நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஷிவானி தன்னுடைய வீட்டில் நடந்த விசேஷத்திற்காக பிக்பாஸ் பிரபலங்களை அழைத்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன்.
பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார்.
ஷிவானி தான் வளர்த்து வரும் நாய் குட்டியின் முதல் பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்.
வித விதமான 5 கேக்குகளுடன் தனது செல்லப்பிராணியின் பிறந்தநாளை சிறப்பித்திருக்கிறார்.
இதில் பிக் பாஸ் பிரபலங்கள் சம்யுக்தா, பாலா, ஆஜித் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.