Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
இறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்

sooriyan fm Gossip - இறந்த பெண்ணுக்கு குற்றத்திற்காக மீண்டும் தூக்கு - ஈரானில் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

860 Views
சஹ்ரா என்ற பெண், தனது கணவர் தன்னையும் தனது மகளையும் தவறாக நடத்தியதாககூறி கணவரை கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


சஹ்ராவின் கணவர் ஒரு உளவுத்துறை அதிகாரி. உளவுத் துறை அதிகாரியை கொன்றதற்காக சஹ்ராவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. தூக்கில் போடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு சஹ்ரா அழைத்துவரப்பட்டார். அப்போது சஹ்ராவுக்கு முன்னால் 16 குற்றவாளிகள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வரிசையில் காத்துக் கிடந்தார்கள்.

அந்த 16 பேரையும் ஒவ்வொருவராக தூக்கில் போடப்படும் கொடூரமான காட்சியை சஹ்ரா பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டார். அந்த கொடூர நிகழ்வை தன்னால் பார்க்க முடியாது என்று சஹ்ரா பலமுறை கூறினார். இதை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தியதால் , அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டார்.

ஈரானை பொருத்தவரை ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்து விட்டாலோ அல்லது கொலை செய்வதற்கு தூண்டினாலோ இறந்தவருக்காக பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக குற்றவாளி சட்டப்படி தூக்கில் போடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தூக்குக் கயிற்றில் கட்டப்பட்ட நிலையில் குற்றவாளி நிற்கும் நாற்காலியை பாதிக்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவரின் உறவினர்கள் யாராவது அந்த நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டும், அவர்கள் அப்படி செய்தால் தான் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையும் அதுமட்டுமல்லாது இறந்தவர்களின் உறவினர்களுக்கு நிம்மதி மற்றும் நீதி கிடைத்ததாக பொருள் என்பது அந்நாட்டின் சட்டமாக உள்ளது.

ஆனால் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து போன சஹ்ராவால் அவரது கணவரின் உறவினர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. இருந்தாலும் இறந்து போனவரின் உடலை தூக்கில் தொங்கவிட சஹ்ராவின் மாமியார்  நாற்காலியை காலால் எட்டி உதைக்க வேண்டுமென அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்

ஒரு உயிரற்ற உடலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறிக்கொள்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top