைத்தையும் சொல்லப் போகிறாராம் அந்த வீரர்.

இணையத்தில் இருந்து திரட்டியதை தொகுத்து தந்தவர்
                                       -வர்ஷி-

12,356 Views
இயற்கை அனர்த்தத்திற்கும், பேரவலத்திற்கும் குறைவில்லாத நிலையை எதிர்நோக்கியுள்ளது நம்நாடு. தற்போது நிலவும் அசாதாரணமான காலநிலை, மலையகத்தை மட்டுமன்றி கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 
                                                       ஒரு சில மாதங்களுக்கு முன் நிலவிய கடும்வரட்சி, தற்போதைய தொடர்ச்சியான அதிக மழைவீழ்ச்சி, அதீத காற்றின் வேகம், கடற்கொந்தளிப்பு,மண்சரிவு என்பவற்றினால் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுமே ஏதோவொரு இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

                            இந்தநிலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு மலையகமே கலங்கிப்போயுள்ள நிலையில், தற்போது கொட்டிக்கொண்டிருக்கும் மழையால் முக்கியமான சில நீர்நிலைகளான மேல் கொத்மலை, காசல் ரீ, தெதுரு ஓயா போன்றவற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால்  களனிகங்கை, களுகங்கை, அத்தனகல ஓயா  என்பன பெருக்கெடுக்கும் அபாயமும் அந்த நீர்நிலைகளை அண்டி வாழ்கின்ற மக்களை நோக்கி வரவுள்ளது.
 
                                            இதேவேளை, "ஹுட்ஹுட்" சூறாவளி இந்தியாவை தாக்கி, வலுவிழந்து விலகிச்சென்றுள்ள நிலையில், அரபிக்கடலில் உருவான "நிலுபர்" எனும் மற்றுமொரு சூறாவளி 130கிலோ மீற்றர் வேகத்தில் இன்று வட இந்திய குஜராத் மாநிலத்தை தாக்கவுள்ளது. இதன் தாக்கம் நமது நாட்டு காலநிலையிலும் ஏதாவது தாக்கங்களை ஏற்படுத்துமா என அவதானம் செலுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

                                         இது இவ்வாறிருக்க,இன்றும் 150மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமையும் இங்கே நோக்கத்தக்கது. 
3,409 Views

இருக்கிற அக்கப்போர்களுக்கிடையே இந்த
'NASA Confirms 6 Days of Total Darkness' - டிசம்பரில் ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு
என்றொரு பொய்ப்புரளியை கிளப்பிக்கொண்டு ஒரு கூட்டம்.

எவனாவது எதையாவது நாசா, கீசா, பூசா என்று சொல்லிட்டா, உடனே அதை அங்கே, இங்கே உறுதிப்படுத்தாமல் பகிர்ந்திட வேண்டியது.

நாசா அப்படியொரு செய்தியை வெளியிடவுமில்லை.
அப்படி பூமி 6 நாட்களுக்கு இருளாவதற்கு சாத்தியமும் இல்லை.
இதை நாசாவே அறிவித்துள்ளது.

NASA: Viral news on days of darkness in December is hoax
http://www.techtimes.com/articles/18813/20141028/nasa-viral-news-on-days-of-darkness-in-december-is-hoax.htm

http://www.hoax-slayer.com/fake-news-nasa-6-days-darkness.shtml

இதே வதந்தியை வேலையற்ற யாரோ / satire website 2012இலும் பரப்பியிருந்தார்கள்.
''David Morrison, Senior Scientist, Astrobiologist at NASA’s Ames Research Center

Cut 11- TRT 00:11 “There is a recent internet rumor that NASA has confirmed that there will be three days of total darkness on the earth, starting December 22. Well, NASA didn’t say that, nobody said it. It’s just another crazy idea.”

http://www.nasa.gov/news/media/audiofile/Doomsday.html

இந்தச் செய்தியை வெளியிட்ட எந்த இணையத்தளமாவது நாசா உத்தியோகபூர்வ தளத்தை எட்டியாவது பார்த்திருப்பார்களா ?

அதுசரி, யாராவது ஒருவர் பகிர்வதை அப்படியே எடுத்து, நன்றி - இணையம் போடுவோர் தானே?

நீங்கள் சமூக வலைத்தளங்களில் எதைப் பகிர்வதாக இருந்தாலும், பகிர முதல் பகிரும் மூலங்களை ஆராயுங்கள்.
எல்லா இணையத்தளங்களையும் நம்பாதீர்கள்.

-A.R.V.லோஷன்

19,439 Views
நாடுமுழுவதும் கவலையுடன் கூடிய பரபரப்பாக பேசப்படுகின்ற விடையமாக மாறியுள்ளது பதுளை-கொஸ்லந்த-மீரியபெத்த தோட்டத்தில் நிகழ்ந்த,சீரற்ற காலநிலையுடனான பல உயிர்களைக் காவுகொண்ட பாரியதொரு மண்சரிவு அனர்த்தம்.

நாட்டின் முப்படையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அளவிற்கு, பாரிய அளவிலான அனர்த்தமாக உள்ளது. அத்துடன் மழையுடன் கூடிய காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலநிலை மேலும் கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும்  செய்திகள் கூறுகின்றன.

                                                                       பாதிப்புக்குள்ளான மீரியபெத்த தோட்டத்தில் 57 குடும்பங்களைச் சேர்ந்த 330பேர் வாழ்ந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இந்தநிலையில்,தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மீட்புப்பணியில் இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 192பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாகவும், 63 வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கின்றது.

 இந்த மண்சரிவு மற்றும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த கொஸ்லந்த பிரதேசமக்கள் 920 ற்கும் அதிகமானோர் இரண்டு பிரிவுகளாக கொஸ்லந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும், பூனாகலை 1 தமிழ் மகாவித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டு நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் செய்திகள் கிடைக்கின்றன.

இதேவேளை, பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ளும் சாத்தியம் காணப்படுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிக்கின்றமையும் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடையமாக மாறியுள்ளது.

இதுபற்றிய மேலதிக செய்திகளை சூரியன் செய்திகள் விரைவாகவும் விரிவாகவும் உடனுக்குடன் தந்துகொண்டிருக்கின்றது.

இயற்கையின் கோர முகம் - இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய பதுளை மண் சரிவு
*கணேஷமூர்த்தி ராகவன்
(சூரியன் செய்திப் பிரிவின் தகவலின் அடிப்படையில்)

6,036 Views
கத்திக்கு 100 கோடி .

சர்ச்சைகளால் பேசப்படும் கத்தி இப்போது வசூலாலும் வாகை சூட ஆரம்பித்திருக்கின்றது.

கடந்த புதன்கிழமை தீபாவளிக்கு திரைக்கு வந்த கத்தி முதல் நாளிலேயே நல்ல வசூலை கொடுத்தது.

இந்த நிலையில் இதுவரையான வசூல் நிலவரப்படி A.R முருகதாசின் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் முதல் வாரத்தில் மட்டும் 82 கோடியை வசூலித்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

வெகுவிரைவில் இந்த படம் 100 கோடியை எட்டும் என்ற ஆர்வத்தில் படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.

இதேவேளை உலகம் முழுவதும் 5000 க்கும் அதிகமான திரை அரங்குகளில் திரையிடப்பட்ட ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ‘Happy New Year' நான்கு நாட்களில் மட்டும்  200 கோடி ரூபா வசூலைத் தொட்டு புதிய சாதனைப் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

*T.T
14,911 Views
[1]      «      596   |   597   |   598      »      [618]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top