வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு,கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
இந்நிலையில்,இப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி மாநாடு திரைப்படத்தை ரமலான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் சிம்பு முஸ்லிம் இளைஞராக நடித்துள்ளதால்,படத்தை அந்த பண்டிகை நாளில் வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என கருதுகிறார்களாம்.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.