Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

 'கத்தி'க்கு மீண்டும் கத்தி-கலக்கத்தில் படக்குழுவினர்.

'கத்தி'படத்துக்கு இவ்வாறு பெயர் வைத்ததாலோ என்னமோ இந்த படம் ஆரம்பம் முதலே அதிக வெட்டுக்களை சந்தித்திருக்கின்றது. சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்ட இந்த படம் ஒருவாறாகி கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்து திரை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றது.

வசூலிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இந்த கத்தி திரைப்படத்துக்கு இன்னும் சர்ச்சைகள் குறைந்த பாடில்லை.

                                                   

இப்போது புதிய வடிவில் ஒரு சர்ச்சை எட்டிப் பார்த்திருக்கின்றது.முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  குடும்பம் மேற்கொண்டதாக கருதப்படும் 2G அலைக்கற்றை ஊழல் தொடர்பில் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனமே சர்ச்சையை தோற்றுவித்திருக்கின்றது.

'' 2G ன்னா என்ன வெறும் காத்துய்யா...அதுலயே ஊழல் பண்ணின தேசம் இது! ''

இப்படியொரு வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது.அலைக்கற்றை ஊழல் வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கின்ற போது எப்படி படத்தில் அது ஊழல் என்று விஜய் திட்டவட்டமாக சொல்லுவார் என்பதுதான் வழக்கை தாக்கல் செய்தவரின் முறைப்பாடாகும்.

இந்த வசனம் காரணமாக இயக்குநர் A.R முருகதாஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் அவதூறு வழக்கை  தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நவம்பர் மாதம் 11 ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் கத்தி திரைப்பட வெற்றிவிழாவும் ஏற்பாடாகி நடைபெற்று முடிந்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் வெளியான முதல் நாளே ரூ 23.85 கோடியைக் குவித்ததாக படத்தின் இயக்குநர் A.R முருகதாஸ் twitter இல் தகவல் வெளியிட்டிருந்தார்.

இப்போது  பிந்திக் கிடைத்த தகவல்களின் படி வெளிநாடுகளில்(அமெரிக்கா,லண்டன்,அவுஸ்ரேலியா )ஆகிய நாடுகளில் கத்தி வசூலில் சாதனை படைத்துள்ளது.

படம் வெளியான முதல் வார இறுதியின் வசூல் நிலவரப்படி லண்டனில் 2.2 கோடியும்(222,526 pounds ) அமெரிக்காவில் 570,207 USD அண்ணளவாக 3.5 கோடியும் ,அவுஸ்ரேலியாவில் 60,979 ASD கிட்டத்தட்ட 87.1 லட்சம் வசூல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான ஜில்லா திரைப்படத்துக்கு அடுத்த நிலையிலும் ,இதுவரை அங்கு வெளியான  படங்களில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படத்துக்கு அடுத்ததாகவும் இந்த கத்தி வசூல் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பக்கம் வசூலில் சாதனை மறுபக்கம் கத்தி சர்ச்சைகளிலும் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இளைய தளபதி விஜய் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா..?
இந்த கத்தி படம் எனக்கு பலவற்றை கற்றுத் தந்திருக்கின்றது என்று.

                      

கத்தி கூரானதாக பட்டை தீட்டப்பட்டாலும் கத்தியை தயார் செய்த பட்டறையின் பெயரில் ஆரம்பித்த வெட்டுக்கள் +வேட்டுக்கள் இன்னுமின்னும் இளைய தளபதியையும் அவர்தம்  ரசிகர்களையும்  கவலையில் ஆழ்த்தும் என்பதில் ஒன்றும் தவறில்லை !

*தில்லையம்பலம் தரணீதரன்.
18,669 Views
"அம்மா"வுக்கு கோயில் கட்டும் லோரன்ஸ்.

அம்மா என்ற வாரத்தையை உச்சரித்தால் இப்போது எல்லோர் மனதிலும் தங்கள் அம்மாவை காட்டிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தான் நினைவுக்கு வந்து போகின்றார்.

இப்படியிருக்க அம்மாவுக்கு நான் கோவில் கட்ட போகின்றேன் என்று அசத்தல் அறிவிப்பு விட்டிருக்கின்றார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

எல்லோருக்கும் கண்ணெதிரே தெரியும் ஒரே தெய்வம் எங்களை பெற்ற தாய்தான். தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்ற உயரிய கருத்தை மெய்பிக்க வேண்டும் என்ற ஆசையால் இந்த கோயிலை கட்ட உள்ளேன்.உலகத்தில் உள்ள எல்லா அன்னையர்க்கும் நான் இதை சமர்ப்பிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் கட்டும் பணியின் முதல் கட்டமாக அவரது தாயாரின் உருவச் சிலையை வடிவமைக்கும் பணியை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரம்பித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னைக்கோர் ஆலயம் எனும் அரிய முயற்சியில் இறங்கியிருக்கும் ராகவா லோரன்ஸ்சுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

*தில்லையம்பலம் தரணீதரன்
3,198 Views
ஏ. ஆர் முருகதாசின் இயக்கத்தில் விஜய், சமந்தாவின் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகிய திரைப்படம் 'கத்தி'. பல சவால்களைத் தாண்டி இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரற்பையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது இந்தப்படம்.

இப்படத்தைப் பற்றி பேசும் போது நிச்சயமாக நாம் இன்னொருவரைப் பற்றிப் பேசவேண்டும். அது இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தான். 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே, போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். இப்படங்களின் பாடல்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

கத்தியின் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக தீட்டப்பட்டுள்ளது. ஆத்தி என நீ, செல்பி புள்ள, பாலம், பக்கம் வந்து, தீம் பாடல் என அத்தனையும் இப்போது சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றது. பாடல்கள் அத்தனையும் ஹிட் ஆனதன் காரணமாக, இப்படத்தின் கதாநாயகன் இளைய தளபதி விஜய், இந்த சுட்டிப் பையன் அனிருத்திற்கு பெருமதிமிக்க பியானோ ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். 'இது எனக்கு விஜய் சார் பரிசளித்த பியானோ' என அனிருத் டுவிட்டரில் பதிவிற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு - ர.பிரவீனா 
3,470 Views
பிச்சைக்காரன் ஆனார்  விஜய்ஆண்டனி.

இசையுலகில் இருந்து திரையில் நாயகனாக முகம்காட்ட வரிசைகட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் பாடலாசிரியர்களும்,இசையமைப்பாளர்களும். இந்த வரிசையில் விஜய் ஆண்டனியை தொடர்ந்து தற்போது "பென்சில்" படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ்குமாரும் இணைந்திருக்கிறார்.ஆனால்,அதுவல்ல இப்போது விஷயம்.
 
                             "நான்", "சலீம்" ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியதோடு கதாநாயகனாகவும் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார் விஜய்ஆண்டனி. இவர் நடிப்பில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தோடு வெளியாகவிருக்கும் 3வது படம் தான் "இந்தியா பாகிஸ்தான்'. இந்தப் படத்தை தொடர்ந்து இன்னுமொரு படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

                         ரோஜாக்கூட்டம், டிஸ்யூம், பூ ஆகிய வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சசி இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம். இயக்குனர் சசியோடு டிஸ்யூம் படத்திற்காக 2006-ம் ஆண்டில் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார் விஜய்ஆண்டனி.
தற்போது இந்தப் புதியபடத்திலும் இருவரும் சேர்ந்து பணியாற்றப்போகிறார்களாம். நடிப்பு மட்டுமல்லாமல் இந்தப்படத்திற்கான இசையையும் விஜய் ஆண்டனியே பொறுப்பேற்றிருக்கிறாராம்.

                               இந்தப்படத்திற்கான பெயர்கூட முடிவு செய்யப்பட்டு பதிவும் செய்யப்பட்டு விட்டதாம். கதைக்கு பொருத்தமாக இருக்க "பிச்சைக்காரன்" என பெயரிடப்பட்டுள்ள விஷயம் வெளியே கசிந்துள்ளது. இருந்தாலும்,இந்தப் "பிச்சைக்காரன்" பற்றிய அறிவிப்பு உத்தியோகபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.  
                                             போகிறபோக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தானும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் எண்ணத்தில்தான் விஜய் ஆண்டனி திரையில் தலை காட்ட முடிவு பண்ணியுள்ளதாக தெரிகிறது.    

பெயரை மட்டும் பிச்சைக்காரன் எண்டு வையுங்க.....
தயாரிப்பாளர்  அப்படி ஆகிடாமல் பார்த்துக்கோங்க.........

*கணேஷமூர்த்தி ராகவன்
14,024 Views
தமிழ் சினிமாவில் ரஜினி-கமலுக்கு பிறகு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய்- அஜீத்துக்குத்தான் தற்போது ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.

அவர்களில் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதும் . நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார்.என்பது குறிப்பிட தக்கது. இது இவ்வாறு இருக்க.
 
தீபாவளி அன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கத்தி' திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் நாளில் ரூ.23 கோடி வசூல் செய்திருக்கிறது.கத்தி படத்துக்கும் தமிழகமெங்கிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள்இ இதுவரை தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்இ கட்அவுட் என்று வைத்து வந்தவர்கள்இ இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய்க்கு மெழுகால் ஆன சிலை வைத்து பரபரப்பு கூட்டியுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1.5 லட்சமாம்.
அந்த சிலை நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.அப்போது அந்த சிலையை நிறுவிய பேஸ்புக் விஜய் பேன்ஸ் கிளப் ரசிகர்கள் அந்த சிலையுடன் நின்று வணங்குவது போலவும்இ முத்தம் கொடுப்பது போலவும் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டதோடுஇ அந்த போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். இந்த சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டருக்கு வந்து விஜய்யின் சிலையை பார்த்த வண்ணம் உள்ளனர்.இச்சிலையை ஃபேஸ்புக்கில் இயங்கி வரும் 'Facebook Vijay Fans Club - FVFC என்ற பக்கத்தினர் நிறுவி இருக்கிறார்கள். இந்தச் சிலை 'தலைவா' படத்தில் வரும் விஜய் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது

ஆக தமிழ் சினிமாவில் உயிரோடு இருக்கும் ஹீரோக்களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகராகியிருக்கிறார் விஜய்.
3,024 Views
ஷாருக்கானின் 'happy new year' வசூல் சாதனை.

ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த 'happy new year' படம் வெளியாகிய மூன்று நாட்களில் மட்டும் 108 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்த 'happy new year' திரைப்படம் கடந்த 24ம் திகதி வெளியாகியது. இந்நிலையில் 'happy new year' வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.

இதுமாத்திரமல்லாமல் முதல் நாளில் மட்டும் 45 கோடி வசூல் செய்து சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரின் படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய பாலிவுட் படம் 'happy new year' தான். படத்தின் அதிகாரப்பூர்வ facebook பக்கத்தை ,டிரெய்லரை பல லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷாரூக்கான் இதில் டான்சர், திருடன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார். 'சிக்ஸ்பேக் தோற்றத்தை அடைவதுதான் மிகக்கஷ்டமானது என்ற எண்ணம் எல்லோருக்குமிருக்க eight pack தோற்றத்துடன் இந்தப்படத்தில் ஷாருக் அவதாரம் எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

          


*தில்லையம்பலம் தரணீதரன்
6,249 Views
ஒட்டுமொத்த ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகே எதிர்பார்த்திருக்க, விரைவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் "ஐ" படத்தில் "கதையின் நாயகன் விக்ரம்" நான்கு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் உள்ளம் கொள்ளும் இசையில் இசை வெளியீடும் கூட பிரமாண்டமாகவே முடிந்திருந்தது. 

                                                        இந்தப்படத்தில் உடல் கட்டழகு கொண்ட தோற்றத்திலும்,இளசுகளை வசீகரிக்கும் ஸ்டைலான தோற்றத்திலும், பார்க்க சகிக்கமுடியாத முகத்துடன் கூடிய ஒரு தோற்றத்திலும், மிருகமுகத்துடன் கூடிய தோற்றத்திலும் நடித்துள்ளாராம் விக்ரம். இதில் மிருக முகத்துடன் கூடிய தோற்றத்தில்  படத்தின் இசை வெளியீட்டின்போது மேடையில் தோன்றி மிரட்டியிருந்தார். 
                                                                     இந்தநிலையில்,முகத்தில் சிறு சிறு கழலைகளுடன் கூடிய, பார்க்கச் சகிக்க முடியாத ஒரு தோற்றத்திற்காக, தன் உடல்நிலையை பற்றிகூட கொஞ்சமும் சிந்திக்காமல் சாதாரண உடல் எடையில் பாதிக்கும் மேல் குறைத்து அந்தப் பாத்திரமாகவே மாறினாராம் "சீயான்".

                                                                            விக்ரம் இவ்வாறு தன்னை வருத்தி நடிக்க சங்கர் தான் கட்டாயப்படுத்தியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதை சங்கர் மறுத்திருக்கிறார். சகிக்கமுடியாத இந்த முகத்தோற்றம் அமைப்பதற்கு மேக்கப் மட்டும் இருந்தால்போதும் என்று தான் கூறினாராம் சங்கர் .விக்ரம் தான் அதை மறுத்து, தனது உடல் எடையை குறைத்து காட்சி இயல்பாக வருமாறு நடித்து கொடுத்திருப்பதாக சங்கர் பாராட்டுமழை பொழிகிறார் விக்ரமுக்கு.

                 உடல் எடையை குறைப்பது அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருக்கும் என்று தனக்கு தோன்றியதாக சங்கர் சொல்லியிருக்கிறார். ஆனால் சீயானின் உடல் நிலை முக்கியம் என்பதால், "உங்களுடைய உடல் நிலைதான் முக்கியம். உடம்பை குறைப்பதில் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால்,நீங்களாக விரும்பி எடையை குறைப்பதென்றால் எனக்கு திருப்திதான்" என்று மட்டுமே  சீயானிடம் சங்கர் சொல்லியிருந்தாராம்.உடனே விக்ரம், வைத்தியர்களிடம் ஆலோசனை கேட்டு தனது உடல் எடையை குறைத்து அந்த கதாபாத்திரமாகவே மாறி விட்டாராம். 

எப்படி வேனும்னாலும் மாறுங்க சீயான்... எங்க எதிர்பார்ப்பை மட்டும் ஏமாற்றிடாதிங்க......

'ஐ' இசை வெளியீடு - புதிதாக வெளியான ஸ்பெஷல் படங்கள் - Exclusive

'ஐ' - படத்தொகுப்புகள்சினி நியூஸ்:கணேசமூர்த்தி ராகவன்
7,652 Views

இலங்கை சினிமா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய Hiru Golden Film Awards 2014 
விருது வழங்கல் விழா கோலாகலமாக நேற்று முன்தினம் சுகததாச உள்ளக அரங்கில் நடந்தேறியது.

நம் நாட்டு பிரபலங்கள் பலரோடு, தென்னிந்திய பொலிவூட் நட்சத்திரங்களான பிபாஷா பாசு, அனில் கபூர், சுனில் செட்டி, விவேக் ஓப்ராய் மற்றும் நேஹா துபியா, பிரபல பாடகி அல்கா யக்னிக் ஆகியோர் இதில் பங்குபற்றியிருந்தனர்.

இவ்விழாவில் 2012 – 2013 ல் வெளிவந்த 100 திரைப்படங்களை தரப்படுத்தி அதிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை, பாடகர், பாடகி, துணை நடிகர் என பல விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த திரைப்படம் எனும் பெருமையையும், விருதையும் 'இனி அவன்' திரைப்படம் பெற்றுக்கொண்டது. சிறந்த இயக்குனர் விருது இப்படத்தை இயக்கிய அஷோக ஹந்தகம பெற்றுக்கொண்டார். சிறந்த நடிகர் விருதை இப்படத்தில் தன் நடிப்புத் திறமையால் கலக்கியிருந்த தர்ஷன் தர்மராஜ் பெற்றுக்கொண்டார்.மேலும் 'நிகினி வெஸ்ஸ' திரைப்படத்தில் நடித்த 'சாந்தனி செனவிரத்ன' விற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

மேலும் நம் நாட்டு நடிகை நிரஞ்சனிக்கு சிறப்பு விருதும் கிடைத்தது.இதுதவிர மேலும் பல பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விருதுகளை வென்ற தமிழ் பேசும் இந்தக் கலைஞர்களுக்கு சூரியனின் வாழ்த்துக்கள்.

இதுவரைக் காலமும் இலங்கையில் நடைப்பெற்ற விருது வழங்கல் விழாக்களில் Hiru Golden Film Awards 2014 ஆனது
மிக பிரம்மாண்டமான விருது வழங்கல் விழா என்றால் அது மிகையாகாது.

முழுமையான விழா புகைப்படங்கள்..

Hiru Golden Film Awards 2014 | The Event - Album 1

Hiru Golden Film Awards 2014 | The Event - Album 2
3,180 Views
எனக்கு வாழ்வு தந்தவர் தல அஜீத் -A.R முருகதாஸ்

கத்தி திரைப்படத்தின் வெற்றிப் பெருமிதத்தில் நெகிழ்ந்து கொண்டிருக்கும் வெற்றிப்பட இயக்குனர் A.R முருகதாஸ் விஜய் பற்றிய பெருமித பேச்சுக்களுக்கு மத்தியில் தல அஜித் பற்றியும் பெருமை பேசியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பின்னர் மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வும்+நடிப்பாற்றலும் ஒருங்கே பொருந்தப் பெற்றவர் இளைய தளபதி விஜய் என்று A.R முருகதாஸ் கடந்த வாரம் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

கத்தி,துப்பாக்கி,கஜினி ,7ம் அறிவு என்று மிகச்சிறந்த திரைப்படங்களை தந்த A.R முருகதாஸ் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பொது அஜித் பற்றி புகழ்ந்துள்ளார்.

என்னதான் மெகாஹிட் படங்கள் கொடுத்தாலும் தான் 2001 இல் அஜித்தை வைத்து இயக்கிய சூப்பர்ஹிட் "தீனா" திரைப்படம் மூலம் தான் தனக்கு திரையுலக அடையாளம் கிடைத்ததாக சொல்லியுள்ளார்.

                 

ஒட்டுமொத்தத்தில் எனக்கு வாழ்வு தந்தவர் தல அஜித் தான் என்று முருகதாஸ் குறிப்பிட்டார்.

இப்படியெல்லாம் குறிப்பிட்ட A.R முருகதாஸ் இப்போதைய கதாநாயகிகளில் எனக்கு சமந்தா 'Sweet Heart' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


*தில்லையம்பலம் தரணீதரன் 
18,112 Views
'லிங்கா 'அறிமுகப் பாடல் படப்பிடிப்பு வெளிநாட்டில் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் வெளிவரவிருக்கும் 'லிங்கா' படத்துக்கான எதிர்பார்ப்பு இப்போது வலுப்பெற்றிருக்கின்றது.

லிங்கா படத்தின் பாடல் காட்சிகளும் படப்பிடிப்பும்  பெரும்பாலும் முடிவடைந்திருக்கிறது. ஆயினும்  ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே மீதமாகவிருக்கின்றது.படமாக்கபடவுள்ள பாடல் காட்சி ரஜினியின் அறிமுகப்பாடல் என்று சொல்லப்படுகின்றது.

லிங்கா படத்தில் முதன்முறையாக ரஜினியின் அறிமுகப்பாடலை பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக லிங்கா படக் குழுவினர் இன்னும் சில நாட்களில் வெளிநாடு செல்லவுள்ளனர் . இப்பாடலை S.P.பாலசுப்ரமணியம் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

           

வழமையாகவே ரஜினியின் அறிமுகப்பாடல் உள்ளூரில் தான் படமாக்கப்படுவதுண்டு,ஆயினும் இந்த பாடல் வெளிநாட்டில் படமாக்கபடவுள்ளமை சிறப்பம்சம்.

ஏற்கனவே அறிவித்தபடி லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி வெளியிட  திட்டமிட்டு இருந்தனர் தற்போதையை தகவலின்படி லிங்கா பொங்கலுக்கு வருவதற்கான வாய்ப்பிருப்பதாக அறியக்கிடைக்கிறது.

K.S ரவிக்குமாரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலக்கும் 'லிங்கா"விற்கு நாமும் ஆவலோடு காத்திருப்போம்.

*தில்லையம்பலம் தரணீதரன்

3,261 Views
"கத்தி" வசூல் மழை- twitter ல் முருகாதாஸ் தெரிவிப்பு.

A.R முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான "கத்தி" திரைப்படம் வசூல் மழை பொழிகின்றது.நேற்றைய நாளில் தமிழகத்தில் மட்டும் 12.5 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.ஆனாலும் அதைவிடவும் இருமடங்கு வசூலானதாக ARமுருகதாஸ் கூறியுள்ளார்.

தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலுள்ள திரையரங்குகளில் வசூல் 16 கோடியே 45 லட்சமாகும். வெளிநாடுகளில் வசூலான தொகை 7.35 கோடி என்று A .R முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை கத்தி முறியடித்துள்ளதாகவும் 23.80 கோடியை முதல் நாளில் கத்தி வசூலித்துள்ளதாகவும் அவர் தன் twitter இல் தெரிவித்துள்ளார்.

*தில்லையம்பலம் தரணீதரன்
14,385 Views

பாஸ்வேர்டு இல்லாத Twitter

Facebook,Twitter,E-mail என பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றோம். அனைத்திற்குமான  கடவு சொற்களை நினைவில் வைத்துகொள்வது என்பது கஷ்டமான ஒரு விடயமாகவே இருக்கிறது,  அதுமட்டும் இல்லாமல் கடவுச்சொல் திருட்டு என பல பிரச்சனைகளுக்கும் முகம்கொடுக்கவேண்டியுள்ளது இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண twitter முயற்சி செய்துள்ளது.

  கையடக்க தொலைபேசியில் twitter ஐ பயன்படுத்தும்போது கையடக்க தொலைபேசி எண், எந்த நாடு என்ற விபரத்தை மட்டும் தெரிவித்தால் போதும். உறுதிப்படுத்தும் எண்கள் நமக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் உள்ளே நுழையலாம். நீங்கள் பயன்படுத்தி முடித்த உடன் இந்த உறுதிப்படுத்தும் எண்கள் இயல்பாகவே செயலிழந்து விடும்.

இனியென்ன பிரச்சனை வரப்போகின்றது.கடவுச் சொல் மறந்தாலும் twitter ஐ இலகுவாக பயன்படுத்தலாம்.

*இணையத்திலிருந்து தொகுத்தவர் -வர்ஷி 
1,836 Views
‘அறிந்தும் அறியாமலும்’ , ‘பட்டியல்’ , ‘ஆரம்பம்’ படங்களில் இணைந்து பணியாற்றிய ஆர்யா – விஷ்ணுவர்தனின் கூட்டணி இப்போது ‘யட்சன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
இந்த படத்தில் விஷ்ணுவர்தனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவும் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஆர்யா வித்தியாசமான தோற்றத்திலும், தல அஜித்தின் தீவிர ரசிகராகவும் நடிக்கிறார்;. காதல், காமடி, கைகலப்பு, கலகலப்பு என ஜாலியாக படம் உருவாகி வரும் இந்த படத்தில் எஸ். ஜே சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.
படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. 

கோடம்பாக்க தகவல்களைத் தொகுத்தவர் - ர.பிரவீனா 
3,799 Views

முன்னணி ஹிரோக்களுடன் நடிக்கும்  நடிகை பல கோடிகளை சம்பளமாக வாங்குபவர்தான் இந்த ஆலியா பட்.
தனுஷுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.
அதேவேளை பல்வேறு சர்ச்சைகள் மூலமாக அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஒருவர் இந்த ஆலியா.

Alia Bhatt Hot


இவர் 5நிமிடம் ஓடும் ஒரு குறும் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். நம்ப முடியவில்லையா ?
இதோ மேலதிக தகவல்கள்

அவர் நடித்த அந்த குறுந்திரைபடத்தின் பெயர் 'கோயிங் ஹோம்' - Going Home. இயக்கியவர் விஷால் பாகல்.இந்த படம் பெண்களின் சிறப்பை எடுத்து காட்டும் படமாக இருப்பதால்தான் அவர் இந்த படத்தில் நடிக்க ஒத்துகொண்டதாக தெரிவித்திருக்கின்றார்.  

இரவில் வீடு செல்லும்போது கார் நின்றுவிட்டது. அந்த வழியில் வரும் இளைஞர்கள் ஆலியாவை தவறாக பார்க்கின்றார்கள் ஆலியாவின் அன்பிற்கு முன் அவர்கள் தோற்று விடுகின்றனர். ஆலியாவை  அவர்களே வீட்டில் விடுகின்றனர் இதுதான் கதை.

கோயிங் ஹோம்  குறும்படத்தை பார்க்க

பெண்களின் உயர்வுக்காக ஒரு குறும்படம் - Going Home: A film by Vikas Bahl feat. Alia Bhatt for #VogueEmpower

பொலிவூட் செய்தியை தொகுத்து தந்தது  -வர்ஷி- 

 

2,029 Views
"கத்தி" வசூலில் சாதனை.

A.R.முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த "கத்தி" திரைப்படம் சர்சைகளுக்கு மத்தியில் உலகளாவிய ரீதியில் நேற்றைய தீபாவளி தினத்தில் வெளியிடப்பட்டது.

பலத்த நெருக்கடிக்கு மத்தியில் படம் வெளியாவதில் சந்தேகங்களை தோற்றுவித்தாலும் அத்தனை சங்கடங்களையும் நேற்றைய முதல் நாள் வசூல் துடைத்தெறிந்திருக்கிறது எனலாம்.

தமிழகத்தில் மட்டும் நேற்றைய முதல் நாளில் 12.5 கோடிக்கு வசூல் கிடைத்திருக்கிறது.

கேரளாவில் 1.75 கோடியும் கர்னாடகாவில் 1.6 கோடியுமாக மொத்தமாக இந்த 3 இடங்களிலும் சேர்த்து 15.85 கோடி வசூல் ஆரம்ப நாளில் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜய் + A.Rமுருகதாஸ் கழுத்து வரை போன இந்த "கத்தி" இப்போது அதுவே மாலையாகி மகுடம் சேர்த்திருக்கிறது இந்த வெற்றிக் கூட்டணிக்கு.        .

ஏற்கனவே A.Rமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் பெரு வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
 

34,178 Views
[1]      «      736   |   737   |   738      »      [757]
Hot Gossip


Recent Gossip Post
Top 10 Commenters

Latest Comments

Top