சமீபத்தில் திருமணமான நடிகை ஆனந்தி, திருமணத்துக்கு பிறகு தனக்கு அதிக பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.
கயல், விசாரணை, பரியேறும் பெருமாள். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்று தொடர்ந்து நடித்து வரும் ஆனந்தி தற்போது ராஜசேகர் துரைசாமி இயக்கிய “கமலி பிரம் நடுக்காவேரி” படத்தில் நடித்துள்ளார்.
“குடும்ப வாழ்க்கையில் எனது கணவர் ஆதரவாக இருக்கிறார். நான் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர் ஆசை.
திருமணத்துக்கு பிறகு பட வாய்ப்புகள் வராது என்பார்கள். ஆனால் எனக்கு இப்போதுதான் அதிக படங்கள் வருகிறது. பெற்றோரை விட ஒரு பெண் மேல் அன்பு செலுத்துவது யாராகவும் இருக்க முடியாது.
ஆனால் சில பெண்கள் தன் வாழ்வை பற்றி அறிந்து கொள்வதில்லை. எங்காவது வழி தவறி விடுகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற பிரச்சினைகளை எப்படி கடப்பது என்று கமலி பிரம் நடுக்காவேரி படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு இருப்பதுபோல் பெண்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. அவர்களுக்கு திறமையிருந்தாலும் கனவு நிறைவேறுவதில்லை.'' இவ்வாறு ஆனந்தி கூறினார்.