Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபு

Sooriyan Gossip - 'மங்காத்தா'விற்காக விருந்து கொடுத்த விஜய் - வெங்கட் பிரபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

436 Views
கொரோனா பரவலின் அளவு கடந்த அதிகரிப்பு காரணமாக திரைத்துறையே ஒட்டுமொத்தமாக அடங்கிக் கிடக்கும் நிலையில் படப்பிடிப்புகள் இல்லாமையினால் நடிக நடிகைகளும் தத்தமது வீடுகளுக்குள் முடங்கிப்போயுள்ளனர்.
இந்தநிலையில் ஊடக வெளிச்சத்தில் எப்போதும் தம்மை வைத்துக்கொள்ள வீட்டிலிருந்தபடியே பல சுவாரஸ்யமான விஷயங்களை பொதுவெளியில் தமது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் பாடகருமான யுகேந்திரன் இணைய ஊடகம் ஒன்றினூடாக இயக்குனர் வெங்கட் பிரபுவை செவ்வி கண்டிருந்தார்.

அந்தவேளையில் திரைத்துறை சார்ந்த தன்னுடைய பல அனுபவங்களை பகிர்ந்த வெங்கட் தனது 'தல' அஜித் மற்றும் 'தளபதி' விஜய் ஆகியோரின் நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் "சிவகாசி" படத்தில் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதன்மூலம் விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு உருவானது.

பின்னர் நான் "மங்காத்தா" திரைப்படத்தை இயக்கினேன். "மங்காத்தா" படம் முடிந்தவுடன் விஜய் தனது வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு "மங்காத்தா" படம் அவ்வளவு பிடித்திருந்தது. அப்போது நிறைய பேசினோம். தனக்கேற்ற கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.

விரைவில் அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். 'தளபதி' விஜய்யுடன் இணைத்து ஒரு திரைப்படத்தில் கூடிய விரைவில் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கின்றார் வெங்கட் பிரபு.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top