Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
மீண்டும் இணைகின்றது நடனக் கூட்டணி.

SooriyanFM Gossip - மீண்டும் இணைகின்றது நடனக் கூட்டணி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
நடனக் கலைஞர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவாவுடன் மீண்டும் பிரபல நடன இயக்குனர் ஒருவர் புதிய திரைப்படமொன்றில் கூட்டணி அமைத்துள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் திரைகண்ட "சார்லி சாப்ளின் 2" திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

பாடலின் இசை மட்டுமல்லாது குறித்த திரைப்படத்தில் பாடலுக்கான காட்சியமைப்பாக இடம்பெற்ற நடனமும் அந்தப் பாடலை ரசிகர்கள் அதிகம் விரும்புவதற்கான காரணமாக அமைந்திருந்தது.

இந்தநிலையில், இன்னும் பெயரிடப்படாமல் படமாகிக்கொண்டிருக்கும் புதிய திரைப்படமொன்றில் பிரபுதேவா - ஸ்ரீதர் கூட்டணி பாடலொன்றிற்கான நடனத்தின் மூலமாக இணையவுள்ளனர்.

'அபிஷேக் பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் உருவாக்க , என்.ராகவன் இயக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இதில், மேற்கத்தேய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு துள்ளலான பாடலுக்கான இசைக்கு பாடலாசிரியர் யுகபாரதி வரிகளால் உயிர் கொடுக்க, ஸ்ரீதர் - பிரபுதேவா கூட்டணி கண்களுக்கு நடன விருந்தளிக்கவுள்ளது.


இந்தப் படத்தில் தான் பணியாற்றுவது தொடர்பில் நடன இயக்குனர் ஸ்ரீதர் குறிப்பிடுகையில், “பிரபுதேவா அவர்களுடன் பணிபுரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். ‘சின்ன மச்சான்’ பாடலின் பெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ‘ஸ்டைலிஷ் வெஸ்டர்ன்’ பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சந்தோஷம் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கும் உண்டாகும்" என்று கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top