Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
'வலிமை' படம் தொடர்பில் தெறிக்கவிடும் 'தல' ரசிகர்கள்.

Sooriyan Gossip - 'வலிமை' படம் தொடர்பில் தெறிக்கவிடும் 'தல' ரசிகர்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

193 Views
'தல' அஜித் நடிப்பில் படமாக்கப்பட்டுள்ள "வலிமை" திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் 'தல' ரசிகர்கள் தவம் கிடக்க, படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்கள் கூட எதுவும் வெளியாகும் அறிகுறிகள் தென்படவில்லை.
'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" திரைப்படம் திரை கண்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையிலும், சம காலத்தில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட "வலிமை" திரைப்படம் தொடர்பில் எந்தவித தகவல்களும் 'தல' ரசிகர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில், தமது எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் எவ்வாறு "வலிமை" படக்குழுவினருக்கு தெரியப்படுத்துவது என்று குழம்பிப்போயுள்ள 'தல' ரசிகர்கள், அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர்களிடம் "வலிமை" படம் பற்றி கேள்வி எழுப்பிய சுவாரஸ்ய சம்பவம் பதிவாகியுள்ளது.

இது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிடுகையில், "நான் பந்து வீசுவதற்குத் தயாராக எல்லைக்கோட்டிற்குக் கிட்ட நின்றிருந்தபோது எனக்கு அண்மித்த பகுதியில் பார்வையாளர் அரங்கில் இருந்த ரசிகர்கள் சிலர் 'வலிமை அப்டேட் ஏதும் இருக்கா...?' என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அந்த நேரம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை, குழப்பம் தான் ஏற்பட்டது. காரணம், பந்து வீச தயாரான தருணத்தில் படம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது அந்த சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமாக அமையாததால், ரசிகர்கள் என்ன கேட்கின்றார்கள் என்பது புரியாததால் உண்டான குழப்பம் அது.

இதனை விட சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்னவென்றால், இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரிடமும் 'வலிமை அப்டேட்' கேட்டிருக்கின்றார்கள். பின்னர் என் அருகில் வந்த மொயின் அலி இது பற்றி என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்" என சமூக வலைத்தள காணொளி பதிவில் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top