இங்கிலாந்து இளவரசர் வில்லியம் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு அடுத்ததாக இரட்டை குழந்தைகள் அதுவும் பெண்குழந்தைகள் பிறக்கப்போவதாக அரண்மனை வட்டாரம் தெரிவிக்கின்றது .
இவர்களுக்கு ஒன்றரை வயது உடைய ஜோர்ஜ் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கேட் இரண்டாவது முறையாககர்ப்பமாக உள்ளார். அவர் கர்ப்பமான செய்தியை அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்ததில் இருந்து பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்று இங்கிலாந்து மக்கள் பந்தயம் கட்டி வருகிறார்கள்.
தனக்கு இரட்டைக் குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பிறக்கப் போவதாக கேட் அரண்மனைவாசிகளிடம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
முதல் குழந்தை ஆணாக பிறந்ததால் அடுத்தது பெண்ணாக பிறக்க வேண்டும் என்று கேட் விரும்பியதாகவும் அண்மையில் கேட் மிடில்டன்னுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தான் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் என்பதுதெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கேட் தனக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பார் என்று ஏற்கனவே ஒரு கூட்டம் பந்தயம் கட்ட ஆரம்பித்துவிட்டது.
எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹெச்பி HP என்று அழைக்கப்படும் ஹெவ்லெட் பேக்கார்ட் (Hewlett Packard) நிறுவனத்தின் முக்கிய துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்நிறுவனம் இரண்டாக பிரிந்து செயல்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிறுவனம் பிரிக்கும் பொழுது ஹெச்.பி நிறுவனத்தில் இருந்து சுமார் 5,000 பணியாளர்களை நிறுவனத்தை விட்டு நீக்குவதாகவும் ஹெச்.பி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
66 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்நிறுவனத்தை தற்போது மெக் வித்மேன் தலைமை வகித்து நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் வன்பொருள் மற்றும் சேவை பிரிவில் இருந்து Laptop, கம்பியூட்டர் மற்றும் பிரிண்டர் வர்த்தகத்தை தனியாக பிரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஹெச்.பி நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக மந்தமான வர்த்தகத்தையே சந்தித்து வருகிறது. இதனால் நிறுவனத்தின் சில பிரிவுகளை தனியாக பிரிப்பதன் மூலம் முக்கிய வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தை செலுத்த முடியும் என மெக் வித்மேன் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதே முயற்சியை எடுக்க நினைத்த முன்னாள் தலைவர்கள் சில பல காரணங்களாக கைவிட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
விஷாலும் யுவன் சங்கர் ராஜாவும் இப்போதும் நல்ல நண்பர்கள்தான்.
விஷாலின் இப்போது வெளிவந்துள்ள படமான பூஜைக்கும் யுவன்தான் இசை ஆனால் விஷால் - சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் ஆம்பள படத்திலிருந்து விலகி இருக்கிறார் யுவன்.
அவருக்குப் பதில் ஐந்து இசையமைப்பாளர்கள் அந்தப் படத்துக்கு இசையமைக்கின்றனர்.
இந்த வெளியேற்றத்துக்கான காரணம் தெரியவில்லை. சுந்தர்.சிக்கும் யுவனுக்கும் ஒத்துப் போகவில்லை என்கிறது உள்வட்டாராம். இத்தனைக்கும் சுந்தர்.சியின் பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன்.
ஐந்து இசையமைப்பாளர்கள் இப்போது ஆம்பள படத்தின் இசையமைப்பாளர்களுள் ஒருவராக ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிமுகமாகிறார். ரஹ்மானின் உதவியாளர் ஒருவரும் இசையமைக்கிறார். மேலும் 3 புதிய இசையமைப்பாளர்களையும் இந்தப் படத்தில் அறிமுகம் செய்கிறார் சுந்தர்.சி.
முதன் முதலாக தமிழ் சினிமாவில் 5 இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்த் அடுத்ததாக இயக்குநர் பார்த்திபன் தன் கதை திரைக்கதை வசனம் இயக்கத்திலும் 5 இசை அமைப்பாளர்களைப் பயன்படுத்தினார். இதே போல ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி 3-ம் பாகமான கங்காவிலும் 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.
இப்படியே போன ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர் என்ற நிலை வந்துரும் போல ம்ம்ம்ம்……
இங்கிலாந்து பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் விக்கெட் காப்பாளர் மட் பிரையர் ஆகியோர் சக வீரர்களை திட்டியும், அசிங்கப்படுத்தியும் மோசமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டிய கெவின் பீட்டர்சன், இந்திய வீரர்களுக்கே இது நன்றாக்த் தெரியும் என்று கூறியுள்ளார்.
"மேற்கிந்திய வீரர்களைக் கேளுங்கள்,இலங்கை,அவுஸ்ரேலிய ,இந்திய வீரர்களைக் கேளுங்கள், , இந்தியர்களிடமிருந்து எனக்கு குறுஞ் செய்தி வந்தது. அதாவது நான் எப்படி இப்படிப்பட்ட வீரர்களுடன் விளையாடி வருகிறேன், நம்பமுடியவில்லை’என்று எனக்கு குறுஞ் செய்தி செய்துள்ளனர்.
சர்வதேச வீரர்களிடம் கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக இங்கிலாந்து வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் நான் கூறியிருப்பதன் உண்மை தெரியவரும்”
என்று கெவின் பீட்டர்சன் தனது சுயசரிதை நூல் வெளியாவதை முன்வைத்து தி டெலிகிராப் பத்திரிக்கையில் இவ்வாறு கூறினார்.
தென்னாபிரிக்காவில் பிறந்த KP இங்கிலாந்து குடியுரிமை பெற்று அந்த அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்,அணி தலைவராகவும் கடமையாற்றியவர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி KP என்ற இந்த குதிரையில் ஏறி சவாரி செய்த காலமும் இருக்கிறது.இப்படியிருக்க அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஆஷேஸ் போட்டி தொடரில் இங்கிலாந்து மோசமான தோல்வியை தழுவ பலிக்கடாவாக்கப்பட்ட நபர் இந்த KP மட்டுமே.
இவரது சுயசரிதை நூல் தொடர்பில் தெரிவித்த கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறார். சர்சைகளால் பேசப்பட்ட கெவின் இப்போது இங்கிலாந்து ஊடகங்களின் தலைப்பு செய்தி ஆகிவிட்டார்.
இவரது இந்த கருத்துக்கள் தொடர்பில் தெரிவித்த முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஸ்வான் பல விடயங்களை சொல்லியுள்ளார். இவருக்கு யார் நல்லவர்,யார் கெட்டவர்,யாரெல்லாம் இவருக்கு உதவினார்கள் என்பதை மறந்து கருத்துரைக்கிறார் என்று விசனம் வெளியிட்டுள்ளார்.
உண்மையில் விக்கெட் காப்பாளர் மட் பிரையர் இவர் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றும் ஸ்வான் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும் தான் தென்னாபிரிக்காவை விட்டு வந்தது மிகப்பெரும் தவறு என்றும்,அதுதான் தன் சந்தோசம் பறி போனதற்கு காரணம் என்ற கருத்தையும் KP முன்வைக்க தவறவில்லை.
காலம் கடந்த ஞானமும் காலம் கடந்த விசாரணைகளும் கவைக்கும் உதவாது அவைக்கும் உதவாது.