இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படும், தாதா சாகேப் பால்கே நினைவாக, சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு, ஒவ்வொரு ஆண்டும், இந்திய மத்தியஅரசு விருது வழங்கிறது.இந்தாண்டுக்கான விருதுக்கு, பிரபல பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திரையுலகில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக வழங்கப்படும், இந்த விருது, தங்கத் தாமரை பதக்கம், சால்வை, 10 லட்சம் இந்திய ரூபாய் பணம் என்பன அடங்கியது. கடந்தாண்டு, பிரபல பாலிவுட் நடிகர், வினோத் கன்னாவுக்கு, இந்த விருது வழங்கப்பட்டது.தமிழ் சினிமாவில், பிரபல நடிகர் சிவாஜி கணேசன், பிரபல இயக்குநர் பாலச்சந்தர், ஆகியோருக்கு இந்த விருதைப் பெற்றுள்ளனர்.