ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப் படத்தின் ரீமேக் உரிமைக்கு மற்ற நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்கள்.
ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் களத்தில் சந்திப்போம்.
என்.ராஜசேகர் இயக்கிய இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி.சவுத்ரி தயாரித்து இருந்தார். இந்த நிறுவனத்தின் 90வது தயாரிப்பு இது.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் தெலுங்கு, கன்னட உரிமைக்கு அங்குள்ள பெரிய நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
படம் நிச்சயம் வெற்றி அடையும் ரீமேக் உரிமைக்கு போட்டி வரும் என்பதாலேயே படத்தை பிற மொழிகளில் டப் செய்து வெளியிடவில்லை. ஆர்பி.சவுத்ரியின் இந்த முடிவை பலரும் பாராட்டி உள்ளனர்.