சாய் பல்லவி நடித்த தெலுங்கு படமான லவ் ஸ்டோரி ரிலீஸ் ஆகும் திகதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்து வந்தார்.
சேகர் கம்முலா என்பவர் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்நர் முடிவடைந்தது.
மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16ஆம் திகதி இந்தப் படம் திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.