Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
இங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சி

sooriyan fm Gossip - இங்கிலாந்தில் உணவு பொதியில் சிறுநீர் போத்தல் - வாடிக்கையாளர் அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

441 Views
இங்கிலாந்தில் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கால், பலரும்  உணவுகளை ஓடர் செய்தனர். லண்டனைச் சேர்ந்த ஒருவரும் தனக்கு தேவையான உணவை ஓடர்  செய்துள்ளார்.


அப்போது, அவருக்கு வீட்டுக்கு அனுப்பப்பட்ட உணவு பொதியை திறந்து பார்த்தபோது அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். வாடிக்கையாளருக்கு வந்த பொதியில் சிறுநீர் அடைக்கப்பட்ட போத்தல் ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து அவர் டிவிட்டரில் புகைப்படத்துடன் அந்த பொதியை பதிவிட்டதையடுத்து, அந்த புகைப்படமானது இணையத்தில் வைரலானது.

உணவை டெலிவரி செய்த நிறுவனத்தின் பெயருடன் டிவிட்டரில் பதிவிட்ட அவர் "ஹலோ! பிரஷ் யூகே, எதற்காக யாரோ ஒருவருடைய சிறுநீரை பாட்டிலில் அடைத்து எனக்கு அனுப்பியிருக்கிறீர்கள்? உங்கள் பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன். சந்தேகம் இருந்தால் உங்களின் முகவரியை எனக்கு அனுப்புங்கள், நீங்கள் அனுப்பிய பொதியை திருப்பி அனுப்புகிறேன், அதை முகர்ந்து பாருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

பின்னர் உடனடியாக அந்த டிவிட்டை நீக்கிய அவர், தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் பெயரைப் பயன்படுத்தி பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டையடுத்து, அவருக்கு உணவை அனுப்பிய ஹலோ பிரஷ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்ட இந்த மோசமான நிகழ்வுக்கு என்ன சொல்வது என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிறுவனம் உணவுடன், தண்ணீர் போத்தல்களை ஒருபோதும் அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளதுடன், டெலிவரி செய்பவர்களிடம் இதுபோன்று தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.

விரைவாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டுநர் போத்தலில் சிறுநீரை நிரப்பியிருக்கலாம் என்றும், அதனை தவறுதலாக பொதியில் கொடுத்திருக்கலாம் என்றும் அந்த நிறுவனம் சந்தேகம் தெரிவித்துள்ளது. உணவு நிறுவனத்தின் விளக்கத்தை அந்த வாடிக்கையாளருக்கு ஏற்றுகொண்டார். அவர் பதிவிட்டுள்ள மற்றொரு டிவிட்டில், உணவு பொதி முறையாக இல்லாமல் பிரித்து இருந்ததாகவும், டெலிவரி செய்பவர்கள் தவறு செய்திருக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறியிருந்தார்.

இது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் உணவு ஓடர் செய்யும் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top