Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்திய ,இலங்கை  கிரிக்கெட் அணிகளுக்கிடையில் திடீர் ஒருநாள் போட்டித் தொடர்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கும், வீரர்களுக்குமிடையில் ஒப்பந்த  சிக்கல் நிலைமை  காரணமாக இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் இடைநடுவே கைவிடப்பட்டிருக்கிறது.இதன்மூலமாக இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் சுமூகமற்ற நிலை உருவாகியிருக்கிறது.

 மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையில் இன்றுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தொடரிலிருந்து விலகுகின்ற முடிவுக்கு வீரர்கள் வந்துவிட்டனர்.

இதன்காரணத்தால் இந்த 2 அணிகளுக்குமிடையில் 5 ஒருநாள் ஆட்டங்களும்,1 T20 போட்டியும்,3 டெஸ்ட் போட்டிகளும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய 3 வது ஒருநாள் போட்டியோடு இந்த தொடர் எதிர்பாராத வகையில் முடிவுக்கு வருகின்றது.

இதன் காரணத்தால் இலங்கை கிரிக்கெட் அணியை ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்கும் அழைப்பை இந்திய கிரிக்கெட் சபை விடுத்தது.

இப்போது பிந்திக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 1 ம் திகதி ஆரம்பமாகும் வகையில் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருப்பம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் சஞ்செய் பட்டேல் விபரம் தெரிவித்தார்.

*தில்லையம்பலம் தரணீதரன்.
13,491 Views
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் இந்திய தொடர் இடைநடுவே ரத்தாகியது !!

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் இடைநடுவே கைவிடப்பட்டிருக்கிறது.இதன்மூலமாக இருநாட்டு கிரிக்கெட் சபைகளுக்குமிடையில் சுமூகமற்ற நிலை உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே இந்த 2 அணிகளுக்குமிடையில் 5 ஒருநாள் ஆட்டங்களும்,1 T20 போட்டியும்,3 டெஸ்ட் போட்டிகளும் அட்டவணைப் படுத்தப்பட்டிருந்தது.

ஒக்டோபர் 3 ம் திகதி ஆரம்பமான இந்த தொடர் எதிர்வரும் நவம்பர் 15 ம் திகதி வரை இடம்பெறவிருந்த  நிலையிலேயே இந்த சிக்கல் நிலைமை வந்திருக்கின்றது.

மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கும், வீரர்களுக்குமிடையில் ஒப்பந்த  சிக்கல் நிலைமை  காரணமாக சுமூகமான நிலைமை இருக்கவில்லை.இதனால் அவர்கள் ஒருநாள் போட்டித்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரான பயிற்சி நடவடிக்கைகளை கைவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும் போடித்தொடருக்கு எந்தவித சிக்கல் நிலையும் இருக்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைவர் டிவயன் பிராவோ தெரிவித்திருந்தார்.

இப்படியிருக்கின்ற போது மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையில் இன்றுவரை இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் தொடரிலிருந்து விலகுகின்ற முடிவுக்கு வீரர்கள் வந்துவிட்டனர்.

இதன் காரணத்தால் போட்டிக்கான அனுசரணையாளர் முதற்கொண்டு பல்வேறுவிதமான நடைமுறைச் சிக்கல்களை இந்திய கிரிக்கெட் சபை இப்போது முகம்கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.


இந்த திடீர் நெருக்கடி நிலைக்கு காரணமான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபைக்கு எதிராக தாம் சட்ட நடவிக்கை எடுக்கவுள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் சபை எச்சரித்திருக்கின்றது.

ஆயினும் அனுசரணையாளர்களை திருப்திபடுத்தி நெருக்கடி   நிலையை தணிப்பதற்காக இந்திய கிரிக்கெட் சபை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உதவியை நாடியிருக்கின்றது.

இலங்கை அணியை ஒரு குறுகிய தொடரில் பங்கெடுக்கும் அழைப்பை விடுத்து அவர்கள் காத்திருக்கின்றார்கள்.இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை தொடர்பு கொண்டு வினவிய போது அதற்கான அழைப்பு கிடைத்திருப்பதாகவும் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 1-1 என்ற நிலையில் சமப்பட்டிருக்கும் இந்திய ,மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கபோகும் முக்கிய போட்டி தற்சமயம் தர்மசாலாவில் இடம்பெறுகின்றது. 

 
*தில்லையம்பலம் தரணீதரன்
8,247 Views
பிரான்சில ஒரு பாட்டி
இந்த வயசிலயும் மனுசி அடிக்குது லூட்டி 
எங்க வீட்டிலையும் இருக்குது ஒரு பாட்டி 
அது இப்பவும் makeup  போடும் beauty 

103 வயசிலயும் அந்த மனுசி சாகசம் செயுது 
எங்க வீட்டு சீனி ஆச்சி நிதம் என்ன சாகடிச்சு கொல்லுது 
ரோசா பொக்லைன் அந்த மனுசிட பெயராம் 


சர்க்கஸில் கலக்கிய பாட்டி
இன்னும் ஓயாத துடிப்புடன் செய்கிறா லூட்டி 

1910 இல பிறந்து 53 பேரக் குழந்தையளக் கண்டும் 
அலுக்காம பாயுது அங்க இங்க ஓடுது 
சறுக்குது குலுக்குது 
சிறு பிள்ளை போல் ஓடுது 
என்ன சுறு சுறுப்பு 
இந்த வயசிலயும் 

இஞ்சையும் இருக்குதுகள் 
இன்னமும் மந்தமாய் திரியுதுகள் 
இந்த மனுசியப் பாருங்கோ 
வெந்து போற வயசிலயும் 
சொந்தக் காலில நிக்கிறா 

சோம்பேறி மனிதரே 
ரோசா போல் மாறுங்கோ 
சாதிச்சு சிகரம் ஏறுங்கோ

- ஆச்சரியத்துடனும் அன்புடனும் பேப்பர் பெடியன் 
1,856 Views

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்.

நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்...

அப்படித்தான் சாதிக்குக்கும் போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.

படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.

உறவினர் ஒருவர் போலீஸ்காரராக இருப்பதால் காக்கி சட்டை அணிந்து அவர் மிடுக்குடன் நடந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அவரை அழைத்து நானும் ஒருநாள் இப்படி போலீஸ் அதிகாரியாக வருவேன் என்பான்.

அவரும் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். உன்னால் நிச்சயம் போலீஸ் அதிகாரியாக வரமுடியும். முதலில் நன்றாகபடி என்று பெற்றோரும் உற்சாக மூட்டினார்கள்.

மனதில் துளிர்விட்ட போலீஸ் அதிகாரி கனவுடன் அந்த இளந்தளிர் தனது பள்ளி பயணத்தை தொடர்ந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று உடல் நலம் பாதித்த சாதிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவனை ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் நொறுங்கி போனார்கள். தங்கள் அன்பு மகனை மரணம் நெருங்கி கொண்டிருப்பதை நினைத்து தவித்தார்கள்.

எத்தனை ஆசை...? எத்தனை கனவுகள்...? அத்தனையும் கானல் நீராகி விட்டதே என்று மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.

தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கிடம் அவனது கடைசி ஆசையை மருத்துவர்கள் கேட்டனர்.

அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ‘நான் போலீஸ் கமிஷனராக ஆசைப்பட்டேன். ஆனால்....’ என்று அவன் முடிப்பதற்குள் அருகில் நின்ற மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இவ்வளவு அற்ப ஆயுளில் அவன் வாழ்க்கை பயணம் முடியும் என்று யார் கண்டது? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று! அதுதானே உண்மை.

முடியப்போகும் சாதிக்கின் வாழ்க்கையில் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஐதராபாத்தில் இயங்கும் ‘மேக் ஏ விஷ்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக்கின் நிலைமையும், அவனது கடைசி ஆசையையும் விவரித்தனர்.

உடனே தொண்டு நிறுவனத்தினர் போலீஸ் கமிஷனரை அணுகி விவரத்தை கூறினார்கள்.

கல்லுக்குள் ஈரம் இருக்கும் போது காக்கிச் சட்டைக்குள் ஈரம் இல்லாமலா போகும்? அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி முன்வந்தார். சிறுவன் சாதிக்குக்கு போலீஸ் சீருடை, தொப்பி தயாரானது. நேற்று காலை 10 மணி... கமிஷனராக பதவி ஏற்க சீருடை அணிந்து வீட்டில் சாதிக் தயாராக இருந்தான்.

சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய போலீஸ் வாகனம் சாதிக் வீட்டு முன்பு வந்து நின்றது.

காவலர் ஒருவர் கார் கதவை திறந்து விட மிடுக்காக காரில் ஏறி அமர்ந்தான் சாதிக். ஐதராபாத் நகர வீதியில் கமிஷனராக... மனதுக்குள் கற்பனையில் மிதந்தபடி சாதிக் பயணித்தான்.

கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கியதும் காவலர் ஒருவர் ‘சல்யூட்’ அடித்து வரவேற்றதும் பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதையை ஏற்றுக் கொண்டான்.

போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி பூங்கொத்து கொடுத்து சாதிக்கை வரவேற்றார். பின்னர் கமிஷனரின் இருக்கையில் சாதிக்கை அமர வைத்தனர்.

அந்த அறையில் நிரம்பி இருந்த நிருபர்களும் புதிய கமிஷனரை மகிழ்விக்க புதிய கமிஷனர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரவுடியிசத்தை ஒழிப்பேன். சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படும். போக்குவரத்து சீராக இருக்கும். நாள் முழுவதும் காவலர்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஈவ்–டீசிங்க்கு இடம் கிடையாது என்று படபடவென்று பதிலளித்தான்.

அதோடு உதவி கமிஷனர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இந்த விசயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டான்.

பின்னர் தயாராக வைத்திருந்த சில கோப்புகளிலும் கையெத்திட்டான். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தை சுற்றி காட்டினார்கள்.

ஒரு நாள் கமிஷனராக வலம் வந்த சாதிக்கின் உள்ளத்தில் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான பூரிப்பு. சந்தோசத்தில் சிரித்து கொண்டே அனைவரிடமும் உரையாடினான்.

இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் இதயமும் கண்ணீர் வடித்தது. எத்தனை ஆசை கனவுகள்... இந்த சிறுவனுக்கு? அநியாயமாய் பாதியிலே கருகி போகிறதே...

வாழும் காலமாவது வசந்த காலமாக இருக்கட்டும் என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு ஒவ்வொருவரும் அவனை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வயதில் எவ்வளவு பெரிய கனவு கண்டுள்ளான். கடவுள் அவனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை. எங்களால் முடிந்த இந்த உதவியின் மூலம் அவனுடைய ஆசையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி எங்களுக்கு என்றார் கமிஷனர் மகேந்திர ரெட்டி.

நன்றி - மாலைமலர் 

12,229 Views
கமல்ஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் 'பாபநாசம்' படபிடிப்புகள் கேரளாவில் நடைப்பபெற்றுக்கொண்டிருக்கின்றது. மிகவும் பரபரப்பாக இந்த படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றது என்பது நாம் அறிந்ததே. நேற்றைய படப்பிடிப்பின் போது திடீர் உடல் நலக்குறைவால் கமல் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

பொலீசார் துரத்திவந்து தாக்கும் போது கமலின் மூக்கிலிருந்து இரத்தம் வழிவதைப் போன்ற காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூக்கிலிருந்து இரத்தம் வழிவதைப் போன்று காண்பிக்க கமலின் மூக்கினுள் வைக்கப்பட்ட இறப்பர்த் துண்டு மூக்கிற்குள் போய் சிக்கி, சுவாசிக்க கஷ்டப்பட்டதோடு, தொடர்ந்து இரத்தம் வந்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இப்போது கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில் கமல் நலமாக இருப்பதாகவும், பயப்படும் வகையில் அவருக்கு எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கமலின் விளம்பரத் தொடர்பாளர் நிக்கில் முருகன் தனது ட்விட்டரிலும் கமலின் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

இதனால் மீண்டும் பாபநாசம் படப்பிடிப்புகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

கோடம்பாக்க சினி செய்திகளை அடிப்படையாக வைத்து தொகுத்து வழங்கியது
ர. பிரவீனா
2,003 Views
தத்தக்க பித்தக்க நாலு கால் 
என் தீபிகா நீ சுவைக்கும் பால் 
எப்பவுமே நான் தான் உன் ஆள் 
உன் பார்வை அது என்னைக் கொட்டும் தேள் 

அடியே தீபிகா படுகோன் 
நீயே ஒரு விருந்து 
தீபாவளிக்கு நீ தரப் போறியாம் பெருவிருந்து
 
ஆமா என் செல்லக் குட்டி 
ஹாப்பி நியூ இயர் படத்தில  
கலக்கலா நடிச்சனியாம்
இளசுகளோட மனச பாடா படுத்தினியாம்
ஒரு தினிசா தான் இருக்குறாய் 
மணி பார்ச போல நல்லா தான் சிரிக்கிறாய் 

நான் தான் உன்னையே எண்ணி லூசாகி போனேன்டி 
குணப்படுத்த நீ கொஞ்சம் வாயேண்டி 
மருந்து வேணும் என் மாங்குயிலே 
ஹாப்பி நியூ இயர் தான் எனக்கு இப்ப மருந்து 
இல்ல இல்ல அது தான் எனக்கு பெரு விருந்து
படம் வந்ததும் முதல் காட்சி 
அத நான் பார்த்துப்போட்டு 
கடதாசி  எழுதுறன் என் கள்ளச் சிறுக்கி 

-உன் நினைவோடு பேப்பர் பெடியன்  -

Deepika Padukone Photos
2,838 Views
நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க... 'அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு' நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.

இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம். இந்த காரை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.

இந்த காரை உற்பத்திச் செய்த பிரதான இஞ்சினியர் Stefan Klein கூறுகையில், இந்த மாதம் 29ம் திகதி ஒஸ்டிரியாவில் நடைபெறவுள்ள The Pioneer Fastival இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த பறக்கும் காருக்கு Aero Mobil 3.0 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பறக்கும் கார் காணொளி 

உலகின் முதலாவது பறக்கும் கார் - AeroMobil 3.0


இணையத்திலிருந்து தகவல் திரட்டி தொகுத்து வழங்கியது.
ர. பிரவீனா
9,781 Views
10 கோடி குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் -ஷாருக் கான்

ஷாரூக் கானின் உதவியாளரான ஆலி மொரானியின் வீட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடந்தது.

இதில் BMW கார் லேசாக சேதம் அடைந்தது. ஷாரூக் கானை  குறி வைத்துத்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்று காவல் துறையிடம் வாக்குமூலம் கொடுத்தார் அவர் உதவியாளர்.

இதனடிப்படையில் தனக்கு ஆபத்து ஒன்று இருப்பதை கணித்த நடிகர் ஷாருக் கான் 10 கோடி (Bomb proof ) குண்டு துளைக்காத காருக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் ஷாருக்.

இவரது  சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலர்கள். இந்தியாவில் நேர்த்தியாக வரி கட்டும் நடிகர்களில் ஷாருக் கானும் ஒருவர்.

நடிகர்+ தயாரிப்பாளர்+ விளம்பர நடிகர், IPL கொல்கொத்தா அணியின் உரிமையாளராகவும் இருக்கும் ஷாருக் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் வரிசையிலும் முன்னணியில் இருப்பவர்.

ஏற்கனவே அமீர் காணும் இதே வகை காரை அண்மையில் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

2 முறை IPL  கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ள காம்பிர் தலைமையிலான KKR அணிக்கு பரிசுத்தொகையாக இந்த ஆண்டு மட்டும் 15 கோடி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படி கோடான கொடிகள் கொட்டி புரளும் IPL அணியின் உரிமையாளராக இருக்கும் ஷாருக்குக்கு இதெல்லாம் ஜுஜுப்பி.   
11,483 Views
இந்திய உலக கிண்ண அணியில் ஆஷிஸ் நேஹ்ரா.......????

அடுத்தாண்டு பெப்ரவரியில் அவுஸ்ரேலிய மற்றும் நியூஸ்லாந்தில் ஆரம்பமாகவுள்ள உலக கிண்ண போட்டிகளை எதிர்பார்த்து ஒவ்வோர் அணிகளும் தங்களது முயற்சிகளை மேற்கொள்கின்றன.

உலக கிண்ணத்தை வெற்றி கொள்வதே சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரினதும் கனவாக காணப்படுகின்றது.இந்த நிலையில் உலக கிண்ணத்தை வெற்றி கொள்கின்ற அணிகளில் இடம்பிடிப்பதும் ஒவ்வொரு வீரரதும் கனவு எனலாம்.

இப்படியிருக்கின்ற போது நடப்பு உலக சாம்பியன்களான இந்தியாவுக்கு உலக கிண்ணத்தை தக்க வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்று முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி அண்மையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியை தேர்வு செய்வதில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.எப்போதும் போல் துடுப்பாட்டத்தில் கலக்கும் இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சில் தடுமாறுவது வழமையானது.

இதனை கருத்தில் கொண்டு ஒரு அனுபவ வேகப்பந்து வீச்சாளராவது உலக கிண்ண அணியில் இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகிறது என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2011 ம் ஆண்டு உலக கிண்ணத்தை இந்தியா வெற்றி கொள்வதற்கு காரணமாக இருந்த அனுபவசாலி சகீர் கான் அண்மைய நாட்களில் உபாதையால் அவதிப்படுகின்றார்.

ஆயினும் 2011 ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளுக்கு பின்னர் அணியில் வாய்பின்றித் தவித்த 35 வயதான ஆஷிஸ் நேஹ்ரா அண்மைய நாட்களில் சென்னை அணிக்காக IPL போட்டிகளில் கலக்கி வருகின்றார்.

140 KM /H வேகத்திலும் பந்து வீசக்கூடிய நேஹ்ரா வேகப்பந்துக்கு சாதகத்தை கொடுக்கவல்ல ஆடுகளங்களில் சிறப்பாக செயற்படுவார் என்றும் நெருக்கடியான தருணங்களில் ஒரு அனுபவ பந்து வீச்சாளர் இருப்பது அணிக்கும் பலம் சேர்க்கும் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கருதுகின்றது.

இதற்கான முன்னாயத்தமாக எதிர்வரும் அவுஸ்ரேலிய  அணிக்கெதிரான தொடரில் நேஹ்ரா அணியில் இணைக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.    

நேஹ்ரா,சகீர்கான் ,ஹர்பஜன்,ஜுவ்ராஜ் ஆகிய பந்து வீச்சாளர்கள் கடந்த 2011 இல் இந்தியா உலக கிண்ணத்தை 28 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி கொள்வதற்கு வலுச்சேர்த்தவர்கள்.

இம்முறை இவர்கள் இல்லாத நிலையில் புவனேஸ்வர் குமார் ,மொஹமெட் சாமி,மோகித் சர்மா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ அல்லது அஸ்வின், ஜடேஜா போன்ற சுழல் பந்து வீச்சாளர்களுக்கு உலக கிண்ண அனுபவம் இல்லை என்பதை வைத்து கொண்டு நேஹ்ராவை மீண்டும் தேசிய அணியில் உள்வாங்க ஏற்பாடு நடக்கிறது.

எது எவ்வாறாயினும் சென்னை அணி நிர்வாகம் ஆஷிஸ் நேஹ்ராவை தேடி எடுத்து IPLஅணியில் இணைத்த போது,வெகுவிரைவில் நேஹ்ரா இந்திய தேசிய அணியில் இணைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்று நாம் sooriyan-sports பக்கத்தில் கருத்து வெளியிட்டமையும் நினைவுக்கு வருகின்றது.

நெஹ்ராவின் வரவு இந்தியாவுக்கு சாதகமானது என்ற நிலைப்பாட்டில் இந்திய தேர்வாளர்கள் ஆர்வம் காட்டுகின்றமையை நோக்குகின்ற போது இதற்கான சாத்தியம் இருப்பதாகவே தெரிகின்றது.
5,028 Views
அரசியல் காரணங்களால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் நெருக்கடிநிலை ஏற்படுவது சாதாரணமானது. ஆனால் அணைக்கட்டுகளால் சிலநாடுகள் பொருளாதார நெருக்கடியையும் சிக்கலையும் எதிர்கொண்டிருக்கின்றன என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா..?  

                                1934-ம் ஆண்டுக்குப்பின் கட்டப்பட்ட 245அணைகள், அவை உள்ள நாடுகளுக்கு பெரும் பொருளாதாரச்சிக்கலை உண்டாக்கியிருப்பதாக லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பிரேசிலின் "பெல்மொண்ட்" அணைக்கட்டு, சீனாவின் "ஜின் ஷா" அணை, எதியோப்பியாவின்"ஜிப்"ஆகியன இந்த நெருக்கடி நிலைக்கு காரணமான அணைக்கட்டுகளில் பிரதானமானவையாக  கருதப்படுகின்றனவாம்.        

                         உலகிலேயே அதிக அணைக்கட்டுக்கள் சீனாவில் தான் காணப்படுகின்றன.அதேபோல அனைக்கட்டுக்களை கட்டும் முன்னணி நிறுவங்களும் கூட சீனாவில் தான் உள்ளனவாம்.தற்போது 70நாடுகளில் மேற்கொள்ளப்படும் 300 அணைக்கட்டுகள் கட்டும் வேலைகளை இந்த சீன நிறுவனங்களே மேற்கொள்கின்றனவாம்.

எங்கள் நாட்டிலும் சீனர்கள் அதிகமாக இப்போதெல்லாம் காணப்படுவதால் எங்கேயாவது அணை கட்டப்படுகிறதோ என்று கவனிப்போம்.
6,319 Views

நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு பேஸ்புக்கில் 100 மில்லியன் likes .

பிரபல கால்பந்தாட்ட நடசத்திரம் போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து களத்தில் கல்ல்குவதொடு மட்டுமல்லாமல் பேஸ்புக்கிலும் கலக்குகிறார்.

இவர் பேஸ்புக்கில் 100 மில்லியன் லைக்குகளை பெற்ற சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார். இவ்வாறு 100 மில்லியன் லைக் பெறும் முதல் விளையாட்டு வீரர் எனும் சிறப்பையும் ரொனால்டோ  பெற்றுள்ளார்.

பேஸ்புக் வரலாற்றிலேயே 100 மில்லியன் லைக் பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையும், முதல் விளையாட்டு வீரர் என்ற சிறப்பும் ரொனால்டோவுக்கு கிடைத்திருக்கிறது.

100 மில்லியன் லைக்குகளை முதலில் பெற்ற பெருமை கொலம்பிய பாப் பாடகி ஷகிராவுக்கு உரியது.

இப்படியிருக்க அர்ஜென்டினா வீரர் லீயோனெல் மெஸ்ஸி 74 மில்லியன் லைக்குகளுடன் 9 வது இடத்தில் உள்ளார்.

ரொனோல்டோவுக்கு Twitter தளத்தில் 305 மில்லியன் Followers  இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

கலக்கல் நாயகன் ரொனால்டோவுக்கு வாழ்த்துக்கள்.
1,949 Views
இன்றைய பிறந்த நாள் கதாநாயகன் அனிருத் உள்ளம் திறக்கிறார்?
உறங்கி கிடந்த அனுபவ பகிர்வுகள் உங்களுக்காக.

1. 'ஐ’ திரைப்படத்துக்கான மெர்சலான அனுபவம் பற்றி...?''

''நான் பாடகனே கிடையாது. பாடுறதுன்னா எனக்கு உள்ளுக்குள்ள உதறும். 'எதிர்நீச்சல்’ மியூசிக் பண்ணப்ப, 'பூமி என்ன சுத்துதே...’ பாட்டு வரிகளைக் கேட்டதும் சொந்த வாழ்க்கையோட ரிலேட் பண்ணிக்கிட்ட மாதிரி இருந்தது. சும்மா பாடினேன். ஹிட் ரெவ்யூஸ் வந்ததும் அடுத்தடுத்து பாட நம்பிக்கை வந்துச்சு. ரஹ்மான் சார் என் பாடல்கள் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் கேட்டு, நல்லா இருந்துச்சுன்னா வாழ்த்துவார். திடீர்னு ஒருநாள், 'ஒரு பாட்டு பாடுறியா?’னு வரச் சொன்னார். பார்த்தா 'ஐ’ ஒலிப்பதிவு .

ஷங்கர் சார்  உக்கார்ந்திருக்கார். நிஜமாவே மெர்சலாகிட்டேன். ரஹ்மான் சார்தான் ரிலாக்ஸ் பண்ணி 'எப்படிப் பாடணும்’னு சொல்லிக்கொடுத்துப் பாடவெச்சார். அவரைப் பார்த்து மியூசிக் பண்ணக் கத்துக்கிட்டவன், அவர் மியூசிக்லயே பாடினது... சர்ப்ரைஸ் சந்தோஷம். சும்மா ஜிவ்வுனு இருக்கு!''

2.'விஜய்  + முருகதாஸ்னு 'கத்தி’ படத்துக்கு மாஸ் எதிர்பார்ப்பு. அந்தப் பட இசைக்கு முருகதாஸ் உங்களை எப்படித் தேர்ந்தெடுத்தார்?''

'' 'எதிர்நீச்சல்’ வெளியாகி மூன்றாவது நாள் முருகதாஸ் சார் ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பாடல்கள் ஹிட் ஆனதுக்கு வாழ்த்து சொல்லக் கூப்பிடுறார்னு நினைச்சுப் போனேன். 'இப்பத்தான் 'எதிர்நீச்சல்’ பார்த்தேன். மியூசிக் பிரமாதம். அடுத்து விஜய் சார்கூட 'கத்தி’ பண்றேன். நீங்கதான் மியூசிக்’னு எனக்கு ஷாக் கொடுத்தார் முருகதாஸ் சார். நம்பவே முடியலை.

ஒருநாள் கம்போஸிங்ல, 'என்னை ஏன் சார் இந்தப் படத்துக்கு செலெக்ட் பண்ணீங்க?’னு வாய்விட்டே கேட்டுட்டேன். 'என் ஃப்ளாட்ல சின்ன பசங்கள்லாம் 'எதிர்நீச்சலடி...’ பாட்டை கோரஸா பாடிட்டு இருந்தாங்க. அது ஏதோ ராப் மாதிரி இருந்துச்சு. எனக்குப் புரியலை. ஆனா, குழந்தைகளுக்குப் பிடிக்குதுனா, அதுல ஏதோ இருக்குனு தோணிச்சு. அப்புறம் 'எதிர்நீச்சல்’ பட டைட்டில்ல உங்க பேர் வந்தததும் தியேட்டர்ல பயங்கரமா கை தட்டினாங்க. ஃபுல்பார்ம்ல இருக்கீங்கனு புரிஞ்சுபோச்சு. அதான் உங்களை ஃபிக்ஸ் பண்ணிட்டேன்’னு சிரிச்சார்.''



3. 'கத்தி’ படத்துல விஜய்யை 'lets take A selfie pulla..’ பாடல் பாடவெச்ச அனுபவம்...''

''விஜய் சார் செம சின்சியர். செல்ஃபி பாடலோட டியூனையும் வரிகளையும் அவருக்கு முன்னாடியே அனுப்பிட்டேன். அவர் நாலைஞ்சு வெரைட்டியில பாட்டு பாடி ரிக்கார்ட் பண்ணி எடுத்துட்டு வந்தார். 'அனிருத் இதுல எது ஓ.கே-னு சொன்னீங்கன்னா, நான் அதை ஃபாலோ பண்றேன்’னு சொல்லிட்டு என் ரியாக்ஷன் பார்த்தார். ஒரு மாஸ் ஹீரோ ஒரு பாடல் பாடுறதுக்கு இவ்வளவு சின்சியரா இருக்காரேனு எனக்கு ஆச்சர்யம்.  பாட்டு கம்போஸிங்ல, 'நாம ஒரு செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போடுவோம். வைரல் ஆகும்’னு ஐடியா கொடுத்ததும் அவர்தான்!''  

'4. 'தனுஷ்-சிம்பு சண்டை’, 'சிம்பு-நயன் பேசிக்கிறதில்லை’னு நியூஸ் படிச்சுட்டு ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணா, நீங்க, தனுஷ், சிம்பு, நயன்தாரானு எல்லாரும் செம பார்ட்டி பண்ணிட்டு இருக்கீங்க... என்னதாங்க நடக்குது?''

(சத்தமாகச் சிரிக்கிறார்) ''நாங்க எல்லாரும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். அவங்க எல்லாரையும் நான்தான் சேர்த்துவெச்சேன்னு எழுதுறாங்க. ஆனா, உண்மை என்னன்னா நான்தான் அவங்ககூட போய் சேர்ந்துக்கிட்டேன். சிம்பு-தனுஷ் ரெண்டு பேருமே இப்போ குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ஃபாரின் டூர் எல்லாம் சேர்ந்து போயிருக்கோம். அப்படி அப்படியே அந்த கேங்ல எல்லாரும் சேர்ந்துட்டாங்க. யார் மனசுலையும் பழைய விஷயங்கள் எதுவும் இல்லைனு நினைக்கிறேன். ரொம்ப கேஷ§வலா, ஜாலியாப் பேசிப்போம். குரூப்ல ஒரே பிரச்னை... நானும் சிம்புவும்தான் அங்கே பேச்சுலர்ஸ். அதனால எதுனாலும் எங்களைத்தான் ஓட்டி எடுப்பாங்க!''

5.''சமீபத்துல சினிமாவில் திக் ஃப்ரெண்ட்ஸ்னா தனுஷ்-சிவகார்த்திகேயனைச் சொல்றாங்க. ஆனா, திடீர்னு அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில்லைன்னு தகவல்... உண்மையா?''

''சிவா எப்பவுமே எங்க கேங்லதான் இருக்காருங்க. நான், தனுஷ் சார், சிவா மூணு பேரும் வாட்ஸ்அப்ல ஒரு குரூப்பே நடத்திட்டு இருக்கோம். நடுவுல அவங்கவங்க வேலையில் பிஸி ஆகிட்டதால, முன்ன மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை; அவ்வளவுதான். தனுஷ் சார் தயாரிப்புல சிவா நடிக்கிற 'டாணா’ படத்துக்கும், விஜய் சேதுபதி நடிக்கிற படத்துக்கும் நான்தான் மியூசிக்!''

6.''ஆண்ட்ரியா... காதல்... பிரேக்-அப்... போட்டோ நெட்ல ரிலீஸ்... காயம்லாம் ஆறிடுச்சா?''

'' 'கொலவெறி வைரல்’னு இன்டர்நெட்  மூலம் பிரபலமான இசையமைப்பாளர் நான். என்னை வளர்த்த அதே இன்டர்நெட் என் இமேஜை டேமேஜும் பண்ணுச்சு. எனக்கு அந்த போட்டோ பெரிய ஷாக்தான். ரொம்ப நொந்துட்டேன். எனக்கே அப்படின்னா, வீட்ல உள்ளவங்களுக்கு எப்படி இருக்கும்னு பார்த்துக்கோங்க. ஆனா, கடவுள் புண்ணியத்துல வீட்ல எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. ரொம்ப ஆறுதலாப் பேசினாங்க. ரெண்டு நாள் உடைஞ்சுபோய் இருந்தேன். 'இது இன்டர்நெட் காலம். எதுவுமே ரெண்டு நாளைக்கு மேல பழைய மேட்டர்தான். நாளைக்கே வேற ஒரு விஷயம் வைரல் ஆச்சுன்னா, மக்கள் உன்னை மறந்துருவாங்க’னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன். விளையாட்டுத்தனமா செஞ்சது பெரிய பாடம் கத்துக்கொடுத்துச்சு. இப்போ நிறைய மெச்சூரிட்டி வந்திருக்கு. அதனால தெளிவா இருக்கேன்!''

நன்றி-விகடன்



2,574 Views
தமிழ்சினிமாவின் திரை இசையில் இன்றுவரை இசையின் ராஜாவாக, "இசைஞானி"யாக தனித்தடம் பதித்து இசைத்துறையில் நாற்பது ஆண்டுகளாக சாதித்துக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா என்றால் மிகையில்லை. ரசிகர்களுக்கு "இசை" தந்த ராஜா தற்போது "பரிசு" தரப்போவதாக ஒரு தகவல்...... 

                                         மொழி கடந்த அவரது இசைப்பயணத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் என  பல மொழிகளில் வெளியான 1000ற்கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார் இசைஞானி. இந்தநிலையில் தன் இசையை நேசிக்கும் ரசிகர்களுக்காக ஒரு போட்டியை தானே நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இதுவரை தன் இசைப்பயணத்தில் இடம்பெற்ற படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் தான் இந்தப்போட்டி நடைபெறவுள்ளது.

                           இந்தப்போட்டியில் பங்கேற்க விரும்புகின்ற ரசிகர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குனர், பாடியவர்கள், தயாரிப்பாளர்கள்,அந்தப் படங்கள் வெளியான திகதி என அனைத்து தரவுகளையும் தெரிந்து வைத்திருத்தல் இங்கு முக்கியமான விஷயம்.

                                போட்டியில் கலந்துகொள்ளும்  ரசிகர்கள் செய்யவேண்டியது இதுதான். தாம் சேகரித்த இந்த தகவல்களை ஒழுங்கு படுத்தி சமர்ப்பிக்க வேண்டுமாம், அந்தத் தரவுகள்  இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு பரிசு வழங்கப்படவுள்ளதாம். 

                              வழங்கப்படவுள்ள பரிசு என்ன..? போட்டி எப்போது ஆரம்பிக்கப்படவுள்ளது..? போன்ற விபரங்களை இசைஞானி விரைவில் அறிவிக்கவுள்ளாராம்.அதிலும், சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகருக்கான முதல் பரிசை இசைஞானி இளையராஜாவே அந்த ரசிகரை நேரில் அழைத்து  வழங்கப் போவதாகவும் ஒரு செய்தி.    .

பாடத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா போட்டியில ஜெயிக்க முழுமூச்சா முயற்சி பண்ணுங்க...பரிசு, படத்தில பாடுற வாய்ப்பாகக் கூட இருக்கலாம்.....
2,496 Views
மிக பிரபலமாக, மக்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள பேஸ்புக் சமூகவலைத்தின் நிறுவுனரான மார்க்ஸ் சுக்கர்பேர்க் ஹவாய் தீவிலுள்ள அழகான ஒரு கடற்கரை நிலப்பரப்பினை விலைக்கு வாங்கியுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

100 மில்லியன் டொலர் கொடுத்து 'கவுவாய்' எனும் ஹவாய் தீவின் 700 ஏக்கர் நிலப்பரப்போடு சேர்ந்த தீவையே இவர் வாங்கியுள்ளார். வெள்ளை மணல் கொண்ட ஒரு பகுதியும், விளைச்சல் செய்யக்கூடிய ஒரு வகையான வளம் மிக்க மண்ணும் இந்த தீவில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

விடுமுறையை களிக்க தன் மனைவியுடன் ஏற்கனவே இந்த தீவிற்கு வந்துள்ள மார்க், இந்த தீவை மிகவும் ரசித்ததாகவும், தன்னுடைய மனைவிக்கு இந்த தீவும், இந்த ரம்மியமான பிரதேசமும் மிகவும் பிடித்திருந்ததாலும், தன்னுடைய குடும்ப தனிப்பட்ட தேவைகளுக்காக இதை வாங்கியதாகவும் கூறுகிறார் மார்க்.

 

7,146 Views
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி படங்களிலும் தனது திறமையை காட்டிக்கொண்டிருக்கும் ஆந்திரத்து அழகியான தமன்னா, படப்பிடிப்புக்கு முழுக்குப்போட முடிவு செய்துள்ளாராம்.

                                    கடந்த சில மாதங்களாக தமிழ்,தெலுங்கு,இந்தி என மாறி மாறி தொடர்ச்சியான படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நடிப்பில் அக்கறை காட்டிய காரணத்தினால் தனது குடும்பத்தில் அக்கறைகாட்ட முடியவில்லை தமன்னாவுக்கு. இதனால் குடும்பத்தில் இடம்பெற்ற பல நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதைவிட உறவினர்களின் திருமணங்கள், தோழிகள் வீட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாம்.

                 இதனால் வீட்டாரின் கோபத்துக்கு ஆளானது மட்டுமல்லாமல்,உறவினர்கள் மத்தியிலும் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டதோடு,    வேண்டப்பட்ட பலர் தமன்னாவுடன் பேசுவதையும் நிறுத்தி மனவேதனைக்கும் உள்ளாக்கியுள்ளார்கள்.

                    எனவே குடும்பத்தினருக்காகவும், உறவினர்களுக்காகவும் நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் ஓய்வில்லாமல் நடித்து வந்த அவர்,தற்போது படப்பிடிப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார். படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைக்கும்படியும்  அந்தப்படங்களின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளாராம். ஒரு மாத ஓய்வை முடித்து விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு செல்லவுள்ள தமன்னா, அடுத்த வருடம் கோடை விடுமுறை வரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல்.

                        ஒரு மாத ஓய்வில் இருக்கும் நாட்களில் உறவினர்கள், தோழிகள் வீட்டுக்கு செல்வது மற்றும் அவர்களுடன் விருந்து, கொண்டாட்டம், நிகழ்ச்சிகள் நடத்துவது என  தினமும் வீட்டை அமர்க்களப்படுத்தப் போகிறாராம் இந்த தெலுங்கு தேசச் சிங்காரி.

ரசிகர்களுக்கு மட்டும் தான் தீபாவளியா......?
உங்களுக்கு வேண்டாமா...?"
சொந்தங்களோடு கொளுத்துங்க  பட்டாசு...

தமன்னாவின் அழகிய கலக்கல் படங்கள் இங்கே 

Thamanna

Thamanna Stills





3,104 Views
[1]      «      880   |   881   |   882      »      [898]
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top