Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சினிமாவை பொறுத்தவரை தந்தை பெயர் சொல்லும் பிள்ளையாக இல்லையென்றாலும், தந்தையின் பெயரைக் கொண்டு தமிழ் சினிமாவில் முடிந்தவரை முன்னேற முயற்சிக்கிறார் சிபிராஜ்.

                                                              இவர்   நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் "நாய்கள் ஜாக்கிரதை". சிபியின் முதற்படம் ஸ்டூடண்ட் நம்பர் 1. பின் தந்தையுடன் சேர்ந்து நடித்த முதற்படமான "ஜோர்" அவரின் முன்னேற்றத்திற்கு ஜோராக அமையவில்லை. தொடர்ந்து தந்தை சத்யராஜ் உடன் சேர்ந்து ஒரு சில படங்களென நடித்தும் ஏதும் எடுபடாத நிலையில் இப்போது "நாய்கள் ஜாக்கிரதை".  

              இந்தப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு" படநாயகி அருந்ததி நடித்திக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சிபியோடு, மனோபாலா, ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் மற்றும் பயிற்சி பெற்ற பெல்ஜியம் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்துள்ளதாம். சிபிக்கு இணையான கதாபாத்திரம் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளதாம்.

                                            சிபிராஜுடன் பிரசன்னா சேர்ந்து நடித்த ‘நாணயம்’ படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். தரண்குமாரின் இசையில் வெளியாகும் இந்தப்படத்தை சிபியின் தந்தை சத்யராஜ் தயாரித்திருக்கிறார்.    

                                                          இந்தநிலையில், இப்படத்தின் விளம்பர உத்தியாக டாக்கி டாக்கி எனும் வீடியோ பாடலை சிலநாட்களுக்கு முன்னர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப்பாடலை நம்ம இளையதளபதி விஜய்யும் பார்த்திருக்கிறாராம். பார்த்ததோடு நிறுத்தாமல் பாடல் சிறப்பாக உள்ளதென மனம் திறந்து பாராட்டியிருக்கிறாராம். இதற்குமுன் படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியானபோதும் அதைபார்த்தவுடன் சிபிராஜுக்கு பாராட்டினாராம் இளையதளபதி.

             இவ்வாறு முதல் ஆளாக விஜய் தன்னைப் பாராட்டியது சொல்லத்தெரியாத சந்தோசமும், பெருமையுமாக இருப்பதாக சொல்கிறாராம் சிபிராஜ்.
                                    
முட்டித் தள்ளி முன்னேற்ற முயல்கிறார் தந்தை.....முடிந்தவரை முயற்சிக்கிறார்  தனயன். முடிவு............???


*கணேசமூர்த்தி ராகவன்.
6,640 Views
திரையுலகில் மக்கள் மனதை வெல்லவும், சாதிக்கவும் வயது ஒரு தடையில்லை என ஜெயித்துக் காட்டியவர் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 30வயதிற்குப்பின் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மூலம்  தமிழ்சினிமாவில் காலடி பதித்து, தற்போதுவரை 30வருடங்களுக்கு மேலாக ஜெயித்துக்கொண்டிருக்கிறார்.

                                                  இந்தநிலையில் 2014 நடப்பு ஆண்டிற்கான இந்திய மத்திய அரசின் சிறந்த விருது ஒன்று இவருக்கு வழங்கப்படவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தமாதம் 20ம்திகதி தொடக்கம் 30ம் திகதி வரையான 11நாட்கள் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழா நடக்கவிருக்கிறதாம். இந்த விழாவில் வைத்தே சிறந்த திரையுலகப் பிரமுகருக்கான நூற்றாண்டு விருது வழங்கப்படவிருக்கிறது. இந்த விழாவில் பிரதம விருந்தினராக அமிதாப் பச்சன் கலந்துகொள்ளவுள்ளதோடு, இந்தியா முழுவதுமுள்ள நடிகர் நடிகைகள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்ளப் போகின்றார்களாம். 

                   தென்னிந்திய திரையுலகத்தை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலக பிரபலங்களுக்கிடையே தான் ரஜினிகாந்த் இந்த விருதுக்கு இந்திய மத்திய அரசினால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம். 

                                        ஆளும் மத்திய அரசான பா.ஜ.க தமிழகத்தில் தனது ஆட்சியை கொண்டுவரும் நோக்கில் சூப்பர்ஸ்டார் ரஜினியை தனது கட்சியில் சேர்த்துக்கொள்வதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்ததையும், ரஜினியும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டிருந்த விசயங்களை சொல்லியிருந்தோம். தற்போது  பா.ஜ.க மத்திய அரசாக இருக்கும் நிலையில், இந்த விருதுக்கான ரஜினியின் பெயர் தேர்விலும் அரசியல் காரணங்களே செல்வாக்கு செலுத்துவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.                            
 
இதுக்குத் தான் ஊரில ஒரு பழமொழி சொல்லுவாங்க. "சோழியான் குடுமி சும்மா ஆடாதாம்..."  


*கணேசமூர்த்தி ராகவன்.
3,014 Views
சூப்பர்ஸ்டார்னா சும்மாவா....?


பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல... என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "சிவாஜி" படத்தில் பஞ்ச் வசனம் பேசினாலும் பேசினார். தற்போது நிஜத்தில் அதிரவைத்துக்கொண்டிருக்கிறது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் "லிங்கா" பற்றிய விஷயங்கள்.
 
பொலிவூட் திரையுலகின் மிகப்பெரிய விநியோக நிறுவனமான ஈரோஸ் பற்றியும்,அதன் சென்னைக்கான பொறுப்பை ரஜினியின் மகள் சௌந்தர்யா ஏற்றுக்கொண்டது பற்றியும் முன்னரே சொல்லியிருந்தோம்.இந்தநிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமான "லிங்கா" திரைப்படத்திற்கு 165 கோடி ரூபா கொடுத்து அதன் உரிமையை இந்த நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஈரோஸ் நிறுவனமே விஜய்யின் "கத்தி" படத்தின் உரிமையையும் வாங்கியிருந்தது என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்தலாம்.

சூப்பர் ஸ்டார் இன் "லிங்கா" படத்தின் உரிமையை வாங்கியதோடு நிறுத்தாமல்,அதன் ஓடியோ இசை உரிமையையும் இந்த நிறுவனமே 7 கோடி ரூபாவை அள்ளிக்கொடுத்து தன்னகப்படுத்தியுள்ளதாம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்தில் இணைகின்றமை தான் இதுவரை இல்லாத அளவுக்கு,"லிங்கா" இசைஉரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு  விலைபோகக் காரணமாம்.  
      
                               இதேவேளை, ஈரோஸ்  நிறுவனத்தின் சென்னைக்கான பிரிவுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் தலைமையேற்றதிலிருந்து, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முக்கிய படங்களின் ஓடியோ இசை உரிமைகளை இந்த நிறுவனமே தன்வசப்படுத்தி வருகின்றதாம்.

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா....?

*கணேசமூர்த்தி ராகவன்.
2,434 Views
கே. வி ஆனந்தின் இயக்கத்தில், தனுஷ், புதுமுக நடிகை அமைரா நடிக்கும் திரைப்படம் 'அனேகன்'. அன்மையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இவ்விழா மேடையில் பேச ஆரம்பித்த இயக்குனர். கே. வி ஆனந்த் படக்குழுவினர், ஹீரோ என அனைவரையும் புகழ்ந்து தள்ளினார். ஆனால் முக்கியமான ஒருவரை பற்றி பேச மறந்துவிட்டார். அது யார் தெரியுமா? இந்த படத்தின் ஹிரோயின் அமைரா.

இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இவர் இருப்பார் என கருதப்பட்டு, இயக்குனர் கே. வி ஆனந்த் தெரிவு செய்த புதுமுகம் தான் இந்த அமைரா....'அனேகன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேச மறந்ததும் இவரைப்பற்றித் தான். மறந்தவர் அப்படியே இருந்துவிட்டால் கூட இவ்வளவு சிக்கல் வந்திருக்காது போலிருக்கிறது. மேடையில் பேசிக் கொண்டிருந்த இவருக்கு இடையில் ஹீரோயின் ஞாபகம் வர, அவரைப் பற்றி பேச ஆரம்பித்தார். ஆரம்ப வரிகளே இப்படித்தான் இருந்தது.

'அதாவது, இவங்க பார்க்க லூசு மாதிரி தான் இருப்பாங்க, ஆனா தெளிவு' . .ஆஹா ஹிரோயின்னை லூசு என சொல்லிடோமே என அவருக்கே புரிய பின்னர் ஒருவாரு சமாளித்து பேசி முடித்துள்ளார்.
இவர் இவ்வாறு பேசியதைக் கண்டு விழாவிற்கு வந்திருந்த அனைவரும் திகைத்துப்போய், காதோடு காது பேச ஆரம்பித்துவிட்டனராம்.
பாவம் கே. வி ஆனந்த். ம்ம்ம்ம...இனி இவரின் படத்தில் அமைரா நடிப்பது கொஞ்சம் சந்தேகம் தான்.

தகவல்களை தொகுத்து வழங்கியது.
ர. பிரவீனா
2,723 Views

மட்டக்களப்பு மாவட்ட கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சித்தாண்டி-வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவிக்கு (Smart Sprayer) தேசிய மட்டத்தில் முதலாமிடம் கிடைத்து சாதனையை தனதாக்கிக்கொண்டது.

2014ம் ஆண்டுக்கான சிறிய கண்டுபிடிப்பாளர்களை தெரிவுசெய்யும் முகமாக இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்குனர் போட்டியில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களான தரம் 07 இல் கல்வி பயிலும் கே.கேதீஸ்வரன் மற்றும் தரம் 13 இல் கல்வி பயிலும் எஸ்.கேணுஜன் ஆகிய இருவரும் இணைந்து இந்த ஸ்மாட் தெளிகருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதனை வலயமட்டம், மாகாண மட்டம் வரை போட்டிக்காக கொண்டு சென்று மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்டத்தில் தெரிவாகிய ஸ்மாட் தெளிகருவியானது தேசிய மட்டத்துக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. கடந்த 2014.10.31 தொடக்கம் 2014.11.02 வரை கொழும்பில் நடைபெற்ற இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் கண்காட்சியில் வைக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவியானது அதனுடைய உற்பத்தி மற்றும் செயற்பாடு எதிர்கால பயன்பாடு என பல்வேறுபட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவினரின் சிறந்த கண்டுபிடிப்பாளர் தெரிவில் விவசாய தொழிநுட்ப பிரிவில் தேசிய மட்டத்தில் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களினால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

கிடைத்த வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் திரு. தினகரன் ரவி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெறுவதற்கு மாணவர்களுக்கு வழியமைத்துக்கொடுத்த விஞ்ஞான ஆசிரியர் திரு.ரி.முரளிதரன் உட்பட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட ஸ்மாட் தெளிகருவிக்குரிய மொழி பரிமாற்றத்தை வழங்கிய திரு.டி.குகதாசன் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் குலாத்தினர் பெரிதும் ஒத்துழைப்பு நல்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடங்களில் இப்பாடசாலையில் இருந்து பல்வேறு கண்டுபிடிப்புக்கள் சிறிய கண்டுபிடிப்பாளர்கள் போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தும் மாகாண மட்டம்வரை சென்றிருந்தன.

தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தி பாராட்டு தெரிவிக்கும் முகமாக இன்று (04) செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடலின்போது மலர்மாலை அணிவித்து அமோக வரவேற்பு வழங்கப்பட்டிருந்த இதேவேளை வெற்றிபெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பாடசாலைக்கு வருகைதந்து வெற்றிபெற்ற மாணவர்கள் உட்பட ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

- சூரியனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தி.

2,083 Views
'கத்தி' கதாநாயகனின் நெத்தியடிப்  பதில்கள்-Twitter தளத்தில் விஜய்.


ட்விட்டர் தளத்தில் விஜய்யிடம் ரசிகர்கள் எழுப்பிய சில சுவாரசியமான கேள்விகளும், பதில்களும்..

*கேள்வி: புதுமுக இயக்குநர்களுக்கு நீங்கள் ஏன் வாய்ப்பு அளிப்பதில்லை?

பதில்: இது வரை நடித்துள்ள 58 படங்களில், 28 படங்கள் புதுமுக இயக்குநர்கள் தான். ஒ.கே வா அண்ணா ?

*கேள்வி: 'கத்தி' படம் கொடுத்தமைக்கு நன்றி. அனிருத்துடன் பணியாற்றியது குறித்து?

பதில்: சின்ன வயது. நிறைய ஆற்றல்.

*கேள்வி: தலைவா.. நம்ம பயந்து ஒதுக்கிறோமா இல்ல பாய பதுங்குறோமா?

பதில்: பயமும் இல்லை பதுங்கவும் இல்லை. அனுபவம் தேடுகிறோம். அவ்வளவு தான்.

*கேள்வி: சமீபகாலமாக உங்களது படங்களை வைத்து பலர் பிரச்சினைகளை எழுப்பும்போது உங்கள் மனதில் என்ன ஓடும்?

பதில்: இதில் என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்காகவும் அதன் பின்னணியில் உழைக்கும் மக்களுக்காக வருந்துவேன்.

*கேள்வி: இன்னும் 10 வருடங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: கடவுள் எழுதிய எனது வாழ்க்கை புத்தகத்தில் நம்பிக்கை இருக்கிறது. புத்தகத்தின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியாது. எல்லா பக்கத்தையும் சந்தோஷமாக கடக்கிறேன். என்ன நடக்கும் என்று என்னால் கூற முடியாது. பலனை எதிர்பார்க்காமல் என்னுடைய கடமையைச் சரியாக செய்ய ஆசைப்படுகிறேன்.

*கேள்வி: பணம், புகழ் என அனைத்திலும் வெற்றி. அடுத்தது என்ன?

பதில்: திருப்பி கொடுப்பது. நீங்கள் கொடுத்த இந்த அதிகமான அன்புக்கு நான் என்னால் முடிந்ததை எல்லாம் திருப்பி கொடுக்க வேண்டும். கொடுப்பேன்.

*கேள்வி: சமீபத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது?

பதில்: ஜிகர்தண்டா மற்றும் த்ரிஷ்யம்.

*கேள்வி: இணையத்தில் ரசிகர்களின் சண்டைகள் அதிகரிக்கிறது. உங்களது ரசிகர்களுக்கு அறிவுரை கூறுங்கள்

பதில்: ஆம். இது துரதிஷ்டவசமானது. இம்மாதிரி சண்டையில் ஈடுபடுவதை விடுத்து, சமூக பிரச்சினைகளில் கவனம் செலுத்தி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எனது ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

*கேள்வி: உங்களது ரசிகர்கள் குறித்து?

பதில்: வெற்றியில் என்னிடம் ஒட்டிக் கொண்டவர்கள் அல்ல. தோல்வியில் என்னை தட்டிக் கொடுத்தவர்கள் என் ரசிகர்கள்.
நடிகன் - ரசிகன் தாண்டிய உறவு எங்களுடையது.

*கேள்வி: நிறைய பிரச்சினைகள் இருந்தும் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். எப்படி இந்த சக்தி?

பதில்: அமைதி தான் எப்போதுமே பெரிய சக்தி.

*கேள்வி: உங்களது ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: உழைத்திடு.. உயர்ந்திடு.. உன்னால் முடியும்.

*கேள்வி: உங்களது எதிர்ப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: எதிரியையும் நேசிப்போம். நான் அவர்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

*கேள்வி: முதலில் கோக் விளம்பரத்தில் நடித்தீர்கள். தற்போது அதற்கு எதிராக 'கத்தி' படத்தில் நடித்துள்ளீர்கள். ஏன் இந்த எதிர்மறை?

பதில்: மக்கள் இதே போல அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொள்ளும்போதும் கேள்வி எழுப்பினால் நான் மகிழ்வேன். ஆம், நான் இதற்கு முன் அந்த விளம்பரத்தில் நடித்தேன். சச்சின், ஆமிர்கான் போன்ற மிகப்பெரிய பிரபலங்களும் நடித்துள்ளனர். ஆனால் நான் தற்போது அந்த பிராண்டை விளம்பரப்படுத்துவதில்லை. கத்தி கதையைக் கேட்ட போது அதன் கருத்து எனக்குப் பிடித்திருந்தது. அதை ஜீவா கதாபாத்திரம் வழியாகப் பேசியுள்ளேன். என்னோட தவறுகளைத் திருத்திக்கொள்கிற சாதாரண மனிதன்தான் நானும்.

*கேள்வி: சூப்பர் ஸ்டார் தலைப்பு பிடித்திருக்கிறதா... இளைய தளபதி தலைப்பு பிடித்திருக்கிறதா...

பதில்: நான் நடிக்க ஆரம்பித்தவுடன் மக்களுக்கு என்னை பிடித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். தற்போது நான் எதிர்பார்த்தை விட மேலாக உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறது. உங்களுடைய இந்த அன்பிற்கு முன்னால் எனக்கு எந்தவொரு தலைப்பும் பெரிதாகத் தெரியவில்லை.

நன்றி-த ஹிந்து

*T.T

19,821 Views
“வெயில், அங்காடித் தெரு, அரவான்” ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதிய படம் ‘காவியத்தலைவன்.’ ‘Boys’ படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். தமிழில், “காதலில் சொதப்புவது எப்படி, உதயம், தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா திரைப்படங்களைத் தொடர்ந்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘காவியத் தலைவன்.’

“காளை, முனி, சக்கரக்கட்டி, பரதேசி” திரைப்படங்களில் நடித்த வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக பிரபல இந்தி இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ‘சத்யா 2’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனைக்கா சோட்டி நடிக்கிறார். மிக முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயனாக இருக்கும் பிருத்விராஜ் நடிக்கிறார். இவர் தமிழில் “மொழி, கனா கண்டேன், ராவணன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா” முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை, இணை கதாபாத்திரங்களில் நாசர், தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, அழகி ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கும், பிற இயக்குனர்களுக்கும் அதிகம் இசையமைக்க ஒத்துக் கொள்ளாத, oscar நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு, இது நாட்டுப்புற இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென இசையமைக்க சம்மதித்ததோடு, தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.

1,979 Views
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி டெஸ்ட் தொடருக்காக அவுஸ்திரேலியா பயணிக்கிறது.

இலங்கைக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணித் தலைவர் தோனிக்கு ஒய்வு வழங்கப்பட்டது போல, அவரது விரலில் ஏற்பட்டுள்ள காயம் குணமடையாமையால், இறுதி இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் தோனி விளையாடமாட்டார் என்றும் விராட் கோளியே தொடர்ந்தும் தலைமை தாங்குவார் என்றும் இந்திய தேர்வாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதுஐ விட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் தகவலாக, பிரிஸ்பேனில் டிசெம்பர் மாதம் முதல் வாரம் ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியிலும் தோனி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த டெஸ்ட் போட்டியிலும் கோளியே தலைமை தாங்குவார் என்றும் உறுதியாகியுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 19 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் குழுவில் இளம் துடுப்பாட்ட வீரர் ராகுல், சுழல் பந்துவீச்சாளர் கார்ன் ஷர்மா ஆகியோரோடு இரண்டு வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இதேவேளை உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ந்து பிரகாசித்துவரும் உத்தப்பா இலங்கை அணிக்கு எதிரான இறுதி இரு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான குழுவில் இடம்பெற்றுள்ளார்.

அணிகளின் விபரங்கள்-

India Test squad MS Dhoni (capt), Virat Kohli, Shikhar Dhawan, M Vijay, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane, Rohit Sharma, Suresh Raina, Wriddhiman Saha, Naman Ojha, R Ashwin, Karn Sharma, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Mohammed Shami, Ishant Sharma, Umesh Yadav, Varun Aaron

 

India squad for SL ODIs Virat Kohli (c), Ajinkya Rahane, Rohit Sharma, Ambati Rayudu, Suresh Raina, Robin Uthappa, Akshar Patel, Karn Sharma, R Ashwin, Umesh Yadav, Dhawal Kulkarni, Stuart Binny, Vinay Kumar, Kedar Jadhav

ஏஆர்வீ


2,824 Views
சில புகைப்படங்கள் எடுக்கப்பட்ட கோணங்களும், அவை படமெடுக்கப்பட்ட தருணங்களும் அந்தப் புகைப்படங்களை அசத்தல் படங்கள் ஆக்கிவிடும்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இரசனையிருக்கும், சிலரின் இரசனை வேறு சிலருக்கு வெறுப்பாக இருக்கும். ஆனால் இந்த புகைப்படங்களை பாருங்க கண்டிப்பா இரசிப்பீங்க........
1,798 Views
கிரிக்கட் சாதனை வீரர் சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை அடங்கிய புத்தகம் Playing It My Way அண்மையில் உலக பிரபலங்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

புத்தக வெளியீட்டு தினம் மற்றும் விற்பனை தொடங்கும் முன்பே ஹாச்சேட் இந்தியா (Hachette India)
வெளியீட்டு நிறுவனத்திற்கு 150,000 புத்தக பிரதிகளுக்கான கட்டளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புனைவு மற்றும் புனைவல்லா நூல்களுக்கான கட்டளைகள் முன்கூட்டியே இப்படியான அளவுக்கு வந்ததில்லையாம்.

இப்போது, சச்சினின் சுயசரிதை சாதனை சிகரத்தை எட்டியுள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் பிரமித்து நிற்கின்றார்கள்.

இதற்கு முன்னர் வால்டர் இசாக்கன் (Walter Isaacson) எழுதிய 'Steve Jobs' வாழ்க்கை வரலாறு நூல் 130,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இப்போது, சச்சினின் சுயசரிதை அந்த சாதனையை முறியடித்துள்ளது.

சச்சினுக்கு பெட்டும், பேனாவும் சாதனையை தந்துள்ளது என்று பிரமிக்கும் இந்திய ஹாச்செட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தோமஸ் ஆப்ரஹாம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இப்போதுதான் 'பேனா' இன்னிங்சை ஆரம்பித்துள்ளது போல் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய தகவல்களின் அடிப்படையில் - ரிம்ஷாத்
2,777 Views
தனது தந்தையான சச்சின் டெண்டுல்கரை அவதூறாக பேசிய நண்பனை சச்சினின் மகன் அர்ஜுன் பலத்த குத்துவிட்டு காயப்படுத்தியுள்ளார்.

இது இப்போது நடந்த விடயமல்ல.

2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நடந்தது.

இதில் இந்தியா இலங்கையிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து விலகியது.

இதன்காரணமாக இந்திய ரசிகர்கள் மாத்திரமன்றி அர்ஜுனும் கோபமடைந்திருந்தார்;

இந்த போட்டியில் அப்பா சச்சின் எந்தவிதமான ஓட்டத்தையும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமையால் இன்னும் வேதனைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

இயற்கையிலேயே அர்ஜுன் கோபக்காரர் என்பதனால் அப்பா டக் அவுட் ஆனமை பற்றி பேசினால் கோபப் படக் கூடாது என்று அம்மா அஞ்சலி கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.

இருந்தும் அர்ஜுனின் நண்பன் ஒருவர் சச்சின் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தமை பற்றி கிண்டலடித்து பேசியிருந்தார்.

ஆத்திரமடைந்த அர்ஜுன் சரமாரியாக குத்து விட்டுள்ளார்.

சச்சின் தனது சுயசரிதை புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது மகனுக்கு 7 வயது தானாம்.

இன்னும் பல சுவாரஸ்யங்களை சச்சினின் சுயசரிதை தந்துள்ளது.
9,244 Views
அறுபதாவது அகவையில் தன் நாட்டின் அகத் தூய்மைக்காக களமிறங்கும் உலக நாயகன்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக உலக நாயகன் பத்ம பூஷன்  கமல் ஹாசன் தலைமையில். அவருடைய பிறந்த நாளான இன்று கமல் நற்பணி இயக்கத் தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் நீர் நிலைகளை தூய்மைப் படுத்தும் இயக்கம் தாம்பரம் வேளச்சேரி முதன்மைச் சாலையில் உள்ள, ராஜ் கீழ்பாக்கம் சந்திப்பு அருகில் உள்ள மாதம்பாக்கம் ஏரியிலிருந்து தொடங்கினார்.படங்கள் - விகடன் 

1,977 Views
நாளைய தினம் பப்புவா நியூ கினியா, ஹொங்கொங் ஆகிய இரு அணிகளும் அவுஸ்திரேலியாவின் புதிய மைதானமான Townsville மைதானத்தில் விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி, பப்புவா நியூ கினியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி.
 
இந்த ஆண்டு நியூ சீலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதிகாண்  போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெற்ற அணிகள் உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெற, ஐந்தாம், ஆறாம் இடங்களைப் பெற்ற இவ்விரு அணிகளுக்கும் 4 வருடங்களுக்கு ஒருநாள் சர்வதேசப் போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
 
எனினும் இரு நாடுகளிலும் சர்வதேசப் போட்டிகளை நடத்தும் மைதானங்கள் இல்லை என்பதாலேயே அவுஸ்திரேலியாவின் 10வது சர்வதேச மைதானத்தில் களமிறங்கவுள்ளன.
 
ஹொங்கொங் ஏற்கெனவே ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது.புதுமுக வீரர்கள் பத்துப் பேருடன் களமிறங்கும் PNG அணியில் ஒரேயொரு வீரர் தனது 50வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ளார்.
 
அவர் முன்னாள் இங்கிலாந்து விக்கெட் காப்பாளர் ஜெரெய்ண்ட் ஜோன்ஸ். 
இதேவேளை நியூ சீலாந்தின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டீபாக் பட்டேல் தான் Barramundis என்று செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் பப்புவா நியூ கினியா அணியின் பயிற்றுவிப்பாளர்.
 
கடினமாகப் போராடும், அதேவேளை உற்சாகமாக கொண்டாடும் புதிய இந்த அணியை கிரிக்கெட் ரசிகர்கள் நாமும் கோலாகலமாக வரவேற்போம்.

- ஏஆர்வீ 
4,097 Views
என்ன தான் சகுனங்கள் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை என உதடுகள் உச்சரித்தாலும், உள்ளம் திக் திக் திக் என்று தான் இருக்கும். இல்லவே இல்லை என இதனை யாராலும் மறுக்க முடியாது. ஓகே இப்ப விஷயத்துக்கு வரலாம்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்துக்கு சொந்தமான சூரத் நகரிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தின் மீது எருமை மாடொன்று மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
140 பயணிகளுடன் தன் பயணத்தை ஆரம்பித்த இந்த விமானம், ஓடு தளத்தில் பயணிக்கு போது ஒரு எருமை மாடு எதிரே வந்து மோதியுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பீதியடைந்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. என்னதான் ஆபத்து இல்லாவிட்டாலும், எமனின் வாகனமான எருமை மாடு விமானத்தின் மீது மோதியது என்பது அவ்வளவு நல்லதாக படவில்லை போலிருக்கிறது.

ஏதோ ஒரு ஆபத்திற்கான அறிகுறி தான் இது என கருதி, பாதுகாப்பாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு பயணிகள் டெல்லி நோக்கிய தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். நேற்று இரவு 7.30 மணியளவில் நடைப்பெற்ற இந்த சம்பவத்தில் 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தின் பக்கவாட்டு பகுதி சேதமடைந்துள்ளதாக விமானி தெரிவித்துள்ளார். எனினும் எருமை மாட்டிற்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை.

விமான ஓடுதளத்தில் எருமை மாடு நுழையும் அளவுக்கு சூரத் விமான நிலையத்தின் பாதுகாப்புதரப்பினர் கடமையில் ஈடுபட்டிருந்தமை வியக்க வைக்கிறது.
5,140 Views
உலகின் பலம் வாய்ந்தவர்கள் பட்டியல் -போர்ப்ஸ் வெளியீடு.

ஒவ்வோர் ஆண்டும் உலகின் பலம் வாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிக்கை இப்போது 'உலகளாவிய ரீதியில் பலம் வாய்ந்தவர்கள்'என்று புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் ரஸ்ய அதிபர் விளாடிமர் புட்டின் இருக்கிறார்.அடுத்த இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இருக்கிறார்.

சீன அதிபர் ஜின்பிங் 3 வது இடத்திலும், போப்பாண்டவர்  பிரான்சிஸ் 4 வது இடத்திலும், உலகின் சக்தி வாய்ந்த பெண்மணி என்று வர்ணிக்கப்படும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 5 வது இடத்திலும், உலக பணக்காரர் பில் கேட்ஸ் 7வது இடத்திலும் உள்ளனர்.

கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி ப்ரின் 9 வது இடத்திலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் 10 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

 
இந்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 15 வது இடம் கிடைத்துள்ளது.கடந்த முறை இந்த பட்டியலில் உள்வாங்கபட்ட  காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி இம்முறை இந்த பட்டியலில் உள்வாங்கப்படவில்லை  .

Facebook நிறுவுனர் மார்க் சக்கேர்பெர்க் 22 வது இடத்திலும் தரப்படுத்தபட்டுள்ள அதேவேளை 'இபோலா' நோய் ஒழிப்புக்கு எதிராக உன்னத நடவடிக்கைகளை எடுத்துவரும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவி மார்கிரட் சண் 67 வது இடத்திலும் உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனமான உலக வங்கியின் தலைவர் ஜிம் ஜோன்க் கிம் 45 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.   

ஆனாலும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு  இதிலே 40 வது இடம்தான் கிடைத்துள்ளது.

உலகளாவிய ரீதியில் பலம் வாய்ந்தவர்கள் என்ற அடிப்படையில் 72 பேரைக்கொண்ட இந்த பட்டியலில் உங்கள் பெயர் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்று தேடிப்பார்க்க ஆசைப்பட்டால் நீங்கள் போர்ப்ஸ் தளத்திற்குத் தான் செல்லவேண்டும்.

என்றோ ஒருநாள் உங்கள் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறும் என்று மற்றவர்கள் நம்பாவிட்டாலும் நீங்கள் நம்புங்கள்.#நம்பிக்கைதான் வாழ்க்கை !!!

*தில்லையம்பலம் தரணீதரன்.
5,033 Views
[1]      «      669   |   670   |   671      »      [692]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top