Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
இரு மடங்கு வேகத்தில் உருக ஆரம்பிக்கும் இமயமலை

Sooriyan FM Gossip - இரு மடங்கு வேகத்தில் உருக ஆரம்பிக்கும் இமயமலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

95 Views
இயற்கையின் அருட் கொடை, இமயமலை என்று சொல்லலாம். இந்த இமய மலையில் ஏராளமான பனிப்பாறைகள் இருக்கின்றன. இந்த பனிப்பாறைகள் தான் கோடான கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றன.

ஆனால் உலக வெப்பமயமாதல் என்ற அநியாயம் ஓசையின்றி அரங்கேறி வருவதால் இந்த பனிப்பாறைகள் வேகமாக, அதுவும் இரு மடங்கு வேகமாக உருகத் தொடங்கி இருக்கின்றன.

குறிப்பாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கட்டத்தில் பல ஆசிய நாடுகளின் குடிநீர் தேவைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அபாய செய்தியை
2019 ல் வெளியான ஒரு ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.

இந்த ஆய்வு வெறுமனே மேம்போக்காக நடந்து விடவில்லை.
இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் என பல நாடுகளில் 40 ஆண்டு காலமாக எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் படங்களின் அடிப்படையில் நடந்துள்ளது.

இமயமலையின் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கி.மீ. தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களின் படங்களைக் கொண்டு, ஆராய்ச்சியாளர்கள் 2000 ம் ஆண்டுக்கு பிந்தைய அதி நவீன செயற்கைக் கோள்களில் இருந்து, ஒளியியல் தரவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர். இந்த ஒப்பீட்டில் இமயமலை பனிப்பாறைகளின் உயரம் குறைந்திருப்பது நேரடியாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள கசப்பான உண்மை, இமயமலை பாறைகளை பருவ நிலை மாற்றம் மிக வேகமாக உருக செய்து வருகிறது என்பது தான்.

இமயமலை பனிப்பாறைகள் 2000 ம் ஆண்டில் இருந்து சுமார் அரை அடி அளவுக்கு இழந்து வருகின்றன. இது 1975 முதல் 2000 ம் ஆண்டு வரையிலான உருகும் அளவை விட இரு மடங்கு ஆகும். இந்த கால இடைவெளியில் இமயமலை பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகுகின்றன என்பதற்கான தெளிவான படம் இது என்கிறார், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவரும், ஆய்வின் முதன்மை ஆய்வாளருமான ஜோசுவா மாரர்.

கடந்த 40 ஆண்டுகளில் இந்த பனிப்பாறைகள், கால் பகுதியை இழந்து விட்டன.பனிப்பாறைகள் உருகுவது சீராக நடைபெற்று வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், வெப்ப நிலை உயர்ந்து வருவதுதான். வெப்ப நிலை இடத்துக்கு இடம் மாறுபடும். 1975 தொடக்கம் 2000 வரை உள்ள கால கட்டத்தில், இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக கால் மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது. 2000 ம் ஆண்டில் இருந்து இது ஆண்டுக்கு அரை மீட்டர் அளவுக்கு குறைந்துள்ளது.

ஆசிய நாடுகள் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை, உயிரிகழிவுகளை அதிகளவில் எரிக்கின்றன. இதனால் ஏற்படுகிற வெப்பம், மேலே செல்கிறது. அவற்றின் பெரும்பகுதி இறுதியில் பனிப்பாறை பரப்பு-களில் இறங்குகிறது. அங்கு அது சூரிய சக்தியை உறிஞ்சி உருகுவதை விரைவுபடுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

எனவே இப்படி ஆசிய நாடுகளில் புதைவடிவ எரிபொருட்களையும், உயிரிகழிவுகளையும் எரிக்க எரிக்க, அது இமயமலை பனிப்பாறைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக கோடான கோடி மக்களுக்கு குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகி விடும் என்ற அபாய மணியை ஒலிக்காமல் இருக்க முடியவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top