Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடி

Sooriyan Gossip - 'தனிமை'க்கு தனி அமைச்சு - தற்கொலையை தடுக்க ஜப்பான் அதிரடிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

154 Views
தற்கொலை என்பது உலகில் சர்வசாதாரணமாக மலிந்துவிட்ட நிலையில், மனித மனங்களில் ஏற்படும் தனிமையே தற்கொலைக்கு பிரதான காரணம் எனும் ஆராச்சி முடிவுகளின் அடிப்படையில், 'தனிமை'க்கு தனி அமைச்சை உருவாக்கியுள்ளது ஜப்பான்.
தனிமை துறைக்கான தனி அமைச்சு முதன் முதலில் 2018ம் ஆண்டளவில் இங்கிலாந்திலேயே உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைச்சு ஜப்பானிலும் அமைப்பட்டதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் 'தனிமை' அமைச்சு ஒன்றை கொண்டுவருவது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.

ஜப்பான் அமைச்சரவையில் 'தனிமை' அமைச்சராக டெட்சுஷி சாகாமோட்டோ என்பவரை நியமித்துள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, தமது நாட்டின் பிரஜைகளின் தனிமை உணர்வை குறைப்பதற்கும், சமூகத்தில் தனித்திருக்கும் நிலையையும் இயன்றளவு தடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அத்துடன், தனிமைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டெட்சுஷி சாகாமோட்டோ, ஏற்கனவே குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

உலகப் பெரும் தொற்றான கொரோனா அச்சுறுத்தல் நிலவும் இந்தக் காலப்பகுதியிலேயே தற்கொலை அதிகரிப்பு எண்ணிக்கையும் உயர்வடைந்துள்ளதாகவும், முக்கியமாக பெண்களே அதிகளவில் தனிமை உணர்வால் ஏற்படும் மனா அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும் ஜப்பானிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது, ஆட்சியிலுள்ள ஜப்பான் அரசாங்கத்துக்கெதிரான விமர்சனங்களை உண்டாகியிருப்பதனால் திடீர் நடவடிக்கையாக 'தனிமை' அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top