Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

சமீபத்தில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் பெயரில் அவரது குடும்பத்தினர் அறக்கட்டளை தொடங்கியுள்ளனர்.

இந்த அறக்கட்டளை மூலம், இனி ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் நாடக, சினிமா, தொலைக்காட்சி கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து இந்த அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் பாலச்சந்தர் மகளுமான புஷ்பா கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

 

இயக்குநர் கே பாலச்சந்தர் பெயரில் அறக்கட்டளை.. ஆண்டு தோறும் சினிமா விருது


கடந்த வருடம் டிசம்பர் 23ம் தேதி இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் அமரரான செய்தி கேட்டு பெருவாரியாக வந்து எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் இணைந்து எனது தந்தைக்கு மரியாதை செலுத்தி வேண்டிய உதவிகள் செய்த பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எனது தந்தையின் தயாரிப்பு நிறுவனமான 'கவிதாலயா' விற்கு இத்தனைக்காலம் பெரும்பாலமாக இருந்து எங்களுக்கு ஆதரவு கொடுத்துவரும் உங்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறவிழைகிறேன்.

எங்களது தந்தை கே. பாலசந்தர் அவர்களின் பெயரில் 'கே.பாலசந்தர் பவுண்டேஷன்' (K. Balachander Foundation) என்ற அறக்கட்டளை அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.

இந்த அமைப்பிற்கு கே.பியின் குடும்ப உறுப்பினர்களான ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி, பிரசன்னா, கீதா கைலாசம், கந்தசாமி பரதன் இவர்களுடன் இயக்குனர் வசந்த் சாய் ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த அமைப்பின் மூலம் கீழ்கண்ட திட்டங்களை நாங்கள் விரைவில் முறையாக அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் அளித்துவிட்டு செயல்படுத்த உள்ளோம்.

 

1. கே.பி. அவர்களின் விருப்பபடி திரைப்படத் துறையைச் சேர்ந்த நலிந்த தொழிலாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி.

2. ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரிகளில் Visual Communication துறையில் பயிலும் மாணவர்களில்சிறந்தவருக்கு கே பாலசந்தர் பெயரில் "Creative Excellence" விருது வழங்குதல்.

3. ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்த தினமான ஜுலை 9ல் விழா நடத்தி நாடகம், திரைப் படம், சின்னத் திரை ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்கும் படைப்பாளிகளுக்கு விருது வழங்குதல்.

4. கே.பி அவர்களின் படைப்புகளை Digitize செய்து பாதுகாத்து அவரைப் பற்றிய எல்லா தகவல்களையும் ஆவனப்படுத்தி, எதிர்கால தலைமுறையினருக்கு பயன்தரக்கூடிய ஒரு கண்காட்சியகம் ஏற்ப்படுத்துதல்.

5. கே.பி அவர்களின் மகன் மறைந்த கைலாசம் அவர்கள் பெயரில் தொலைகாட்சித் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு சிறந்த படைப்பாளி விருது அளித்தல்.

6. கே.பி அவர்களைப் பற்றிய புத்தகங்களை வெளிக் கொணர்வது. அதில் முதல் புத்தகம் ஜுலை 9, 2015 அன்றுவெளிவர இருக்கிறது. இதை எழுதியவர் இயக்குனர் வசந்த் சாய்.

இது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளோம். எங்களது பணி சிறந்து விளங்கிட தங்களுடைய மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் புஷ்பா கந்தசாமி

CASTRO RAHUL 

1,463 Views

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் எழுப்பிய பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்- சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த "லிங்கா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியானது.

வெளியான முதல் வாரத்திலிருந்து இந்தப் படத்துக்கு எதிரான பிரச்சாரத்தை அதன் விநியோகஸ்தர்கள் சிலர் ஆரம்பித்தனர். இந்தப் படத்தால் தங்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிச்சைப் போராட்டம் அறிவித்தனர்.

இப்பிரச்னையில் ரஜினிகாந்த் நேரடியாகத் தலையிட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து நஷ்டத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர் இந்நிலையில், இப்பிரச்னையை ரஜினிகாந்த் முடித்து வைத்துள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் கலைப்புலி தாணு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒரு பெரிய தொகையை இழப்பீடாகக் கொடுத்து "லிங்கா' திரைப்படம் தொடர்பான பிரச்னைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தத் தகவலை 10 நாள்களுக்கு முன்பே "லிங்கா' படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். அந்தத் தொகையும் எங்களுக்கு வந்து விட்டது. எங்களிடம்தான் உள்ளது.

இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே, இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிகாந்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தமிழ்த் திரையுலகின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CASTRO RAHUL 

2,895 Views

மெல்லிய இடையாள் என்றும் இஞ்சி இடுப்பழகி என்றுப் பெண்களை பாராட்டுவது சங்க காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இன்று அந்த அடைமொழியை, வர்ணனையை விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது.

இதைக் காசாக்கத்தான் எண்ணற்ற விவாதங்கள், ஆலோசனை கூட்டங்கள், வர்த்தக விளம்பர யுத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரவலாக பேசப்படும் இந்த விஷயத்தைத்தான் பி வி பி சினிமா நகைசுவை மிளிர சொல்ல வருகிறது.

பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவ் அவர்களின் மகனும், தெலுங்கில் பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியவருமான கே .எஸ். பிரகாஷ் தனது இயக்கத்தில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற தலைப்பில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

படம் குறித்து இயக்குனர் பிரகாஷ் கூறும்போது'


இஞ்சி இடுப்பழகி என்ற இந்தத் தலைப்பே கதை சொல்லும். உடல் வாகைப் பற்றிய படம் என்பதால் உலகமே போற்றும் ஆணழகனும், பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகைக் கொண்ட அனுஷ்காவும் தான் நடிக்க வேண்டும் என்பதை எந்த விவாதமும் இன்றி ஒருமனதாகத் தீர்மானித்தோம்.

 

அப்படி ஒரு அபூர்வ ஜோடியான ஆர்யாவும் அனுஷ்காவும் நடிக்கும் பொழுது அதை கண்கவர் வண்ணத்தில் பதிவு செய்ய நீரவ் ஷாவே பொருத்தமானவர் என்பதால் அவருடன் இணைந்து பணி செய்கிறேன்.. செவிகளுக்கு தேனூட்டும் இசையைத் தர மரகதமணி இசையமைக்கிறார்.

 

எனது தகப்பானார் ராகவேந்திர ராவ் அவர்களுக்கு தமிழ் திரை உலகில் இருக்கும் மரியாதையையும், நன்மதிப்பையும் கண்டு வியந்து போனேன். நானும் அவர் வழியில் நல்ல திரைப்படங்களை இயக்கி அந்த நற்பெயரையும் ரசிகர்களையும் சம்பாதிப்பேன்," என்றார் நம்பிக்கையுட ன்.

இன்று 'இஞ்சி இடுப்பழகி' படத்தின் பூஜை ஏ வி எம் அரங்கில் உள்ள பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடந்தது. பல்வேறு நட்சத்திரங்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , தயாரிப்பாளர்கள் என திரை உலக பிரமுகர்கள் திரண்டு வந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.


===== CASTRO RAHUL ===

2,249 Views

இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பரபரப்பான இசை வேலைகளின் இடையே தனது நண்பன் ரத்திந்திரன் ஆர் பிரசாத்தின் குறும்படத்தை படத்துக்கு நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' (Swayers Corporations) என்ற இக்குறும்படம் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் கேன்ஸ் 2015 திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. முழுக்க முழுக்க சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் படமாக்கப்பட்டுள்ள ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் பசாக் கேசிலர் பிரசாத் மற்றும் ஹக்கன் கண்டார்லி சார்பாக இசையமைப்பாளர் ஜிப்ரான் பொறுப்பேற்று தயாரித்துள்ளார்.

இதுகுறித்து ஜிப்ரான் கூறுகையில், "ரத்திந்திரன் எனது சிறு வயது நண்பர். நல்ல சினிமா பற்றிய தேடுதல் உடையவர். பல சர்வதேச திறைபடங்களில் பணியாற்றியுள்ளார். இவர் ஜெர்மனியில் இயக்கிய Frullings Erwachen என்ற படத் தொகுப்பு விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சினிமாவில் சாதிக்கவேண்டும் என்று துடிப்புடன் இருப்பவர். இருவரும் பல வருடங்களுக்கு முன் குறும் படம் ஒன்றை தயாரித்த்துள்ளோம், அதுவும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தயாரிப்பு வேலைகளில் இறங்கியது நல்ல அனுபவமாய் இருந்தது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஜிப்ரானின் குறும்படம்!


‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர்கள் மற்று எனது நண்பன் ரத்திந்திரனுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.

படத்தை இயக்கிய ரத்திந்திரன் கூறுகையில், "ஒரு ரசாயன நிறுவன அதிகாரியை கொல்வதற்கு செல்லும் சுற்று சூழல் ஆர்வலரின் பயணம் தான் கதை. 30நிமிடம் ஓடக்கூடிய இந்த த்ரில்லர் கதையில் பாடலோ பின்னணி இசையோ கிடையாது. ஆனாலும் ஜிப்ரான் இப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக எனக்கு பக்க பலமாய் இருந்தார். எனது ஒளிப்பதிவாளர் ஃபரூக் கே பாஷா மற்றும் ஜிப்ரான் ஆகியோருடன் பணிப்புரிந்தது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது," என்றார்.

ஜிப்ரான் மற்றும் ரத்திந்திரன் R பிரசாத் இருவரும் பிரான்சில் மே 13 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கும் ‘ஸ்வேயர்ஸ் கார்ப்போரேஷன்ஸ்' திரையிடலுக்கும் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


கஸ்ரோ ராகுல்

1,030 Views

இந்தப் படத்தில் உள்ள பாட்டியைத் தெரிகிறதா… யெஸ்.. ராகவா லாரன்ஸ்தான். காஞ்சனா 2 படத்தில் அவர் போடும் கெட்டப்புகளில் இந்த சூனியப் பாட்டி வேடமும் ஒன்று.

வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள காஞ்சனா 2 படத்தின் first look சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த நாளே அந்தப் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியானது.

அதில் ராகவா லாரன்ஸ் மிக வித்தியாசமாக ஒரு சூனியக்கார கிழவி மாதிரி வேடத்தில் தோன்றி மிரட்டுகிறார். இந்த போட்டோதான் இப்போது சமூக வலைத் தளங்களில் பரபரவென பரவிக் கொண்டுள்ளது.

காஞ்சனா படத்தில் நான்கு வேடங்களில் நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அவருக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் தோன்றுகிறார் அட்சலி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் படத்துக்கு வியாபாரம் பேசப்பட்டு வருகிறது.

 =====CASTRORAHUL=====
11,907 Views
வாரிசுகள் சினி உலகை கலக்கி வருவது புதிய விடயமில்லை. காலம் காலமாக பேணப்பட்டு வரும் வழக்கமாக இது இருக்கிறது. இன்றைய சினிமா பிரபலங்கள் எப்படியாவது தமது பரம்பரைகளையும் இந்தப் பணியில் இணைத்து விடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

இந்த வரிசையில், என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக வந்து எல்லோரையும் கவர்ந்தவர் அனிஹா சுரேந்திரன். இவர் இப்பொழுது தெலுங்கில் நயன்தாரா &மம்முட்டி நடித்துவரும் ராஸ்கல் தி பாஸ்கர் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து வருகிறார்.

இதைத் தானா சொல்ல வந்து நம்மள குழப்பின குருவின்னு நீங்க யோசிக்கிறது புரியுதுங்க. அஜித் மகளா நடிச்சாலும் அவங்க அஜித் மகள் தானே? என்ன நான் சொல்றது? என்னோட வண்டியும் ஒடனுமேங்க.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
15,658 Views
  கிழியுமா சிங்கம் சூர்யாவின் "மாஸ்" முகமூடி....??? -
வலுக்கிறது தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பலை.

தென்னிந்திய தமிழ்த் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். ஏனெனில் எந்தவொரு பின்புலமும் அற்ற நிலையில் திரையுலகில் காலடி வைப்பதும், நின்று நிலைப்பதும் கடினமானதொரு விடயமே. இவ்வாறான நிலையில் தமிழ்த் திரையுலகில் மின்னும் ஒரு சில பிரபல நட்சத்திரங்களை தவிர நடிகர் விஜய், சூர்யா உட்பட அனைவரும் சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர்களே. இவ்வாறு வந்தவர்கள் தங்களது நற்பெயரை தக்கவைக்கின்றார்களோ...? இல்லையோ...? கெடுத்துக் கொள்வதற்கு மட்டும் தவறுவதில்லை.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயர் என்று பெயர்பெற்ற நடிகர் சிவகுமாரின் வாரிசு நடிகர்கள் தான் இன்று முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிக்கின்ற சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர். பிரபலமான நடிகராக இருந்தும் திரையுலகில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட விரும்பாத, நல்ல பண்பான நடிகர் என்று பெயரெடுத்தவர் இந்த திரையுலக மார்க்கண்டேயர். இப்படியான நல்ல நடிகருக்கும் அவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களுக்கும் யாரும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. ஆனால் அவரது வாரிசான, நடிகர் சூர்யாவின் படத்திற்கு அப்படியானதொரு நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில்.

                     


இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் படம் "மாஸ்" என்பதும், முன்னதாக சூர்யாவின் தம்பி கார்த்தியும் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் "பிரியாணி" என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் எல்லாருக்குமே தெரிந்த விடயம் தான். ஆனால் தெரியாத விடயமே இங்கு தான் ஆரம்பிக்கின்றது.

இலங்கையின் உள்நாட்டு அசாதாரண சூழ்நிலை, தென்னிந்திய அரசியலில் மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலகிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியிருந்தது. அதன் காரணமாக தமிழ்த் திரையுலகை சார்ந்தவர்கள் திரைப்படப் படப்பிடிப்புக்கள், கலைநிகழ்வுகள் போன்றவற்றை இலங்கையில் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் தடையை மீறி செயற்படும் கலைஞர்களுக்கும், வெளியாகும் படங்களுக்கும் எதிராக தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் தமது எதிர்ப்பையும் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நிலைமை இவ்வாறிருக்க, இந்த எதிர்ப்பலைகளுக்குள் நடிகர் சூர்யாவும் அவரது "மாஸ்" படமும் சிக்கிக்கொள்ளவுள்ளதென தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் "மாஸ்" படத்தின் படப்பிடிப்பை ரகசியமான முறையில் இலங்கையில் வைத்து படமாக்கியிருக்கிறார்களாம் படக்குழுவினர். இதற்கு நடிகர் சூர்யாவும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடித்துக் கொடுத்துள்ளாராம். ஏற்கனவே, தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பினால் இளையதளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த "கத்தி" படம் பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே ஒருவாறு வெளிவந்திருந்தது. அவ்வாறானதொரு எதிர்ப்புநிலை நடிகர் சூர்யாவிற்கு வரலாம் என திரையுலகினர் சொல்கிறார்கள்.

தன் பிள்ளைகளினுடைய நற்பெயருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டவர் சிவகுமார். அது மட்டுமல்லாமல் ஏழைகளுக்கு உதவுகின்ற மனப்பாங்கையும், நற்பண்புகளையும் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தவர் இவர். இதனால் அகரம் என்ற அறக்கட்டளையை ஆரம்பித்து, தென்னிந்திய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் முகாம்களில் வசிக்கின்ற குழந்தைகளின் கல்விக்கும் சேர்த்து உதவுபவர்கள் இவர்கள். இப்படியாக ஈழ மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டிருக்கும் சூர்யாவே, திரைப்படத்துறையின் தடையை மீறிச்சென்று இலங்கையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமை தமிழ் உணர்வாளர்களை மேலும் கொதிப்படைய வைத்துள்ளதாம்.

இந்தநிலையில், சூர்யாவிற்கும் அவரது "மாஸ்"படத்திற்குமான எதிர்ப்புநிலையின் தீவிரத்தை இப்போதே உணர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அதன்காரணமாக "நாங்கள் இலங்கைக்கு சென்றது உண்மைதான்... ஆனால் படப்பிடிப்புக்காக செல்லவில்லை. பொழுதுபோக்கிற்காக இடங்களை சுற்றிப்பார்க்க மட்டுமே சென்றோம்" என்று இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் உணர்வாளர்களிடம் சமாளிக்கிறாராம்.ஆனால் “மாஸ்” பட எதிர்ப்பாளர்களோ, படம் வெளிவரட்டும். படத்தைப் பார்த்துவிட்டு அப்போது எங்கள் வேலையை நாங்கள் காட்டுகின்றோம் என கங்கணம் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இவர்களது எதிர்ப்பலையிலும் சிறப்பாக நீச்சலடிக்கும் "மாஸ்" என்று படக்குழுவினர் ரகசியமாக கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஏனெனில் இலங்கையில் இடம்பெற்ற படப்பிடிப்பு காட்சிகளை இனங்காண முடியாதென்றும், அனைத்துமே கடற்கரைக்காட்சிகள் என்பதால் அதைவைத்துக்கொண்டு இவர்களால் எதுவுமே செய்ய முடியாதென்றும் மார்த்தட்டுகிறாராம் பிரியாணி சமையற்காரர்.

பிரியாணி இயக்குனர் பிரச்சனைகளை மறைப்பாரா....? இல்லை தமிழ் உணர்வாளர்கள் சூர்யாவின் “மாஸ்” முகமூடியை கிழிப்பார்களா...? - ஆர்வத்துடன் கோடம்பாக்கம்.

*கணேசமூர்த்தி ராகவன்.
13,309 Views

பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தாலும், சில காலங்கள் தனது ஹிட் படத்தினை இரசிகர்கள் சுவைக்க வழங்கமுடியாமல் திணறி வந்தார் நடிகர் ஜெயம் ரவி. துடிப்பான நடிப்பு மற்றும் அழகான ஹீரோவாக வலம் வந்தாலும், ஏனோ அவருக்கான தனித்துவ இடம் இன்னும் கிடைக்கவில்லை.

கடுமையாக போராடி வரும் ஜெயம் ரவிக்கு இவ்வருடம் பிரபலமான வெற்றியைக் கொடுக்கும் வருடமாக அமையவுள்ளது. ஏன் என்று கேட்கிறீங்களா? இங்க வந்து கேளுங்க.

ஜெயம் ரவி, ஹன்ஷிகா நடிப்பில் ரோமியோ ஜூலியட் அத்தோடு ரவி த்ரிஷா, அஞ்சலி நடிப்பில் அப்பாடக்கர் இவை மட்டுமில்லாமல், த்ரிஷாவும் ரவியும் நடித்துள்ள பூலோகமும் இழுபறி நிலையில் உள்ளது. எனவே, இந்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வரவுள்ளது. எனவே, எப்படியும் இந்தப் படங்கள் மூன்றும் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது எல்லோருடையதும் நம்பிக்கை. வரட்டும், நாங்களும் சேர்ந்து வாழ்த்துவோம்!!

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
2,438 Views
கிரிக்கட் நட்சத்திரம் விராட் கோஹ்லி , நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் ஜோடியாக சுற்றி வருகின்றார்கள். அவர்கள் காதலில் கலந்துருகி இரண்டறக் கலந்து விட்டார்கள் என, சினி உலகம் முழுவதும் பரவலான பேச்சு அடிபடுகிறது. அத்தோடு, இந்தப் பேச்சுக்கு இன்னும் வலுச் சேர்ப்பதாய், இருவரும் இணைந்து விளம்பரப் படங்களிலும் அதிகமாய் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், அனுஷ்கா சர்மா இந்தியில் நடித்துள்ள என்.எச் 10 படம் அண்மையில் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தை பார்த்ததும் கோஹ்லி தனது காதலியில் நடிப்பைப் பற்றி வெளிப்படையாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
''புத்திசாலித்தனமான என் காதலியின் நடிப்பும் இப்படமும் அற்புதமாக அமைந்துள்ளது'' என பாராட்டியுள்ளார். அதற்க்கு அனுஷ்காவும் நன்றி தெரிவித்து பதிலுக்கு ட்விட் செய்துள்ளார். எனவே, இறுதியில் எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கோஹ்லி அனுஷ்கா காதல் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
2,427 Views
தமிழ் திரையுலகின் பொற்காலமாக கருதப்படும் 1980களில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர் செந்தில் எனலாம். கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடித்து இவர்களது நகைச்சுவைக்காக பல நாட்கள் ஓடி வெற்றிபெற்ற படங்கள் ஏராளம். இவர்களின் திகதிகளுக்காக காத்திருந்த நாயகர்களே ஏராளம் எனலாம்.

இந்நிலையில், 20 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் செந்தில், இறுதியாக இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார். அரசியல் பக்கம் தலைகாட்டி வந்தவர், கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது திரைத்துறைப் பிரவேசத்தை ஆரம்பித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் இயக்கியுள்ள கள்ளப்படம் எனும், சினிமாத்துறை சம்மந்தப்பட்ட இப்படத்தில், செந்தில் நடித்துள்ளார். இவரது பாத்திரம் பற்றி இரகசியம் பேணப்படும் நிலையில், இப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளது.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி- 
5,668 Views
தெலுங்கில் அனுஷ்கா படுபிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ருத்ரமாதேவி, பாகுபாலி ஆகிய படங்களில் மிகவும் ஆர்வத்தோடு அம்மணி நடித்து வருகையில், தமிழிலும் அவரை இரசிகர்கள் விடுவதாயில்லை.

தமிழில், இரண்டாம் உலகம் படத்துக்குப் பின்னராக அனுஷ்கா-ஆர்யா இணையும் படமொன்று பூஜை போடப்பட்டுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் தயாராகும் இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. ''இஞ்சி இடுப்பழகி'' என்பது தமிழுக்கும், சைஸ் ஜீரோ என்பது தெலுங்குக்குமாய் பெயரிட்டுள்ளார்கள்.

மரகதமணி இசையமைக்க, மதன்கார்க்கி பாடல்களை எழுத, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெயருக்கான காரணம், தேவர்மகன் படத்தில் கமல் ரேவதியைப் பார்த்து பாடும் இஞ்சி இடுப்பழகி பாடல் தான் என்று மகிழ்வோடு கூறுகின்றார் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் .

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
1,491 Views
அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த லிஸி வேலஸ்க்யூஸுக்கு அப்போது 17 வயது. ஒரு தடவை ஆன்-லைனில் மெயில் செக் செய்துகொண்டிருந்தபோது, ‘The World's Ugliest Woman’ (உலகின் அசிங்கமான பெண்மணி) என்ற தலைப்பில் தனது இன்பாக்ஸுக்கு வந்த ஒரு வீடியோ லிங்க்கை க்ளிக் செய்த லிஸிக்குப் பேரதிர்ச்சி. காரணம் - உலகின் அந்த அசிங்கமான பெண்மணி தான்தான் என்று அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது.
 
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அவருக்கு இருக்கும் நோய்களையும் விவரமாகப் படம்பிடித்து அந்தத் தலைப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள் சில விஷமிகள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வீடியோவுக்கு வந்த கமென்ட்டுகள் கொடூர ரகத்தைச் சேர்ந்தவை.
 
‘இவளைப் பார்ப்பதற்கு நான் குருடாகவே இருந்துவிடுவேன்!’  
 
‘இன்னுமா இவளை பெற்றோர் உயிருடன் வைத்திருக்கிறார்கள்?’
 
‘இவளை நெருப்பில் எரித்துவிடலாம்!’
 
‘இவள் தற்கொலை செய்து கொள்வதுதான் நாட்டுக்கு நல்லது!’
 
- என்று இரக்கமே இல்லாமல் வந்திருந்த கமென்ட்டுகளைப் படித்துவிட்டு, பல வருடங்கள் தூங்காமல் அழுது புரண்டார் லிஸி.
 
வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை கிடையாது; இடது காது அறவே கேட்காது; எலும்புகளின் அடர்த்தி மிகவும் குறைவு; எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது; வலது கால் அடிக்கடி வளைந்து, எலும்பு முறிவு ஆகும் அபாயம் என்று பெயர் தெரியா நோய்களுக்கு நடுவில் வாழ்ந்து வரும் லிஸிக்கு, இப்போது வயது 26. எடை 27 கிலோ மட்டுமே.
 
‘உலகின் அசிங்கமான பெண்மணி’ என்று வீடியோவில் வலம் வந்த லிஸி, இன்று உலகின் அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூ- ட்யூப் சேனலின் https://www.youtube.com/user/lizzitachickita உரிமை யாளர்களில் ஒருவர். லிஸியை மையமாக வைத்து இப்போது ஹாலிவுட்டில் ஒரு Documentry  படமும் தயாராகி வருகிறது. இப்போது அமெரிக்காவில் உள்ள மில்லியனர்களில் லிஸியும் ஒருவர்.
 
‘‘பள்ளிப் பருவத்தில் நான் ஏகப்பட்ட கேலிகளையும், கிண்டல் களையும் சந்தித்தேன். ‘என்னை ஏன் கருவிலேயே கலைக்கவில்லை’ என்று என் பெற்றோரிடம் சண்டை போட்டேன். எனது டீன்-ஏஜில் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். தற்கொலை எண்ணம்கூட அடிக்கடி வரும். ஆனால், எனக்கே இப்படி இருந்தால் என்னைப் பெற்றவர்கள் எவ்வளவு அவமானப் பட்டிருப்பார்கள் என்று தோன்றியது. 
 
எந்த தோற்றத்தை வைத்து என்னைக் கேலி செய்தார்களோ, அதே அழகின்மையை வைத்து ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னை வைத்து வீடியோ தயார் செய்தவர்களின் லிங்க்கைக் கண்டுபிடித்தேன். ‘நீங்கள் என்ன என்னைப் பற்றி வீடியோ வெளியிடுவது... நானே வெளியிடுவேன்’ என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்து, என்னுடைய அத்தனை வீடியோக்களையும் அப்லோட் செய்து, ‘அழகாகப் பிறக்காதது என் தவறல்ல; அடுத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதீர்கள்’ என்ற கோரிக்கையை மையமாக வைத்து யூ-ட்யூப் சேனல் ஒன்று ஆரம்பித்தேன்.
 
ஒவ்வொரு நாளும் சந்தாதாரர்கள் பெருக ஆரம்பித்தார்கள். அடுத்தவர்களைக் கேலி செய்வது உலக மகா பாவங்களில் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறோம் என்று எனக்குச் ஆதரவான கமென்ட்கள் வந்து குவிந்தன. இப்போது என் சேனலுக்கு 3.5 லட்சம் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். என்னைப் பற்றிப் படம் எடுத்து வெளியிட்டிருக்கும் இயக்குநர் சாராவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!’’ என்று பளிச்செனச் சொல்கிறார் லிஸி.
 
ஆஸ்டினில் நடந்த சவுத்வெஸ்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் 'A Brave Heart: The Lizzie
Velasquez Story' என்ற பெயரில் 75 நிமிட Documentry படம் ஒளிபரப்பாகி, அமெரிக்கா முழுதும் செம ஹிட் அடித்திருக்கிறது. ‘‘இது லிஸியின் தன்னம்பிக்கைக் கதை மட்டுமல்ல; வன்கொடுமை என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதையும்; தன்னம்பிக்கை இழப்பவர்கள் அதை எப்படி வெற்றி கொள்வது என்பதையும் இந்தப் படம் சொல்கிறது!’’ என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் சாரா ஹ்ரிஷ் போர்டோ.
 
லிஸி, இப்போது உலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்கை நிறைந்த பெண்!!

castrorahul
 
14,180 Views
மர்மப் படங்கள், திகிலைக் கிளப்பும் படங்களுக்கு இப்பொழுது அதிகமான வரவேற்பு நம்மவர்களிடையே இருக்கிறது. கதை சொல்லுகிறோம் என, அப்படங்கள் அலட்டுவதில்லை. பொழுதை நல்லபடியாக சந்தோஷப்படுத்தி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்துப் போகும் படங்களாக மூன்று மணிநேரம் அனைவரிடம் ஒன்றித்துப் போகிறது இவ்வாறு வருகின்ற படங்கள்.

இவைகள், ஏற்படுத்தியுள்ள அடையாளங்கள் ஆதிக்கம் என்பன தமிழ் சினிமாவில் அதிகமெனலாம். இந்த வகையில் காஞ்சனா, அரண்மனை படங்களில் தேர்ந்த நடிப்பால் அனைவரிடத்திலும் தெரியப்பட்ட நடிகை ராய் லட்சுமிக்கு இப்பொழுது மூன்றாவதாகவும் ஒரு பேய் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அவரும் சம்மதித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், ராய் லட்சுமி நாயகியாகவும் இணையும் இப்படத்துக்கு சௌகார்பேட்டை என பெயரிடப்பட்டுள்ளது. திகிலோடும் பரபரப்போடும் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஸ்ரீகாந்துக்கு இந்த பேய் படமாவது வாய்ப்புக்களை வழங்கட்டும்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
1,612 Views
    வீறுகொண்டெழுந்து வரலாற்றை மாற்றிப்போட்ட அதிஸ்டமில்லா தெ.ஆபிரிக்கா!

உலக கிண்ணப் போட்டிகளில் ஒரு அதிஸ்டமில்லா அணிஎனும் அகராதியை இம்முறை மாற்றிப்போட்டிருக்கிறது .டி வில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆபிரிக்க அணி.
 
இந்த அணியைப் பொறுத்த வரையில் பலமான அணியாகப் உலக கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்கும் அனைத்து அணிகளையும் வெற்றிகொண்டு முக்கிய காலிறுதி மற்றும் அரை இறுதிப் போட்டிகளில் தோல்வியோடு நடையைக் கட்டிவிடும் வரலாறு ஏராளம் இருக்கிறது.
 
இப்படியான நிலைமை இன்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனாலும் அந்த அணியின் தலைவர் டி வில்லியர்ஸ் நாங்கள் அதனை மாற்றியமைப்போம் என்று இன்றைய போட்டிக்கு முன்னர் சவால் விட்டிருந்தார்.
 
அந்த நாட்டின்  தலைவர்களாக உலக கிண்ணத்தில் செயற்பட்ட கெப்ளர் வேசல்ஸ் , கான்சி குரொஞ்சி ,ஷான் பொல்லாக் ,கிராம் ஸ்மித்  ஆகிய தலைவர்களால் இதுவரை செய்ய முடியாததை இன்று செய்து காட்டியிருக்கிறார் டி வில்லியர்ஸ்.

 
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதல் முறையாக KNOCKOUT ஆட்டம் ஒன்றில் தென் ஆபிரிக்க  அணி இன்று வெற்றி பெற்றுள்ளது. 
 
இதற்கு முன்னர்  5 உலகக் கிண்ணப் போட்டிகளில் சந்தித்த KNOCKOUT தோல்விகளை கொஞ்சம் மீட்டிப்பார்க்க விளைகிறோம்.
 
முதல் தடவையாக தடைக்குப் பின்னர் 1992ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில் இந்த அணி பங்கெடுத்தது. பலமான அணியாக கான்சி குரொஞ்சி தலைமையில் குழுநிலை ஆட்டங்களில் அசத்தி அரை இறுதியில் மூட்டை கட்டியது.
 
1992 மார்ச் 22 ம்திகதி ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில்  அரையிறுதியில் இங்கிலாந்து அணியை தென்ஆப்ரிக்கா எதிர்கொண்டது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 253 ஓட்டங்களைப் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 
 
விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்ரிக்க அணி இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. 
 
இறுதிப் போட்டிக்குள் எப்படியும் நுழைந்து விடலாம் என எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
 
மழை குறுக்கிட்ட நிலையில் டக்வர்த் லூயிஸ் விதியின்படி மீண்டும் போட்டி ஆரம்பமான போது ஒரு பந்துக்கு 22 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற நிலைக்கு தென்ஆபிரிக்கா  அணி தள்ளப்பட்டது.
 
 கவலையோடு 1992 இல் உலக கிண்ணத்தை முடித்துகொண்டது. அன்று சிட்னியில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமான அவர்களது அதிஸ்டமற்ற வரலாற்று நிகழ்வை  23 ஆண்டுகளுக்கு பின்னர் அதே சிட்னி மைத்தானத்தில் இன்று மாற்றியிருக்கிறார்கள்.  
 
1996 ஆம் ஆண்டு அனைத்து குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்ஆபிரிக்கா  அணி காலிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் போட்டியிட்டது.
 
மேற்கிந்திய தீவுகள் அணி 265 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்ரிக்க அணி 245 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க   19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 
 
குரோன்ஷி தலைமையிலான தென் ஆபிரிக்க அணி ரிச்சி ரிச்சட்சன் தலைமையிலான மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியுற்று உலக கிண்ணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. 

 
1999 ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆபிரிக்கா  அணி தோல்வியைத் தழுவிய முறைமை இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு மோசமான நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.
 
போட்டியில் ஸ்டீவ் வோ தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 213 ஓட்டங்களை மட்டுமேதான் பெற்றுக்கொண்டது.
 
தென்ஆபிரிக்க அணியும் வெற்றி  இலக்கை நோக்கி ஆவலோடு முன்னேறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 6 பந்துகளுக்கு 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அவர்களது நம்பிக்கைக்குரிய அதிரடி நட்சத்திரம் லான்ஸ் குளுஸ்னர் தொடர்ச்சியாக இரு நான்கு ஓட்டங்களைப் பெற்றுகொடுத்து நம்பிக்கையூட்டினார் .
 
அப்போது 213 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டு இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. அடுத்த பந்தில் வெற்றிக்கு தேவையான ஒரு ஓட்டத்தை எடுக்க லான்ஸ் குளுஸ்னர் முயற்சிசெய்தார்.
 
3 பந்துகளில் வெற்றிக்கு ஒரேயொரு ஓட்டம் மட்டுமே தேவையான நிலையில் சரியாக கவனிக்காமல் மறுமுனையில் நின்ற ஆலன் டொனால்ட் அந்த ஓட்டத்தைப் பெறுவதற்கு தயாராகவில்லை.
 
ஆனாலும்  குளுஸ்னர் அவசரப்பட்டு ஓட்டத்தை பூர்த்தி செய்ய முற்பட ரன் அவுட் செய்யப்பட்டு இதனால் இந்த ஆட்டம் சமநிலையில் முடிவானது.

 
ஏற்கனவே நடந்த ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி தென்ஆபிரிக்க அணியை வீழ்த்தியிருந்த நிலையில் அதனடிப்படையில் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெற தென்ஆபிரிக்க அணி அவர்களது வழமையான சோகத்துடன் உலக கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
 
2007 ம் ஆண்டு அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம், கிராம் ஸ்மித் தலைமையிலான தென்ஆப்ரிக்க அணி தோல்வியை சந்தித்தது. முதலில் துடுப்பாடிய தென்ஆப்ரிக்க அணி 149 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பதிலளித்த பொண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் வெற்றிக்கு தேவையான ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள தென் ஆபிரிக்காவின்  சோகக்கதை தொடர்கதையானது.
 
இதேபோன்று 2011ம் ஆண்டு உலகக் கிண்ண காலிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை தென்ஆபிரிக்க அணி சந்தித்தது.
 
டானியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணியை 211 ஓட்டங்களுக்குள்  கட்டுப்படுத்தினாலும் இலகுவான வெற்றி இலக்கோடு களம் புகுந்த ஸ்மித் தலைமையிலான தென்ஆபிரிக்க அணி 172 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

 
இப்படி உலக கிண்ணத்தின் முக்கிய தருணங்களில் தோல்வியைத் தழுவி மாற்றத்தை விரும்பி ஏமாற்றத்துடன் விடைபெறும் தென்னாபிரிக்க அணி இன்று இலங்கைய சந்தித்தது.
 
பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டிருந்த இலங்கை அணியை வெறுமனே 133 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க செய்து 18 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்திலான வெற்றியைப் பதிவு செய்து அவர்களது கடந்த கால வரலாற்றை மாற்றியமைத்திருக்கிறது இந்த தென்னாபிரிக்க அணி.
 
*தில்லையம்பலம் தரணீதரன்.
2015.03.16

     
9,681 Views
துறு துறு விழிகள் படபடவென சிறகடிக்க, அழகிய இள மானொன்று சின்னத்திரை நாடகங்களிலும், ஏனைய நிகழ்ச்சிகளிலும் கலந்து களை கட்டிக் கொண்டிருந்தது. அப்பொழுதே பலரும் சொன்னார்கள், இந்தப் பொண்ணு நல்லாதானே இருக்கு. நடிக்க வரலாமேன்னு !
அப்போ சொன்ன அந்த வாய் முகூர்த்தம் , இப்பொழுது பலித்திருக்கிறது. அவர்தான் ஆனந்தி. இது யாரடா புதுசா ஒரு ஆனந்தின்னு நீங்க யோசிக்கலாம். அவர்தான், மீகாமன் படத்தின் ஹன்ஷிகாவின் தோழியாக வருவாரே ! அவர்தான் இவர், அதாவது நான் சொல்லும் ஆனந்தி.

என்னம்மா ஒரே குழப்பமா இருக்குன்னு நினைக்கிறீங்களா? சரி, இனி குழம்பாதீங்க. கயல் படத்தில் வர்ற ஆனந்தி போலவே, இவரும் நல்ல கலரும் எல்லோரையும் கவரும் அழகும் கொண்டு உலா வருகிறார். மீகாமன் மூலமாக தனது சினிமா வாழ்வை ஆரம்பித்துள்ள இந்த சின்னத்திரை ஆனந்தி, இனி தொடர்களில் நடிப்பதில்லை. சினிமாவில் மட்டுமே முழுக் கவனமும் என்கிறார்.

அந்த ஆனந்தி இருக்கும்போதே, அதே பெயரோடு வர்றீங்கலேன்னா, நடிப்பில் வித்தியாசம் இருக்கும். கவலைப்பாடாதீங்கன்னு நமக்கே ஆறுதல் சொல்றாங்க. அப்போ பாருங்களேன் ....!!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
6,927 Views
[1]      «      708   |   709   |   710      »      [747]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top