Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
16
காப்புறுதி பணத்திற்காக குடும்பத்தை கொலை செய்த நபருக்கு கிடைத்தது இதுதான்

sooriyan fm Gossip - காப்புறுதி பணத்திற்காக குடும்பத்தை கொலை செய்த நபருக்கு கிடைத்தது இதுதான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,024 Views
'அலி எஃப். எல்மேசாயென்' என்ற நபர் 2015 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள துறைமுகத்துக்கு மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகளையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக காரானது கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் கடற்பகுதியில் சீறிப்பாய்ந்தது. 
அந்த விபத்தில் காருக்குள் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது 8 வயது மற்றும் 12 வயது மகன்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். அவரது மனைவியை அங்கிருந்த மீனவர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். நீச்சல் தெரிந்த எல்மேசாயென் மட்டும் குடும்பத்தினரைக் காப்பாற்ற முயற்சி செய்யாமல் அங்கிருந்து தப்பியுள்ளார்.



இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எல்மேசாயென் கார் நீரில் பாய்ந்தது, தற்செயலானது அல்ல, அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரியவந்தது. அதாவது, விபத்து நடக்கும் 2 ஆண்டுகளுக்கும் முன்பே சுமார் 8க்கும் மேற்பட்ட காப்புறுதி நிறுவனங்களில் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விபத்து காப்பீடுகளை எல்மேசாயென் எடுத்துள்ளார்.

தனது வருமானத்துக்கு அதிகமாக இருந்தாலும், அந்த காப்புறுதி சந்தா தொகைகளை மாதம் தவறாமல் செலுத்தி வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் பலமுறை காப்புறுதி நிறுவனங்களுக்கு சென்ற அவர், மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் விபத்தில் இறந்தால் எவ்வளவு கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்பது குறித்து விசாரித்துள்ளார்.


அப்போது, காப்புறுதி எடுத்த சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவேளை விபத்து நடந்தால், விபத்துக்காப்பீடாக 3 மில்லியன்
டொலர்களையும் பெற்று கொள்ளலாம் என காப்பீட்டு நிறுவனங்கள் கூறியுள்ளன. இதற்காக காத்திருந்த அல்மேசாயென், 2015 ஆம் ஆண்டு விபத்து காப்பீடு பணம் பெறுவதற்குரிய நேரம் வந்தபிறகு, சுமார் 12 நாட்கள் கழித்து மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் லொஸ் ஏஞ்ல்ஸ் நகர துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று காரை கடலுக்குள் மூழ்கவைத்து கொலை செய்துள்ளார். பின்னர், காப்புறுதி பணத்தை எடுத்து எகிப்து நாட்டில் ஆடம்பர மாளிகை மற்றும் நிலங்களையும் வாங்கியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற கொடூர எண்ணம் உடைய மனிதரை தான் இதுவரை பார்த்ததில்லை என்று கூறினார். தண்ணீருக்குள் துடிதுடித்து இறந்த அந்த இரு குழந்தைகளின் நிலையை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என தெரிவித்த அவர், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அல்மேசாயென்னுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக தெரிவித்தார். அதன்படி, அல்மேசாயென்னுக்கு 212 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தார்.


அல்மேசாயென்னின் 3வது மகன், நல்வாய்ப்பாக இந்த விபத்தை ஏற்படுத்தியபோது அவர்களுடன் செல்லவில்லை. தற்போது 20 வயதாக இருக்கும் அந்த இளைஞர், தந்தையின் கொடூரமான செயலை எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை எனத் தெரிவித்தார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top