Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பாலிவுட்டின் பார்வை தற்போது தமிழ் பக்கம் திரும்பியுள்ளது.

அதை நிருபிக்கும் பொருட்டு ஷாருக்கான் -தீபிகா நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவரும் படம் ஹாப்பி நியூ இயர். இப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளிவருகிறது.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் அபிஷேக் பச்சனும் கலக்கியிருக்கிறார்.
பெரும் நட்சத்திரப்பட்டாளம் கலக்கும் இந்தப் படத்தில் பாடல்கள், நடனங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
 

 

 


ஷாருக் கான் அடிக்கடி தமிழ்நாட்டுப் பக்கம் விஜயம் செய்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.
இவரது அண்மைக்கால படங்களில் அநேகம் தமிழரைக் கவரும் அம்சங்களைக் கொண்டிருந்தன.

ரா வன், சென்னை எக்ஸ்ப்ரஸ்... இப்போது ஹாப்பி நியு இயர்.

திரையிடுவதற்கு முன்பே 200 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் தமிழ் வெளியீடு வெள்ளிக்கிழமையும் திரைக்கு வரவுள்ளது.
விளம்பரமே ரசிகர்களை ஈர்த்திருக்க தீபாவளி வெளியீடாக விஜயின் கத்தியுடன் இதுவும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் வெளியாகிறது.

எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கையில் வெளியாகவுள்ள ஹாப்பி நியு இயர் கொழும்பில் ஹிந்தியிலும், யாழ்ப்பாணத்தில் தமிழிலும் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் விருந்து எனலாம்.

ஹாப்பி நியூ இயர் ட்ரைலர்(தமிழில்) - தமிழில் கலக்கும் ஷாருக்கான்! Happy New Year | Official Trailer (Tamil)

3,250 Views
காதலியை கொலை செய்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்க்கு  5 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஒஸ்கார் பிஸ்டோரியஸ் என்று அறியப்பட்ட தென்னாபிரிக்காவின் பிரபல தடகள வீரர் தன் காதலியை கொலை செய்தார் என்ற குற்றசாட்டில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

2012 ம் ஆண்டு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு கால்களும் இல்லாமல் கடுமையான முயற்சிகளுக்கு பின்னர் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இயற்கை கால்களுக்கு மத்தியில் இயல்பாய் ஓட தன் செயற்கை கால்களுக்கும் பழக்கம் கொடுத்து போட்டிகளில் பங்கெடுத்து அனைவரது கவனத்தையும்  ஈர்த்தவர்தான்  இந்த ஒஸ்கார் பிஸ்டோரியஸ்.

         

கடந்த 2013 ம் ஆண்டு காதலர் தினத்தன்று தன் காதலி ரீவா ஸ்டீன்கெம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார் ஒஸ்கார் பிஸ்டோரியஸ்.

வீட்டில் யாரோ திருடன் புகுந்துவிட்டான் என நினைத்து தவறுதலாக காதலியை சுட்டதாக முதலில் செய்தி வெளியானது. இவர் திட்டமிட்டு கொலை செய்ததாக பொலிசார் உறுதியாக இருக்க பிணைபெற முடியாமல் சிலகாலம் சிறையில் சிக்கித் தவித்தார்.

பின்னர் குறித்த வழக்கில்  பிஸ்டோரியஸ் வீட்டில் ரத்தக் கறை படிந்த கிரிக்கெட் மட்டை கண்டு எடுக்கப்பட்டது. தவிர, ஸ்டீன்கெம்ப்பின் மண்டைஓடு பலமாக தாக்கப்பட்டிருந்தது, அவர் விழுந்து கிடந்த குளியலறைக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது என்று பிஸ்டோரியசுக்கெதிராக ஆதாரங்கள் சொல்லப்பட்டன.

இதைவிடவும் தடைசெய்யப்பட்ட போதைமருந்தை இவர் உட்கொள்பவர் என்பதோடு அன்று அதிகாலை அளவில் பிஸ்டோரியஸ் அளவுக்கு அதிகமாக மதுவருந்தி இருந்தாகவும்  தெரியவந்தது.

         

கொலைசெய்யப்பட்ட ஸ்டீன்கெம்ப்  தென்னாபிரிக்காவின் ரக்பி வீரர் பிரான்கோயிஸ் ஹக்கார்டின் முன்னாள் காதலி.பின்னர்  ஹக்கார்டுடன் தொடர்பு கொள்வதை பிஸ்டோரியஸ் விரும்பவில்லை. சம்பவத்தன்று மாலை 6 மணிக்கு பிஸ்டோரியஸ் வீட்டுக்கு வந்த ஸ்டீன்கெம்ப் இவருடனேயே தங்கியுள்ளார்.

பிஸ்டோரியஸ்சுடன் தங்கியிருந்த தருணத்தில் முன்னை நாள் காதலனிடமிருந்த வந்த குறுந்தகவலால் ஆத்திரமடைந்த பிஸ்டோரியஸ் காதலியை கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்.அதன்பின் அவர் குளியலறையில் ஒளிந்து கொண்ட போது  துப்பாக்கியால் தாக்கினார் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது தன் காதலியை தான் வேண்டுமென்றே கொலை செய்யவில்லை என்று கண்ணீர் விட்டு  கதறி அழுத சம்பவங்களுக்கு மத்தியில் இன்று இவர் குற்றம் நிரூபணமாகி 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    

"Blade Runner"என்று எல்லோராலும் அறியப்பட்ட + பாராட்டப்பட்ட ஒரு திறமையான தடகள வீரனின் வேண்டாத,தீராத காதல்மோகம் அவன் வாழ்கையை இப்படி மாற்றிப் போட்டிருக்கின்றது.

இதுவும் கடந்து போகும்.

ஒலிம்பிக்கில் கால்பதித்து பரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் குவித்த இந்த தடகள ஓட்ட வீரன் இலக்கு இப்போது தடம் புரண்டாலும் மீண்டும் தடகளத்தில் தடம்பதிக்க வாழ்த்துவோம்.

*தில்லையம்பலம் தரணீதரன் 
2,158 Views
பூஜைக்கு அதிக வசூல் ஆந்திராவில்..?

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் படம்தான் "பூஜை" தமிழகத்தில் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகளிலும் கேரளா,கர்நாடகா மற்றும் உலகெங்கும் 1200 க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட  உள்ளது.

தமிழை விட தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது பூஜை திரைப்படம்.ஸ்ருதிஹாசன் இத்திரைப்படத்தில் நடித்துள்ளமை தான் அதற்கான காரணம் என்று நம்பப்படுகின்றது.

தெலுங்கில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடினாலும் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. விஷால் படங்களிலேயே அதிகபட்சமாக தியேட்டர்கள் முன்பதிவாகியுள்ள படம் இதுதானாம்.

கத்தி படத்துடன் போட்டிபோட உள்ள பூஜை, தமிழகத்தில் சற்று சரிந்தாலும், ஆந்திராவில் நல்ல வசூலை தரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.


7,597 Views
தெலுங்கு,தமிழ் என தென்னிந்தியாவின் இரண்டு திரையுலகிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா. "பானா காத்தாடி" திரைப்படத்தின் மூலம் தமிழில் முதல் தடம் பதித்தவர். அந்தப்படத்தின் வெற்றியின் மூலம் பேசப்படும் நடிகையானதோடு, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான் உள்பட பல படங்களில் நடித்ததோடு தற்போது விஜய்யின் "கத்தி" திரைப்படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும்நிலையில், விரைவில் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக கூறியுள்ளார்.

                              பொதுவாக சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளிடம் திருமணம் பற்றிய பேச்சு எடுத்தாலே போதும், திட்டுக்கல்  பூட்டு ஒன்றை வாங்கி இறுக்கி பூட்டி வைச்சிடுவாங்க.ஆனால் சமந்தாவோ,தனது திருமணம் பற்றி திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்னும் மூன்று வருடங்களுக்குள் தான்  திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாராம்.'குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது. அப்போதுதான் எனது குழந்தைகளையும் நல்லபடியாக வளர்க்க முடியும்' என அதற்காக ஒரு காரணமும் சொல்லியிருகிறார்.யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதை மட்டும் அவர் சொல்லவே இல்லையாம்.  

                                         இது இவ்வாறிருக்க, தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்துவரும் நடிகர் சித்தார்த்துடன் சமந்தா சில வருடங்களாகவே காதலாகி,கசிந்து உருகுவதாக கிசு கிசு வெளியாகியிருந்தது. அதை உண்மையாக்குவது போல,இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக தம்பதிகள் போல சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த சாமிதரிசனத்தின் மூலம் தமது காதலை உலகுக்கு மறைமுகமாக சொல்லியிருப்பதாகவும் திரையுலகில் ஒரு பேச்சு. 

                                                         "கத்தி" படவெளியீடு பிரச்சனையில் உள்ள நிலையில், "ஐ" படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் "பத்து எண்ணுவதற்குள்ளே" படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறாராம். 

எது எப்படியோ....? கத்தி படம் சமந்தாவுக்கும் நிறையவே கற்றுக்கொடுத்திருக்கும் போல...... 

சமந்தாவின் அழகிய தோற்றங்கள் 

சினி நியூஸ்:கணேசமூர்த்தி ராகவன்
7,941 Views

கே.எஸ் ரவிகுமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் இரண்டு வேடங்களில் நடிக்கும் திரைப்படம் 'லிங்கா' திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ், பாடல்கள் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளன்று வெளியாகும் என்ற தகவல்களை நேற்றே நாம் எமது தளத்தில் பதிவேற்றியிருந்தோம்.

பொங்கலுக்கு லிங்கா

மேலும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்றக்கொண்டிருக்கின்றன.

பல பிரபல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின், டப்பிங் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். பல நடிகர்கள் தங்களுக்குறிய வசனங்களை பேசும் போது திக்கித் திணறி.. தடுமாறி பேசி முடிக்க.. பல மணி நேரங்களை செலவிடுவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இது இப்படியிருக்க சூப்பர் ஸ்டார் 24 மணித்தியாலத்திற்குள் தனக்குரிய அத்தனை வசனங்களையும் பேசி முடித்துள்ளார். இது படக்குழுவினை வியக்க வைத்துள்ளது. 5, 10 நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுத்து.. தொடர்ந்தும் பேசி முடித்துள்ளார் ரஜினி.

நீண்ட வசனங்களையும் ஒரே டேக்கில் பேசி முடிக்க ஓகே சொல்லிவிட்டார்களாம் ஸ்டூடியோ பணியாளர்கள்.

சினி தகவல்களை தொகுத்து வழங்கியது
ர. பிரவீனா
2,908 Views
சர்ச்சையை ஏற்படுத்தி வந்த 'கத்தி' தயாரிப்பாளர் லைக்கா பெயரை நீக்குவதாகவும், முன்னால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும் இளைய தளபதி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நீண்டகாலம் மௌனம் காத்து வந்த விஜய் கத்தி விவகாரத்தில் மௌனம் கலைத்தது, ஏற்பட்ட சிக்கல்கள் மூலம் தளர்ந்து போயிருந்த ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.

அப்போ இனி கத்தி வரும்...

- சினிCID
14,418 Views
கத்தி படம் வெளிவருமா வெளிவராதா என விஜய் ரசிகர்கள் மட்டுமன்றி விஜய்யையும் ரசிகர்களையும் கலாய்ப்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்க, இன்னொரு பக்கம் கத்தி திரைப்பட முன்பதிவுகளை மேற்கொண்டு வந்த சென்னை சத்யம் திரையரங்கு மர்ம நபர்களால் நேற்றிரவு குண்டுவீசி  தாக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்டித்து ட்விட்டரில் ராதிகா, குஷ்பு, மதன் கார்க்கி போன்றோரும் இன்னும் பலரும் தகவல் பகிர்ந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவரான சரத்குமாரிடம் இது பற்றி விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

கத்தி வரும், வரணும் என்று ஆரம்பத்தில் பதில் சொன்ன சரத்குமாரை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் சீண்ட, சூடான நாட்டாமை பொங்கி வெடித்துவிட்டார்.

நடிகர் சங்கத்தலைவர் என்ற ரீதியில் இவர் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொருமிய சில விஜய் ரசிகர்கள் 'நீங்க நடிகர் சங்கத் தலைவர் தானா?' என்று கேட்டபோது,

'நேரில் வா காட்டுகிறேன்' என்றும் தலையை வெட்டுவேன் என்று மிரட்டிய ரசிகருக்கு தனது வீட்டு முகவரியைக் கொடுத்து 'முடிந்தால் வந்து தலையை எடு' என்றும் சரத் பொங்கி வெடித்திருந்தார்.இறுதியாக சிரிப்புடன், Good Night சொல்லி விடைபெற்றார் சரத்குமார்.

இன்னும் இணைய மோதல்கள் வெடிக்குமா?
சுவாரஸ்யம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் வெயிட்டிங்.


நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு.

-சினி CID
20,394 Views
விஜய்யின் கத்தி திரைப்படம் எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பை வெட்டிக்கொண்டு வெளியாகும் என எதிர்பார்ப்பில் இருந்த இளையதளபதி விஜய் மற்றும் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை, தமது உக்கிர எதிர்ப்பின் மூலம் தொடர்ந்து வெட்டிக்கொண்டிருக்கிறார்கள் திரைப்பட எதிர்ப்பாளர்கள்.    

                   "லைக்கா" என்ற பெயரை நீக்காதவரை படத்தை வெளியிட தாங்களும் "லைக்"பண்ணப்போவதில்லை என்ற நிலையிலேயே, தமிழ் மாணவர் அமைப்புக்கள்,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட பலர் இன்னமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

                            "கத்தி" படம் எதிர்ப்புகளை தாண்டி நாளை தீபாவளிக்கு வெளியாகும், 'எதிர்ப்புகளை சமாளித்து விட்டோம்' என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்றையதினம் தனது "ருவிட்டர்" தளத்தில் தெரிவித்திருந்தார். அதேவேளை 'தடைகளை உடைத்து விட்டோம்' என இயக்குனரும்,விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரும் கூறியுள்ள நிலையில் இந்த எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

                                     
இந்தநிலையில், சென்னையில் "கத்தி' திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கின் மீது நேற்று  இரவு பெட்ரோல் குண்டு வீசப்படும் அளவுக்கு இதன் தீவிரநிலை அதிகரித்துள்ளதாம்."கத்தி" பட வெளியீடு பிரச்சனையில் உள்ள நிலையில், ரிக்கட் முன்பதிவு மேற்கொண்ட சென்னை ராயப்பேட்டை "சத்யம்" திரையரங்கத்தின் மீதே இரவு இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாம். திரையரங்க ஊழியர்களின் மிகப்பெரும் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி.

                                                   இதேவேளை, திரையரங்கின் முன்பகுதி முற்றாக சேதமடையும் அளவுக்கு 3குண்டுகள் வீசப்பட்டுள்ளதாம். அங்கிருந்த "கத்தி" பட விளம்பரப்பதாதைகளும் கிழித்து சேதமாக்கப்பட்டதுடன், படத்துக்கு எதிராக கோசமும் எழுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றி வெளியாகியுள்ள செய்திகளுடன் கூடிய புகைப்படங்களில், திரையரங்கத்தின் கல்வீச்சிற்கு உள்ளாகி முற்றுமுழுதான சேதத்திற்குள்ளான முகப்புப்பகுதியே காணப்படுகின்றது. 

இதேவேளை சத்யம் திரையரங்கு மீது வீசப்பட்டதாக சொல்லப்படும் பெட்ரோல் குண்டின் மீதியைப் பொலிசார் வெளியிட்டுள்ளதோடு, இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் ஐந்து பேரை கைது செய்திருப்பதாகவும் சென்னை போலீசார் கூறியுள்ளனர்.


                 தற்போது, ஜெயலலிதா பிணையில் வெளியான நிலையில், இந்த எதிர்ப்புப் போராட்டம் இன்னும் வலுப்பெறுவதாக  அங்கிருந்து  கிடைத்த தகவலும் உங்களுக்காக....... 
 
என்று தணியும் இந்த எதிர்ப்புப் போராட்டம்...? எப்போ வெளிவரும் "கத்தி"...?கேள்விகளோடு காத்திருக்கும் ரசிகர்களோடு நாங்களும்..

தமிழகத்திலிருந்து கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தொகுத்தவர்: கணேசமூர்த்தி ராகவன்

கத்தி - ஸ்பெஷல் படங்களின் தொகுப்பு

கத்தி ட்ரைலர் - Kaththi - Trailer

12,902 Views
ஆப்பு வைத்த கரீபியன்கள்,ஆதரவு கொடுத்த இலங்கையர்கள்.
இந்தியாவின் இழுபறி கிரிக்கெட் தொடர் ! 

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான திட்டமிட்ட தொடர் இடைநடுவே கைவிடப்பட்டு இப்போது பலவிதமான சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கின்றது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தங்களது  புதிய ஒப்பந்தத்தில் வீரர்களுக்கான சம்பளத்தை 75 வீதத்தால் குறைத்தது.இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் தங்களது அதிருப்தியை  தங்கள் நாட்டு கிரிக்கெட் சபைக்கு எதிராக காட்ட முனைந்தே இந்த தொடரை இடைநடுவில்  கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இதன்காரணத்தால் இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில்    ஒருவித சுமுகமற்ற நிலைமையே அண்மைய நாட்களில் காணப்பட்டது.இப்போது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்திய கிரிக்கெட் சபையிடம் மன்னிப்பு கேட்டாலும்கூட இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை.இது ஒரு தற்காலிக காய் நகர்த்தல் மட்டுமே.

                 


மழைநின்ற பின்பும் தூவானம் ஓயாதது போல் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சியான தகவல்களே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் சஞ்செய் பட்டேலின் கருத்துப்படி 400 கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.

அத்தோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான தொடரில் இந்திய அணி பங்கெடுப்பதும் நிறுத்தப்படும் என்ற வலுவான நிலைப்பாட்டுக்கு இந்திய கிரிக்கெட் சபை இப்போது தள்ளப்பட்டது என்பதுவே உண்மையானது.

21 ம் திகதி நடக்கும் இந்திய கிரிக்கெட் உயர் மட்ட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகின்றது.

இப்படியான 2 விடயங்களையும் விடுத்து ஒரு சாதாரண கிரிக்கெட் ரசிகனாக IPL  போட்டிகளில் மேற்கிந்திய வீரர்களை தடை செய்வது என்ற  நடவடிக்கை கடும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்றது.இதன்மூலமாக இந்திய கிரிக்கெட் சபையை பகைத்தால் என்ன நடக்கும் என்பதை இப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தெட்டத் தெளிவாக இந்திய கிரிக்கெட் சபை காட்ட முனைகின்றது.

பணபலத்தால் பன்னாட்டு கிரிக்கெட் சபைகளையும் அடிபணிய வைத்து சர்வதேச கிரிக்கெட் சபையையும் கூட தன் ஆளுகைக்குள் வைத்திருக்கும் பணக்கார அமைப்பான BCCI ,குறித்த நடவடிக்கைகள் மூலமாய் மேற்கிந்திய தீவுகள் வீரர்களையும் ,கிரிக்கெட் சபையையும் கதிகலங்க வைத்திருக்கின்றது.

400 கோடி நட்ட ஈடு என்பதோ 5 ஆண்டு கிரிக்கெட் தொடர் இல்லை என்பதுவோ யாரையும் மிரள வைத்திருக்காவிட்டாலும் இந்த IPL  தடை மூலமாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் செய்வதறியாது திக்குமுக்காடித்தான் போயிருப்பார்கள்.

தங்கள் நாட்டு கிரிக்கெட் சபையை அடிக்கடி பகைத்துக் கொள்ளும் கிரிஸ் கெயில்,சுனில் நரைன் போன்றவர்கள் IPL  போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தாம் சார்ந்த தேசிய கிரிக்கெட் அணிக்கு கொடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
 
பணம் கொழிக்கும் IPL போட்டிகளிலேயே  இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதுண்டு.என்னதான் IPL  மூலமாக அவர்கள் சாதகங்களை அனுபவித்தாலும் ஒரு உணர்வு பூர்வமான கிரிக்கெட் ரசனையை இந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் கொடுத்து IPL க்கு உயிர் கொடுக்கும் உண்மையையும் நாம் மறுப்பதற்கில்லை.

K.பொல்லார்ட்,L.சிம்மொன்ஸ்,DJ.பிராவோ,டிவயன் ஸ்மித்,சாமுவேல் பத்ரி,டர்ரென் சாமி,C.கெயில் ,சுனில் நரைன்,ரவி ராம்போல்,அன்ரே ரஸ்ஸல் ,ஜேசன் கோல்டர் போன்ற வீர்கள் ஒவ்வோர் IPL அணிகளுக்கும் மிகப்பெரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் மட்டுமல்லாது அணியின் வெற்றிகளிலும் பெரும் பங்காற்றியவர்களும் கூட.
   
இது இப்படியிருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் அவர்கள் கிரிக்கெட் சபைக்கும் முறுகல் இருத்திருக்கின்றது.இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இரண்டரை ஆண்டுகள் சம்பளமின்றியே பல தொடர்களில் இலங்கைக்கு வெற்றியை தேடி கொடுத்தவர்கள்.

ஆசிய நாட்டின் எந்த ஒரு அணியும் கிரிக்கெட் தொடரை இவ்வாறு புறக்கணித்ததில்லை.இப்படியிருக்க இவர்களுக்கு இது ஒரு பழக்கப்பட்ட விடயம் போன்றே நடந்து முடிந்திருக்கின்றது.

*தோள் கொடுப்பான் தோழன்.

                    


இப்படியான இக்கட்டில் தவித்த இந்திய கிரிக்கெட் சபைக்கு ஒரு உற்ற நண்பன் போல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவியிருக்கின்றமை மிக்கப்பெரும் வரலாற்று உதவியும்+உந்துதலுமே!

அப்படி இலங்கை கிரிக்கெட் அணி திடீரென்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஒப்புதல் கொடுக்காவிட்டால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மிகப்பெரும் சிக்கலை எதிர்கொள்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதிருந்திருக்கும்.

சர்வதேச கிரிக்கெட் சபையை ஆளுகின்ற BIG 3 (இந்திய,இங்கிலாந்து அவுஸ்ரேலிய) அமைப்புக்கான ஆதரவை கொடுப்பதில் முறுகல் நிலையை கடைப்பிடித்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதன்மூலமாய் இந்திய கிரிக்கெட் சபையின் மறைமுக எதிரியானது.

2014 IPL ஏலத்தில் இலங்கை வீரர்கள் பெருமளவில் இணைத்துக் கொள்ளபடாமல் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு மறைமுக அழுத்தத்தையும் பாடத்தையும் புகட்டியது என்ற கதையும் இருக்கின்றது.

இந்த நிலையில் 1996 உலக கிண்ண தொடரை இலங்கை கூட்டாக நடத்திய போது அவுஸ்ரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் இலங்கையில் பாதுகாப்பில்லை என்பதை காரணம் காட்டி போட்டியிலிருந்து விலகிகொண்டாலும் உறவுக்கார நண்பர்களாய் இந்திய ,பாகிஸ்தான் அணிகள் கைகொடுத்து தங்களுக்கு உதவிய வரலாற்று நிகழ்வையும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்இப்போது நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கினறது.

எது எவ்வாறாயினும் கைவிடப்பட்ட குறித்த மேற்கிந்திய தீவுகள் ,இந்திய அணிகளுக்கிடையிலான தொடரை காட்டிலும் உணர்ச்சி பூர்வமாக ,விறுவிறுப்பாகவும் எதிர்வரும் நவம்பரில் ஆரம்பமாகும் இந்திய +இலங்கை கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு  இருக்கும் என்பதில் ஐயமில்லை.

காத்திருப்போம் காத்திரமான களமுனை பெறுபேறுகள் நோக்கி !!!
   
*தில்லையம்பலம் தரணீதரன்
7,358 Views
 பிள்ளைகளோடு தீபாவளி கொண்டாடும் ஹன்சிகா!!!!!

தமிழில் கொடிகட்டிப்பறந்த ஒரு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை குஸ்பு. திரையுலகில் ரசிகர்கள் கோவில் கட்டிக்கொண்டாடிய ஒரே நடிகையும் இவர் தான். குஸ்புவிற்கு பின்னர் அவரது சாயல் கொண்டவரும் தற்போது திரையுலகில் கால் பதித்து சில வெற்றிப்படங்களிலும் நடித்தவர், "சின்னக்குஸ்பு" என பெயரும் எடுத்தவர் நடிகை ஹன்சிகா.மற்ற நடிகைகளில் சற்று மாறுபட்ட குணாதியசம் கொண்டவரும் கூட.

                          சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை தமது பிறந்தநாளை அவரவர் வசதிக்கேற்ப ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள். ஆனால் ஹன்சிகா கொஞ்சம் வித்தியாசமாக, தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம்.

                           தற்போது வரை 30 குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார். அந்தக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும் இடம், படிப்பு செலவு என எல்லாவற்றையும் அவரே நேரடியாக கவனித்து கொள்கிறாராம். இதற்காக மாதம் தோறும் பெரிய தொகையை செலவு செய்கிறார் அந்த மழலைகளுக்காக.


                                       

                            இந்நிலையில், "ஆம்பள" படத்திற்கான படப்பிடிப்பிற்காக ஊட்டியில் இருக்கும் ஹன்சிகா,அந்தப்படப்பிடிப்பை முடித்து விட்டு   அங்கிருந்து அப்படியே ஹைதராபாத் சென்று ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணநிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளாராம்.

               ஹைதராபாத்திலிருந்து நேராக மும்பை கிளம்பும் ஹன்சிகா, இந்த வருட தீபாவளியை, தான் தத்தெடுத்த 30 குழந்தைகளுடன் சேர்ந்து சந்தோசமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.

பணம் மட்டுமே பெரிதென்ற திரையுலகில், மனிதத்துவம் கொண்ட சில மனிதர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

*கணேசமூர்த்தி ராகவன்
2,235 Views
இணையப் பாவனையாளர்களுக்கான சட்டம்

இணையம் என்பது அனைவரின் கைகளிலும் உள்ள ஒன்றாக மாறிவிட்டது இணைய பாவனையாளர்களுக்கான எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் ஒரு இணையபாவனையாளர் 13 மணித்தியாலங்கள் தேவையற்ற விடயங்களை பார்பதற்காக செலவிடுகின்றார்கள் என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

நல்ல விடயங்கள் பல இருந்தாலும் சிலர் இணையத்தினூடாக பலரைப்பற்றி பொய்யான தகவல்களையும் ஒருவரை அவதூறு செய்யும் விதத்திலும் மற்றவர்களுக்கு எதிராக அச்சுறுத்துகின்ற விதமாகவும் மற்றும் துஷ்பிரயோகமான விடயங்களையும் இணையதளத்தில் வெளியிடுகிறனர்.

 அப்படியான குற்றங்களுக்கு  இப்போது அதிகபட்சமாக 6 மாதங்களே தண்டனை வழங்கப்படுகின்றன. ஆனால், இனி இரண்டு ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிப்பதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது .

 இந்த பரிந்துரைகள் சட்டமாக்கப்பட்டால், இப்படியான நபர்களை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடிவதோடு இணைய துஷ்பிரயோக சம்பவங்களும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டனில் அமுலாகவிருக்கும் இந்த சட்டம்,  இலங்கையிலும் அமுலாக்கப்பட்டால் இணையவழிக் குற்றங்கள் குறைவதற்கான  வாய்ப்பு இங்கும் இருக்கும் என்று நம்பியிருப்போம்.

இணையத் தகவல்களினை அடிப்படையாகக் கொண்டு
தொகுத்து  தந்தது
-வர்ஷி-
2,583 Views
ஏ.ஆர் முருகதாஸின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் விஜய், சமந்தா நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவுள்ள கத்தி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளமை தெரிந்த விடயம். கத்தி டிரெய்லரை எமது இணையத்தளத்திலும் நாம் தந்திருந்தோம்.

கத்தி ட்ரைலர் - Kaththi - Trailer


படம் வெளியாக இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் விஜய் பேசும் ' பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை வரைக்கும் எல்லாம் கிராமத்திலிருந்து வரணும், ஆனா ஒரு கிராமத்தான் செத்தா மட்டும் மூக்க மூடுவாங்களா? இப்ப வர வைக்கிறேன் பாரு அத்தனை செனல்களையும்' எனும் முத்திரை வசனம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

ஒரு சில மணிநேரங்களில் 9 லட்சத்திற்கும் அதிகமானோர், கத்தி டிரெய்லர் பார்த்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வழக்கமாக விஜய் படங்கள் வெளியாகும் நேரம் நடக்கும் சமூக வலைத்தள மோதல்கள் போட்டிக் கிண்டல்கள், கலாய்த்தல்களும் ஆரம்பித்துள்ளன.

அஞ்சான் இயக்குனர் லிங்குசாமியின் பேட்டிக்கான எதிர்வினை போலவே 'கத்தி' ட்ரெயிலர் பற்றிய கிண்டல் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.
சினிமா உலகில் இது சகஜம் தானே.

கோடம்பாக்க சினி செய்திகளை தொகுத்து வழங்கியது
ர. பிரவீனா
10,264 Views
அஜித்குமார் படம் நடிக்கும் நேரங்கள் தவிர பொழுதுபோக்காக பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது எம் அனைவருக்குமே தெரிந்தது.
 
இதில் அஜித்தின் கார்ப்பந்தயம், மோட்டார் சைக்கிள், விமானப் பறப்பு போன்றவை எல்லோர் மத்தியிலும் பிரபலம்.
 
எனினும் வெகு சமீப காலமாகத் தான் அஜித்தின் புகைப்பட ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
கமெராவும் கழுத்துமாக அஜித்தை பல புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.

அஜித்தை போட்டோக்களில் பார்த்த உங்களுக்கு அஜித் எடுத்த போட்டோக்களைப் பார்க்கும் வாய்ப்பு.
 
இதோ அஜித் எடுத்த சில அருமையான புகைப்படங்கள்.

 
இன்னும் வித விதமா தல சுட்டுப் போடட்டும், சுவாரஸ்யமாக ரசிப்போம்.​


இணையத்தின் படங்களைத் தொகுத்து வழங்கியது - சினி CID


20,442 Views

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் ரஜனி காந்த் என்று அப்படி ஒரு ரசிகர் பட்டாளம் ரஜனிக்கு. யார் யார் படம் எப்போ வந்தாலும் ரஜனி படம் பார்க்க கூட்டம் அள்ளும். அதுதான் சூப்பர் ஸ்டார்  ஸ்பெஷல் அவரின் அடுத்த படம் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் 'லிங்கா'. இதில்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார் ரஜனி.

தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் லிங்கா பாடல் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

 தீபாவளிக்கு இசை வெளியீடு, ரஜினி பிறந்த நாளான  டிசம்பர் 12,  படத்தை வெளியிடவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதால் ரஜினி பிறந்த நாளன்று இசை வெளியீடும் பொங்கலுக்கு படத்தை  திரையிடவும் முடிவு செய்துள்ளார்களாம். 

கோடம்பாக்க சினி செய்தியை தொகுத்து தந்தது  -வர்ஷி-

2,577 Views
பொலிவுட்டில் இப்பெல்லாம் மளமளவென வளர்ந்து வருகின்ற நடிகர்களில் இந்த நீல் நிதின் முகேசும் வரிசையில வந்திற்றாரு. வரிசையில வளர்ந்தவரை தமிழுக்கு வரவளைச்சிருக்கிறாரு கத்தி பட இயக்குனர் முருகதாஸ்.

இந்த நீல் நிதின் முகேசுக்கு ஒரு அதீத ஆசை இருக்குதாம் பொலிவுட்ல ஹீரோவாகவும், தென்னிந்தியாவில வில்லனாகவும் நடிக்கணுமாம். ஓகே ரைட்டு இந்த வில்லங்கமான வில்லன் ஆசையினை நிறைவேற்றிவிட்டார் கத்தி படத்தில் முருகதாஸ்.. இனி தமிழில் வருகின்ற படங்களில் வில்லனாகவோ இல்லை ஹீரோவாக இவர் நடிக்க வேணும் என்ற எதிர்பார்ப்பு படத்தை பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியும்.. :) :)

we are waiting 

      


     11,440 Views
[1]      «      673   |   674   |   675      »      [692]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top