Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்த பாரதிராஜாவுக்கு, இயக்குனராகும் வாய்ப்பு தான் கைகொடுத்தது. ஆனாலும் அதன் பின்னர் 1980ல் 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்த போதிலும், படம் சுமாராகத்தான் ஓடியது. இப்படத்தின் பின் பாரதிராஜா ஹீரோவாக நடிக்கவில்லை.
தாவனிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு, போன்ற படங்களில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.34 வருடங்களுக்குப் பி;ன் இப்போது மீண்டும் தனது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'ஓம்' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். தந்தை மகனின் பாசப் போராட்டத்தை கூறும் இந்த கதை பாரதிராஜாவிற்கு மிகவும் பொருந்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக இப்படத்தில் பாரதிராஜாவுடன் இசையமைப்பாளர் யுவனும் இணைக்கிறார் என்பதும், கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் இப்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு

ர. பிரவீனா
1,610 Views
எகிறிக் குதித்த பந்து உதறித் தள்ளியது பில் ஹியுசின் கிரிக்கெட் எதிர்காலத்தை-மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் ஹியுஸ்.

இன்றைய  நவம்பர் 27 ம் திகதி எல்லோரையும் உறைய வைத்த நாள்,உணர்வுகளை கொஞ்சம் கட்டிப்போட்ட நாள்,பிரார்த்தனைகளோடு கைகூப்பி கடவுளை பிரார்த்தித்த நாள்.கவலையோடு கவலையாய் கரைந்து போகிறது இன்றைய நவம்பர் 27.

கிரிக்கெட் உலகில் ஓர் கறைபடிந்த நாளாய் எல்லோரையும் கவலையில் ஆழ்த்தியிருக்கின்றது பில் ஹியுசின் இந்த திடீர் மரணம்.
கடந்த 25 ம் திகதி பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியின் போது தலையில் பந்து பலமாக தாக்கப்பட்ட நிலையில் ஊசலாடிய இவர்  உயிர் இன்று இவ்வுலகை விட்டு நிரந்தரமாகவே பிரிந்திருக்கிறது.

வாழ்ந்தது வெறும் 25 வயது வரைதான் என்பதில் எல்லோருக்கும் கவலை இருக்கலாம். இதைவிடவும் இன்னுமோர் கவலை இருக்கிறது எதிர்வரும் 3 தினங்களில் இந்த வீரனுக்கு பிறந்த நாள் வருகின்றது.
பிறந்த நாள் வரும் நேரம் இறந்த நாளை எண்ணி கண்ணீர் விட்டு அழவைத்து காலன் இவன் உயிரை பறித்தெடுத்திருக்கிறான்.

ஹியுஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும்,25 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மன்  விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போது அதிரடி ஆரம்ப வீரர் ஹெய்டன் ஓய்வை அறிவிக்க, அவரது இடத்தை நிரப்ப இந்த இளம் பிலிப் ஹியூஸ்  ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் தென்னாபிரிக்க A அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 202* ஓட்டங்களை பெற்று ஒரு அவுஸ்ரேலியரின் முதல்தர /ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் படைத்து தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்து பெரும் கனவுகளோடு பயணித்த ஒரு வீரனின் சாதனை பயணம் இப்போது வேதனையோடு முடிவுக்கு வந்திருக்கின்றது.

     

சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள உலக கிண்ணத்துக்கான  அவுஸ்ரேலிய அணியில் இடம் பெறவேண்டும் என்று ஆசை கொண்டிருப்பார்.இதைவிடவும் அவுஸ்ரேலிய டெஸ்ட் அணித்தலைவர் கிளார்க் உபாதை அடைந்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள போட்டியில் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பையும் பிரகாசப்படுத்தும் பல்நோக்கில் பந்துகளை நாற்திசையும் விரட்டி களமாடிய ஓர் இளம் வீரனை   காவுகொண்டிருக்கின்றது எகிறிக் குதித்த bouncer பந்தொன்று.

 கிரிக்கெட்டில் இதுமாதிரியான கறைபடிந்த நிகழ்வுகள் இதுவரை 5 இடம்பெற்றிருக்கின்றது.இந்திய வீரர் ராமன் லம்பா முதல் வீரரராக களத்தடுப்பில் ஈடுபட்டுகொண்டிருந்த வேளையில் பந்து பலமாக தாக்கி மரணமானார்.இறுதியாக பாகிஸ்தானின் 22 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் Zulfiqar Bhatti கடந்த டிசம்பரில் பந்து தாக்கி மரணமானமையும் குறிப்பிடத்தக்கது.

இப்படியான மரணங்கள் இதுவரை சம்பவித்தாலும் இந்த பில் ஹியுசின் மரணம் இப்போது எல்லோரையும் அதிகம் கதிகலங்கச் செய்திருக்கின்றது.

அதுவும் இந்த வீரனின் தாயார்,சகோதரி ஆகியோர் போட்டியை கண்டு கழித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்கள்  கண்முன்னே இந்த விபரீதம் நடந்தேறியிருக்கின்றது.

இந்த விபரீத விபத்துக்கு காரணமாக இருந்தது அவர் அணிந்திருந்த தலைக்கவசம் தான் காரணம் என்று கருதப்படுகின்றது.ஆனாலும் கூட அதனை மறுத்து அந்த தலைக்கவச நிறுவனம் கருத்து  வெளியிட்டுள்ளது.   

நவீனரக ஹெல்மெட்டை அணியாமல் பழைய மற்றும் மெல்லிய ஹெல்மட்டை ஹியூஸ் உபயோகித்ததாக பிரிட்டனை சேர்ந்த ஹெல்மட் தயாரிப்பு நிறுவனமான மசூரி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ஹியூஸ் அணிந்திருந்த தலைக்கவசம் தொடர்பாக அவர் விளையாடிய போட்டியின் வீடியோ பதிவின் மூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

                      

பந்து ஹெல்மட் கிரிலுக்குப் (தடுப்பு) பின்னால் மண்டை ஓட்டுப் பகுதிக்கு கொஞ்சம் கீழே தாக்கியிருக்கிறது.
பந்துக்கு ஏற்றவாறு ஒரு துடுப்பாட்ட வீரன் உடலை அசைத்து விளையாடும் போது  கழுத்து மற்றும் தலைக்கு இடையிலான பகுதியை தலைக்கவசத்தால் முழுவதுமாக பாதுகாக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் .


இதேவேளை பிலிப் ஹியூசிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட  செண்ட் வின்செண்ட் மருத்துவமனை மருத்துவர் டோனி கிராப்ஸ் அவர்களின் கருத்துப்படி பவுன்சர் பந்தில் அடிபட்டு இத்தகைய தீவிர காயம் ஏற்படுவது அரிதிலும் அரிது என்று குறிப்பிடுகிறார்.

மூளைக்குச் செல்லும் மிக முக்கியமான ரத்த நாளங்களில் ஒன்று கடுமையாக அழுத்தப்பட்டு நசுங்கிப் போய் விட்டது. பந்து அந்த அளவுக்கு படு வேகமாக தாக்கியுள்ளது. இதுதான் அவரது மரணத்திற்கு முக்கியக் காரணம் என்கிறார்.

எங்களது மருத்துவமனயில் இதுபோல இதுவரை எந்த நோயாளியும் வந்ததில்லை. இது மிக மிக அரிதானது.
மொத்தமாகவே இதுவரை இது போன்ற நிலை 100 பேர்களுக்குத்தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக கிரிக்கெட் பந்தில் அடிபட்டு இப்படி நிகழ்வது ஒரேஒரு முறை ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவர்கள் சொல்கின்றனர்.

எது எப்படியாயினும் பில் ஹியுசின் இந்த மரணம் இன்னும் பல நாட்களுக்கு பலரையும் இந்த எகிறிக் குதிக்கும் பந்துகளால் பயமுறுத்தலாம் என்பது திண்ணமே.

எங்கள் காலத்தில் நாங்கள் கிரிக்கெட் பார்த்து ரசித்த மேற்கிந்திய தீவுகளின் காட்னி  வால்ஷ்,அம்புரோஸ்,தென் ஆபிரிக்காவின் அலன் டொனல்ட் ,ஷோன் பொல்லாக் இலங்கையின் சமிந்த வாஸ் ,இந்தியாவின் ஸ்ரீநாத் பாகிஸ்தானின் வாசிம்,வக்கார்,அக்தார் அவுஸ்ரேலியாவின் மக்ராத்,ப்ரெட் லி ,பிளெமிங் ,கில்லெஸ்பி என்று ஏராளமான புயல் வேகப் பந்தாளர்களை பார்த்திருக்கிறோம்.

எதிரணி வீரன் ஒருவன் பந்துகளை பந்தாடி அடித்து நொறுக்கும் போது அவனை பதம் பார்க்க ஏன் ஒரு bouncer வீசக்கூடாது என்றும் அங்கலாய்த்திருக்கிறோம்.ஆனால் அப்போது எல்லாம் இப்படியான விபரீத மரணங்கள் நேர்ந்ததில்லை.

இப்படியான பந்துகளை இப்போதும் துல்லியமாய் வீசும் வேகப் புயல்களை சொல்லிப் புரிய வைக்க வேண்டிய தேவையில்லை எனலாம்.

இனி வரப்போகின்ற நாட்களில் பந்து வீச்சாளர்களின் ஒரேயொரு கூரிய  ஆயுதமாக பாவிக்கப்பட்ட இந்த மாதிரியான பந்துகளுக்கு தடை வரலாம் என்ற கதையும் அதிகம் உலாவுகின்றது.

ஆனது ஆகட்டும் போனது போகட்டும் என்று 25 வயதான பில் ஹியுசின் மரணம் எல்லோராலும் மறக்கப்படலாம் ,சிலவேளைகளில் இப்படியொரு சம்பவம் இன்னுமொரு தடவை நடந்தால் அப்போது எங்களுக்கு இந்த பில் ஹியுஸ் நினைவுக்கு வந்து போகலாம்.ஆனால் அணுவணுவாய் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் இவர் பிரிவால் இன்னுமொரு வீரன் அனுதினமும் மரணிக்கபோகின்றான்.

சர்வதேச அரங்கில் இன்னும் பிரகாசமாய் ஆடவேண்டும் என்ற ஆசையோடு காத்திருக்கும் இந்த வீரனின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடக்கூடாது என்பதுதான் எல்லோர் விருப்பமும்.அவன் பெயர் ஷோன் அப்புட்.
வயது 22.

பில் ஹியுசின் மரணத்துக்கு காரணமான அந்த கோர BOUNCER பந்தை வீசிய வீரர் இவர்தான்.  துடிப்பான இந்த வேகபந்து வீச்சாளன் முதுகில் ஏறி பந்து மூலமாய் வேகமெடுத்து பில் ஹியுசின் உயிரை காலன் காவிச்சென்றததற்கு நாங்கள் காலகாலமாய் அந்தப் பழியை இந்த பால்வடியும் பாலகனிடம் கட்டி இவன் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாக்கி விடக் கூடாது என்பதுவே எல்லோர் விருப்பமுமாகும்.

சர்வதேச வீரர்கள் பலரும் தங்கள் கண்ணீர்க் காணிக்கைகளை செலுத்தலாம், சமூக வலைத்தளங்களில் இன்னுமின்னும் இவருக்கு அஞ்சலிகள் அதிகரிக்கலாம்,ஏன் போட்டிகளும் தள்ளிப் போகலாம் எல்லாம் நடக்கலாம் ....

 இதுவும் கடந்து போகும் என்று நாளடைவில் நம் மத்தியில் பில் ஹியுசின் நினைவுகளும் மரித்துப் போகும்.

எட்டத்தே தள்ளி வைக்க நினைத்தாலும் எட்டுத் திக்குகள் சென்று வந்தாலும் எப்போதும் எங்கள் எல்லோரையும் விட பில் ஹியுஸ் நினைவுகள் நிழலாடுவது அவர் குடும்பத்தாருக்கு மட்டுமே என்றால் அது ஒன்றும் மிகையல்லவே.

கிரிக்கெட் ரசிகர்களாய் இவர் குடும்பதுக்காக பிரார்த்திப்பதை தவிர எங்களால் என்னதான் செய்துவிட முடியும் என்று சிந்திக்கின்ற போது வாய்மூடி மௌனியாகிறோம்.

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் யாரும் மாநிலம்  வந்தது இல்லைதானே ,இந்த மகோன்னத மாவீரனின் மறைவால் இந்த கிரிக்கெட் உலகம் இப்போது ஸ்தம்பித்துப் போயிருக்கிறது.

கரம் கூப்பி பிரார்த்திப்போம் களமாடிய மாவீரன் மறைவுக்கு.
ஆத்மா சாந்தியடையட்டும்.

*தில்லையம்பலம் தரணீதரன்5.பந்து வீசிய 22 வயதான sean abbott மருத்துவ மனைக்கு சென்று பார்வையிட்டு மனமுடைந்து திரும்பும் போது.6.கவலையில் அவுஸ்ரேலிய வீரர்கள்.
                                 


#twitter  தளத்தில்.   

    


  

 
5,915 Views
மிரட்டும் அனுஷ்கா- கலக்கத்தில் நடிகர்கள்.

'சூப்பர்ஸ்டார்' ரஜினி மற்றும் 'தல' அஜித் ஆகியோரின் படங்களில் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்திருக்கும் தமிழின் முன்னணி நாயகி அனுஷ்கா இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் நடிக்கும் படம் தான் "ராணி ருத்ரம்மாதேவி".

 தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையான அனுஷ்கா, முன்னரே கதையின் நாயகியாக நடித்த படம் "அருந்ததீ". தெலுங்கில் சக்கைப்போடு போட்டது மட்டுமல்லாமல் தமிழிலும் அனுஷ்காவுக்கு நல்லதொரு புகழைப் பெற்றுக் கொடுத்திருந்தது இந்த "அருந்ததீ" திரைப்படம்.

இவ்வாறான நிலையில் மீண்டும் கதையின் நாயகியாக, ராணி ருத்ரம்மாதேவி வேடம் தாங்கியிருக்கிறார் அனுஷ்கா. வேடம் தாங்கினார் என்பதைவிட ராணி ருத்ரம்மாதேவியாகவே  மாறினார் எனச் சொல்கிறார்கள் இயக்குனர் உட்பட்ட படக்குழுவினர். நடிகை ஒருவர், ஒரு படத்தில் நடிப்பதற்கு 40நாட்கள் திகதி கொடுப்பதே பெரியவிடயம் எனச் சொல்லும் சினிமாத்தரப்பு அனுஷ்காவைப் பார்த்து வியந்துபோய் உள்ளார்களாம். ஏனெனில் இந்தப் படத்திற்காக 150நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறாராம் இயக்குனரின் நடிகை அனுஷ்கா.
                                       
ராணி ருத்ரம்மாதேவி கதை என்பதால் நிறைய சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்தப்படத்தில் குதிரையேற்றம், வாள்  பயிற்சி  உட்பட பல காட்சிகளில் பயிற்சி பெற்று தானே நடித்தும் கொடுத்திருக்கிறாராம் அனுஷ்கா. அதேவேளை சண்டைக்காட்சிகளுக்காக மட்டுமே 60நாட்கள் நடித்துள்ளதோடு, 150அடி உயரத்தில் தொங்குவது போன்றதொரு காட்சியில் 'டூப்' போடாமல் தானே அந்தரத்தில் தொங்கி அபாயகரமான அந்தக்காட்சியில் நடித்திருக்கிறார் எனவும் படக்குழுவினர் சொல்லிச் சொல்லி வியக்கின்றார்களாம்.
                                      
நிறைய நடிகர்களே அபாயகரமான காட்சிகளில் 'டூப்' போட்டு வேறொருவரை நடிக்கவைக்கும்போது, ஒரு பெண்ணான நடிகை அனுஷ்கா சண்டைக்காட்சிகளில் நடித்த 60 நாட்களில் ஒருநாள் கூட 'டூப்' போட்டு வேறொருவரை நடிக்கவைக்கவில்லையாம் அனுஷ்கா. இல்லை...இல்லை....ராணி ருத்ரம்மாதேவி.   
                                                         
"அருந்ததீ" யை மிரட்டுவாரா....? இல்லை பணிந்து போய்விடுவாரா ராணி ருத்ரம்மாதேவி..? எதிர்பார்ப்பில் திரையுலகம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
6,574 Views
விலைமாதுவாக ஸ்ரேயா ...?

"பூம்பாவாய் ஆம்பல்..ஆம்பல்... புன்னகையோ மௌவல்... மௌவல்.." என கவிப்பேரரசு வைரமுத்து பாட்டெழுத, சூப்பர் ஸ்டார் ரஜினியே இவர் தான் என் படத்தின் நாயகி என விரும்பி அழைத்து "சிவாஜி" படத்தில் தனக்கு ஜோடியாக்கிக் கொண்ட அழகி தான் நடிகை ஸ்ரேயா.

கோடம்பாக்கத்தின் முன்னணிக் கதாநாயகர்களுடன் ஜோடியாகி, பிரபல முன்னணிக் கதாநாயகிகளின் பெயர்ப்பட்டியலில் தன் பெயரையும் இணைத்துக் கொண்ட ஸ்ரேயா, தமிழ்த் திரையுலகம் கடந்து இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பேஜ்பூரி, ஆங்கிலம் உட்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளாராம். 

கோலிவூட்டில் புகழின் உச்சியிலிருந்த இந்த ஸ்ரேயாவுக்கு திடீரென என்ன ஆனதோ...? யார் கண் பட்டதோ..? என கேட்கும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதாம். பிஸி யான நடிகையாக இருந்த அவர் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடிப்பதோடு, அவருடைய மார்கெட்டிலும் சரிவு ஏற்பட்டுள்ளதாம்.

நிலைமை இவ்வாறிருக்க, தான் இனி விருதுக்கான படங்களில் நடிக்கப் போவதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாராம் ஸ்ரேயா. இந்திய மத்திய அரசினால் வழங்கப்படும் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெரும் ஆசையில் இருப்பதாகவும், அதனால் கதைக்குத் தேவைப்படுமிடத்து விலைமாது பாத்திரத்திலும் நடிப்பதற்குத் தயார் எனவும் சொல்லியுள்ளாராம்.

இந்தித் திரையுலகில் விலைமாது பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கே பெருமளவில் இவ்வாறான விருதுகள் கிடைத்துள்ளன. இதனாலேயே ஸ்ரேயாவும் அந்த மாதிரியான வேடங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் கதைகள் வெளியாகின்றன.

இதேவேளை கன்னடத்தில் விலைமாது பாத்திரத்தில் ஸ்ரேயா நடித்து வெளியான படமொன்று தமிழிலும் வெளியாகவுள்ளதாம். வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலுள்ள ஸ்ரேயா, வெளியாகவுள்ள அந்தப் படத்தைத் தொடர்ந்து அரைகுறை ஆடையில் விலைமாது பாத்திரத்தில் நடிக்கவேண்டிய நிலை இருப்பதாகவும், அதனாலேயே விருதுகளை காரணம் காட்டி இப்படியான பொய்யான காரணங்களைக் கூறி வாய்ப்புக்களைத் தேடிக்கொள்வதாக திரையுலகம் தங்களுக்குள் கிசுகிசுத்துக்கொள்வதாகவும் தகவல்.

"பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமாம்...." பழமொழி.
ஸ்ரேயா ஆடை தானே குறைக்கிறார். இதிலென்ன ஆச்சரியம்....?

கவர்ச்சியில் கலக்கும் ஸ்ரேயாவின் புகைப்படத் தொகுப்பு 

*கணேசமூர்த்தி ராகவன்.
9,026 Views
பவுன்சர் தாக்கி உயிருக்கு போராடும் பில் ஹியூஸ்!

கிரிக்கெட் வீரர்களை கிலி கொள்ளச் செய்யும் ஓர் பந்து வீச்சு முறையாக இப்போது இந்த பவுன்சர் பந்து காணப்படுகின்றது.அதிரடியாக ஒரு வீரர் அடித்து ஆடி பந்து வீச்சாளர்களை பந்தாட நினைக்கும் போது அவரை கொஞ்சம் பயமுறுத்தும் விதமாகத்தான் இந்த சீறிப்பாய்ந்து தங்கள் சீற்றத்தையும் வேகத்தையும்  காட்டும் BOUNCER  பந்துகள் வீசப்படுவதுண்டு.

ஒரு ஓவருக்கு ஒரு பந்து இவ்வாறு வீசப்படலாம் என்ற அடிப்படையில் வேகப்பந்து வீரர்கள் துடுப்பாட்ட வீரர்களை கதிகலங்கச் செய்ய இவ்வாறு களத்தில் கச்சிதமாக இந்த பவுன்சர் பந்தை பயன்படுத்துவது வழமையே.

இப்படியிருக்கையில் இவாறான பந்துகளில் பலர் படுகாயமடைந்து ஆடுகளம் விட்டு அகன்ற சம்பவங்கள் இருந்தாலும் இவ்வாறான பந்துகள் மூலம் ஒரு வீரரின் உயிர் பறிக்கபடுகின்றது என்றால் அது பரிதாபமே!

இன்று இதுதான் நடந்திருக்கிறது.சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய உள்ளூர்  கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் ஹியூஸ்க்கு வீசப்பட்ட பவுன்சர் பந்தொன்று  அவரை தாக்கியதில் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இப்போது உயிருக்கு போராடி வருகிறார்.

இந்திய வீரர்கள் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கெடுக்க தயாராகி வரும் நிலையில் இந்த படுபயங்கர நிகழ்வு பதிவாகி அவர்களையும் கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்திருக்கிறது எனலாம்.

ஏற்க்கனவே வெளிநாட்டு மண்ணில் வேகபந்து வேகமாக ஆட்டமிழக்கும் இந்திய வீரர்களின் இப்போதைய மனநிலை என்னவாகவிருக்கும் என்பதை சொல்லி புரிய வைக்கும் தேவையில்லை.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணித்தலைவர் கிளார்க்குக்கு பதிலாக அணிக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த பில் ஹியூஸ் தென் அவுஸ்ரேலியா அணிக்காக 63 ஓட்டங்கள் பெற்று ஆடிகொண்டிருந்த போது நியூசவுத்வேல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்  சோன் அபோட் வீசிய பயங்கர பவுன்சர் பந்து  இடது கை துடுப்பாட்ட வீரரான இவரின் இடது காதுப்பக்கமாக மண்டையை பதம் பார்த்தது.

                

மிகவும் தள்ளாடிப்போன அவர் சிறிது நேரம் முழங்காலில் தன் கையை ஊன்றி சுதாகரித்துகொண்டார் பின்னர் சிறிது நேரத்தில்  உடனடியாக செயற்த்திறன் இழந்து ஆடுதளத்தில் மயங்கி விழுந்தார்.

மயங்கி விழும் போதும் தரையில் தலை சற்றே வேகமாக மோதியுள்ளது. அவருக்கு வீசப்பட்ட பந்தை hook shot முறையில் துடுப்பாட முயன்றார் ஆனால் பந்து மட்டையில் படாமல் இவரை ஏமாற்றி  மண்டையை பலமாக பதம் பார்த்தது.

இதன்மூலம் பதற்றத்துக்கு மத்தியில் மைதானத்துக்கு உலங்கு வானூர்தி வரவளைக்கப்பட்டு மருத்துவ மனைக்கு இட்டு செல்லப்பட்டார்.

மூளைக்கு செல்லும் இரத்த நாளத்தில் கசிவும் ,உறைவு நிலையும் இருப்பதனால் மருத்துவர்கள் இப்போது இவரது உயிரை காப்பாற்ற பகீரதபிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.

ஆயினும் 24-48 மணிநேரத்தின் பின்னரே அடுத்தகட்ட சிகிச்சைக்கு இவர் உட்படுத்தபடுவார்.ஓரளவிற்கு சுவாசம் செய்யக்கூடியதாக இருப்பினும் அவரால் இயல்பு நிலையை பெறுவது என்பது அவ்வளவு இலகுவானதாக இப்போதைய நிலையில் இல்லை என்றே அறியக் கிடைக்கிறது.

 இப்போதைக்கு அவர் மருந்துகள் மூலம் கோமா நிலைக்கு செலுத்தப்பட்டுள்ளார். உயிர்காப்பு அமைப்புகளுடன் அவர் தற்போது இருந்து வருகிறார். இப்போதைக்கு ஒன்றும் கூறுவதற்கில்லை என்று மருத்துவர்கள் கூறிகின்றனர் .

இவரது ஆட்டத்தை இவரது தாயாரும், சகோதரியும் கண்டுகளித்துக் கொண்டிருந்தநிலையில் பில் ஹியூஸ் இந்த ஆபத்தை சந்தித்துள்ளார் என்பதும் கவலைதான்.

சர்வதேச விளையாட்டரங்கில் பனிசறுக்கலில் ஈடுபட்டு விபத்துக்குளாகி அண்மைய நாட்களாக கோமா நிலையில் பிரபல கார்பந்தைய வீரர் மைக்கல் சூமார்கர் இருந்துவரும் நிலையில் இன்னுமொருவருக்கும் இதே நிலையா என்பதே  ரசிகர்களது தற்போதைய கவலையாகும்.

தலைகவசங்களே இல்லாமல் பந்து வீச்சாளர்களை பந்தாடிய முன்னாள் மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் போன்றோர் எங்கள் நினைவுகளுக்கு இப்போது வந்தாலும் கூட பரிதாபமாய் ஒரு இளம் வீரர்னின் உயிரை இறைவன் பறித்துவிடகூடாது என்பதுவே எல்லோரது  பிரார்த்தனையுமாகும்.

எதிர்வரும் நவம்பர் 30 ம் திகதி 26 வயதில் கால்பதிக்க இருக்கும் ஹியுஸ் அவுஸ்ரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும்,25 ஒருநாள் போட்டிகளிலும் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை மாதம் தென்னாபிரிக்க A அணிக்கெதிரான போட்டியில் ஆட்டமிழக்காது 202* ஓட்டங்களை பெற்று ஒரு அவுஸ்ரேலியரின் முதல்தர /ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் படைத்து தேர்வாளர்களை திரும்பி பார்க்க வைத்து பெரும் கனவுகளோடு பயணித்த ஒரு வீரனின் சாதனை பயணம் வேதனையோடு முடிவுறக் கூடாது என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்.

மீண்டு வரட்டும்..
மீண்டும் வரட்டும்...
மைதானத்துக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
மகனாய் அவர் தாய்க்கு வந்துவிடட்டும்.

*தில்லையம்பலம் தரணீதரன்  


1.பந்து தாக்கப்படும் போது.


2.பந்து தாக்கப்பட்ட பின்னர்.
3.மயங்கி ஆடுதளத்தில் வீழ்ந்தார்  .

    


4.

 

5.உலங்கு வானூர்தியில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல தயாரான நிலையில்.

.

8,394 Views
யாரு இந்த வாசு? யாரு சிவா? இப்படி நீங்க கேட்கிறது புரிகிறது. இதுவரைக்கும் வாசுவும், சிவாவும் யாரு என்று தெரியவில்லை, ஆனால் இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.
ஓகே விஷயத்திற்கு வருவோம்.

'பாஸ் என்கிற பாஸ்கரன்;' என்னும் வெற்றித்திரைப்படத்தின் இயக்குனர் தான் ராஜேஸ். ஆர்யா, சந்தானம், ராஜேஸ் இணைந்த இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் திரைப்படம் தான் 'வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க' (V.S.O.P). இந்த படத்தின் கதாநாயகி தமன்னா என அறிவிக்கப்பட்டுள்ளது. டி. இமான் இசையமைக்கிறார் என்பதும் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்.

'பாஸ் என்கிற பாஸ்கரன்;' என்னும் வெற்றித்திரைப்படத்தின் பின் ராஜேஸ் இயக்கிய, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' திரைப்படம் தோல்வியடைந்தது. எனவே வெற்றிக் கூட்டணியை வைத்து வெற்றித் திரைப்படம் ஒன்றை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே ராஜேஸின் திட்டம். 'வாசுவும் சிவாவும் ஒன்னா படிச்சவங்க' எனும் இப்புதிய படத்தை ஆர்யா தயாரிக்கிறார் என்று சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படபிடிப்புகள் சென்னையில் நடைப்பெற்று வருகின்றன. கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகைச்சுவை நிரம்பிய ஒரு திரைப்படமாக இது இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

- ர.பிரவீனா 
2,380 Views

நேற்று தான் உலகின் உயரமான கட்டட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட செல்ஃபி பற்றிய செய்தியைத் தந்திருந்தோம்.
இன்று இன்னொரு சாதனை செல்ஃபி பற்றிய செய்தி..

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில், 1,151 பேர் அடங்கிய செல்ஃபி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஒரே செல்ஃபி படத்தில் இத்தனை மக்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால் இது உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

மைக்ரோசொஃப்டின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட்ஃபோனை விளம்பரப்படுத்த, பிரபலப்படுத்த இந்தப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தப் செஃல்பியில் பங்கேற்க மைக்ரோசொஃப்ட் லூமியா வங்கதேசத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பதிவு செய்து கொண்டவர்களே இதில் இடம்பெற்றுள்ளனர்.

சற்றுமுன் வரை 20,000-க்கும் அதிகமான லைக்குகளை இந்தப் செல்ஃபி படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு, ஒஸ்கர் விருது விழாவில் எடுக்கப்பட்ட செல்ஃபி படமே உலகம் முழுவதும் பிரபலமானது. மேலும் 30 லட்சத்திற்கும் அதிகமான ரீட்வீட்டுகளை பெற்றது. தற்பொது அந்த சாதனையை லூமியாவின் இந்த செல்ஃபி படம் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இந்தச் சாதனையை இதுவரை கின்னஸ் அங்கீகரிக்கவில்லை.

இன்னும் யார் யார் செல்ஃபி சாதனை வைக்கப்போகிறார்களோ?

5,065 Views
ரஜினியால் மோடிக்கு ஆபத்து- பபபபபபரபரப்பில் பா.ஜ.க

வருவாரா...? வரமாட்டாரா...? எனக் குழம்பிப் போய்க்கிடக்கிறார்கள் ரசிகர்கள். எங்கே வந்து விடுவாரோ என்று ஏங்கி ஏங்கியே தூக்கம் தொலைக்கிறார்கள் இந்திய அரசியல்வாதிகள். நிலைமை  இப்படியிருக்க அவரோ, கேட்போருக்கெல்லாம் சற்றும் அசராமல்  மீண்டும் மீண்டும் தன் சுட்டுவிரலால் மேல்நோக்கி சுட்டிக்கொண்டிருக்கிறார். அவர் வேறுயாருமல்ல...... நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி தான்.

அவர் எப்போதுமே இப்படித்தான், ரஜினி அரசியலுக்கு வரும்போது கண்டுகொள்ளலாம் என்று அனைவரும் அமைதியடைந்திருந்த நிலையில், "லிங்கா"இசைவெளியீட்டு விழாவில் "அரசியலுக்கு வர பயமில்லை கொஞ்சம் தயக்கம் இருக்கிறது”  எனும்   ரஜினியின் பேச்சின் ஒருவரி மீண்டும் பரபரப்பைப் பற்றவைத்திருக்கின்றதாம். இந்த நிலையில் இந்திய ஊடகங்கள் அத்தனையும் ரஜினியின் அத்தனை நகர்வுகளையும் மீண்டும் உற்றுநோக்க ஆரம்பித்திருக்கின்றன.

இதேவேளை,மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க தமிழகத்திலும் தனது ஆட்சியை நிலைநாட்ட ரஜினியை பா.ஜ.க வில் இணைத்துக்கொள்ள முனைப்பு காட்டியிருந்தமை பற்றியும், அதற்கு பிடி கொடுக்காமல் ரஜினி நழுவியதையும் விலாவாரியாக சொல்லியிருந்தோம்.

இப்படியிருக்க, அண்மையில் பா.ஜ.க வினர் தமிழ்நாட்டின் பிரதான ஆதீனமான மதுரை சங்கரமடத்துக்கு விஜயம் செய்திருந்தனராம். அங்கு இடம்பெற்ற ஆட்சி பற்றிய கலந்துரையாடலில் போதே, ரஜினியை அரசியலுக்குள் இழுக்க விரும்பும்  பா.ஜ.கவுக்கு பாரியதொரு எச்சரிக்கைச்செய்தி சங்கரமடத்தினால் கூறப்பட்டிருக்கிறதாம்.
 
அதாவது ரஜினியுடைய ராசி மற்றும் அவருடைய சிறப்பான ஜாதகம் காரணமாக "அவர் எந்த விடயத்தில் கால் வைத்தாலும் அதில் ஏறுமுகமாக உச்சத்துக்குத்தான் போவார். அப்படி வெற்றியின் உச்சத்துக்கு போனால் அவ்வளவு எளிதில் கீழிறங்கி வரமாட்டார். அப்படிப்பட்டவர் அரசியலுக்கு வந்துவிட்டால் பிரதமர் பதவியை கூட விட்டு வைக்காமல் அதையும் வென்று விடுவார். எனவே உங்களுக்கு நீங்களே குழி தோண்டிக்கொள்ள வேண்டாம் " என்ற காரணத்துடன் கூடிய எச்சரிக்கையே சங்கரமடத்தினால் வழங்கப்பட்டுள்ளதாம்.

இந்த செய்தியினால் பா.ஜ.க பிரதமர் நரேந்திரமோடி கூட சிறிது குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் பா.ஜ.க வில் ரஜினியை இணைத்துக்கொள்ள அடிக்கடி ரஜினியின் வீட்டை நோக்கித் தூது அனுப்பும் தமது செயற்பாட்டையும் நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகின்றதாம்.

இவ்வாறானதொரு நிலையில் கோவா திரைப்பட விருது வழங்கும் விழாவிற்கு சென்றிருந்த ரஜினியிடம், வடஇந்திய பிரபல தொலைக்காட்சி ஒன்று அவருடைய அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு "இப்போது அரசியல்பற்றி எதுவும் பேச  விரும்பவில்லை. No Politics" என பதிலளித்திருந்தாராம். அதாவது இந்த வேளையில் அரசியல் பேசவிரும்பவில்லை என்பதே அதன் கருத்து. அதனை தவறாக புரிந்துகொண்ட அந்தத் தொலைக்காட்சி "ரஜினி அரசியலே வேண்டாம்" என கூறினார் என்று செய்தி வெளியிட்டு எல்லோரையும் மீண்டும் ஒருமுறை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எது எப்படியோ, தி.மு.க வின் தலைவர் மு.கருணாநிதி உயிரோடு அரசியலில் இருக்கும்வரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என ரஜினிக்கு நெருக்கமான வட்டாரச்செய்திகள் சொல்கின்றனவாம்.  

"வரும்.....ஆனா வராது....."கொமெடி தான் ஞாபகத்துக்கு வருது இதை கேட்கும்போது. (சூப்பர்ஸ்டாரும் நல்லாத்தான் கொமெடி பண்ணுகிறார்)

*கணேசமூர்த்தி ராகவன்.

#ரஜினியும் மோடியும் இணைந்து கலக்கும் 'படையப்பா' பாடல்.#Video
http://sooriyanvideos.sooriyanfm.lk/index.php?page=videos-watch&id=683
10,110 Views
செல்ஃபி எடுப்பதென்பது இப்போதைய புதிய trend. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எங்கு பார்த்தாலும் செல்ஃபி, செல்ஃபி, செல்ஃபி!

இப்படி அடிக்கடி செல்ஃபி எடுப்பவர்களுக்கு மனோரீதியான பிரச்சினை உள்ளது என கூறியும், அதை யாரும் கவனிப்பதைப் போன்று தெரியவில்லை. இவரும் அப்படித்தான் போலிருக்கிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 47 வயதான, ஜெரால்ட் டோனாவர் என்பருக்கு, டுபாயிலுள்ள உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜி கலிபாவின் உச்சியிலிருந்து செல்ஃபி எடுக்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை. அதை அவர் நிறைவேற்றிக் கொண்டுள்ளார். 2,723 அடி உயரமுள்ள இந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று செல்ஃபி எடுத்துள்ளார். இந்த செல்ஃபியில் டுபாயின் பல கட்டிடங்கள் தெரியும் வண்ணம் உள்ளது.

இது தான் உலகின் மிக உயரமான இடத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி என்பது குறிப்பிடத்தக்கது. 

4,036 Views
பொதுவாக தமிழ் கதாநாயகிகளுக்கு இடையில் போட்டி பொறாமை அதிகம் என்றும் மாறி மாறி ஒவ்வொருவருடைய வாய்ப்புக்களை இன்னொருவர் தட்டிப் பறிப்பதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதுண்டு.

ஒருவரை வைத்து இன்னொருவரை ஒப்பிட்டு மட்டந்தட்டி, கொழுவி முடித்து ஊடகங்கள் பரபரப்பாக்குவதும் உண்டு.

சிலது உண்மை, சிலது வெறும் கிசுகிசுக்கள்.

த்ரிஷாவும் தமன்னாவும் கூட தெலுங்கிலும், தமிழிலும் வாய்ப்புக்களுக்காக அடிக்கடி மோதுண்டவர்கள், சில கதாநாயகர்களை வளைத்துப்போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தியவர்கள் என்றுஉறுதிபடக் கதைகள் வந்திருந்தன.
(படப்பிடிப்புத் தளத்தில் கட்டிப்புரண்டு சண்டை நடக்காதது தான் குறை)

ஆனால் நேற்று ட்விட்டரில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பாராட்டியதும், கொஞ்சிக் கொஞ்சி ட்வீட் செய்ததும், என்னடா நடக்குது இங்கே என்று ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது..
அரசியல்ல மட்டுமில்லை சினிமாவிலையும் இதெல்லாம் சகஜம் தான் போல..ஏதோ சண்டைப்பிடிக்காம இப்படியே அழகிகள் அன்பைப் பாராட்டி, அள்ளி வழங்கினால் சந்தோசம் தான்.
4,849 Views
இலங்கையின் தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் அமைந்துள்ள  GALLE FACE HOTEL  பற்றி அறியாதவர்கள் இலங்கையில் மிகக் குறைவானவர்களே இருப்பர் என நம்பலாம். ஆனால் இந்த ஹோட்டலில்  பணியாற்றிய உலகப்புகழ்பெற்ற பணியாளர், நுழைவாயிற்காப்பாளரான "கொட்டாரப்பட்டு சட்டு" எனப்படும் குட்டனை GALLE FACE HOTEL க்கு செல்லும் அநேகமானோருக்கு  காணமுடிந்திருந்தாலும் அவர் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

                                                   உலகிலுள்ள ஒவ்வொரு ஹோட்டலுக்கும் குறிப்பிட்டுச் சொல்லும் படியான ஏதாவதொரு சிறப்பான விஷயம் இருக்கும். GALLE FACE HOTEL உம் அப்படியே தான். இங்கே பெரியதொரு மீசை வைத்த பெரியவர் ஒருவர் பிரதான வாயிற்காப்பாளராக இருப்பார். 'சட்டு'  என்ற அந்தப்பெரியவர்தான் இந்தக் ஹோட்டலின் சிறப்பே...... 
 
                                       கேரளா மாநிலத்தின் கொட்டாரப்பட்டு ஊரில் 1920-ம் ஆண்டு பிறந்த குட்டன் இளமைக் காலத்திலேயே இலங்கையின் தலைமன்னார் வந்ததாகவும், பின்னர் 1938-ம் ஆண்டு அங்கிருந்து கொழும்பிற்கு வந்து பல முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் வீட்டுப் பணியாளராக பணி புரிந்திருந்திருந்தார். அதன்பின் GALEFACE HOTEL இல் உபசரிப்பாளராக இணைந்து கொண்டார். முதலில் உதவியாளராக பணியில் இணைந்த அவர் பின்பு சமையலறை ஊழியராக பிரபலமடைந்திருந்தாராம். அதனைத் தொடர்ந்து நுழைவாயில் காப்பாளராகத் தன் வேலையைத் தொடர்ந்த குட்டன் 72 வருடங்கள் செவ்வனே பணி செய்து, 94 வயதில் இப்போது பணியிலிருந்தும், உலகியல் வாழ்விலிருந்தும் நிரந்தர ஓய்வெடுத்து மீளாத்துயில் கொண்டார்.              உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் சாதனைப் பதிவுகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்களும் இவரை வந்து சந்தித்ததுடன் உலகிலேயே, பணியாற்றிகொண்டிருக்கும்  வயதில் மூத்த ஹோட்டல் பணியாளர் என்ற பெருமையை பெற்றவர் இந்த 'சட்டு' என்ற குட்டன். 

                                      பணியில் சேர்ந்ததிலிருந்து நீண்டகாலம் ஒரே ஒரு நிறுவனத்தில் மட்டுமே பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற புகழையும் உலகின் பிரபலமான ஹோட்டல் ஊழியர் எனும் பெருமையையும் கூட தன்வசமாக்கியவர். இவ்வாறு கடமை தவறாக்கண்ணியவானாக வாழ்ந்த குட்டன் தன் வாழ்க்கைக்கோர் அர்த்தம் கொடுத்துச் சென்றுள்ளார் என்றால் மிகையில்லை.

3,988 Views
தல அஜித்துடன் முட்டி மோத தயாராகும் ஆர்யா ?

'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளதுடன், வெளியீட்டுத் திகதியும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் 'தல'யின் அடுத்த படம் என்ன...?என்ற கேள்வியோடு அலைய ஆரம்பித்திருக்கிறார்கள் தல ரசிகர்கள்.

இந்தக்கேள்விக்குக் காரணம் இல்லாமல் இல்லை. விஜய் "கத்தி" படத்தை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் "மாரீசன்" என்ற படத்தில் நடிப்பது தான் இந்தக் கேள்விக்கான காரணமாம்.தற்போது அதுவல்ல விஷயம்.

 பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை தல யை  வைத்து இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது "யட்சன்" என்ற படத்தை இயக்குகின்றார். தொடர்கதை எழுத்தாளர் சுபா பிரபல வாரஇதழுக்கு எழுதிய கதையே சிறிய மாற்றங்களுடன் "யட்சன்" ஆக மாறியுள்ளதாம். இந்தப்படத்தின் நாயகனாக ஆர்யா நடிக்க, UTV மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றதாம்.

 இந்தப்படத்தில் தல கௌரவத் தோற்றத்தில் நடிப்பதாக ஒரு செய்தி முன்னர் வெளியாகியிருந்தது. ஆனால் அந்தச் செய்தி  உண்மை இல்லை என்ற விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. பொதுவாக இளம் நடிகர்கள் 'சூப்பர்ஸ்டார் ரஜினியின்' ரசிகனாகவே படங்களில் தங்களை காட்டிக் கொள்வார்கள். ஆனால் 'தல' ரசிகர்கள் பெருமைப்படும் விதமாக இந்தப் படத்தில் நாயகனாக வரும் ஆர்யா 'தல'அஜித்தின் ரசிகர்மன்றத் தலைவர் பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

அதுமட்டுமல்லாமல் "வீரம்" படத்தில் வரும் அஜித்தின் தோற்றத்திலான மிகப்பெரும்  'கட்அவுட்' க்கு மேலே ஏறி, ஆர்யா 'தல'க்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சியும் "யட்சன்" படத்தில் படமாக்கப்பட்டுள்ளதாம். அத்தோடு அஜித்தின் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டமும் படம் நெடுகிலும் வந்துபோவது போல  காட்சியாக்கப்பட்டுள்ளதாம். இந்தக் காட்சிகள் படத்தின் விளம்பரப் படுத்தலுக்கான காட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளதாம். காரணம், "யட்சன்" படத்தை வியாபார ரீதியாக வெற்றிபெறவைக்க 'தல' ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்கும் தந்திரமே என திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 இது இவ்வாறிருக்க, ஆர்யா முதற்கொண்டு படக்குழுவினரே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்திருக்கிறதாம். வெளியிடப்பட்ட இந்தக் காட்சிகளைப்பார்த்த ஆர்யாவின் ரசிகர்கள் ஆர்யாவுக்கு "சின்ன தல" என பட்டம் சூட்டி அழைக்க ஆரம்பித்துள்ளார்களாம். 'தல'அஜித்துடன் நெருக்கமாக உள்ள ஆர்யா, இந்த சம்பவத்தினால் 'தல'யுடனான தன் நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ...?என்ற கலக்கத்தில் உள்ளதாகவும் ஆர்யாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றதாம்.  

"யார் என்ன சொன்னாலும் 'தல' எப்பவும் 'தல' தான்......"
அஜித் ரசிகர்கள் சொல்றாங்க...

*கணேசமூர்த்தி ராகவன்.
11,947 Views
4வயது சிறுவனை கல்விக்காக இலங்கைக்கு அனுப்பிய ஜப்பான்.

ஜப்பானிய தம்பதியினர் 2013ம் ஆண்டு  ப்ரவரி மாதம் முதல்
இலங்கையில் வசித்துவந்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் தாய் தன் குழந்தையுடன் சொந்த நாட்டுக்கு திரும்பினார். மீண்டும் இலங்கை வருவதில்லை என்ற முடிவுடனே சென்றுள்ளார்.

குழந்தை, இலங்கை பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளது.
இதனால் கல்வியை தொடர்வதற்காகவும் பாதுகாப்பு குறித்தும் தந்தை வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நான்கு வயது ஆண் பிள்ளையை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு ஜப்பான நாட்டின் ஒசாகா மாவட்ட குடும்ப நீதிமன்றம் நேற்று பிள்ளையின் தாய்க்கு உத்தரவிட்டுள்ளது.

பிள்ளையின் தந்தை இலங்கையில் வாழ்ந்து வருவதால், குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பான ஹேக் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ள , இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜப்பானில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இதுவெனவும் குறிப்பிட்டுள்ளது.

    - வர்ஷி-
3,574 Views
கார் ஸ்டார்ட் ஆகாவிட்டால் நம்ம ஊர்ல எல்லாம் என்ன செய்வோம்? நான்கு, ஐந்து பேர் சேர்ந்து தள்ளி ஸ்டார்ட் செய்வோம். ஆனால் இங்க ஒருத்தர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

இத்தாலியைச் சேரந்த ஸ்பார்டாகோ என்பவர், தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக வேலை செய்பவர். இவர் அலுவலகத்திற்கு தினசரி தாமதமாகத் தானாம் போய் சேருவார். இதற்கான முக்கிய காரணம், பொது போக்குவரத்தில் அலுவலகம் செல்வது தான் என தானே முடிவுசெய்து கொண்டு, புதிய காரொன்றை சில தினங்களுக்கு முன் கொள்வனவு செய்துள்ளார்.

மகிழ்ச்சியாக தனது சொந்த வாகனத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்த ஸ்பார்டாகோவின் சந்தோஷம் நிலைக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன் வழமை பொலவே, அலுவலகம் செல்ல தன் வாகனத்தில் அவசரமாக ஏறியுள்ளார். ஆனால் இவரின் அவசரத்திற்கு வாகனம் இயங்கவில்லை. வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை என்றதும் டென்ஷனாகிவிட்டார். கோபம் அதிகரிக்க, செய்வதறியாது.. வீட்டிற்குள் சென்று கோடரி ஒன்றை கொண்டு வந்து கொத்தோ கொத்து என்று காரை கொத்திவிட்டார். எப்படி கொத்தியுள்ளார் என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.பிரியமானவர்களிடம் தானே கோபத்தைக் காட்ட முடியும். நான் அதை தான் செய்தேன் என்று பொலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்பார்டாகோ. இதற்கு மன அழுத்தம் தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்ட ஸ்பார்டாகோவின் உறவினர்கள் இவரை ஒரு மனநல வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். கூடிய விரைவில் பூரண சுகம் பெற வேண்டுமென்பதே ஸ்பார்டாகோவின் குடும்பத்தினரின் பிரார்த்தனை.

சில சமயங்களில் நம்முள் எத்தனையோ பேர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம். அதிகமாக கோபப்படுகிறோம், வெறுப்பை வெளிப்படுத்துகிறோம், எரிச்சலடைகிறோம் என எமக்கே தோன்றுமாக இருந்தால். உடலக்கும், மனதிற்கும் ஓய்வு தேவை என்பதை உணர்ந்துக் கொள்வோம்.

தொகுப்பு
ர. பிரவீனா.
1,906 Views
தமிழர்களுக்கான ஓர் அடையாளமாக திகழும் கானா பாடல்கள் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழர் வாழும் இடங்களில், குறிப்பாக இந்தியாவில் இளைஞர்கள் தங்களின் இன்பம், துன்பம், நட்பு, காதல் என அனைத்தையும் இந்த கானா பாடல்களில் கூறிவிடுவார்கள். நாட்டுப்புற பாடல்களைப் போன்று இந்த பாடல்களுக்கும் இவர்களின் வாழ்க்கைக்கும் தொடர்பிருந்தது, இன்றும் இருக்கிறது.

இவர்களின் வாழ்வோடு பிண்ணிப்பிணைந்த கானா பாடல்களை மேல்நாட்டு மக்கள், அல்லது மேல் குடியினர் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னால் அது பிழையில்லை. இந்த கானா பாடல்களுக்கு உயிர் கொடுத்து, தமிழ் சினிமாவில் இடம் பெற்றுக்கொடுத்தவர் தான் தேனிசைத் தென்றல் தேவா. இன்றைய பிறந்தநாள் நாயகன்.

இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். கானா பாடல்களுடன் அதிக ஈடுபாடு கொண்ட தேவா, சினிமாவில் வாய்ப்பு பெற, தன் சகோதரர்களுடன் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். இந்த கானா பாடல்களைப் பாடி காட்டி தான் இசையமைப்பாளராக வாய்ப்பும் பெற்றுக்கொண்டார். இவர் இசையமைத்த முதல் படம் 'மனசுக்கேத்த மகராசா'.
இந்த திரைப்படத்தின் பின் வைகாசி பொறந்தாச்சி, வசந்த கால பறவைகள், நாடோடிக் காதல், அம்மா வந்தாச்சு, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தார். எனினும் சூப்பர் ஸ்டாரின் படமான 'அண்ணாமலை' திரைப்படத்திற்கு இசையமைத்த பிறகு தான் இவரின் புகழ் வானுயர்ந்தது.
அடுத்து வந்த பாட்ஷா ரஜினியின் மிக முக்கியமான படமாக அமைந்ததற்கு தேவாவின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது புகழ்ச்சியில்லை.

அன்றிலிருந்து திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல், அஜித், விஜய் என அனைவரும் விரும்பும் இசையமைப்பாளரானார்.
இவர்களுடன் இணைந்து தேனிசைத் தென்றல் தேவா பணியாற்றிய வாலி, குஷி, முகவரி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், ரெட், தம் போன்ற திரைப்படங்கள் பிரபலமானவை. இவ்வாறு 100 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்து, இசை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து, விஷேடமாக கானா பாடல்கள் மூலம் இடம் பிடித்து, இசையில் மகிழ்ச்சியை அள்ளித்தரும் தேனிசைத் தென்றல் தேவாவிற்கு சூரியன் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தொகுப்பு .

ர. பிரவீனா.
2,068 Views
[1]      «      667   |   668   |   669      »      [692]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top