Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார், அந்த சிகிச்சைகளின் போது தான் அவருக்கு சிறுநீரக கோளாறு தீவிரமடைந்திருந்தமை தெரியவந்துள்ளது. உடனே தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அவரது உடல்நிலை சற்று தேறியுள்ளதாக நேற்று தகவல்கள் கிடைக்கப்பெற்றது. இது தொடர்பில் இப்பகுதியில் நாங்கள் பதிவேற்றியிருந்தோம்.

மீண்டெழும் இயக்குனர் சிகரம் - உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள்.

இயக்குனர் கே. பாலசந்தர் இன்று மீண்டும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், டையலசஸ் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது உடல் நிலை மோசமாக இருப்பதால், இவரை பார்ப்பதற்கு இப்போது குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரைப்பார்க்க நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பிரகாஷ்ராஜ், விவேக், சிவகுமார் உள்ளிட்ட மேலும் பல நடிகர்கள் வைத்தியசாலைக்கு வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெகுவிரைவில் இயக்குனர் கே. பாலசந்தருக்கு பூரண உடல்நலம் கிடைக்க வேண்டும் என்று நாமும் பிரார்த்தனை செய்கிறோம்.
2,130 Views
சின்னத்திரையில் காமெடி என்கிற ஒன்றை செய்து, சிரிக்க வைத்து வெள்ளித்திரைக்குள் நுழைந்துகொண்டவர்கள் நிறையப்பேர்.
இதே பாணியிலான வரவுதான் மா.கா.பா ஆனந்த்.
சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம், சின்னத்திரையில் இருந்த இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் வந்தார் .
கிருஷ்ணாவுடன் இணைந்து இரு நாயகர்களில் ஒருவராக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றவர், தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அத்தோடு இப்பொழுது பாடகராகவும் களமிறங்கி தனது பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளாராம் மா.கா பா.
'மொக்கப்படம்' என்ற படத்தில் வல்லவன் இசையில் லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க எனும் பாடலை பாடியிருக்கிறார்.
''பார்டா....!
பலபேரும் வந்து சில காலம் போனதும்தான் பல அவதாரங்களில் கை வைப்பாங்க, பையன் வந்ததுமே பாடிக்கிறான் '' இப்பிடித்தாங்க கோடம்பாக்கம் பேசிகொண்டிருக்கு !
நாம என்ன பண்ண? எல்லாம் விதி!
2,001 Views

''சினிமாவில் சாதனை பண்ணுங்க... வேணாம்னு சொல்லல. ஆனால், அதுக்கு முன்னுக்கு ரெண்டு குழந்தைங்கள பெத்து கொடுத்துட்டு நீங்க சாதனை பண்ணுங்க...'' இது கோச்சடையான் இசை வெளியீட்டில்தன் புதல்விகளுக்கு ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை.
இதன்படி ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கோச்சடையான் இயக்கத்தினால் இரண்டு வருடங்களாக தான் தாயாவதையே தள்ளி வைத்திருந்தார்.
குடும்பத்தையே மறந்து படத்துக்காக உழைத்திருந்தும், அவரது உழைப்பு பலராலும் பாராட்டப்பட்டதே தவிர, படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியளிக்கவில்லை என்பது வேறுகதை.
அடடா, அதெல்லாம் சரி, விஷயத்தை சொல்லிட்டு சட்டுபுட்டுன்னு கிளம்புய்யானு நீங்க பார்க்கிறது புரியுதுங்க,
சரி, விஷயம் இதுதான்!
கடந்த 2010இல் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின், இப்போது கர்ப்பமாகி இருக்கிறார். விரைவில் ரஜினியின் வீட்டில் இன்னொரு குட்டி மழலை தவலப்போகிறது என்ற சந்தோஷத்தில் முழுக் குடும்பமும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது.
வாழ்த்துக்களை நாங்களும் வாரியிறைத்து விடுவோம். 
8,648 Views

கலர் கலரா வந்தாலும், நம்ம இரசிகர்களின் மனதில் கனவுக்கன்னி பதவி மட்டும் இன்னும் சமந்தாவுக்கு வாய்க்கவில்லை. அந்த இடத்தில் சமந்தாவை வைக்க நம்ம பசங்க விரும்பவுமில்லை.
முன்னணி ஹீரோக்களோடு டூயட் பாடினாலும், சமந்தாவின் புகழ் என்னவோ பரவும்படியான வெற்றிகள் இன்னும் அவர் கைக்கு கனியவில்லை என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

இப்பொழுது இயக்குனர்களும் சமந்தவை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. இதனால் பொறுமை இழந்த சமந்தா, தமிழில் விக்ரமுடன் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ளே', தெலுங்கில் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் படம் என வர இருக்கும் இந்த இரு படங்களையும் முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவில் இருந்து ஒதுங்க உத்தேசித்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கதையை கசிய விட்டுள்ளன.
இனி சமந்தாவை எண்ணி காத்திருந்தவர்கள், டாப்சியோ லட்சுமி ராய்னு கிளம்பு வேண்டியதுதான்.
10,709 Views
மீண்டெழும் இயக்குனர் சிகரம் - உயிர் கொடுக்கும் சிஷ்யர்கள்.

தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நட்சத்திரங்களான "சூப்பர்ஸ்டார்" ரஜினியையும், "உலகநாயகன்" கமல்ஹாசனையும் சினிமாவுக்கு தந்த பெருமைக்குரியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். இவர்களை மட்டுமல்லாது இன்னும்பல திரைநட்சத்திரங்களை தமிழ்த் திரைவானில் மின்னவைத்த பெருமைமிக்க இயக்குனர் என்றால் மிகையில்லை.

தமிழ்சினிமாவில் கே.பாலசந்தரைப் பொறுத்த வரையில், சாதாரண/மத்தியதர நகர்ப்புற மக்களின் இயல்பு வாழ்க்கையை உள்ளது உள்ளபடி அப்படியே திரையில் காட்சியாக்கி மக்களின் இதயங்களில் 'இயக்குனர் சிகரம்' ஆக என்றும் நீங்காத சிறப்புப் பெற்றவர். இன்று உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் காலனோடு போராடிக்கொண்டிருக்கிறார்.

 திரைத்துறைக்குள் 1960-ம் ஆண்டளவில் MGR இன் "தெய்வத்தாய்" திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக உள்நுழைந்த கே.பாலசந்தர் தயாரிப்பாளர், இயக்குனர், மேடைநாடக இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்கள் கொண்ட அபூர்வ திறமையாளர்.

 எந்தவொரு நிலையற்றதன்மைக்கும் ஒப்புவமை கூறும் நீர்க்குமிழியில் நிலைத்து நின்றவர் இவர். அதாவது  தன் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான முதற்படமான "நீர்க்குமிழி" யில் ஆரம்பித்த இவரின் சாதனைப்பயணம் இயக்கத்தில் "பொய்" யிலும், தயாரிப்பில் 'குருவுக்காய் குறை கேட்கத் துணிந்த சிஷ்யனின் நடிப்பில்' "குசேலன்" இலும் நிறைவுபெற்றது.

திரைப்பயணம் நிறைவு கண்டாலும் அவர்தம் உலகியல் வாழ்க்கைப்பயணம் நிலைத்திட வேண்டும் என்பது திரைத்துறை கடந்து, அனைவரதும் பொதுவானதொரு ஆசை. இருந்தும் சில மாதங்களுக்கு முன்னர் மகன் கைலாசம் இறைபதம் எய்தியமை பாலசந்தரின் மனதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்துள்ளது.   
                                                                                                            
அத்தோடு இதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக பை-பாஸ் அறுவைச்சிகிச்சை செய்து கொண்ட பாலசந்தருக்கு, சில தினங்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

             

 இந்தநிலையில், பாலசந்தரின் நிலை கேட்டதும் புகழின் உச்சத்திலும் ஊடக வெளிச்சத்திலும் குளித்துக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவின் சிறப்பு நட்சத்திரங்கள், தாம் இவ்வாறு புகழின் உச்சத்தில் இருக்கக் காரணமான தங்கள் குருநாதரைத்தேடி சென்னை ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு ஓட்டமாக ஓடிச்சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியோ இதற்கு ஒருபடி மேலேபோய், தன் குருநாதருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களிடம் பாலசந்தரின் நிலைமை பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, மேலதிக சிகிச்சைகளுக்கான தேவைகளையும் கவனிப்புகளையும் சிறப்பாக மேற்கொள்ளுமாறும் கேட்டிருக்கின்றார். அத்துடன் பாலச்சந்தர் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்குச் சென்று அவருக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி அளவளாவி, தன் குருநாதர் நோயிலிருந்து மீண்டுவர நம்பிக்கை கூறி வந்திருக்கிறார்.                                                                                                                                                            

பாலச்சந்தர்  முதலில்  கண்டெடுத்த  நட்சத்திர முத்தான  சகலகலாவல்லவன்,உலகநாயகன் என்று புகழப்படுகின்ற கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதனால் தன் குருநாதரை அருகிலிருந்து கவனிக்க முடியவில்லையே என வருத்தம் தெரிவித்திருப்பதும் இங்கே முக்கியமாக குறிப்பிட்டுக் கூறவேண்டிய விஷயமாகவுள்ளது.      

"மீண்டு எழுந்து வாருங்கள் அய்யா" - Kamal Haasan - தன் குருநாதர் நலம்பெறவேண்டி கமல் எழுதிய கடிதம்

                                                                                                                                       
இப்போது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் கண்டிருக்கும் இயக்குனர் சிகரத்தை, நடிகை குஷ்பு, இயக்குனர் வசந்த் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் சென்று பார்த்து அவரின் சுக நலன்கள் பற்றி விசாரித்து தைரியமூட்டி வருகின்றார்கள்.
                                                    
 வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்துவரும் இயக்குனர் சிகரம் மீண்டெழுந்து வர வேண்டும். அவரின் வழிகாட்டலும், ஆசியும் தமிழ்சினிமாவின் புதிய படைப்பாளர்களுக்கும் கிடைக்கவேண்டும். இந்தச் சாதனை மனிதர் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற திரையுலகினரின் பிரார்த்தனையில் நாங்களும் சங்கமிப்போம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
3,270 Views
காலத்துக்கு காலம் ஒரு துறையில் இருப்பவர்கள், இன்னொரு துறைக்குள் புகுந்து கலக்க ஆசைப்பட்டு இறங்குவார்கள். சிலர் வெற்றி பெறுவார்கள், பலர் இருந்ததையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்புவார்கள். இதில் விஜய் யேசுதாஸ் எந்த ரகமென்று  தெரியாது.
ஆனாலும், நடிகராக தமிழில் களமிறங்குகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்.
ஏற்கனவே, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கும் விஜய், இப்பொழுது நட்புக்காக தமிழில் நடிகராகியிருக்கிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் மாரி.
இதில் நடிகராகவே நடிக்கிறார் பாடகர் விஜய் யேசுதாஸ்.
ஏற்கனவே, தனுஷும் விஜயும் நல்ல நண்பர்கள் என்பதால், தனுஷ் கேட்டுகொண்டதற்கு இணங்க நடிக்க சம்மதித்துள்ளார் விஜய். இதில் அவருக்கு முக்கியமான வேடம் வழங்கப்படுள்ளது.
அத்தோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளமையும் இன்னொரு விசேட அம்சம்.
எது எப்படியோ, நமக்கு இன்னொரு ஹீரோ கிடைத்துவிட்டார்!
1,844 Views
த்ரிஷாவுடன் காதல் கொண்டு கலந்துருகி பல இடங்களுக்கும் பறந்து திரிந்த தெலுங்கு நடிகர் ராணா, இடையிலேயே தன் காதலை முறித்துக் கொண்டு தனிமைக்கு தாவியதாக கூறப்பட்டது.
த்ரிஷா தரப்பில் விசாரித்தால், ராணா பலே கில்லாடி என்றும் பெண்கள் விடயத்தில் ''ரொம்ப பாசக்கார பயபுள்ளை''னும் சொல்லிருந்தார்.
நிறைய பெண்களுடன் தொடர்புள்ள நவீன கிருஷ்ணன் ராணா என்பதும், த்ரிஷா வாயிலிருந்து வந்த வார்த்தைகளாக இருக்கும் நிலையில், எனது உறவை முறித்துக் கொண்டேன் என்றும் த்ரிஷ் சாடை மாடையாக தெரிவித்திருக்கிறார்.
இப்பொழுது புதிதாய் பற்றியிருக்கும் தீயைக் கேட்டால், நீங்க அசந்துடுவீங்க நண்பர்ஸ்! அதாவது, த்ரிஷாவுடன் கசந்த காதலை மீண்டும் காஜல் அகர்வாலுடன் ஒட்டவைத்து ஒற்றுமையாகி அன்னியோன்னியமாக ஆனத்திக்கிறார் என்று கக்ககா பிக்ககா என செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
என்னமா இப்பிடி பண்றீங்களேம்மா....
இந்த மாதிரி சுத்துறதுக்கு எங்க கத்துக்கிட்டீங்க ராணா?
ஹோட்டல், வெளிநாடுகள், சுற்றுலாத் தளங்கள் என காஜலும் ராணாவும் சுற்றும் புகைப்படங்களும் இப்பொழுது வரத் தொடங்கியிருக்கின்றன. ஆகவே, உங்க ரெண்டுபேருக்கும் ரொம்ப தாங்க்ஸ். இனி கொஞ்ச நாளுக்கு எங்களுக்கு வாய்க்கு வார்த்தை கொடுத்திருக்கிங்கப்பா....
4,023 Views

இயக்குனர் களஞ்சியத்தோடு முறுகல், சித்தியோடு சிக்கல், கொஞ்ச நாள் தலைமறைவு, இப்படி பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகி தலைமறைவாக வாழ்ந்துவந்த அஞ்சலி மீண்டும் தமிழிலேயே களம் குதித்தார்.
ஜெயம்ரவியின் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக இணைந்துகொண்டு, தன்  இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அஞ்சலிக்கு புதுப்படங்கள் கைமேல் கிடைக்கத் தொடங்கின.
அகப்பட்டவரைக்கும் ஆதாயம் என்றபடி, சத்தமில்லாமல் அத்தனை படங்களிலும் ஒப்பந்தமாகி தன்  'திறமையை' காட்டத் தொடங்கினார் அஞ்சு!
இப்பொழுது நம்ம சினிமாக்காரர்கள் எல்லாம் புழுங்கும் ஒரு கதை காதுக்கு எட்ட, சட்டென திரும்பி செவி கொடுத்தால் விஷயம் வேற மாதிரி இப்போது கசியத் தொடங்கியிருக்கிறது.
அதாவது, இந்த அங்காடித்தெரு தந்த அஞ்சலிப் பாப்பாவுக்கு ஆளாளுக்கு அபாரமான பரிசுகளை அள்ளி வீசுகிறார்களாம்.
கார் பங்களா, இரத்தினம் முத்து வைரம் பவளமென ஆக்மார்க் அசத்தல் பரிசுகளாம் அத்தனையும்!
ஆஹா..!!
அடிச்சுது அஞ்சலிக்கு அதிஷ்டம்னு ஆஹ்னு பார்க்கும் மக்கள் தொகை அதிகமாகி இருக்கிறது.
பலர் நேரடியாக பொறுக்க முடியாமல் கேட்டிருக்கிறார்கள். '' இது அவர் தந்த பரிசுதானே..'' அதற்கும் புன்னகையோடு விடைபெற்ற அஞ்சலி, தன்  அடுத்த கட்டம் நோக்கி பவ்யமாக அடியெடுத்து வைக்கிறார்.
- புள்ள பொளைச்சுக்கும்பா....
6,132 Views
அதிர்ச்சி தந்த அத்துருகிரிய – ஹோக்காந்தர விமான விபத்து.

அத்துருகிரிய – ஹோக்காந்தர பகுதியில் வான்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் பலியாகிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்று காலை 6.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த வான்படைக்கு சொந்தமான AN.32 என்ற விமானமே இந்த அனர்த்தத்துக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையே இதற்கான காரணம் என சொல்லப்பட்டாலும் இது தொடர்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தபட்டுள்ளது.

இது தொடர்பான முழுமையான புகைப்பட தொகுப்பு.

12,043 Views

அஜீத்தின் என்னை அறிந்தால் பட டீஸர் ஹ்ரித்திக் ரோஷனின் ஹிந்திப் படமான Bang Bang பட டீஸர் சாதனையை முறியடித்துள்ளது.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் டீஸர் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. டீஸர் வெளியான 32 மணிநேரத்தில் 15 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.

என்னை அறிந்தால் - Teaser

மேலும் ட்விட்டரிலும் ‪#‎MostLikedIndianTeaserYennaiArindhaal‬ #YennaiArindhaal என்ற ஹேஷ்டேக் இரண்டு நாட்களாக டிரெண்ட் ஆனது. 

 என்னை அறிந்தால் டீஸரை இதுவரை 80 ஆயிரம் பேர் யூடியூப்பில் லைக் செய்துள்ளனர். இது ரித்திக் ரோஷனின் Bang Bang பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

Bang Bang டீஸருக்கு யூ டியூப்பில் 61 ஆயிரத்து 429 லைக்குகள் கிடைத்தன. 

அத்துடன் இதுவரை என்னை அறிந்தால் டீசரை 3.7 மில்லியன் பேர் பார்த்துள்ளார்கள்.

 

ஹிந்திப் பட டீஸர் வெளியானால் அதை இத்தனை பேர் பார்த்தனர், அத்தனை பேர் பார்த்தனர் என்று செய்திகள் வரும். ஆனால் தற்போது முதன்முறையாக பொலிவுட்காரர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்னை அறிந்தால் டீஸர்.

என்னை அறிந்தால் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதேவேளை நேற்று வெளிவந்த என்னை அறிந்தால் பட ஒற்றைப்பாடல் 'அதாரு உதாரு' இப்போது பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

அதாரு உதாரு பாடல் 

சூரியனில் நேற்று நள்ளிரவு அறிமுகமான இந்தப் பாடல் வெளியான நேரம் முதல் சூரியன் FM #SooriyanFM #YennaiArindhaal  #CelebratingYennaiArindhaalSingle ஆகிய hash tags டிரெண்ட் ஆகின.

 - சினிமா CID
28,808 Views
உலகில் மிக முக்கியமான பிரபல தம்பதிகளில், அன்னியோன்னியமான உதாரண புருஷர்களாக திகழ்கின்றவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது பாரியார் மிசேல். அந்தளவுக்கு பிரபலமானவர்கள் இருவருமே !
இப்பொழுது சொல்ல வந்த விஷயம் என்ன என்றால், இவர்களது வாழ்க்கை ஹொலிவூட்டில் படமாகவுள்ளது.
'' சௌத் சைட் வித் யூ '' எனும் இந்தப் படத்தை ரிச்சர்ட் டானெஇயக்குகிறார்.
1989 முதல் இருவருக்குமிடையில் மலர்ந்த காதல் முதல், பரிமாறிக்கொண்ட அன்பு, முத்தங்கள், அன்பளிப்புக்கள், திருமண வாழ்க்கை, குழந்தைகளின் அரவணைப்பு என்று அத்தனை பகுதிகளும் இந்தப் படத்தில் காட்சியாகவுள்ளன.
ஒபாமா வேடத்தில் நடிக்க வைக்க நடிகர் தேர்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், மிசேல் பாத்திரத்தில் பிரபல நடிகை டிக்கா சம்ப்டர் நடிக்க தெரிவாகியுள்ளார்.
2015 இன் நடுப்பகுதியிலே படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளதாகவும், ஒபாமா சம்மதம் கொடுத்துள்ளதாகவும் உண்மை விளம்பிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒபாமாவும் வந்தாச்சா ...?
2,239 Views
     உலக கிண்ண போட்டிகள் ஏதுமின்றி இதுவரை ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள்.

2015 ம் ஆண்டுக்கான உலக கிண்ணத்தை நோக்கி எல்லா அணிகளும் தயாராகி வரும் நிலையில் உலக கிண்ணம் தொடர்பாகவும் அதனோடிணைந்து சில சுவாரஸ்ய விடயங்களையும் உங்களோடு பகிரக் காத்திருக்கின்றோம்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரையில் இதுவரை எந்தவொரு உலக கிண்ண போட்டிகளிலும் விளையாடாமல் அதிக ஒருநாள் ஓட்டங்களை பெற்றவர்கள் விபரத்தை உங்களுக்காக தருகின்றோம்.

        

1.ஹமில்டன் மசகட்சா
வயது-32
அணி-ஜிம்பாபே
அறிமுகம்-2001

ஒருநாள் போட்டிகளில் 2001 ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 29 டெஸ்ட் போட்டிகளிலும் 144 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்திருந்தாலும் இதுவரை எந்தவொரு  உலக கிண்ண போட்டிகளிலும் இவர் அணியில் இடம்பிடிக்கவில்லை.

2003,2007,2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகள் என்ற அடிப்படையில் பார்த்தால் 3 உலக கிண்ண போட்டி தொடர்களில் இவர் பங்கெடுத்திருக்க வேண்டும் ஆயினும் கூட எந்தவொரு உலக கிண்ண போட்டியிலும் பங்கெடுக்காது காத்திருக்கும் மசகட்சா இம்முறை ஜிம்பாபே அணியின் முக்கிய வீரராவார்.

இவர் 144 ஒரு நாள் போட்டிகளில் 3961 ஓட்டங்களை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

        

2.ரோஹித் சர்மா
அணி-இந்தியா
அறிமுகம்-2007
வயது-28

அணிக்குள் வருவதும் போவதுமாகவிருந்து இப்போது இந்திய உலக கிண்ண அணியின் நம்பிக்கைக்குரிய ஆரம்ப வீரராக களம் காணக் காத்திருக்கிறார் ரோஹித் சர்மா.

2007 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் இவர் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமானாலும் 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.குறித்த காலப்பகுதியில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான 5 ஒருநாள் போட்டிகளில் இவர் வெறுமனே 48 ஓட்டங்களை மட்டுமே பெற்றமைதான் இதற்கான காரணம் எனலாம்.

மத்திய வரிசையில் வந்து சொதப்பிய இவர் இப்போது ஆரம்ப வீரரராக வந்து அசத்தி ஒரு நாள் போட்டிகளில் 2 இரட்டை சதங்களை பெற்று சரித்திர  உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.

இதைவிடவும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஒரே போட்டியில் 264 ஓட்டங்கள் பெற்று மிகப்பெரும் உலக  சாதனையும்  படைத்தவர்.

இதுவரை 126 போட்டிகளில் 5 சதம் 23 அரைச்சதம் அடங்கலாக 3752 ஓட்டங்களை பெற்றிருப்பினும் 2015 உலக கிண்ண போட்டிகள்தான் இவருக்கான முதல் உலக கிண்ணமாகும்.

                        

3.அலிஸ்டயார்  குக்
அணி-இங்கிலாந்து
வயது -30
அறிமுகம்-2006

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய  தலைவராவார்.அணியின் அண்மைய பெறுதிகள் காரணமாக இவரை இம்முறை உலக கிண்ணத்துக்கான போட்டிகளிலிருந்தும் அணித் தலைமை பொறுப்பிலிருந்தும் நீக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுபெற்றாலும் இங்கிலாந்து கிரிக்கெட் சபையோ, இவரே தலைவர் என்று இப்போது அறிவித்து இவருக்கான உலக கிண்ண கதவை இம்முறையாவது திறந்து வைத்திருக்கின்றது.

இவர் ஒரு டெஸ்ட் ஆட்டக்காரர்.இதுவரை மொத்தமாக 109 டெஸ்ட் போட்டிகளில் பங்கெடுத்திருக்கும் இவர் இங்கிலாந்து தேசிய அணிக்காக 2006 ம் ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி கடந்த எட்டு ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிய இவருக்கு இதுவரை 90 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு கொடுக்கபட்டது வேதனைதான்.

5 சதம் 19 அரைச்சதம் அடங்கலாக 3151 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
கடந்த 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கிய அன்று ஸ்ராஸ்சின்  ஓய்வுக்கு பின்னரே இவருக்கு இங்கிலாந்து ஒரு நாள் அணியின் தலைமைத்துவம் கொடுக்கப்பட்டு அணியிலும் நிரந்தர இடம் வழங்கப்பட்டமை கவனிக்கத்தக்கது.

                        

4.சிக்கார் தவான்.
அணி-இந்தியா
வயது-29
அறிமுகம்-2010

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்.அணியின் வழமையான அதிரடி வீரர் விரேந்தர் ஷேவாக்கை ஓரம்கட்டி விட்டு அந்த அணியின் நிரந்தர வீரராக தன்னை மாற்றிக் கொண்ட ஒரு போராட்ட குணம் கொண்ட அதிரடி வீரர்.

2010 ம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தன் அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தவர்.

ஆயினும் 2011 உலக கிண்ண போட்டிகளுக்கு முன்னர் இவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே பங்கேற்றாலும் கூட 2013 ம் ஆண்டிலிருந்து அணியின் நிரந்தர வீரராக தன்னை மாற்றிக் கொண்டவர்.

இங்கிலாந்தில் இடம்பெற்ற Champion Trophy மினி உலக கிண்ண தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் வென்ற இவர் தேர்வாளர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு அசத்தல் ஆரம்ப வீரராக நடப்பு உலக சாம்பியன் இந்திய அணியில் ஆடக்காத்திருக்கிறார்.

வெறுமனே 49 ஒருநாள் போட்டிகளில் 6 சதம் 11 அரைச்சதம் அடங்கலாக 45.46 எனும் உயரிய சராசரியில் 2046 ஓட்டங்களை குவித்துள்ள தவான் தன் உலக கிண்ண கனவுகளோடு காத்திருக்கிறார்.

           

5.தினேஷ் சந்திமால்.
அணி-இலங்கை
வயது-25
அறிமுகம்-2010

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நம்பகமான இளம் துடுப்பாட்ட வீரர்.சங்ககாரவின் ஓய்வுக்கு பின்னர் அவர் இடத்தை நிரப்பவல்ல ஒரு நேர்த்தியான விக்கெட் காப்பு தெரிந்த நல்ல ,இளம் துடுப்பாட்டகாரர் என்று தேர்வாளர்களால் நம்பபட்டவர் சந்திமால்.

ஆயினும் மிக இளம் வயதிலேயே அணியின் உதவி தலைவராகவும் ,T20 போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு சரியாக தன் துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த முடியாது தடுமாறிப்போனவர்.

அவ்வப்போது அணிக்குள் வருவதும் போவதுமாகவிருக்கும் சந்திமால் இதுவரை 87 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2 சதம் 11 அரைச்சதம் அடங்கலாக 1962 ஓட்டங்களை பெற்றிருப்பினும் இம்முறையும் இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பது சந்தேகமாகே தென்படுகின்றது.

அசத்தான அடுத்த உலக கிண்ண போட்டிகளுக்கு இன்னும் 64 நாட்கள் மட்டுமே.

எதிர்பார்ப்புகளோடும் இன்னுமின்னும் சூரியன் தரும் விசேட தொகுப்புகளுக்குமாகவும் காத்திருப்போம்.


*தில்லையம்பலம் தரணீதரன்  
   2014.12.10
 


9,061 Views
வரலாற்றுக் கதைப் புனைவுகளில், மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் நாவல் பொன்னியின் செல்வன். கல்கியின் எழுத்தாற்றலுக்கு பெரிய பெயரைப் பெற்றுக் கொடுத்த நாவல். ஏராளமான இரசிகர்களையும் பாராட்டுக்களையும் கல்கிக்கு வாரிக் கொடுத்த இலக்கிய வடிவம் இந்த பொன்னியின் செல்வன்.
இந்த நாவல் இப்பொழுது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதுவும் கோச்சடையான் போல அனிமேஷன் படமாக வளர்கிறது.
இந்தப் படத்தினை தயாரித்து வரும் சரவணராஜாவை கொஞ்சம் நாவலை கதையாக்கும் முயற்சி பற்றி கேட்டோம்.

'' 2500 பக்கங்களைக் கொண்ட பொன்னியின் செல்வனை பல தடவைகள் படித்து இன்புற்ற அன்பர்களில் நானும் ஒருவன். அந்தக் கதை எனக்கு இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று. எனவே, இந்நாவலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காகவே அனிமேஷன் திரைப்படமாக திரைக்கு கொண்டுவரவுள்ளேன். இன்றையை நிலையில் வரலாற்று புராண கதைகள் எடுபடுமா என்றும் கேட்கிறார்கள்.
இரசிகர்களுக்கு தரமான நல்ல படைப்புக்கள் காலம் தாண்டியும் பிடிக்கும் என்பதற்கு இந்த பொன்னியின் செல்வன் நல்ல உதாரணமாக அமையும். இந்தக் கால தலைமுறைக்கு இதனை கொண்டு செல்லும் நோக்கத்திலேயே படமாக உருவாக்கி வருகிறேன். இரசனை குறையாமல், கதை சிதைவடையாமல் கருத்தோடு களத்துக்கு வருகிறது பொன்னியின் செல்வன் 2டி அனிமேஷனாய்..''
இவ்வாறு சரவண ராஜா சொல்கிறார்.
நடிகர்களின் தெரிவு நடைபெற்று வருவதோடு, இதற்கு பிரபலமான நடிகர்களையே பின்னணி பேசவும் முயற்சி செய்வதாக படக்குழு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.
ஆக, பொன்னியின் செல்வன் திரையில் வருவது மகிழ்ச்சி.
திரையில் வந்து நாவலின் தரம் தன்மை கெடாமல் இருக்க வேண்டியதும் முக்கியமாக இருக்கிறது.

பார்க்கலாம்
பொன்னியின் செல்வனை  திரையில்!! மிக விரைவில் !!
1,338 Views
"தல"அஜித்தை கவிழ்க்க தானே களமிறங்கிய "இளையதளபதி"விஜய் ..???

ஒரு படத்தின் விளம்ப முன்னோட்டக் காட்சிக்கே( டீசர்) இவ்வளவு வரவேற்பா...? என வியக்கும் அளவிற்கு 'தல' அஜித்தின் "என்னை அறிந்தால்" டீசர் YOUTUBE இலும், TWITTER இலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த டீசர் வெளியானதிலிருந்து தற்போதுவரை 'தல' ரசிகர்களால் ருவிட்டரில் 'ட்ரெண்ட்' பண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றது .

வெளியாகியுள்ள "என்னை அறிந்தால்" டீசர் காட்சிக்கே ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும், குறிப்பாக ருவிட்டர் தளத்தை தமது கொண்டாட்டக் களமாக மாற்றியுள்ளார்கள் 'தல" ரசிகர்கள். களைகட்டும் டீசர் கொண்டாட்டத்திற்கு விருந்து போல, "என்னை அறிந்தால்" படத்தில் இடம்பெறும் ஒரேயொரு பாடல் காட்சியை நாளையதினம் வெளியிட இயக்குனர் கெளதம்மேனன்     முடிவு செய்துள்ளாராம். டீசர் வெளியானதற்கே ருவிட்டர் தளத்தை கலங்கவைத்த 'தல'ரசிகர்கள் "என்னை அறிந்தால்" படம் வெளியானால் ருவிட்டரை தங்களின் ஆதிக்கத்தில் கொண்டுவந்து விடுவார்களோ....? என்ற ஏக்கக் கலக்கத்தில் இருக்கிறார்களாம் 'இளையதளபதி' விஜய் உட்பட்ட ஏனைய நடிகர்கள்.

இந்தநிலையில், 'தல'அஜித்தின் இந்த 'ருவிட்டர்  ட்ரெண்ட்' இனை இல்லாமல் செய்வதற்கான வேலையில் சத்தமில்லாமல், அதேநேரம் அதிரடியாக குதித்திருக்கிறாராம் 'இளையதளபதி' விஜய்.

 தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் "விஜய்58" எனும் பெயர் வெளியிடப்படாத படத்தின் (f)பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் இரண்டும் விரைவில் வெளியிடப்படவுள்ளதாம். இதற்கான முயற்சிகளை மும்முரமாக முன்னெடுப்பது நம்ம "இளையதளபதி" தானாம்.

இதேவேளை, இந்தப் படத்தின் டைட்டிலுக்காக இரண்டு பெயர்கள் இயக்குனர் சிம்புதேவனால் முடிவு செய்யப்பட்டுள்ளன. 'கருடா' மற்றும் 'போர்வாள்' என   தேர்வுசெய்யப்பட்ட பெயர்கள் விஜய்யின் முடிவிற்காக காத்திருக்கின்றனவாம்.
 
இது இவ்வாறிருக்க, அஜித்தின் "என்னை அறிந்தால் " வெளியாகின்ற தினத்திலேயே "விஜய்58" டீசர், (f)பர்ஸ்ட் லுக் ஆகியனவற்றை வெளியிட விஜய் அதிரடியாக முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் ருவிட்டரில் அஜித்தின் ட்ரெண்ட் உடையுமென அவர் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் கசிகின்றன. இந்த செய்திகளால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும், உற்சாகத்திலும், பரபரப்பிலும் உள்ளார்களாம். அத்தோடு "விஜய்58" டீசர் மட்டும் வெளியாகட்டும். 'தல' ரசிகர்களுக்கு எங்களுடைய மொத்த வித்தையையும் காட்டுகின்றோம் எனவும் சவால் விடுகின்றார்களாம் 'இளையதளபதி' ரசிகர்கள்.                    

முட்டுங்க... மோதுங்க..... உடல்களால் அல்ல;
உங்கள் ஆற்றலாலும்.... திறமையாலும்..........
 
*கணேசமூர்த்தி ராகவன்.
34,287 Views

நேற்று சூரியன் வீடியோக்களில் அனகொன்டாவுடன் போராடி உயிருடன் மீண்ட வாலிபர் ஒருவரின் காணொளியைப் பதிவேற்றியிருந்தோம்.

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணிநேரம் போராடிய வாலிபர்.

அந்த சாகசக் காட்சி மிகப் பெரும் பரபரப்பை ஒரு பக்கமும் அதிருப்தி + கண்டனங்களை மறுபக்கமும் ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் சாகச வீரர் போல் ரொசோலி அனகோண்டாவால் விழுங்கப்பட்ட காட்சி, பார்வையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


அமெரிக்காவில் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என பன்முக திறமைகளை கொண்ட போல் ரொசோலி என்ற இளைஞர், அனகோண்டாவால் விழுங்கப்பட்டு ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த காட்சி, நேற்று முன் தினம் டிஸ்கவரி தொலைக்காட்சியின் ஈட்டன் அலைவ் (Eaten alive) நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

பரபரப்பாக வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டத்தில் ரொசோலி, ஒரு பெரிய அனகோண்டாவால் விழுங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சியோ எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தடிமனான பாதுகாப்பு உடை அணிந்திருந்த ரொசோலியின் உடலை அனகோண்டா சுற்றி வளைப்பதுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

ஆனால் அதன் பிறகு அனகோண்டாவுக்கும் அவருக்குமான போராட்டம், பாம்பின் வயிற்றிலிருந்து உயிருடன் மீண்டதோடு முடிந்துள்ளது.

இந்நிலையில் ரொசோலி களமிறங்கிய இந்த போராட்டத்தில், அவருக்கு கையில் மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓன்லைனில் சில பார்வையாளர்கள் கூறுகையில், தன் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதது இந்நிகழ்ச்சி என்றும் தங்களது எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டது எனவும் ஏளனப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த விமர்சனங்களுக்கு கருத்து தெரிவிக்க டிஸ்கவரி தொலைக்காட்சி மறுத்துவிட்டது.

எனினும் ரோசாலி இது பற்றி தன்னுடைய ட்விட்டரில் "இதற்கு மேல் அனகோண்டா தன்னை உண்பது போல சாகசம் செய்யவேண்டுமானால் உயிரை இழக்கும் அளவுக்கு செல்லவேண்டி இருந்திருக்கும்" என்றும் "இதற்குத் தான் பார்வையாளர்கள் ஆசைப்பட்டார்களா?" என்றும் கேட்டிருக்கிறார்.

அத்துடன் அனகோண்டா தன்னை சுற்றி இறுக்கியபோது எலும்புகள் உடைவது போல இருந்ததாகவும் சொல்லியுள்ளார்.

- ரம்போ 

 
7,975 Views
[1]      «      617   |   618   |   619      »      [644]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top