இளைஞர்களின் மனதில் தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த ஸ்ருதி ஹாசன், தற்போது ஒருவரை மனதார காதலித்து வருவதாக, இந்திய ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த செய்திக்கு சான்றாக ஸ்ருதி ஹாசனை, சாந்தனு ஹசாரிகாவை அணைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் ஸ்ருதி ஹாசன் மீண்டும் காதலிப்பது உறுதிபடுத்தப்பட்டு இருப்பதாக, பல ரசிகர்களும் திரையுலகினரும் பேசத் தொடங்கி உள்ளனர்.
நடிகை ஸ்ருதி ஹாசனும், லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கல் கார்சேலும் ஏற்கனவே காதலித்தனர். மைக்கலை இந்தியாவுக்கு அழைத்து வந்து பெற்றோர்களிடம் ஸ்ருதி ஹாசன் அறிமுகம் செய்து வைத்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின.
இதனை அடுத்து ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தார். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், 2019 ஆம் ஆண்டு, திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தார்கள்.
அதன் பிறகு ஸ்ருதி ஹாசன் படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. அத்துடன் ஸ்ருதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் இது குறித்து ஸ்ருதி ஹாசன் எந்தவித உத்தயோகப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.